Friday, June 28, 2019

ராகுல் காண்டியின் ராஜினாமா போராட்டம்! காங்கிரசுக்கே இது புதுசாம்!

இன்றைய அரசியல் செய்திகளில் ஒரு ஓரத்தில் ராகுல் காண்டி நடத்திவரும் ராஜினாமா போராட்டம் அவ்வளவு கவனத்தைப் பெறவில்லையோ?  இதற்கு கடந்த 70+ ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி கடந்துவந்த பாதை,மாமியார் தேய்ந்து கழுதை ஆனாளாம்! கழுதை தேய்ந்து கட்டெறும்பாச்சுதாம்! கட்டெறும்பும் தேய்ந்து ...?? இப்படிக்  கேள்விக்குறி ஆகி நிற்பதைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடலாம்!



தாத்தன்       நேரு காலத்தில் பழிசுமப்பதற்கென்றே விகே  கிருஷ்ண மேனன் டிடிகிருஷ்ணமாச்சாரி போல சில பலியாடுகள் இருந்தார்கள். பதில் பேசாமல் பழியும் சுமந்தார்கள்! நேருவின் புனித பிம்பத்தைக் காப்பதற்கு அதிகாரிகள் மட்டத்தில் ஒரு பிரிவு நேரு இறந்தபின்னால் கூட வெகு முனைப்பாக இருந்துவருவது அவ்வளவாக வெளியில் தெரியாத விஷயம். 

இந்திரா காலத்தில் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அடிக்கடி பந்தாடப் பட்டார்கள். சென்னா ரெட்டி மாதிரி மாநில அரசியலில் சொந்தக் செல்வாக்கு மிகுந்தவர்களை மத்திய மந்திரியாகவோ கவர்னராகவோ ஆக்கி, சொந்தச்  செல்வாக்கு இருந்தவர்களை  செல்லாக்காசாக்கின குள்ளநரித்தனம் இந்திராவிடம் இருந்தது. நேரு கால விசுவாசிகள் ஆதரவு கட்சியிலும் அதிகாரிகள் மட்டத்திலும் இந்திராவுக்கு இருந்தது.   

இந்திராவின் மருமகள் நான் என்று மார்தட்டிக்கொண்ட சோனியாவுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருந்ததில்லை.ஆனால் மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்ட ஒரு பாடம் மட்டும் தெளிவாகப் புரிந்திருந்தது. சொந்தக் செல்வாக்கை வளர்த்துக்கொள்கிறவர்களை விட்டு வைக்கக்கூடாது என்பதுதான் அது.ஆனால் இந்திரா மாதிரி முந்திச் செயல்படுகிற வேகம் மருமகளிடம் இருந்ததில்லை  2009 இல் ராஜசேகர ரெட்டி ஒரு விபத்தில் இறந்ததும், அவர் குடும்பத்தை ஆந்திர அரசியலில் வளர விடக்கூடாதென்று ஜெகன் மோகன் ரெட்டியை அடக்கிவைக்கப்பார்த்தது, இன்றைக்கு ஆந்திரா தெலங்கானா இரண்டு மாநிலங்களிலும் காங்கிரசை இல்லாமலேயே சுத்தமாகத்துடைத்து விட்டது. ராஜசேகர ரெட்டி கண்டுபிடித்த புதுப்புது ஊழல் உத்திகளை, உதாரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவை,  காப்பியடித்து ஆதாயமடைந்தது பானாசீனா மகன் உள்ளிட்ட சிலர்  மட்டும்தான்! அதேபோல மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுடன் இணக்கமாகப் போக விரும்பாத மம்தா பானெர்ஜி காங்கிரசிலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கவேண்டிவந்தது.ஆக, இந்திராவின் மருமகளாக்கும் நான் என்று மார்தட்டிக் கொண்டது வெறும் பேச்சாகவே   ஆனது மட்டும் தான் மிச்சம்! 

நினைப்புதான் பிழைப்பைக் கெடுத்ததாம்!

இந்தப்பின்னணியில் 2014, 2019 இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்ததற்கு ஊடகங்களில் ராகுல் காண்டியையே குறை சொன்னார்கள். சோனியாவின் மனக்குமுறலாகவே ப்ரியங்கா வாத்ரா, காங்கிரஸ் காரிய கமிட்டியில் தன் அண்ணனைத்  தனியாக விட்டுவிட்டார்கள் என்று கோபப்பட்டதை, எடுத்துக்கொள்ள முடியும். 

மூன்று நாட்களுக்கு முன் வேறு எவரும் காங்கிரஸ்  தலைமைப் பொறுப்பேற்க முன்வராததால் ராகுல் காண்டியே தலைவராக தொடர்வார் என்ற செய்தி கசியவிடப்பட்டது. மாறாக நேற்று ராகுல் காண்டி தன்னுடைய ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக செய்தி வந்ததோடு, தேர்தல் தோல்விக்குத் தாமும் தார்மீகப் பொறுப்பேற்பதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவித்திருப்பது, இன்னும் சிலபல  தலைகள் இதே பாணியில் உருளும் என்பதைக் காட்டுகிறது. பிரியங்காவின் சும்மா விடமாட்டேன் எச்சரிக்கைக்குப் பிறகு உத்தர பிரதேசம் கர்நாடகா மாநிலங்களில் மாநிலக் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டிருப்பதும் ஒரு வகையான முன்னோட்டம். 

சரி! எதற்காம்? அதுதான் காங்கிரசில் இருப்பவர்களுக்கே இன்னமும் புரியவில்லை. இன்றைக்கு காங்கிரசில் இருக்கிற தலைகளுக்கு ஏதாவது வருமானம் பார்க்கிற பதவியில் ஒட்டிக் கொண்டே இருந்தாகவேண்டும், இல்லையென்றால் தலை வெடித்துவிடும் என்கிற மாதிரி ஆசாமிகளுக்குப் பதவியும் அதிகாரமும் சம்பாதித்துத் தருவதற்காக மட்டுமே நேரு பாரம்பரியம், வாரிசுகள் தயவு தேவை!  பானாசீனா, கமல்நாத் போன்ற பழம்பெருச்சாளிகள் மீது நேரடியாகக் கைவைக்கிற உறுதி ராகுலுக்கு இல்லை.

இந்த ராஜினாமா நாடகம் காங்கிரசை எங்கு கொண்டுபோகப் போகிறதோ, யாருக்குமே புரியவில்லை. காங்கிரசுக்கே இந்த அனுபவம்  ரொம்பப் புதுசு! ரொம்பவுமே தயங்குகிறார்கள், தடுமாறுகிறார்கள்! ராகுல் காந்தியின் கோபத்தை தணிக்கும் வகையில் அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது ஒரு செய்தி. .

வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறு வழி?

மீண்டும் சந்திப்போம்.
         

16 comments:

  1. ராகுலின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஏன் நாடகம் என்று கருத வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. ராஜீவ், ராகுல் இருவரைப்பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்தென்ன என்பதை உங்களுக்கு ஒரு தனிப்பதிவாகவே போட்டுச் சொல்லியிருக்கிறேன் ஜீவி சார்! அதனுடன் இன்னொரு பாயின்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள் : இருவருமே பாதிக்கிணறு மட்டுமே தாண்டத்தெரிந்தவர்கள்!

      //பானாசீனா, கமல்நாத் போன்ற பழம்பெருச்சாளிகள் மீது நேரடியாகக் கைவைக்கிற உறுதி ராகுலுக்கு இல்லை//.

      Delete
  2. ராகுலின் ஆக்கபூர்வமான நடவடிக்கை இது என்று கருதவில்லை. தன் கொள்கைகள் என்ன, தன் மனதில் இருப்பது என்ன என்பதை 10 வருடங்கள் ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தபோது காண்பிக்கவில்லை. எல்லாரும் தவறு செய்துவிட்டு, மக்கள் தண்டனை அளிக்கப்போகும்போது காங்கிரஸ் தலைவராக ஆனது ராகுலின் குற்றம் இல்லை. ஆனால் அவர் மோடிக்கு மாற்றாக, 'மதச் சார்பு' மட்டும்தான் நல்லது என்று நினைக்கிறார்.

    என்னைக்கேட்டால், காங்கிரசுக்கு, இந்தியா முழுவதும் அறிந்த ஒரு ஸ்டிராங்க் தலைமை வேண்டும். அதற்கு வழிவிட்டால் காந்திகளின் பலம், கட்சி மீதுள்ள பிடி குறையும். அது குறையக்கூடாது என்று நினைத்தால், ஆக்கபூர்வமான தலைமை கிடைக்காது. ஜால்ராதான் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் சார்! காங்கிரஸ் கட்சி காலாவதியாகிப்போய்விட்ட கட்சிதான் என்பது 1969 இலேயே expiry date தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இப்போது அவர்களுடைய இடத்தை BJP முழுசாய் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது என்பதால்,BJPக்கு சரியான மாற்று என்ன என்று தேடுகிற வழியியைப் பார்க்க வேண்டிய நேரம் இது .

      Delete
  3. மோதிக்கு ராகுலே மாற்று. மாநிலங்கள் காங்கிரஸ் பக்கம் வர நிறைய வாய்ப்பிருக்கு.


    ReplyDelete
    Replies
    1. //மோதிக்கு ராகுலே மாற்று//.சீரியசான ஜோக் இது! ஜீவி சார்! எந்தமாநிலம் காங்கிரஸ் வசம் வர வாய்ப்பிருக்கிறது? கொஞ்சம் சொல்லுங்கள்!

      Delete
    2. இருக்கிற அகில இந்திய கட்சிகள் இரண்டே இரண்டு தான். ஆளும் வாய்ப்பு பெற்ற பிஜேபியின் தவறுகள் மொத்தமும் காங்கிரஸூக்கான வாய்ப்பு. விழுவது எழுவதற்காகவே.

      Delete
    3. அகில இந்தியக் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிற வரையறைகளின் படி இங்கே இடதுசாரிகள் கூட போன தேர்தல்வரை அகிலஇந்தியக் கட்சிகளாகத்தான் கருதப்பட்டார்கள் ஜீவி சார்!

      காங்கிரசுக்கு இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாக்களிக்கக் கொஞ்சம் ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதனால் மட்டுமே அது அகில இந்தியத்தன்மை உள்ளதாகிவிடுமா?ஸ்தாபனம் எங்கே

      Delete
    4. பொதுத் தேர்தல்களுக்கு முன்னான காலத்தில் பிரதான கட்சிகள் எல்லோருக்கும் (வெற்றியா, தோல்வியா)ஜூரம் வருவது இயல்பு தான்.

      ஸ்தாபன அமைப்பெல்லாம் எதையும் தீர்மானிப்பதில்லை. வெகுஜன மக்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் யாரும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

      Delete
    5. ஜீவி சார்! இங்கே ஒரு கருத்தைச் சொல்லும்போதே அதற்கான தரவுகளையும் கொடுத்தே சொல்கிறேன். ஆனந்த் ஷர்மா பேட்டியைப் பார்க்கச் சொல்லியும் கூட நீங்கள் பார்க்கவில்லையென்றே தெரிகிறது. நாடெங்கிலும் சுமார் 10லட்சம் வாக்குச்சாவடிகளில் பெரும்பான்மையான இடங்களில் பூத் லெவலில் காங்கிரசுக்கு ஆட்களே இல்லையென்று சொல்லியிருக்கிறார். திமுக அதிமுக இரண்டு கட்சிகள் மீது எத்தனை குறை இருந்தாலும் இந்த விஷயத்தில் மட்டும் குறை இல்லை. கீழ்மட்டத்தில் ஸ்தாபன அமைப்பு வலுவாக இருந்தாலொழிய எந்தவொரு கட்சியும் தேர்தல் அரசியலில் முன்னுக்கு வர முடியாது.

      Delete
  4. வேடிக்கை பார்ப்போம்...
    அதான் நல்லது நமக்கு...

    ReplyDelete
    Replies
    1. நல்லதுதானோ என்னவோ எனக்குத்தெரியவில்லை துரை செல்வராஜூ சார்! என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாததைத்தானே பதிவுகளில் எழுதிக்கொண்டிருக்கிறேன்!

      Delete
  5. ஜீவி ஸார் சீரியஸாகத்தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை!

    ReplyDelete
  6. ஆமாம், ஸ்ரீராம்.

    ReplyDelete
  7. Near future கணிப்பு இல்லை. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் கணிப்புகள், இப்போதே அட்வான்ஸாக.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த தேர்தலுக்கு இப்போதே ஆரூடமா? உங்கள் ஆரூடத்தைப் பொய்யாக்குவதற்கென்றே ராகுல் காண்டி மிகக்கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் ஜீவி சார்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)