சனிக்கிழமைதோறும் எங்கள்Blog இல் பாசிட்டிவ் செய்திகளாக கண்ணில்பட்டவரை என்ற குறிப்புடன் வெளியிடுவதை ஸ்ரீராம் ஒரு நல்ல வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தச் செய்தி அவர் கண்ணில் படுகிறதா, இந்தவாரம் வெளியிடுகிறாரா என்று பார்க்கக் காத்திருந்தேன். முன்கூட்டியே ஷெட்யூல் செய்து பதிவுகளை வெளியிடுவதில் உள்ள ஒரு சிரமம் லேட்டஸ்ட் செய்திகளையும் சேர்த்துக் கொள்வது என்பதான நடைமுறைச் சிக்கலாக இருக்குமோ?
இந்தப்பள்ளி மாநகராட்சி நடத்துகிற இளங்கோ மேல்நிலைப் பள்ளி என்பதும், 100கணினிகளுடன் கூடிய computer lab பயிற்றுனருடன் HCL அளிக்க இருக்கிறது என்பதும் நான்குநாட்களுக்கு முன்னாலேயே வெளியான பாசிட்டிவ் செய்தி.
பாசிட்டிவ் என்றால் நெகட்டிவ் இல்லாமலா?
சாணக்யா தளம் ஒரு ஆடியோ/வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறது.என்ன அர்த்தப்படுத்திக் கொள்வது என்பதே விளங்கவில்லை. வாட்சப்பில் படங்களோடு உரையாடல் /ஒலி இருக்கிறது.
https://www.facebook.com/Chanakyaa8/videos/149954286139169/
மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் மகன் தோற்றுப் போனதைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் ராஜன் செல்லப்பா ஊடகங்களிடம் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.
பாசிட்டிவ் என்றால் நெகட்டிவ் இல்லாமலா?
சாணக்யா தளம் ஒரு ஆடியோ/வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறது.என்ன அர்த்தப்படுத்திக் கொள்வது என்பதே விளங்கவில்லை. வாட்சப்பில் படங்களோடு உரையாடல் /ஒலி இருக்கிறது.
https://www.facebook.com/Chanakyaa8/videos/149954286139169/
மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் மகன் தோற்றுப் போனதைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் ராஜன் செல்லப்பா ஊடகங்களிடம் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.
ஆனால் துக்ளக் ரமேஷ், ராஜன் செல்லப்பாவின் ஒற்றைத் தலைமை வேண்டுமென்கிற ஆதங்கம் பல அதிமுகவினரிடம் இருப்பது உண்மைதான் என்கிறார்.
விஜய் ஆண்டனி, அர்ஜுன் இருவரும் நடித்து வெளியாகி இருக்கும் கொலைகாரன் படத்துக்கு நாளை விமரிசனம் எழுதலாம் என்றிருந்தேன். இந்த ஒரு படம் நச்சென்று சொன்னபிறகு நானெங்கு எழுத?
இன்று முற்பகல் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வந்திருந்தார். மதியம் 2 மணிவரை பல விஷயங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
கூகிள் ப்ளஸ் தளத்தில் ஞானாலயாவுக்காக ஒரு campaign நடத்திக் கொண்டிருந்தது கடந்த ஐந்தாண்டுகளில் சுத்தமாகக் குறைந்தே போனது.
செட்டிங்சில் இந்தப்பக்கங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. எழுத்துரு படிக்கிற மாதிரி இருக்கிறதா, மொபைலில் சரியாகப் பார்க்க முடிகிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.
>>> எழுத்துரு படிக்கிற மாதிரி இருக்கிறதா?.<<<
ReplyDeleteஎழுத்துரு படிக்கிற மாதிரி இருக்கிறது.. வாழ்க நலம்...
நன்றி துரை செல்வராஜூ சார்!
Delete//முன்கூட்டியே ஷெட்யூல் செய்து பதிவுகளை வெளியிடுவதில் உள்ள ஒரு சிரமம் லேட்டஸ்ட் செய்திகளையும் சேர்த்துக் கொள்வது என்பதான நடைமுறைச் சிக்கலாக இருக்குமோ?//
ReplyDeleteமுன்கூட்டி ஷெட்யூல் செய்தாலும் தேதிகளை கவனித்தால் உங்களுக்குத் புரியும் ஸார். தினமும் செய்திகளை பார்த்துக்கொண்டே இருப்பேன். வரவர, கண்ணில் படப்பட அதில் இணைத்துக்கொண்டே வருவேன். சமயங்களில் நண்பர்கள் அவர்கள் பார்க்கும் செய்திகளை, அதன் லிங்க்குகளை எனக்குச் சொல்வார்கள். அவர்களுக்கு நன்றியுடன் அதையும் இணைப்பேன்.
செய்தி தேதிகளோடு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஸ்ரீராம்! இப்படி ஒரு முயற்சியை தொடர்ந்து வலைப்பதிவுகளில் செய்வதற்கும் நிறைய தகவல்கள் சேகரிக்க வேண்டியிருக்கும். இந்த மாநகராட்சிப் பள்ளி பற்றிய நல்ல செய்தி பலதளங்களில் வெளியாகி இருந்ததை நீங்களாக கவனிக்கிறீர்களா அல்லது எபி நண்பர்கள் யாராவது பொருட்படுத்தவேண்டிய செய்தியாக இதை உங்களுக்குப் பரிந்துரையை செய்கிறார்களா என்று பார்க்க விரும்பியதால், உங்களுக்குத் தகவல் சொல்லவில்லை.
Delete//என்ன அர்த்தப்படுத்திக்கொள்வது என்பதே விளங்கவில்லை// - ம்ம்ம்ம்ம்ம்
ReplyDeleteவாருங்கள் நெல்லை! நான் கொடுத்திருந்த லிங்குகளில் போய்ப்பார்த்திருந்தால், இந்த ஆடியோவுக்கு அவர்கள் என்ன தலைப்பு, பில்டப் கொடுத்திருந்தார்கள், முகநூல் பகிர்வில் வந்திருந்த பின்னூட்டங்கள் அரதப்பழசான இந்த உரையாடலுக்கு இப்போது என்ன வந்தது என்று கேள்வி எழுப்பியிருந்ததையும் பார்க்க முடியும்.
Deleteதந்திடிவியில் இருந்து வெளியே வந்தபிறகு ரங்கராஜ் பாண்டே, தந்தி தரத்துக்கு இறங்கிவருகிறாரோ என்றொரு சம்சயம், அவ்வ்ளவுதான்!