சமீபநாட்களில் அச்சுப்புத்தகங்களை எடுத்து வாசிப்பது அனேகமாகக் குறைந்தே போய்விட்டது. சினிமா, வெப் சீரீஸ்களிலும், இங்கே நடந்து கொண்டிருக்கும் அரசியல் கோமாளித்தனங்களைக் கவனித்து, பதிவுகள் எழுதுவதிலுமே பொழுது சரியாகப்போய் விடுகிறது என்ற கவலையை மாற்ற நேற்றைக்கு ஒரே ஒரு சினிமா மட்டும் பார்த்துவிட்டு சில அச்சுப் புத்தகங்கள், கிண்டில் வாசிப்பில் படிக்கத் தரவிறக்கம் செய்தவைகள் என்று வாசிக்க எடுத்துக் கொண்டதில் நண்பர் திருப்பூர் ஜோதி ஜி எழுதிய கிண்டில் புத்தகமும் ஒன்று.
2025 இந்தியா - மாற்றம் - முன்னேற்றம் என்ற தலைப்பிற்குச் சம்பந்தமே இல்லாமல் அமேசான் நிறுவனர் Jeff Bezos இந்திய விஜயம் பற்றி அமேசான் நிறுவனம் பற்றி எழுதியிருக்கிறார் என்பதில் முதலில் என்னுடைய ஏமாற்றத்தைப் பதிவு செய்தே ஆக வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்திற்கோ மாற்றத்துக்கோ அமேசான் எந்தவகையிலும் தொடர்பு உள்ளது இல்லை என்ற அடிப்படையான விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள முடியுமானால், இந்தச் சிறு வாசிப்பை, ஒரு ஆரோக்கியமான உரையாடலுக்கு எடுத்துச் செல்லவும் முடியும்.
இந்த 26 நிமிட வீடியோவில் Jeff Bezos தன்னுடைய இந்திய விஜயத்தை ஒட்டி, சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதை சென்ற மாதமே பார்த்து விட்டதால் ஜோதி ஜி தன்னுடைய சிறுநூலில் சொல்லியிருந்தது எதுவும் புதிதாகத் தெரியவில்லை என்பதாகக் கூட இருக்கலாம்! இங்கே அதையும் சேர்த்தே பதிவு செய்கிறேன். அமேசான் தளம் இங்கே தமிழில் எழுதுகிறவர்களுக்கு ஒரு புதிய வாசலைத் திறந்து விட்டிருப்பதென்னவோ நிஜம்தான்! அதற்காக அமேசான் இந்தியாவில் மாற்றத்துக்கான புது நண்பன் என்கிற அளவுக்குப் போயிருக்க வேண்டுமா?
இப்போது இந்தச் சிறுநூலில் பேச விடுபட்டுப்போன விஷயங்களை கொஞ்சம் பார்க்கலாமா? இந்தியாவில் தொழில்முனைவோர் என்ற சிறுதுளி இன்னமும் பெரு வெள்ளமாக மாறவில்லை, தோல்விகளுக்கு அஞ்சுகிற பகுதியாக அது இருப்பதற்கு அடிப்படைக் காரணிகள் என்ன, அதற்கு என்ன செய்யலாம், ஒரு சொந்தத் தொழில் செய்கிறவராக தன்னுடைய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டதென்ன என்பதை, சேர்த்துச் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக, பயனுள்ளதாக இருந்திருக்கும்.
அமெரிக்க சூழ்நிலைகளை இங்கே அப்படியே பொருத்திப் பார்க்க முடியாது. இந்தியாவில் மாற்றத்துக்கான காரணிகளும் இந்த மண்ணுக்கேற்ற விதத்தில் தான் வந்தாகவேண்டும், அதை மனதில் வைத்துக் கொண்டு நண்பர் ஜோதி ஜி தன்னுடைய எழுத்தை, இன்னமும் கூர்மைப்படுத்தினாரென்றால் நிச்சயம் மகிழ்வேன். இதுவும் கூட அவருடைய கிண்டில் மொழி நூலுக்கு நண்பர் B K ராமச்சந்திரன் ஒரே இந்தியா தளத்தில் எழுதியிருந்ததைத் தொடர்ந்து இந்தப்பக்கங்களிலேயே ஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை நூலுக்கு ஒரு அறிமுகமாக எழுதியிருந்ததன் தொடர்ச்சிதான்!
அனுபவஸ்தரும் அமேசானில் தமிழ் எழுத்தாளர்களுக்கு முன்னோடியுமான விமலாதித்த மாமல்லன் சொல்கிற இந்த விஷயத்தைக் கவனத்தில் வைத்துக் கொள்வது ஒரு எழுத்தாளராக நண்பர் ஜோதிஜிக்கு உதவும் என்றே நம்புகிறேன்.
நேற்றைக்கு வாசிப்புக்கு எடுத்துக் கொண்ட 2 அச்சுப் புத்தகங்கள் இவை:
கல்கியில் தொடர்கதையாக வந்த இந்தப்புத்தகம் 2012 இல் 16வது பதிப்பைக் கண்டிருக்கிறது என்பதே சாண்டில்யன் எழுதிய சரித்திரக்கதைகளுக்கு இன்னமும் மவுசு இருக்கத்தான் செய்கிறது என்பதன் அடையாளம். மராத்தியக் கடற்பகுதியில் பிரிட்டிஷ் காரர்கள் காலூன்ற முயற்சி செய்துகொண்டிருந்த காலகட்டத்தை வைத்து எழுதப்பட்ட கதை. வரலாறு என்கிற கசப்பு மருந்தையும் தனது சிருங்காரம் சொட்டும் எழுத்து நடையால் விரும்பி ஏற்றுக்கொள்ளச் செய்தவர் சாண்டில்யன். நேற்று மாலை கொஞ்சம் தாமதமாகத்தான் வாசிக்க எடுத்துக் கொண்டேன் என்பதால்,ஐநூற்றுச் சொச்சப்பங்கங்களில் 270 வரை தான் வாசிக்க முடிந்தது. இன்றைக்கு வாசித்து முடித்து விடுவேன்!
வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளாமல் எத்தனையோ புத்தகங்கள் கையருகே இருக்கையில், ஏற்கெனெவே படித்த இந்தப்புத்தகத்தைமறுபடியும் வாசிக்க எடுத்துக் கொள்ளத் தூண்டியது என்னவாக இருக்கும்?
கதைக்களம், வாசகனைக் கட்டிப்போட வைக்கும் திருப்பங்கள் என்கிற வசீகரமான எழுத்துநடையை எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களில் அனுபவித்த மாதிரியே ராபர்ட் லாங்டன் என்கிற பாத்திரத்தை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட 5வது நாவல் இது. முழுக்க வாசித்த திருப்தியோடுதான் தமிழில் ஏதாவது வாசிக்கலாமே என்று ஜோதிஜியின் புத்தகத்தையும், சாண்டில்யனுடைய கடல் ராணியையும் எடுத்துக் கொண்டதே!
ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம்என்றகேள்வியை முந்தையபதிவொன்றில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஏன், எதற்காகஎன்பதை விட, எப்படிப் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், என்ன புரிந்துகொள்கிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்றமுத்தாய்ப்போடு அந்தப்பதிவு முடிந்திருந்தது இல்லையா? இந்தப் பக்கங்களில், பேசப்படும் புத்தகங்கள், கதைகள் வெறும் வாசிப்பு என்றபொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற் பட்டதில்லை.
இலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை.வாசித்தஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, சிந்தனையைஎந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒருஅம்சத்தைமட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதைதொடர்ந்துவாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புத்தகத்தைத் தொடர்ந்து மறுபடியும்வாசிப்பதற்காகத் தேடிப் பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று இர்விங்வாலசின்The Seven Minutes!
இந்தப் புத்தகத்தின் கதையோட்டம்நீதிமன்றத்தில்நடக்கும் வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கோர்ட் ரூம்டிராமா வகை தான்என்றாலும் மறுவாசிப்பு செய்த பிறகு ஆர் டாகுமென்ட் புதினத்தைப் போலவே இந்தநூலும், சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியதைத்தொடர்ந்து சிந்திக்க முடிந்தது.
ஆர் டாகுமென்ட் புத்தகத்தோடு, இன்னும் சில நூல்களுக்கும் ஆர்டர்கொடுத்திருந்ததில், இர்விங் வாலஸ் எழுதியThe Seven Minutes புதினமும்ஒன்று! காமம், போர்னோ என்றாலேமுகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு, அதே நேரம் திருட்டுத் தனமாகப்படிக்கும் இயல்பு இங்கே நிறையப்பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும்வார்த்தைகள் என்று காமம், காமக்கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலேஅந்த இயல்பு புரிந்து விடும்.புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப்பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக்கதைகள் என்று குறியீட்டுச் சொல்லைவைத்துப் பதிவுகளைத் தேடுகிற "தேடல்களை"நிறையவே பார்த்திருக்கிறேன்.
ஏழுநிமிடங்கள் என்றஇந்தப் புதினம் கூட, அப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒருகதைப் புத்தகம், அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர், அதைப் பதிப்பித்தவெளியீட்டாளர், அவருடைய நண்பரான வழக்கறிஞர், அரசியலில் குதிக்க விரும்பும்ஒரு அரசுவழக்கறிஞர், என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்துகொண்டே ஒருகைது, ஒரு கற்பழிப்பு, ஒரு மரணம், அதைத் தொடரும் வழக்கில், இந்தஆபாசப்புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையை, ஒரு கோர்ட்ரூம்ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்!
1971இல்இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர், கதையின் மைய நீரோட்டத்தைசரியாகப்புரிந்து கொள்ளாததாலோ என்னவோ, வெறும் சொதப்பலாகிப் போனது தனிக்கதை! கதை என்று பார்க்கப் போனால், வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான்!ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாகஅறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமாதான்!இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது!
கதைசொல்கிற போதே, ஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின்வழியாகஎழுப்புகிறார், வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில்வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா! அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்து, இந்த நூலில் எடுத்துக் கொண்டவிஷயம், கருத்து சுதந்திரம்,இலக்கியங்கள், அதில் ஆபாசம் என்று சமூகத்தால்ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டு, அப்புறம் ஏற்றுக் கொள்ளப்பட்டவை, எது ஆபாசம், அதை எப்படி, எவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள்இந்தப்புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.
மைகேல் பாரெட், ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக்கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின்துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்து, வழக்கறிஞர்ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில்புத்தகப்பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடையஉதவியைக்கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.
நண்பர் வெளியிட்டஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்தகடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக்குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் புத்தகம் ஆபாசமானது, விற்றது குற்றம் என்ற ரீதியில் கைதுநடந்திருக்கிறது.
நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், அந்த வழக்கை மைகேல் பாரெட்எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக்பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி,குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒருசமரசம் பேசி, புத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்றயோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும்பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார்.ஆனால், அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தைவேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.
இன்னொரு தொழிலதிபர், எல்மோ டங்கனை, அரசியலுக்கு கொண்டு வர முடிவுசெய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, ஒரு பரபரப்பானசூழ்நிலையை உருவாக்கி, வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கானஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்டநிலையில், மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில், ஏழு நிமிடங்கள்என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமானசெயலுக்குத் தூண்டியதே, ஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசைதிரும்புகிறது.
டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசி, புத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டு, மிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறி, புத்தகம், புத்தகத்தை விற்பனை செய்தவர்இருவருமே கற்பழிப்பு, கொலைக்குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலி, அவளுடைய தகப்பனார் இருவரும், பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்துவிடுவித்துக் கொண்டு, அவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பைஉடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடு, உத்தரவாதமானவருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாகதொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர் ஏழு நிமிடங்கள்என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர், தன்னுடையஇக்கட்டான நிலையை எடுத்து சொல்லி, பாரெட்டைத் தவிர வேறு எவருமே, அந்தவழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்காக இந்தவழக்கைஎடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.
ஆபாசம், சர்ச்சைக்குரியது, ஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத்தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும்"ஏழுநிமிடங்கள்"என்றஅந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார்.ஒரு இளம் பெண், தான் உடலுறவு கொண்டதருணங்களில் உச்சத்தை அடையும் அந்தஏழு நிமிடங்களைப்பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிறவிதத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், மற்றவர்கள் குதிப்பதுபோல ஆபாசமானதோ, குற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்றுஅபிப்பிராயப் படும் பாரெட், தன்னுடைய காதலி, காத்திருக்கும் செல்வாக்கானஉத்தியோகம் இரண்டையும்துறந்து, அந்தப் புத்தகத்துக்காக, கருத்துசுதந்திரத்தைப்பாதுகாப்பதற்காக, வழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவுசெய்கிறார்.
எல்மோ டங்கனைஅரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின்செல்வாக்கினால், அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டேஇருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒருபாதிரியார், சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.
இப்படி நீதி மன்ற விசாரணை, தன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல்பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப்பற்றி எழுதுவது, மொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும்என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம். கதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது.
1969 இல்வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம்மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிர, இர்விங் வாலசின் கதைசொல்லும்பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது!
கதைசொல்லும்போதே, சில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக்கொண்டேபோகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாகஇருக்கிறது. இந்தப் புத்தகத்தை, இப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்தசிந்தனை, இந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல!
ஆபாசஎழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்துஎன்றெல்லாம்குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம்எதை வைத்து வரையறை செய்வது? கருத்துசுதந்திரம்என்றெல்லாம்சொல்கிறோமேஅது எது வரை? அடிப்படை உரிமைகள் பற்றிப்பேசுகிறோமே அதற்கு அர்த்தம்என்ன? ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லதுஅரசியல் சாசனத்தில் எழுதிவைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டுவிட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமா? ஆர் டாகுமென்ட்புதினத்தைப் படித்து முடித்தகையோடுஇதைப் படித்ததால்மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்டயோசனைகளைக் கிளப்பியதாஅல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக்கேள்விகளை எனக்குள் எழுப்பியதா?
The Seven Minutes!
இந்தப் புத்தகம், பெங்களூரு வாசன்பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, இந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது.
நண்பர் ராஜசிங்கர் வெறும் வாய்ச்சொல் வீரர் இல்லை. களத்தில் இறங்கிப் போராடுகிற இளைஞர் என்பதை, பதிவர்களாகவோ குழுமங்களிலோ அவரைத் தெரிந்து வைத்திருக்கிறோமா? ஒரு விவாதம் என்று வந்து விட்டால் சரியான தரவுகளுடன் தன்னுடைய தரப்பை எடுத்துச் சொல்லும் அற்புதமான எழுத்தாளர்! முகநூலில் சற்று முன் இப்படிப் பகிர்ந்திருப்பதைப் படித்தேன்.
ராகுல் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்து ஸ்மிரிதி ஈரானி போட்டியிருகிறாரா? ஏன் இப்போதைய பிஜேபி வாஜ்பேயி காலத்து பிஜேபி அல்ல?
அமேதியிலே தோற்றுவிடுவோம் என பயந்து பப்பு ராகுல் கான் கேரளாவிலே வயநாட்டிலே போட்டியிடலாம் என செய்தி வந்ததவும் பிஜேபி அங்கேயும் ஸ்மிரிதி இரானியை நிறுத்துவோம் என மறைமுகமாக சொல்லியுள்ளது.
இது ஒரு மிகப்பெரும் மாற்றம். அமேதியிலே ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவது என்பதே பெரும் மாற்றமாக 2014 இல் இருந்தது. இப்போது அதற்கு ஒரு படி மேலாக போய் எங்கு நின்றாலும் எதிர்ப்பு உண்டு என சொல்கிறது பிஜேபி.
வாஜ்பேயி காலத்திலே எப்படி இருந்தது? அமேதியிலும் ரே பரேலியிலும் எந்த கட்சியுமே வேட்பாளர்களை நிறுத்தாது. அப்படியே நிறுத்தினாலும் மொக்கையாக யாரையேனும் நிறுத்துவார்கள். இதனால் பல லட்சம் ஓட்டுவித்தியாசத்திலே கான் காந்திகள் ஜெயித்துவந்தார்கள்.
2014 இல் மோடியும் அமீத்ஷாவும் இதை மாற்றி ஸ்மிரிதி இரானியை வேட்பாளராக்கினார்கள். கடும் பிரச்சாரமும் செய்தார்கள். முன்பு பல லட்சம் ஓட்டுவித்தியாசம், தொகுதி பக்கமே வராம இருந்தது என்றெல்லாம் போய் எல்லா வேட்பாளர்களையும் போல் ஓட்டு எண்ணும் போது கூட இருந்து பார்த்தும் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்திலே தான் ஜெயிக்க முடிந்தது.
அதன் பின்பும் தொடர்ந்து தொகுதிக்கு போனார் இரானி அவர்கள். சமீபத்திலே துப்பாக்கி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் மோடி. இதிலே என்ன சிறப்பு என்றால் அந்த துப்பாக்கி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியது ராகுல் கான் 2007 இல். அதுக்கப்புறம் அது அப்படியே கிடந்து மோடி வந்து கட்டி முடிச்சு திறந்து வைத்தார்.
இப்போ எத்தினி லட்சம் ஓட்டு வித்தியாசத்திலே தோற்போம் என தெரியாததால் இங்கே ஒரு நல்ல தொகுதி பார்க்கவேண்டிய சூழ்நிலை. அதுவும் ராஜஸ்தான், கர்நாடகா, மேற்குவங்கம் என எங்கேயும் வெற்றி பெறக்கூடிய உறுதியான இடம் இல்லாததால் இங்கே வரவேண்டியிருக்கிறது.
யோசிச்சு பாருங்க? 70 வருடம் நாட்டை ஆண்ட கட்சி, கொள்ளுத்தாத்தாவிலே இருந்து பாட்டி, அப்பா, என மூன்று பேர் பிரதமராக இருந்தவர்கள். அம்மா மறைமுக பிரதமராக இருந்தவர். அந்த தொகுதியிலே இவர்கள் குடும்பம் தான் 1980 இல் இருந்து இன்று வரை வென்றது. 40 வருடமாக ஒன்றுமே செய்யாமல் அரச குடும்பம் போல தொகுதியை வைத்திருக்கிறார்கள்.
இதற்கு எல்லா கட்சிகளும் துணை போயிருக்கிறது. அப்போதைய பிஜேபி உட்பட.
இப்போ அதெல்லாம் முடியாது. எங்க நின்னாலும் எதிராக வேட்பாளரை நிறுத்துவோம் என பிஜேபி சொல்கிறது என்றால்
எவ்வளவு மாறியிருக்கிறது என பாருங்கள்?
ஏன் வாஜ்பேயியை ரொம்ப நல்லவர் என இவிங்க எல்லோரும் சொல்றாங்க ஏன் மோடியை எதிர்க்கிறார்கள் என பார்த்தால் இது தான் காரணம்.
அரசியல் என்பதை சும்மா பொழுது போக்குக்கு செய்யாமல் தேசப்பணியாக வாழ்வா சாவா போராட்டமாக செய்வது தான் மோடியின் புதிய பிஜேபி, புதிய இந்தியா.
இதிலே இன்னோன்றும் இருக்கிறது.
அது மோடிக்கு எதிராக ராஹூல் என இவர்கள் நிறுத்த முயலும் போது
ஸ்மிரிதி இரானிக்கு எதிராக ராஹுல் என பிஜேபி செய்து காட்டிவிட்டது.
ஸ்மிரிதி இரானியையே எதிர்த்து ஜெயிக்க முடியாத ராஹூலா, ஸ்மிரிதி இரானி கூட போட்டியிட பயப்படும் ராஹுலா மோடிக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என பிஜேபி கேட்கிறது?
மோடி மோடி என கூவிக்கொண்டிருந்த ராஹூல் இப்போது ஸ்மிரிதி ஸ்மிரிதி எனவும் கூவவேண்டும்.
சரி அப்படீன்னா மோடிக்கு எதிராகவும் கான்கிரஸ் இதை செய்திருக்கலாமே என நீங்கள் கேட்கலாம்.
செய்திருக்கலாம் தான். யார் தடுத்தார்கள்? வாரணாசிக்கு போய் வாக்காளர்களை பார்த்திருக்கலாம், அவர்களை குறைகளை கேட்டிருக்கலாம். ஆட்சியிலே இல்லை என்றாலும் அதை பற்றீ பேசியிருக்கலாம் பாராளுமன்றத்திலே குரல் கொடுத்திருக்கலாம்
லாம் லாம் தான். இதை செய்ய வாரணாசிக்கு ஏன் போகவேண்டும்? முதலிலே அமேதியிலும் ரேபரேலியிலும் செய்திருக்கலாமே?
அங்கு செய்திருந்தால் இந்த அவமானமே நேர்ந்திருக்காதே? ஒழுங்கா நாட்டை ஆண்டிருந்தால் வேலை செஞ்சிருந்தால் மக்களை மதித்திருந்தால் இப்படி மானங்கெட்டு நிற்கவேண்டியதில்லையே?
இது அடுத்த கிட்டிபிடி.
மோடிக்கு எதிராகவும் வேட்பாளரை நிறுத்தமுடியவில்லை. ராஹுலுக்கு எதிராக நிறுத்தபட்ட வேட்பாளரையும் சமாளிக்க முடியவில்லை.
முடிஞ்சதா சோலி?
சரி தோத்து தான் போயிருவோம் அப்படீனாலும் கமுக்கமாக பிரச்சாரம் செஞ்சிருக்கலாம். வெளியே சொல்லாம.
இப்போ வெளிப்படையா சொன்னதாலே தேர்தல் தோல்வியை இப்பவே ஒப்புக்கொள்ளும்படி ஆகிவிட்டது.
ஏன் இப்படி நடந்துக்கறாங்கன்னா இதை வாஜ்பேயின் பிஜேபி என நினைச்சு
மோடி திரும்பவும் இந்தியா ஒளிர்கிறது என பிரச்சாரம் பண்ணுவார் முன்னே பண்ணியது மாதிரி அடிச்சிடலாம் என இருந்தாங்க. அதனாலே தான் கூட்டணிக்கு கூட அவசரம் காட்டல. எப்படியும் வறுமையை காரணம் காட்டி மோடியின் பிரச்சாரத்தை அமுக்கிடலாம் என இருந்தாங்க.
ஆனா இது புதிய இந்தியா, புதிய பிஜேபி, புதிய திட்டங்கள்.
மோடி எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அடிச்சிட்டார். இப்ப என்ன பண்ணுறது?
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை ரொம்பவும் தான் குறைத்து மதிப்பிடுகிறோம் என்ற வருத்தம் எனக்குண்டு. என்னதான் சில விஷயங்களில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் ஒரேயடியாகப் புறக்கணித்துவிட முடியாத ஆளுமை அவர் என்பது என்னுடைய கருத்து. சில அமீரகப் பதிவுலகப் போராளிகள் கூகிள் பிளஸ்சில் நான் இப்படிச் சொன்னபோது சுவாமியை நக்கலடித்துக் கமெண்ட் போடப் பாய்ந்து கொண்டு வருவார்கள்
கேள்விக்கென்ன பதில் என்று கேட்டு முடிப்பதற்கு முன்னாலேயே பதில்களை அள்ளியிறைப்பவர் டாக்டர் சுவாமி என்பது இந்த நேர்காணலில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. நேற்றே இதை பகிர்ந்திருந்தும் கூட இதைப்பற்றிப் பேச, பின்னூட்டமிட எவருக்கும் தோன்றவில்லை. இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரம் முகநூலில் B R மகாதேவன் எழுதி இருந்த பகிர்வொன்றும் கண்ணில் பட்டது. இங்கேயும்!
நான் பிராமணன்; செளகிதார் அல்ல; பிராமணன் சொல்வதை செளகிதார் செயல்படுத்துவார்; செயல்படுத்தவேண்டும் என்று சுப்பிரமணியம் ஸ்வாமி சொன்னது ஜாதி மேலாதிக்க வார்த்தைகள் அல்ல; எந்தவொரு அமைப்பிலும் மூளையாக இருப்பவர்கள் வழிகாட்டத்தான் செய்வார்கள், மற்றவர்கள்தான் களமிறங்கிச் செயல்படுவார்கள். அதைத்தான் அவர் மொழியில் சொல்கிறார். * அயோத்தி விஷயமாகட்டும் சல்லிக்கட்டாகட்டும் ஜெயலலிதா வழக்காகட்டும் அவருடைய பங்கு மதிக்கத்தக்கதே.
ராபர்ட் -ப.சி.- மாறன் வழக்காகட்டும் மெஹ்பூபா, கர்நாடக ஆட்சி விஷயமாகட்டும் அவர் சொல்வதைக் கேட்காமல் இழந்ததும் அதிகம். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடந்த சில மாதங்களாக மட்டுமே கொஞ்சம் நம்பிக்கை தென்படுகிறது. இது போதாது.
அதோடு, மம்தா, மாயாவதி, கடைசி கால ஜெயலலிதா, சசிகலா-தினகரன், மாறன், ப.சிதம்பரம் என ஊழல் வழக்குகளில் வசமாகச் சிக்கியிருக்கும் அனைவரும் சொல்லிவைத்தாற்போல் பாஜகவை சகட்டு மேனிக்கு துளியும் பயமின்றித் திட்டித் திரிகிறார்கள். இவர்களின் ஃபைல்கள் உண்மையில் யார் கையில் இருக்கின்றன?
அத்தனை பேரையும் பிடித்துக் கொடுத்த பிறகும் எந்த நடவடைக்கையும் இல்லையென்றாலோ குறைந்தபட்சம் அரசியல்ரீதியாக அவர்களை தேச பக்தியுடன் செயல்படவைக்கவோ இந்துப் பெரும்பான்மையின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கவைக்கவோ முடியவில்லையென்றாலோ ஸ்வாமிக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும்.
நிரவ் மோதி பிடிபடாமல் தப்பியதற்கு நிதி அமைச்சகப் பிரதிநிதிதான் காரணம் என்கிறார். இதுபோல் அவர் பிறருக்குத் தெரியாத சில உண்மைகளைச் சொல்கிறார். அதற்கு அவரால் ஆதாரம் கொடுக்க முடியவில்லையென்றதும் அவரை சதிக் கோட்பாட்டாளர் என்று எளிதில் புறமொதுக்குகிறோம். உண்மையில் திருட்டைச் செய்பவர்கள் அவ்வளவு சாமர்த்தியசாலிகள் என்பது தெரிந்தநிலையிலும் நாம் ஸ்வாமியை சந்தேகிப்பது, கேலி செய்வது சரியே அல்ல. திருடர்களை வேறு வகையில் பிடித்து ஜெயிலில் அடைத்திருந்தால் மட்டுமே நமக்கு ஸ்வாமியைக் குறை சொல்லும் தார்மிக பலம் கிடைக்கும். * சபரி மலை விவகாரத்தில் ஒவ்வொரு கோவிலின் பாரம்பரியத்தைக் காக்கும்வகையில் சட்டத்திருத்தம் –சட்டம் இயற்றுவது ஒன்றே ஒரே வழி. அதைச் செய்யாமல் நீதிமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கம்யூனிஸ்டுக்கு ஒரு நியாயத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் போராடுவது ஒருவகையில் பெரிய தவறுதான்.
ஒருவேளை இந்து பக்தி-பாரம்பரிய உணர்வை இந்து அரசியல் உணர்வாக மாற்றச் செய்த தந்திரமென்றால் அது அந்தவகையில் பலன் தருமென்றால் நல்லதுதான். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தல் என்பது ஒருவகையில் தவறான முன்னுதாரணமே. வேறுவகையில் நமக்குப் பின்னடைவையே தரவும் செய்யும். சபரி மலை விவகாரத்தில் ஸ்வாமியின் நிலைப்பாடு இதுவே. சல்லிக்கட்டை மத கோவில் விழாவாகச் சொல்லி வென்று காட்டியவரைக் கொஞ்சம் நிதானமாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதே நல்லது. * அவர் இரண்டு விஷயங்கள் சொல்லியிருக்கிறார். அடுத்த ஆட்சி நரேந்திர மோதி தலைமையிலேயே அமையும். இன்னொன்று நரசிம்மராவும், வாஜ்பாயும் பொருளாதாரம், வளர்ச்சி என்று சிறப்பாகவே செயல்பட்டார்கள். எனினும் மக்கள் அவர்களை மீண்டும் தேர்தெடுக்கவில்லை. இதயத்தின் குரல் ஒன்று; மூளையின் குரல் மற்றொன்று. * மூத்தோர் சொல்லும் முது நெல்லியும் முதலில் கசக்கும். பின்னரே இனிக்கும். கசக்கும்போதே துப்பிவிட்டால் நஷ்டம் நமக்கே. வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கும்வரை சில விஷயங்களைக் கவனிக்காமல் புறமொதுக்கலாம். ஆனால், தொலை நோக்குப் பார்வையில் அது பின்னடைவையே ஏற்படுத்தும். சாணக்கியரை ஒதுக்கிவிட்டு சந்திரகுப்தரால் வெற்றி பெறமுடியலாம். ஆனால், சாணக்கியரும் சந்திர குப்தரும் சேர்ந்தால் கிடைக்கும் வெற்றிக்கு ஈடாக அது ஒருபோதும் இருக்காது. * ரஜினிகாந்த் பற்றி இவ்வளவு அதிர்ச்சியான வெளிப்படையான கணிப்பை எதிர்பார்க்கவே இல்லை. அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் (என்பது தெரியும்). வந்தால் ஜெயிலுக்குச் செல்வார் என்பது ஸ்வாமியின் மிகப் பயங்கரமான தீர்க்க தரிசனம். * சசிகலா விவகாரத்தில் தவறுகள் செய்தது ஜெயலலிதாதான். அதோடு சசிகலா சிறையிலும் இருந்துவிட்டிருக்கும் நிலையில் வெளியே வந்தபின் அரசியலில் அவர் ஈடுபட வாய்ப்பு தரவேண்டும் என்கிறார். மிகவும் சரியான விஷயம் தான். * பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்தியதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். பின் லாடனைக் கொன்றதை உலக்குக்குக் காட்டினார்களா..? அவனுடைய உடலைக் கூடக் காட்டவில்லையே... அமெரிக்காவிடம் போய் யாரேனும் ஆதாரம் கேட்டீர்களா..? பாகிஸ்தான் எந்த தாக்குதலும் நடக்கவில்லை. யாரும் இறக்கவில்லை என்றுதான் சொல்வார்கள். 350 தீவிரவாதிகளை இந்தியா வீடு புகுந்து தாக்கிக் கொன்றுவிட்டது என்று சொல்லவா செய்வார்கள்.
மேலும் இதற்கான ஆதாரத்தை எப்படித் தர முடியும்? எல்லை தாண்டிச் சென்று தாக்கியது நிஜம். உலக நாடுகள் அந்த விஷயத்தில் நம் பக்கமே இருக்கிறார்கள். இதற்கு முன் இதைவிடப் பெரிய வன்முறையை பாகிஸ்தான் நம் மண்ணில் நிகழ்த்தியபோதும் நாம் சும்மாத்தான் இருந்தோம். இன்று தாக்கியது நிச்சயம் பெரிய வரவேற்கத் தகுந்த விஷயமே என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார். * தமிழகத்தில் பாஜக தனித்துத்தான் நிற்க வேண்டும் என்கிறார். தமிழகத்துக்கு நீட் தேர்வுக்கு விலக்கு தரப்படாது; எழுவர் விடுதலை சாத்தியமே இல்லை. ராஜீவ் காந்தி நாடாளு மன்றம் எடுத்த முடிவின் படி ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பினார். அதற்காக அவரைக் கொன்றதை மன்னிக்கவே முடியாது. அதோடு அன்று அவருடன் சேர்ந்து 18 அப்பாவிகளும் இறந்திருக்கிறார்கள். அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் நம் மண்ணில் வந்து இப்படியான அராஜகம் செய்திருப்பதை எப்படி மன்னிக்க முடியும்? தூக்கில் போடாமல் இருப்பதே பெரிய கருணைதான் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
தேசிய உணர்வு, பிராந்திய உணர்வு இரண்டும் ஒன்றுக்கொன்று அனுசரித்துச் செல்லவேண்டும். இறுதி முடிவு தேச நலன் சார்ந்தே இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதில் எந்தத் தவறும் இல்லை.
கொள்கையில் சமரசம் செய்துகொண்டு கூட்டணி அமைத்துப் பெறும் வெற்றி என்பது ஒன்று வெற்றிக்குப் பின் கூட்டணியினர் சொல்வதைச் செய்து கொடுக்காமல் நம்பிக்கை துரோகம் செய்ய வழிவகுக்கும். அல்லது அவர்கள் கேட்கும் தேசவிரோதச் செயல்களைச் செய்து கொடுக்கவேண்டியிருக்கும். இரண்டுமே பெரிய பின்னடைவையே தரும். அதற்குப் பேசாமல் அனைத்துத் தொகுதியிலும் தனித்து நின்று கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியையாவது செய்யலாம் என்கிறார்.
ஊழலை எதிர்க்கும் தார்மிக வலு ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் போய்விடுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு ஊழலையும் உயிரைக் கொடுத்துக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு தனது நேர்மையின் குரலை யாரும் மதிக்காமல் அரசியல் செய்வதை அதுவும் தோற்றுப்போகும் வகையில் கெஞ்சிக் கூத்தாடி 4 சீட், ஐந்துசீட் பெற்று அவமானப்படுவதைப் பார்க்கையில் ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்.
தப்புச் செஞ்சும் நன்மை கிடைக்காதென்றால் நேர்மையாகவே இருந்துவிட்டுப் போகலாமே. நல்ல பெயராவது மிஞ்சும். பின்னாளில் அது நல்ல பலனைத் தரவும் செய்யும்தானே. நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் என்று சொல்ல எப்படியெல்லாம் அவரும் இறங்கிவரவேண்டியிருக்கிறது பாருங்கள். * கடைசியாக தமிழக மக்களுக்கு அவர் விடுத்திருக்கும் வேண்டுகோள் மிகவும் முக்கியமானது. 40 எம்.பி.கள் தமிழகத்துக்கு இருக்கிறார்கள். தமிழகத்தின் நலன், தேசத்தின் நலன் இவற்றை ஒன்றுக்கொன்று எதிரானது என்று கருதாமல் டெல்லியில் செல்வாக்கை வளர்த்து நாட்டுக்கும் மாநிலத்துக்கும் நன்மை கிடைக்கச் செய்பவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த எதிர்பார்ப்புகளின்படிச் செயல்படப் போகிறவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமே என்பது அவருக்குத் தெரியும். நாற்பதிலும் அவர்கள் நின்றிருந்தால் நிச்சயம் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும்படிக் கேட்டிருப்பார். அவர் அப்படிக் கேட்காமல் போனதற்கு அவரைப் பழித்துப் பலனில்லை.