என் சுவாசக் காற்றே......!
உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா?
அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான்! சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்துகொள்கிறார்கள்! வேறுபலருக்கோ, புத்தகங்களை வாசித்தே வாழ்க்கையை அறிந்து கொள்கிற அனுபவம் வாய்க்கிறது.வாசிப்பதில் ஆழ்ந்து லயிக்கும்போது அதை யாருடனாவது பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பு, மடி கனத்துப் போன பசுவைப் போல, எழுதத் தூண்டுகிறது.
வாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்!
புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக!
புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது!
வாருங்கள்! பேசுவோம்! இப்படி ஒரு முகவுரையோடு 2009 டிசம்பர் கடைசிவாரத்தில் துவங்கப்பட்ட வலைப்பதிவு இது. என்னவோ சில காரணங்களால் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 2012 இல் இரு பதிவுகள், 2014 இல் இருபதிவுகள், அதற்குப்பிறகு 2018 டிசம்பரில் 6 பதிவுகள் என்று தொடங்கி இந்த வருடம் தான் தொடர்ச்சியாக, அனேகமாக தினசரியே
புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக!
புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது!
வாருங்கள்! பேசுவோம்! இப்படி ஒரு முகவுரையோடு 2009 டிசம்பர் கடைசிவாரத்தில் துவங்கப்பட்ட வலைப்பதிவு இது. என்னவோ சில காரணங்களால் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 2012 இல் இரு பதிவுகள், 2014 இல் இருபதிவுகள், அதற்குப்பிறகு 2018 டிசம்பரில் 6 பதிவுகள் என்று தொடங்கி இந்த வருடம் தான் தொடர்ச்சியாக, அனேகமாக தினசரியே
இந்தப்பக்கங்களில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்து, இந்தப்பதிவுடன்
223 பதிவுகள் என்று வளர்ந்திருக்கிறது.
விடுபட்டுப்போன நண்பர்கள் தொடர்பு மீண்டும் சீராக ஆரம்பித்ததும் பக்கங்களுக்கு வருகை களைகட்ட ஆரம்பித்ததும் இந்த வருட பிப்ரவரியில் இருந்துதான்! 2009 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரையே இந்தப் பக்கங்களுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 39025 தான்! நண்பர்கள் வருகை கடந்த ஆறுமாதங்களில் இருமடங்குக்கும் கொஞ்சம் கூடுதலாக ஆகியிருப்பதில் எங்கள்Blog ஸ்ரீராம், தமிழ்மணம் திரட்டி, என்று வெளியே
இருந்து கிடைத்த referral ஆதரவு முக்கியப்பங்கு வகிக்கின்றன.
எங்கள்Blog ஸ்ரீராமுக்கும், தமிழ்மணம் திரட்டிக்கும் நன்றி.
இசைப் பிரியர் ஸ்ரீராமுக்காக ஒரு பாட்டு
எங்கள்Blog வெறுமனே referral ஆக மட்டுமல்ல தன்னுடைய வாசகர்களில் கொஞ்சம் பேரை இங்கே பதிவுகளுக்கு ரெகுலராக வந்து உரையாடுகிற
பங்காளிகளாகவும் அனுப்பிவைத்திருக்கிறது என்பதையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிற தருணத்தில் .........
நண்பர்களிடம் கேட்க விரும்புகிற ஒரு சிலகேள்விகளாக:
இந்தப்பக்கங்களின் உள்ளடக்கம் உங்களுக்குத் திருப்தியாக
இருக்கிறதா? கொஞ்சமாவது பயனுள்ளதாக இருக்கிறதா?
வேறேதாவது மாற்றங்கள் வேண்டியிருக்குமா? என்னென்ன
மாற்றங்கள் வேண்டுமென நினைக்கிறீர்கள்?
வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
உங்கள் பதில்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
மீண்டும் எழுத வந்ததற்கு நன்றி. தினமும் உங்கள் பக்கங்களை படிப்பது என் தினசரி வழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. பக்கங்கள் திருப்தியாக இருக்கிறது. பொதுவாக வீடியோக்களை பார்க்க முடிவதில்லை. பொறுமை இருப்பதில்லை. மற்றும் அதிக நேரம் விரயமாகிறது.
ReplyDeleteபடிப்பவர்கள் கமெண்ட் அதிகம் எழுதவில்லை என்று தளராதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
வாருங்கள் பந்து! படிக்க வருகிறவர்கள் எண்ணிக்கை, குறைவான பின்னூட்டங்கள் என்று இவைகளுக்காக எப்போதுமே அலட்டிக் கொண்டதில்லை! ஆனால் ஒரு ஆரோக்கியமான உரையாடல் நிகழவேண்டும் என்கிற விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற ஆரம்பித்திருக்கிறது என்பதையும் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டுமோ?
Deleteதொடர்ந்து அரசியல் இடுகைகளோட, தனிப்பட்ட ரசனைகளையும் இடுகைகளாக போடுங்க.
ReplyDeleteஅரசியல் பதிவுகளில் காணொளிகள் ஓகே. பார்க்காதவைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் குப்பை காணொளிகளைப் போட்டுடாதீங்க. கண்டண்ட் நல்லா இல்லாம, எவனோ உளருவதைக் கேட்க நேரம் செலவழிக்கக்கூடாது இல்லையா?
சில சமயம், உங்கள் இரண்டு தளங்களில் ஒரே சப்ஜெக்ட் வருது, இதுலயும் ரிபீட் ஆகுது. அதைத் தவிர்த்துவிடுங்கள்.
வாருங்கள் நெல்லைத்தமிழன்! 2009 இல் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தபோது அரசியல் பொருளாதாரம் என்று எல்லாவற்றையும் பேசலாம் என்று மேலே கொடுத்திருக்கிற மாதிரி இதைப் புத்தகங்கள், வாசிப்பு இவைகளைப் பேசுவதற்காகவே ஆரம்பித்தேன்! நடுவில் நாலைந்து பதிவுகள் திரைப்படங்கள், வெப் சீரீஸ் இவைகளைத் தொட்டும் வந்தது. நடுவில் உடல்நலக்குறைவால் இங்கே எழுதுவது தடைப்பட்டது.
Deleteபதிவுகளின் நடுவே காணொளிகளை பகிர்வது, சரியோ தவறோ ஒரு தரப்பு என்ன சொல்கிறது என்பதைத் தரவுகளாகக் கொடுத்துவிட்டு, அதன் மீது விமரிசனக்குறிப்புக்களாக எழுதிக் கொண்டிருப்பதில் ஒரு சௌகரியம், சும்மா இட்டுக்கட்டி எழுதுவதில்லை என்பதற்கான நிரூபணம். வீடியோவை அதுவும் ஒரே பதிவில் நாலைந்து, சுமார் 2 மணிநேரம் ஓடக்கூடியவை யாரும் பார்க்கமாட்டார்கள் என்று தெரிந்து வைத்திருந்தாலும், அது ஒரு proof அவ்வளவுதான்!
அன்றன்றைய நிகழ்வுகளை பார்த்துவிட்டு உடனுக்குடன் பகிர்வதால் இரண்டு வலைப்பக்கங்களிலும் ஒரேவிஷயம் வருகிற மாதிரி இருந்தாலும் இரண்டிலும் வேறு தரவு வேறுவிதமான விமரிசனம் என்று இருப்பதாகத்தான் நினைக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு, அவைகளைத் தவிர்க்கப் பார்க்கிறேன்!
வாசித்தேன். எப்படியெலாம் இயங்க முடியுமோ உடல் நலனையும் கவனித்துக் கொண்டு அப்படியெல்லாம் இய்ங்குங்கள். ஜெயகாந்தனைப் பற்றி என் தளத்தில் எழுதும் பொழுது உங்கள் சுவாசிக்கப் போறேங்க பழைய பதிவுகள் நினைவில் நிழலாடியது.
ReplyDeleteநன்றி ஜீவி சார்!
DeleteI am reading your blog regularly. Why two blogs ? you can give the link for videos. we come to this blog to read your opinions. So, link is enough. Very unbiased, bold opinions. please keep it up.
ReplyDeleteவி திவாகர் என்றொரு எழுத்தாளர்! அவர் எழுதிய நாவல் ஒன்றை எனக்கனுப்பி கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். இத்தனைக்கும் அது வெளியாகி ஒருவருட காலம் ஆகியிருந்தது. Consenttobenothing தளத்தில் அதைப்பற்றிய விமரிசனமாகவும், அடுத்தொரு பதிவில், சில சரித்திரப் பின்னணிகளையும் சொல்லியிருந்தேன். அப்போதுதான் புத்தகங்கள், வாசிப்புக்காகவே தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியதில் இது இரண்டாவது வலைப்பதிவாக!
Deleteஇன்னொரு வலைப்பதிவு கூட இருக்கிறது. வெளியுறவுக்கொள்கை, வெளியுறவு விவகாரங்களைப் பற்றிப் பேசுவதற்காக. என்ன காரணமோ தமிழ்மணம் திரட்டியில் இன்னமும் திரட்டப்படவில்லை.
என்னைக் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி.
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த்த ஒரு பாடலையும் போட்டிருப்பதற்கும் நன்றி.SPB!
காணொளிகள் நான் அதிகம் பார்ப்பதில்லை. காரணங்கள் மாறிமாறி பேசும் அரசியல் விமர்சகர்களின் ஒன் சைடட் பேச்சுகளைக்கேட்பதில் சுவாரஸ்யமில்லை. இரண்டாவது பல தளங்களுக்கும் செல்லவேண்டியிருப்பதாலும், பாஸிட்டிவ் செய்தி தேர்ந்தெடுக்க மட்டுமல்ல, சொந்த ஆர்வத்தினாலும் செய்தித்தாள்கள் பார்க்கவேண்டி இருப்பதாலும், சொந்த தளத்தில் பதிவுகளை ரெகுலரைஸ் செய்யும் வேலைகள் இருப்பதாலும் நடுவில் அலுவலகப்பணிகளையும் (!!!!!) கவனிக்க வேண்டியிருப்பதாலும்!!!
நெல்லைத்தமிழன் சொல்லி இருப்பதுபோல ஒரே மாதிரி பதிவுகள் வராமல் அவ்வப்போது வித்தியாசம் காட்டலாம்.
//நடுவில் அலுவலகப்பணிகளையும்// - அடப்பாவமே.... நான் அலுவலகத்தைச் சொன்னேன்.
Deleteநெல்லை! இப்படிக் காலை வாருகிறீர்களே! :)))
Deleteஸ்ரீராம்! உங்களுடைய நேரச்சிக்கலைப் புரிந்து கொள்கிறேன். கருத்துரைக்கு நன்றி! கவனத்தில் வைத்துக் கொள்கிறேன், ஆனாலும், சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்? !!
ஹலோ கிருஷ்ண மூர்த்தி சார் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை படிக்கிறேன் ஆனால் முன்பு போல இப்போது நேரம் கிடைப்பதில்லை என்பதால் கருத்துக்கள் போட நேரமில்லை முன்பு உங்கள் தளத்தின் எழுத்துக்கள் சற்று பெரியதாக இருக்கும் ஆனால் இப்போது அது மிக சீறியதாக இருக்கிறது படிப்பதற்கு சிறிது கடினமாக இருக்கிறது வீடியோக்களை தொடர்ந்து இணையுங்கள் நேரம் இருப்பவர்கள் இணையத்தில் தேடுவதற்கு பதிலாக கருத்துடன் வரும் போது பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் நன்றிகள் வாழ்க வளமுடன்
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteஎழுத்தின் அளவு பிரச்சினை இன்னும் இருக்கிறதா?
மற்றவர்களும் கொஞ்சம் சரிபார்த்துச் சொல்லுங்களேன்!
fireox ப்ரௌசரில் பார்க்கையில் எழுத்துரு மிகச்சிறியதாக இருப்பதை இப்போதுதான் கவனித்தேன். எப்படி சரிசெய்வது என்று தேடிப்பிடித்து சரிசெய்து விடுகிறேன்!
Delete