குரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே! அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற மாதிரி எதையாவது சொல்லிவிட்டு, அப்புறம் மறுப்போ வியாக்கியானமோ சொல்வதும் இன்று நேற்றுப் புதிதல்ல!
சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு, அப்புறம் அதற்கு வியாக்கியானம் சொல்வது இப்போது கே என் நேருவுடைய முறை! இதற்கு முன் ஜோலார்ப்பேட்டையிலிருந்து சென்னைக்குத் தண்ணீரா? திமுக பெரிய போராட்டம் நடத்தும் என்று சொன்ன ரெண்டு முருகன், தான் சொன்னதைத் திரித்துச் சொல்லிவிட்டார்கள் என்று ப்லேட்டைத் திருப்பிப் போட்டதும் கூட சமீபத்தில்தான்! ஆனால் இதற்கெல்லாம் விடை காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கப் போகிறதா? உதயநிதி கேட்ட மாதிரி நாங்குநேரி சட்டசபைத் தொகுதியை காங்கிரஸ் விட்டுக்கொடுக்குமா என்று ஆழம் பார்க்கிற வேலை மாதிரித் தான் தெரிகிறது. திமுகவிடம் உரத்துப் பேரம் பேசுகிற அளவுக்கு காங்கிரசுக்குத் தெம்பிருக்கிறதா? தெரியவில்லை! ஆனாலும் கே எஸ் அழகிரி வாய்ச்சவடாலுக்குக் குறைச்சல் இல்லை! அழகிரி (எந்த அழகிரி?) விரும்பினாலும் அண்ணன் கே என் நேரு விரும்பினாலும் காங்கிரஸ் திமுக உறவில் விரிசல் வராது என்கிறார்.
காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி நாடாளுமன்றத்தில் வெட்டி அலப்பறை செய்ய ஆரம்பித்திருக்கிறார்! விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டுமாம்! அவனவன் அஞ்சுபத்து வருடங்களில் அடிக்கிற காமெடியை ஒரேநாளில்! ச்சும்மா டமாசு கொடிகட்டிப் பறக்கிறது!
புள்ளிராசா வங்கிக்குப் புள்ளி வருமா? வராதா? இப்படி ஒரு கேள்வியை வைத்து இன்னொரு வலைப்பக்கத்தில் பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்களைக் குறித்து எழுதிய பதிவு, பிரதானமாக புள்ளிவிவரங்களை விதவிதமாய் அலசி வெறும் ஸ்டேட்மெண்டுகளாகத் தயாரித்து வீணாய்ப்போன ஒரு பொதுத்துறை வங்கியைப் பற்றி எழுதியதை நினைவு படுத்திக்கொள்கிற மாதிரி சதீஷ் ஆசார்யாவின் இந்த கார்டூன் இருக்கிறது. ஒரு அரசியல் கட்சிக்கு முதலில் அரசியல் புரிந்து, அரசியல் செய்வது எப்படி என்று தெரிந்திருக்கவேண்டும். மாறாக கொஞ்சம்போல ஒத்தாசையாக இருக்கக் கூடிய புள்ளி விவரங்கள், கருத்துக்கைப்புகளையே நம்பினால் காங்கிரஸ் மாதிரி வீணாய்த்தான் போக வேண்டியிருக்கும்! Data analyst பிரவீண் சக்ரவர்த்தி மீதே முழுப்பழியையும் போடுவது அடிமுட்டாள் தனத்தின் உச்சம்!
Outlook இதழின் நடப்பு இதழ் அட்டைப்படக் கேள்வி! மம்தாவால் மோடியை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியுமா? இந்தக் கேள்வியை திமுக உள்ளிட்ட வெட்டி அலப்பறை செய்துகொண்டிருக்கும் எந்த ஒரு எதிர்க்கட்சியைப் பார்த்தும் கேட்கலாம்! திமுகவின் TR பாலு உல்டாவாக உளறியதைப் போல, எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருந்ததால் தான் மோடி ஜெயித்தார் என்றல்ல. தெருச்சண்டை வீராங்கனை மம்தா ஏன் இனிமேலும் நிம்மதியாகத் தூங்க முடியாது என்ற தலைப்பில் ரஜத் ராய் எழுதியிருக்கிற கவர் ஸ்டோரி கொஞ்சம் அலசுகிறது.
ச்சும்மா டமாஷு! எத்தினியாவது வெட்டி அலப்பறைன்னு கணக்கு வச்சுக்க முடியாத அளவு தாண்டிடுச்சு!
மீண்டும் சந்திப்போம்.
என்னமோ போங்க...
ReplyDeleteகிறுகிறு..ந்னு வருது....
துரை செல்வராஜூ சார்!
Deleteஇதுக்கே கிறுகிறுன்னு வருதா? இன்னும் என்னென்னவெல்லாம் பார்க்கவேண்டிவருமோ? தெரியலையே :-((