Wednesday, June 5, 2019

ஏட்டிக்குப் போட்டி! அதுவும் #தமிழேண்டா இஷ்டைலில்!

நரேந்திர மோடி அமைச்சரவையில் மோடிக்கு அடுத்த இடத்தில் யார் என்ற கேள்விக்கு விடைகிடைத்து விட்டதாக தி டெலிகிராப் நாளிதழ் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது இப்படி:: Union home minister Amit Shah on Tuesday put to rest speculation on who was the No. 2 in the government by chairing a high-level meeting attended by senior ministers such as finance minister Nirmala Sitharaman and external affairs minister S. Jaishankar  என்கிறார்  செய்தியாளர்  Imran Ahmed Siddiqui ஆனால் சதீஷ் ஆசார்யா மாதிரி அபிமான கார்டூனிஸ்டுகளுக்கு அமித் ஷா தான் நம்பர் ஒன்னாகத் தெரிகிறது போல!

அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்தே இங்கே நிறையப்பேருக்கு அடிவயிற்றில் சொல்ல முடியாத சங்கடங்கள் ஆரம்பித்துவிட்டதென்று வெளிப்படையாகவே தெரிய வந்திருப்பது தான்!

பாரதி என்ற பெயரையே சொல்வதைத் தவிர்த்த திராவிடப் புரட்டுகளுக்கு இப்போது பாரதியின் முண்டாசு, அதன் நிறம் பற்றிய கவலை வந்திருப்பது தமிழக அரசியலின் மிகப்பெரிய தமாஷா!  
  

பாரதியின் முண்டாசுக்கு காவி வண்ணம் பூசி விட்டார்கள் என்று ஓசிச் சோறுகளின் வாய் பெரிதாய் திறந்து ஓலம் பெரிதாய் கேட்கிறது.
இந்த எதிர்ப்பு, இவர்களின் எஜமானர்களிடம், தங்களுக்கு கூலியை உயர்த்தி கேட்கும் கீழ்த்தரமான யுக்தி.
பாரதி காலையில் கீழ்வானத்தில் உதிக்கும் ஒரு ஞானச்சூரியன். அவன் தலைப்பாகை காவியாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டை கறுப்பாக மாற்ற நினைக்கும் கும்பலுக்கு கண் கூசுவது வியப்பொன்றுமில்லை.
காலமெல்லாம் அவனை பார்ப்பான் என்று ஒதுக்கி வைத்துவிட்டு இன்று என்ன இவ்வளவு அக்கறை? இத்தனை வருடங்களில் ஒரு நாளாவது அவன் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்ததுண்டா? (இவர்கள் காலடி படாமல் இருப்பதே நல்லது என்றாலும்) என்றாவது அந்த மகா மனிதனின் நினைவத்துக்குச் சென்று வணங்கியதுண்டா?
"வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதம் பொறுப்பளோ பாரத தேவி" என்று இந்த "திராவிடர்களின்" எஜமானர்கள் காலடி இந்த மண்ணில் படலாமோ என்று கர்ஜித்தவன்.
"வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று உறக்கச் சொல்லிய பாரதி, சக்தியின் மைந்தன். அவனுக்கு காவி தலைப்பாகை வைத்தாலும் என்ன தவறு?
இந்த ஓநாய்களுக்கு காவி மீது உள்ள வெறுப்பு என்பது பச்சை மற்றும் வெள்ளை வர்ணங்களின் மீது உள்ள பாசத்தினால் வருவது என்பது உலகறிந்ததே.
பாரதி கண்ணன் பிறப்பை ஆடிப்பாடி கொண்டாட பாடல் தந்தவன். காயில் புளிப்பையும் கனியில் இனிப்பையும் கண்ணன் என்று கொண்டாடியவன். நீங்கள், உங்கள் "தொழில்" நிமித்தமாய் கண்ணனை வெறுப்பவர்கள்.
"உன்னைக் கோடிமுறை தொழுதேன் இனி
வையத் தலைமை எனக்கருள்வாய் அன்னை
வாழி! நினதருள் வாழி!
ஓம் காளி! வலிய சாமுண்டீ" என்று காளியிடம் உயர்ந்த வரம் கேட்டவன். உங்களைப்போல் பிரியாணி கேட்டு கீழ் நிலை வாழ்க்கை வாழ்ந்தவன் அல்லன்.
"மழையும் காற்றும் பராசக்தி செய்கைகாண்- வாழ்கதாய்" என்று எல்லாவற்றிலும் சக்தியை கண்டவன். யாகம் என்றால் எள்ளி நகையாடுபவர்கள் நீங்கள்.
"வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டும்" என்று வேதங்களை போற்றி வளர்ந்தவன்.
உங்களைப்போல் வேதங்களை பழித்து வாழ்ந்தவன் அல்லன்.
"போர்க்களத்தே பர ஞானமெய்க் கீதை
புகன்றது எவருடையவாய்" என்று பாரத மாதாவை நினைத்து பெருமை கொண்டவன்.
அவன் பெயரைச் சொல்லக்கூட தகுதியற்றவர்கள் நீங்கள். வீணர்களே, பாரதியிடம் இருந்து தூரமாய் சென்று விடுங்கள். அவன் சூரியன்.

ஜெய் ஸ்ரீராம்! என்றெழுதி 10 லட்சம் போஸ்ட் கார்டுகளை மம்தா பானெர்ஜி வீட்டுக்கு அனுப்புவோம் என்று சொன்னாலும் சொன்னார்கள்! மம்தா குடும்ப வாரிசு அபிஷேக் பானெர்ஜி உளற ஆரம்பித்து விட்டார். ஜெய் ஸ்ரீராம்! கோஷத்துக்கு TRP ( மவுசு) குறைந்துவிட்டதாம்! பதிலுக்கு நரேந்திர மோடிக்கு ஜெய் ஹிந்த் என்றெழுதித் தபால் அனுப்பப் போகிறார்களாம்!   
ஏட்டிக்குப் போட்டி! அதுவும் #தமிழேண்டா இஷ்டைலில்!

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

உள்ளூர்க் காமெடி! செட்டிநாட்டுக் காமெடி கொஞ்சம் எக்ஸ்ட்ரா!

பா னாசீனா விவகாரம் இங்கே ஒருமாதிரி காமெடியாகப் போய்க் கொண்டிருப்பதைப்  பார்ப்பதற்கு முன்னால் இங்கே ஒரு உள்ளூர்க் காமெடியையும் பார்த்துவிடலா...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (204) அரசியல் (165) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (82) எண்ணங்கள் (39) புத்தகங்கள் (32) மனித வளம் (30) செய்திகள் (23) சிறுகதை (20) ரங்கராஜ் பாண்டே (15) எது எழுத்து (13) விமரிசனம் (13) செய்திகளின் அரசியல் (12) Change Management (11) புத்தக விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) தேர்தல் சீர்திருத்தங்கள் (10) தொடரும் விவாதம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (8) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) திராவிட மாயை (6) பதிவர் வட்டம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) காமெடி டைம் (5) சமூக நீதி (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) அக்கம் பக்கம் என்ன சேதி (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) கூட்டணிப் பாவங்கள் (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) பானாசீனா (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) படித்ததில் பிடித்தது (3) பதிப்பகங்கள் (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) பிரியங்கா வாத்ரா (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)