Wednesday, June 12, 2019

பதிவுகள் டல்லடிக்குதா? சதக்!சதக்! பரபரப்பு! எல்லாநாட்களிலும் இருக்குமா?

முந்தைய பதிவில் எழுத்தாளர் ஜீவி வந்து டல்லடிக்குது என்று வெளிப்படையான விமரிசனத்தை இந்த வலைப் பக்கங்கள் மீது வைத்திருக்கிறார்! பார்த்துவிட்டுப் பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் ஒரு கருத்துரையை விட்டுச் செல்ல மனமில்லாத நபர்கள் நிறைந்த தமிழ் இணையச் சூழலில் மனம்திறந்து இரு வார்த்தையே ஆனாலும் கருத்துச் சொன்ன ஜீவி சாருக்கு நன்றி!  


காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜீவாலா இன்று செய்தியாளர்களிடம் நேற்றும் இன்றும்  நாளையும் ராகுல் காண்டி தான் காங்கிரசின் தலைவர்  என்று முழங்கி இருப்பது இங்கே திமுக மாதிரி, காங்கிரசும் ஒரு குடும்பத்தின் சொத்துதான் என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிற மாதிரித்தான்! வெற்றுப் பரபரப்பு, சினிமா அக்கப்போர்களில்  மட்டுமே நேரம் செலவழிக்கிறவர்களாக இந்தப்பக்கங்களுக்கு வருகிற நண்பர்கள் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி என்று நான் பகிர்வது எல்லாநேரங்களிலும் சரியாக இல்லாமல் இருக்கலாம்! ஆனால் செய்தியின் முக்கியத்துவம் குறைந்து விட்டதா என்ன?  

அரசியலை அப்படி சலிப்பூட்டுவதாக ஒதுக்கிவிட்டுப் போய் விடக்கூடாதென்பதற்காகத் தான் அவ்வப்போது கார்டூன்கள், வீடியோ பகிர்வுகள் என்று கொஞ்சம் கலந்து கொடுத்துக் கொண்டு வருகிறேன். நிச்சயமாக இது தன்னிலை விளக்கமோ சால்ஜாப்போ இல்லை!
   
 
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தமாதிரிக் களை எடுப்பைக் கற்பனை செய்தாவது பார்த்திருக்க முடியுமா? இவர்களுக்கு மூன்று மாதச்சம்பளம் மட்டும் தான்! பணிக்கொடை ஓய்வூதியம் என்று சம்பாதித்ததற்கு மேலேயும் போட்டுத்தருகிற கருணை கிடையாது!    இது பொருட்படுத்தவேண்டிய, வரவேற்கப்பட வேண்டிய செய்தி தானே!  எது பொருளோ அதைப் பேசுகிற சமூகமாக நாம் உயர வேண்டாமா?

கொஞ்சம் சொல்லுங்களேன்! கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
    


15 comments:

  1. டல்லடிக்குது என்று சொன்னது அந்தக் குறிப்பிட்ட பதிவை பற்றி மட்டும் தான். சுறுசுறுப்பான தேர்தல் காலத்திற்குப் பிந்தைய பதிவுகள் காலம் நேரம் சூழ்நிலைகளுக்கேற்ப அப்படித்தான் இருக்கும் போல..

    என்றாலும் ஒன்றைச் சொல்ல வேண்டும். 'பாரு..பாரு.. பட்டணம் பாரு..' என்று பயாஸ்கோப்பு காட்டுவாரகளே, அந்தாட்களில்... அந்த மாதிரி இங்கிருந்து ஒன்று, அங்கிருந்து ஒன்று என்று எடுத்துப் போடும் பதிவுகளில் ஒரே இடத்தில் அத்தனையையும் பார்க்கிற, படிக்கிற வாய்ப்பு இருப்பினும் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்வு..

    என்ன குறை?.. நறுக்குத் தெறித்தாற் போல கருத்து ஏதாவது பதிந்திருக்க வேண்டுமா?..

    யாராவது சொன்னால் தேவலை..

    ReplyDelete
    Replies
    1. அப்படிக் குறைநிறைகளை யாராவது வந்து அலசிக்காயப்போட வேண்டுமென்றுதான் நானும் காத்திருக்கிறேன் ஜீவி சார்! ஆனால் நாம் நினைப்பது போல எல்லாமே நடந்துவிடுவதில்லையே!

      Delete
  2. பொய்யும் புரட்டும் நேரடி முதலீடு என்று ஆகி விட்ட பிறகு அரசியலைப் பற்றி நினைத்து நிம்மதியை இழந்து விடக் கூடாது என்று இருக்கிறது...

    1985 ல் 4 வருடம் சிங்கப்பூரில் வேலை செய்து விட்டு தாய் நாட்டுக்குத் திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் பெட்டியைப் பிரித்து உதறி ஒவ்வொரு பேனாவையும் எடுத்து எண்ணி Tax விதித்தது அன்றைய அரசு...

    ஆகா.. நாடு நல்ல பாதையில் போகிறது என்று நினைத்தால் -

    அப்போதைய ஆட்சியாளர்கள் எல்லாம் கோடிகளுக்கு அதிபதிகளாக ஆகி இருக்க
    மக்கள் மட்டும் இன்னும் ஏதிலிகளாக!...

    செய்தித் தாள்,தொலைக்காட்சி எல்லாவற்றையும் விட்டு விலகிய பின்
    இப்படியும் உள் குத்து நடந்து இருக்கிறதா.. என்று தெரிந்து கொள்ள தங்களது பதிவுகள் உதவுகின்றன...

    அந்த வகையில் நன்றி....

    இன்னும் சொல்லலாம்...
    மனம் வலிக்கிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இங்கே நடக்கும் அயோக்கியத்தனங்களைப் பார்த்துப்பார்த்து மனம் வலித்ததனால் எழும் குமுறல்களைத்தான் பதிவுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன் துரை செல்வராஜூ சார்!

      Delete
  3. நல்லது நடக்கும்போது கொஞ்சம் டல் அடித்தால்தான் என்ன? ஒரு snapshot போல இருக்கிறது உங்கள் பக்கங்கள். தினமும் நான் பார்க்கும் ஒன்று உங்கள் பதிவுகள்.. ஒவ்வொரு முறையும் comment போட்டால்தானா? நெருங்கிய நண்பர் என்றால் தினமும் பேசவேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து! ஒவ்வொரு பதிவுக்கும் கமெண்ட் போட்டால் தான் சரி என்று நானும் நினைக்கவில்லை. ஆனால் அரசியலைத் தொட்டு எழுதுவதில் ஒரு அர்த்தமுள்ள உரையாடல் நிகழ்வதில்லையே என்ற மனக்குறை எனக்கிருக்கிறது.

      Delete
  4. நானும் தினமும் படித்து விடுகிறேன். அரசியலில் நான் எல் கே ஜி கூட தாண்டியவனல்ல. எனவே அவ்வப்போது முதிரா கருத்துகள் மட்டும் கூறுவதோடு சரி! பொதுவாக அவசரமாகப் பார்த்துக்கிளம்ப வேண்டி இருப்பதால் காணொளிகளை தவிர்த்து விடுகிறேன். எப்போதாவது பார்த்தே ஆகவேண்டும் என்று உந்துதலை ஏற்படுத்தும் காணொளிகளைக் காண்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இடையில் பலவருடங்கள் எழுதாமலேயே இருந்ததில் இந்தப்பக்கங்களுக்கு வந்துபோய்க்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நண்பர்களும் காணாமலேயே போனார்கள் ஸ்ரீராம்! தமிழ்மணமும் எங்கள்Blog referral உம் ஆகச் சேர்ந்து இப்போது இந்தப்பக்கங்களுக்குப் பார்வைகள் மீண்டும் கிடைத்திருக்கிறதே ஸ்ரீராம்!

      இங்கே பதில் எழுதியவர்களில் பந்து ஒருவரைத்தவிர தொடர்ந்து வருகிறேன் என்று காட்டிக் கொள்கிற அத்தனை பேருமே எங்கள்Blog நண்பர்கள் தான் என்பது ஸ்ரீராம் செய்திருக்கிற உதவி!

      Delete
  5. நான் பதிவுகளைப் படித்துவிடுகிறேன். ஃபைனான்ஸ் அதிகாரிகள் நீக்கம் - இது இவங்க ஆட்சியில போன முறை நடைபெறலையே...ஏதேனும் காரணம் இருக்குமோ? நிர்மலா சீதாராமன் அவர்கள் கண்டிப்பானவர்கள்.

    'ராகுல் காந்தி தலைவர்' என்று முழங்குவது, சந்தடி சாக்கில் நான் 'காண்டி' குடும்ப விசுவாசி என்று காட்டிக்கொள்வதற்குத்தான். அப்படி விசுவாசியாக இருந்ததனால்தானே வீட்டுக்குள்ளேயே துரோகம் நடைபெற்று ராஜீவ் காந்தி இறப்புக்குக் காரணமாக இருந்தார் மரகதம் சந்திரசேகர்.

    ReplyDelete
    Replies
    1. முந்தைய ஐந்தாண்டுகளிலும் சிவில் சர்வீசில் இந்த மாதிரிக் களையெடுப்பு கொஞ்சம் இருக்கத்தான் செய்தது நெல்லைத்தமிழன் சார்!

      ராஜீவ் மரணத்தில் மரகதம் சந்திரசேகர் தெரியாமல்தான் சம்பந்தப்பட்டார் என்பது அந்தநாளைய செய்தி. அதையே வெளியே கசியவிடாமல் செய்த வல்லமை அந்தப்பெண்மணிக்கு இருந்தது. ராஜீவ் கொலை வழக்கில் சோனியாவையே சம்பந்தப்படுத்துகிற மாதிரி. சில தகவல்களும் உண்டு

      Delete
  6. இந்த மரகதம் சந்திரசேகரைத்தான் 'ஆன் டிக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் ஸ்ரீபெரும்புதூர் போயே ஆகவேண்டும்' என்று சொல்லி ராஜீவ் காந்தி எத்தனையோ இடர்களுக்கு இடையில் பிரச்சாரம் செய்ய வந்து போனார்.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே இந்திராவும் வாரிசுகளும் எவர்பேச்சையும் கேட்காத தலைவிரிச்சான் குஞ்சுகள்! தங்களை யாரும் எதுவும் செய்துவிடமுடியாது என்கிற மிதப்பிலேயே இறந்தவர்கள் இந்திரா, ராஜீவ் இருவரும்!

      Delete
  7. //'ஆன் டிக்கு வாக்கு கொடுத்துவிட்டேன்//

    ஆண்டியாவது தோண்டியாவது?.. பத்திரிகை நிருபர்கள் எழுதுகிற கப்ஸா வார்த்தைகளையெல்லாம்
    அப்படியே நடந்ததாக, சொன்னதாக எடுத்துக் கொள்ளக் கூடாது நெல்லை.

    ReplyDelete
    Replies
    1. மரகதம் சந்திரசேகருக்குப் பிரசாரம் செய்ய ராஜீவ் காண்டிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது உண்மை ஜீவி சார்! கொலையாளி தனு மரகதம் சந்திரசேகருடைய மகளுடன் ஒட்டிக் கொண்டு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்துகொண்டு காரியத்தை முடித்தார் என்பது விசாரணையில் தோண்டித்துருவப்படாத விஷயம். அந்த அளவுக்கு அந்தக்கிழவிக்கு (auntyன்னு சொன்னதுதானே உங்கள் ஆட்சேபணை?) செல்வாக்கு இருந்தது கூட நிஜம்!

      Delete
  8. நான் ஆண்ட்டி அழைப்புக்குத் தான் சொன்னேன். அவ்வளவு நெருக்கமாக ராஜிவ் அந்தப் பெண்மணியை உணர்ந்தார் என்று ஒரு உறவு முறையை ஸ்தாபித்து ம.ச. மேல் ஒரு நல்லெண்ண மயக்கத்தை ஏற்படுத்துவதற்கு செய்யும் வேலைகள் இவை. ஒரு ஒப்பினியன் கிரியேஷன் அவ்வளவு தான். ஸ்ரீபெரும்பதூர் நிகழ்ச்சி ராஜிவின் சுற்றுப்பயண பட்டியலில் ஆரம்பத்தில் இல்லாதிருந்து
    மத்தியில் தில்லியில் இருந்த சில பெருந்தலைகளால் பின்னால் சேர்க்கப்பட்டு, அது பாதுக்காப்பில்லத இடம் என்று அறிவுறுத்தப் பட்டும் ராஜிவ் அந்த பேராபத்தில் அகப்பட்டுக் கொண்டார் என்றும் தெரியும்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)