பொதுவாக தமிழ்நாட்டில் எந்தத்தேர்தல் வந்தாலும் தபால் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் ஆதரித்து விழும் என்பதில் பெரிய அதிசயம் எதுவுமில்லை. எல்லாம் வெட்ட வெளிச்சம் தான்! சிதம்பர ரகசியம்தான்! ஆனால் நடிகர் சங்கத் தேர்தல்களைப் பொறுத்தவரை தபால் ஓட்டுக்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறதா?
பொதுவாகக் கூத்தாடிகளைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு நாடகமோ சினிமாவோ நன்றாக இருந்தால் இன்னொரு முறை பார்ப்பேனே தவிர, கூத்தாடியை நடு வீட்டுக்குள் கொண்டுவந்து தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற வழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் இங்கே தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு சொல்லி வைத்த மாதிரி எல்லாச் சேனல்களிலும் நடிகர்சங்கத்தேர்தல்களைப் பற்றியே பேட்டிகளை ஒளிபரப்பி,தமிழன் என்றொரு தனி இனத்துக்கு இதைத்தவிர வேறு முக்கியமான பிரச்சினையே இல்லை என்கிறமாதிரிக் கூத்தடித்ததில் ரொம்பவுமே நொந்து போயிருந்தவனை உசுப்பிவிட்டு என்னையும் இந்த விஷயமாகப் பதிவெழுத வைத்திருக்கிறது. காரணம் கூத்தாடிகளுக்கிடையிலான போட்டியோ அரசியலோ இல்லை! தி மு கழகம் கூத்தாடிகளுக்குள்ளே புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிற விஷயம் உறுதியாகத் தெரிய வந்தது தான்!
இங்கே விஷால் பேசுவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் தான்! நடிகர்களுடைய தபால் ஓட்டுக்களைக் காசு கொடுத்து வாங்கி விஷால் அணியினரை ஜெயிக்க வைக்க வேண்டுமென்று யார் பின்னணியில் இருக்கிறார்கள்? தெரிந்து கொள்வது ஒன்றும் கடினமான விஷயமில்லை. சேனல்களுக்குத் தீனி போட்டதைத்தவிர இந்த விஷயம் வேறு எதையாவது சாதித்திருக்கிறதா?
என்று போகாத ஊருக்கு, காது கொடுத்துக் கேட்காத இந்திய இடதுசாரிகளுக்கு வழிசொல்லித் தருகிறார் ராமசந்திர குகா.
முழுக்கட்டுரையையும் வாசிக்க
மீண்டும் சந்திப்போம்.
ஆக, மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாட்டிலிருந்து ராஜ்யசபா போக வாய்ப்பே இல்லை போல! போய்த்தான் என்ன செய்யப் போகிறார் என்று கேட்கிறீர்களா?
இந்திய இடதுசாரிகளுக்கு இனி எதிர்காலம் உண்டா?
கேள்வியெழுப்புவதும் பதிலும் ராமசந்திர குகா
If the Left in India hopes or wishes to rise up from the ashes, then the first thing it must do is to become more Indian. In 1920, shortly before the Communist Party of India was established, the Mumbai Marxist, S.A. Dange wrote a pamphlet exalting Lenin over Gandhi. Ever since, Indian communists have found their heroes in a country other than India. They have venerated, in turn, the Germans Karl Marx and Friedrich Engels, the Russians V.I. Lenin and Josef Stalin, Mao Zedong of China, Ho Chi Minh of Vietnam, the Cuban Fidel Castro, and the Venezuelan Hugo Chávez.
The problem with these foreigners is not just that they were foreigners. They were also totalitarians, who believed in a one-party State run by themselves. The likes of Lenin and Mao had no understanding of India or of Indian society; nor an appreciation of the virtues of multiparty democracy either. By worshipping them at the expense of home-grown thinkers such as Gandhi and Ambedkar, the communists found themselves out of sync with Indian realities.
என்று போகாத ஊருக்கு, காது கொடுத்துக் கேட்காத இந்திய இடதுசாரிகளுக்கு வழிசொல்லித் தருகிறார் ராமசந்திர குகா.
முழுக்கட்டுரையையும் வாசிக்க
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment