என்னது? வெறும் ஐந்தரைக்கோடி ரூபாய் கடனுக்காக நூறு கோடி ரூபாய் சொத்து ஏலமா? கேப்டன் விஜயகாந்துக்கே இந்தக் கதியா என்று ஏகப்பட்ட உச்சுக்கொட்டல்கள்! கடனைக் கொடுத்து விட்டு திரும்ப வசூலிக்க முடியாமல் தவிக்கிற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பரிதாபமான நிலைமை குறித்து யாராவது கவலைப்பட்டீர்களா?
இங்கே பிரேமலதா கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்கிறார்! கூடவே நிற்கிற கல்லூரியின் தாளாளர் சுதீஷ் வாய்மூடி மௌனியாக நிற்கிறார். இவரை நம்பி விட்ட கல்லூரியோ கேப்டன் டிவியோ உருப்படாமல் முட்டுச்சந்தில் நிற்பதற்கு என்ன காரணம் என்று யாரும் கேள்வி கேட்கமாட்டோம்! கடன் கொடுத்தவனும் கேட்கக் கூடாதென்றால் அது எந்த ஊர் நியாயம்? என்ஜினீயரிங் கல்லூரிகள் காலத்துக்கும் காசைவந்து கொட்டும் என்ற நம்பிக்கையில் தொடங்கியவர்கள், அந்தத் தொழிலை முறையாக நிர்வகித்தார்களா?
சத்தியம் டிவி அனுதாபப்படுகிற சாக்கில் சந்தோஷமாகக் கூவிக்கூவிச் சொல்கிறது. இப்போது வங்கி செய்திருப்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதானே தவிர இறுதியானது அல்ல. ஏலத்தேதிக்கு முன்னால் கடனை முழுமையாகவோ, கணிசமான பகுதியைக் கட்டி விட்டு மீதத்தை எவ்வ்ளவு காலத்துக்குக்குள் காட்டமுடியும் என்று நியாயமாக ஒரு காரணத்தை சொல்லமுடிந்தாலே போதுமானது. பொதுத்துறை வங்கி என்னமோ விஜயகாந்தை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டமாதிரிப் பேசுவது கொஞ்சமும் சரியல்ல. நேர்மையானவர்களுக்குத்தான் சோதனைவரும் என்று பிரேமலதா பேசினால் மட்டும் போதுமா? நேர்மையைச் செயலிலும் காட்டியிருக்க வேண்டாமா?
ராகுல் காண்டிக்கு சித்தம் கலங்கிப்போய் விட்டதா என்ன? இன்று ஜூன் 21 யோகா தினமாகக் கொண்டாடப்படுவதை நக்கலடிக்கிற சாக்கில் ராணுவத்தையும் இழிவு படுத்துகிற மாதிரி ட்வீட்டரில் படம் போட்டிருக்கிறார். பப்பு (முதிர்ச்சி பெறாத சிறுபிள்ளை) என்று அழைக்கப்பட்டதில் தவறே இல்லை!
Replying to
Beautiful pictures BUT distasteful tweet. Wonderful animals, brave Indian soldiers. BUT petty comment.
ட்வீட்டரில் தாளித்துக் கொண்டிருக்கிறார்கள். சொரணை உள்ளவர்களுக்குத்தானே அதெல்லாம் உறைக்குமாம்?
ராகுல் காண்டி மீண்டுவரவே முடியாத நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிக் கொண்டே வருகிறது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment