மம்தா பானெர்ஜியின் மமதை, வீராப்பு எல்லாவற்றையும் மருத்துவர்களுடைய வேலைநிறுத்தம் ஒன்றே காலிசெய்து விட்டது மாதிரித் தெரிகிறதோ? அப்படியில்லை! ஒவ்வொரு விஷயத்திலும் மம்தா காட்டிய வரட்டுப் பிடிவாதம், வீம்பு, அராஜகம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனங்களுடைய அதிருப்தி வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டே வந்ததன் உச்சமாக மருத்துவர்களுடைய வேலைநிறுத்தம் ஆகிவிட்டது.இப்போது இது இல்லை என்றால் வேறொரு விஷயம் இந்த இடத்துக்கு மம்தாவைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும்.
பேச்சுவார்த்தை மீடியாக்களுக்கு முன்னால், மக்களும் பார்க்கிற மாதிரி நேரடி ஒளிபரப்பாக என்கிற மருத்துவர்கள் கோரிக்கைக்கு ஒருவழியாக மம்தா பானெர்ஜி சம்மதித்து விட்டார் என்பதில் மகிழ்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. பேச்சு வார்த்தை நடந்து மருத்துவர்களும் தங்களுடைய ஒருவாரகால வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார்கள் என்பதிலும் கூடப் பெரிதாக மகிழ்ச்சியடைய ஏதுமில்லை.
இதன் பிறகு மம்தா பானெர்ஜி தன்னுடைய நடவடிக்கைகளை என்ன மாதிரி, எப்படி மாற்றிக்கொள்ளப்போகிறார் என்பதைப் பொறுத்தே எதையும் முடிவு செய்ய வேண்டியிருக்கும். வெறுமனே பிரசாந்த் கிஷோர் மாதிரி மீடியா மேக் ஓவர் செய்து வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்குகிறவர்கள் செய்கிற வேலை அல்ல அது. சந்தேகம் இருந்தால் பிரசாந்த் கிஷோர் யார்யாருக்கெல்லாம் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தார், அவர்களுடைய இன்றைய நிலைமை என்னவென்பதைக் கொஞ்சம் தேடிப்பாருங்கள்! போதும்!
கேரள எம்பியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ராகுல் காண்டி, கையெழுத்திட மறந்து, நினைவுபடுத்தியபிறகே திரும்பிவந்து கையெழுத்திட்டார் என்பது என்ன மாதிரி அறிகுறி? பெரும்பாலான காங்கிரஸ் எம்பிக்கள் ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, ஒற்றை இடதுசாரி எம்பி மட்டும் மலையாளத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார் என்பதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா? தமிழ்நாடு கம்யூனிஸ்ட் எம்பிக்கள் 4 பேர் என்ன செய்யப் போகிறார்கள்?
உதிரிக்கட்சிகளாக இங்கே அனைத்துக் கட்சிகளுமே மாநில அளவில் குறுகிப்போய்விட்ட பிறகு, தனிப்பெரும் கட்சியாக பிஜேபி தேசம் முழுவதும் பரந்து விரிந்து வளர்ந்திருக்கிறது. அமித் ஷா இந்த ஆண்டு இறுதிவரை கட்சித்தலைவராகவும் நீடிப்பார் என்று அறிவித்திருக்கிற அதே வேளையில் அடுத்த தலைவராக இவர்தான் என்பதையும் சொல்கிற மாதிரி, ஜே பி நட்டா, கட்சியின் செயல்தலைவராகவும் இன்று அறிவிக்கப் பட்டிருக்கிறார். இந்தச் செய்தியோடு காங்கிரஸ் கட்சித் தலைவர் யார் என்பதோ, சோனியாG வாரிசுகளைத் தாண்டி தலைவரைத் தேட முடியாமல் இருப்பதைப் பற்றியோ கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்களேன்.
இது ஆந்திர அரசியல்! சந்திரபாபு நாயுடுவை வறுத்தெடுப்பது ஒன்றுதான் அஜெண்டாபோல! ஆந்திர சட்டசபை நிகழ்ச்சிகளை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. நகரி MLA ரோஜாவின் முறை இப்போது.
தி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி! - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன் #DMK
ஆக மூன்றாம் கலீஞருக்கு வழிவிடப்பட்டிருப்பது ஒன்றுதான் தமிழ்நாட்டு அரசியலின் இப்போதைய முக்கிய செய்தி போல!
மீண்டும் சந்திப்போம்.
ஜெமோ ரெட்டியின் ஆட்சியில் வித்தியாசமாய் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிகிறது.
ReplyDeleteஜெகன் மாதிரி முதல் தலைமுறை வாரிசுகள் கூட சோபிப்பதில்லை என்று தெரியவந்தால் ராமச்சந்திர குகா தன்னுடைய வரலாற்று ஆராய்ச்சியையே நிறுத்திக்கொள்வாரா ஸ்ரீராம்!?
Deleteவெள்ளக்கோவில் சுவாமிநாதன், ராஜினாமா செய்ததுபோலத் தெரியலை. டெம்பொரரியா அவருக்கு பதவி கொடுத்திருந்தாங்க. இப்போ இடத்தைக் காலி செய்யச் சொல்லிட்டாங்க. அவ்ளோதான் மேட்டர்.
ReplyDeleteசாமிநாதன் வெறுமனே ராஜினாமா செய்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள்? இதுக்குப் பதிலா அது என்று வேறொன்று பதவிமாற்றம் ஆக வாய்ப்பிருக்கிறதே நெ.த. சார்!
Deleteநல்லவேளை, எ.பி ஸ்ரீராம் டீம் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம் பண்ணலை. பண்ணியிருந்தால், எ.பி குரூப்புக்கும் ஒரு துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும்.
ReplyDeleteகேரள எம்பிக்கள் மலையாளத்தில் பதவியேற்றால் அப்புறம் ராகுல் காண்டி என்ன பண்ணுவார்? அவர் ஆங்கிலத்தில் பதவியேற்றால் அது பேசுபொருளாகக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் ஆங்கிலத்தில் பதவியேற்றிருப்பார்கள்.
நெல்லை! இது வேறேயா? :-)))
Deleteநமக்குத் தெரிந்தவர்களில் எவரோ து.மு ஆயிருக்கக் கூடிய வாய்ப்பு போச்சா?