முந்தைய இருபதிவுகளில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக தொகுதி சீரமைப்பு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்கை எடுத்துச் செயல்பட இருப்பதாக வெளிவந்த செய்திகளைக் கோடி காட்டியிருந்தேன். அதுதொடர்பான இரு காணொளிகள் இங்கே! காணொளிகளைப் பார்த்துவிட்டு, முடிந்தால் முந்தைய பதிவுகளில் சொல்லப்பட்டதென்ன என்பதைப் பார்த்து விடுங்கள்! தொகுதிகள் Delimitation செய்யப்படலாம் என்ற வெறும் தகவலே, காஷ்மீரி அரசியல்வாதிகளுக்கு கிலியைக் கொடுத்திருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
முதலில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இதுவிஷயமாக என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேட்கலாம்.
இந்த வீடியோவில் delimitation process தொடங்குவதற்கு முன் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் முன்னால் பிறப்பித்திருந்த உத்தரவை மாற்றக்கோரி மனுச்செய்ய வேண்டி வரும் என்பதில் இருந்து சங்கிலித்தொடராக நிறைய நடைமுறைகளைக் கடந்தாகவேண்டும் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். முந்தைய பதிவில் ஒமர் அப்துல்லாவின் முகநூல் பகிர்வில் என்ன சொல்லியிருக்கிறது என்பதற்கும் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாகவும், இதுவரை இழைக்கப் பட்டஅநீதிகளுக்கு நியாயம் அளிப்பதாகவும், மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்கும் முயற்சியாகவும் இருக்கிற இதை பாரூக் அப்துல்லா எப்படிப் பார்க்கிறார், ஏன் எதிர்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அதிமேதாவியாக இருக்க வேண்டியதில்லை. #சுயநலம்
நேற்றைக்கு ரிபப்லிக் டிவியில் நடந்த காரசாரமான விவாதம் இது. கொஞ்சம் கூச்சல்கள் அதிகம் இருந்தாலும் கவனித்துக் கேட்கவேண்டிய விவாதம் இது.
இன்றைய இளையதலைமுறைக்கு காஷ்மீர் பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், இந்த விவாதங்கள் ஒரு தெளிவான புரிதலைக் கொடுக்கக் கூடும். கவனித்துக் கேட்டுவிட்டு வாருங்கள், தொடர்ந்து பேசலாம்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment