எது பொருளோ அதைப் பேசுவோம்! என்ற தலைப்பில் இங்கே நம்முடைய உடனடி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய சங்கதிகளாகக் கொஞ்சம் பார்த்துக் கொண்டு வருகிறோம், இல்லையா? இந்த மதம் என்றால் என்ன? A religion is a set of beliefs that is passionately held by a group of people that is reflected in a world view and in expected beliefs and actions என்கிறது சிம்பிள் இங்கிலீஷ் விக்கிபீடியா. மதம் என்றால் ஒரு குழுவுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள், உலகத்தின் மீதான பார்வை இத்தியாதி இத்தியாதி. இதற்குமேல் மிகவும் எளிமையாக, சுருக்கமாகச் சொல்லிவிடமுடியுமா?
38 நிமிடங்கள் தான்! பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
ஆனால் மதநம்பிக்கைகளை ஆதாரமாக வைத்து மோசடிகளில் இறங்குவதும், ஒரே மதம் என்கிற ஒற்றைப்புள்ளி தாண்டி யோசிக்கத்தெரியாத ஜனங்கள் அதில் ஏமாறுவதும் எதில் சேர்த்தி? இங்கே காங்கிரஸ் திமுக முதலான கட்சிகள் தங்களை சிறுபான்மைக் காவலர்களாகக் காட்டிக் கொள்வதையும், ஓட்டு அரசியலைத்தாண்டி அவை சிறுபான்மையினருடைய நலனுக்கானதல்ல என்று மட்டுமே ஆகிப்போன Pseudo Seculars தான்! இதை இந்திய அரசியலில் நெடுங்காலமாகப் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.
கர்நாடகாவில் பெங்களூரு நகரில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒற்றை மனிதன் மதத்தின் பெயரால் மோசடி செய்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் என்னை மிகவும் அதிரவைத்த ஒரு செய்தி! Islamic Monetary Advisory என்ற பெயரில் ஹலால் செய்யப்பட்ட முதலீடாக சுமார் 40000 இஸ்லாமியக் குடும்பங்களில் இருந்து பெற்றுக் கொண்டு காங்கிரஸ்காரர்களுக்கும் வேறு சில உதிரிகளுக்கும் கொஞ்சம் கொடுத்துவிட்டு, இப்போது துபாய்க்கு மிச்சத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடிய மன்சூர் கான் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கிற வீடியோ மேலே, ஒரு விவாதத்துடன்!
இந்த மோசடியைப் பற்றி, ஏதாவது முன்னேற்றம், புதிய செய்திகள், தகவல்கள் இருக்கிறதா என்று ஒவ்வொருநாளும் ஆங்கில ஊடகங்களில் தெடிக் கொண்டே இருக்கிறேன்.
இந்திய அரசியலில் தொடர்ந்து இதுமாதிரி மோசடி ஆசாமிகள், போலி ரட்சகர்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகிற இஸ்லாமிய சகோதரர்கள், தாங்களேதான் அந்த மாயையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் சொல்வதைக்கூட விரும்பாத இஸ்லாமிய நண்பர்கள் பலரை அறிவேன்.
ஹலால் செய்யப்பட்ட IMA Jewellery என்று ஏமாறுவது ஒருபக்கம்! வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஒருபக்கம்! இவர்களோடு சேர்ந்து இந்த தேசமும் இழுபட வேண்டுமென்று நினைத்தால், அது எத்தனைநாளைக்கு?
மீண்டும் சந்திப்போம்.
மதசார்பின்மை, நாங்க மதசார்பின்மையானவர்கள் என்று சொல்லி கொண்டு இஸ்லாமிய மத கடும்போக்கு வாதத்தையும், சிறுபான்மை மத மோசடிகளையும் ஊக்குவித்தே வருகிறார்கள் அரசியல்வாதிகள்.
ReplyDeleteஇப்ப்டிக் கண்மூடித்தனமாக நம்பி ஏமாறுகிறீர்களே என்று சில இஸ்லாமிய நண்பர்களைக் கேட்டதுண்டு. ஆனால் அதில் மேற்கொண்டு பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை என்பது என்னுடைய சொந்த அனுபவம்.
Delete//இப்ப்டிக் கண்மூடித்தனமாக நம்பி ஏமாறுகிறீர்களே என்று சில இஸ்லாமிய நண்பர்களைக் கேட்டதுண்டு. ஆனால் அதில் மேற்கொண்டு பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை என்பது என்னுடைய சொந்த அனுபவம்.//
ReplyDeleteகடுமையான மதவாதம் அவர்களுக்கு போதிக்கபட்டதால் மதத்தை தாண்டி அவர்களால் உண்மைகள் பேசமுடிவதில்லை. பேசுவதில்லை. அப்படியும் மதவெறியை தாண்டி வரும் நல்லவர்கள் தெரிவிக்கும் உண்மைகளை கூட பேசவிடாமல் அவர்களை தடுப்பதை இந்தியாவின் மதசார்பின்மை என்று தெரிவித்து கொள்ளும் அரசியல்வாதிகள் செய்து வருகிறர்கள்.
உண்மை. அந்த மாயவலையிலிருந்து விடுபடுவதை அவர்கள் தாங்களாகவேதான் செய்துகொள்ள வேண்டும் என்று அதற்காகத்தான் சொன்னேன்.
Delete