Thursday, June 13, 2019

மமதையின் உச்சம்! IMA மோசடி! நாற வாய தொறக்காதே!

மனநலம் பிறழ்ந்தவர் என்று சொல்வது கூட உண்மையில் மனநலம் பாதிக்கப் பட்டவர்களை இழிவ படுத்துகிற மாதிரி ஆகிவிடுமோ? மம்தா பானெர்ஜியின் சமீபகால ஆட்டங்கள் மமதையின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். ஜெய்  ஸ்ரீராம் என்றால் தகராறு மாணவர்களுடன் தகராறு, வரிசை கட்டி எல்லாத்தரப்பினருடனும் தகராறு செய்வதற்காகவா ஒரு முதலமைச்சர்? இப்போது மருத்துவர்களுடன் தகராறு, 4 மணி நேரக்கெடு என்று எல்லைமீறிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனிக்கிறீர்களா?


முந்தாநாள் தொடங்கி, சகடாக்டரைத் தாக்கிவிட்டார்கள் என்று ஆரம்பித்த மருத்துவர்களின் வேலைநிறுத்தம், மாநிலம் முழுதும் பரவிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. மம்தா பானெர்ஜி 4 மணிநேரம் கெடுவிதித்து மருத்துவர்கள் வேலைக்குத் திரும்பவேண்டும், இல்லையென்றால்  ஹாஸ்டலைக் காலிசெய்துவிட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார். 

Explained: Why the health care logjam in Bengal was waiting to happen

While doctors and medical staff highlight a lack of security in state hospitals and medical colleges, relatives of patients complain of bad behaviour and lack of proper service.


The public health care system across West Bengal has come to a halt after doctors and support staff across the state started an indefinite cease work after an incident of violence at NRS Medical College Hospital in Kolkata. Trouble started when family members of a patient who died on Monday evening at state-run hospital assaulted junior doctors, leaving one of them with a critical head injury that had to be operated on. என்று சொல்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் மேலும் சொல்வது இது: இந்த வருடத்தின் முதல் ஆறுமாதங்களில் மட்டும் மருத்துவர்கள் மீது தாக்குதல் என்பது நூறைத்தாண்டிவிட்டது. இடது முன்னணி ஆட்சிக்காலம் தொடங்கி இப்போது திரிணாமுல் வரை நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களைத் தாக்குவதும், மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை, பரிந்துரைக்கப்பட்ட சோதனைகளுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்று வெதும்புவதும் வாடிக்கையாகிவிட்டது. மருத்துவர்கள் தங்களுக்குப் பாதுகாப்புவேண்டும் என்று வேலைநிறுத்தம் செய்வதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சினையை மம்தா பானெர்ஜி மமதையோடு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினையாக்கி இருக்கிறார்.  மருத்துவர்கள் இன்றைக்கு மாநில ஆளுநரைச் சந்தித்து முறையிட்டிருக்கிறார்கள்.

*******  
பெங்களூரு சிவாஜிநகரில் ஷரியா பேங்கிங் என்று சொல்லிக் கொண்டு ஒரு மோசடித்திட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் முதலீயீட்டாளர்களை ஏமாற்றி விட்டு கத்தாருக்கு ஓடிப்போய்விட்ட மன்சூர்  கான் பற்றி வருகிற தகவல்கள் தலை சுற்ற வைக்கிறது. அரசியல்வாதிகளின்  அலட்சியம் உறுத்தலாக இருக்கிறது. 


முதலில் வந்த செய்திகளில்  மோசடிசெய்யப்பட்ட தொகை 2000 கோடி ரூபாய் என்றார்கள். இப்போது அது 5000 கோடி என்று சொல்லப்படுகிறது. நம்மூர்  அரசியல்வாதிகள் எவருக்கும் மனசாட்சியோ உறுத்தலோ கொஞ்சமும் கிடையாது என்று மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தேவே கவுடா கூட்டணியில் நல்லது நடக்கும் என்று நான் ஒருநாளும் நம்பியதில்லை.2019 தேர்தல் தோல்விக்குப் பின்னால் தள்ளுபடி செய்யப்பட்டதாக 14000 விவசாயக்கடன் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகையை reverse transaction செய்து அரசே மோசடி செய்கிற கர்நாடக மாநிலத்தில், ஏமாந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கப்போகிறதா என்ன?  


13 பேருடன் காணாமல்போன   AN 32 ரக ராணுவவிமானம் விபத்துக்குள்ளாகி அருணாசல பிரதேசத்தில் விழுந்ததைத் தேடும் பணி முடிந்துவிட்டது. 13 பேர்களுடைய உடல்களும்  மீட்கப் பட்டதாக தற்போதைய செய்தி சொல்கிறது. 

விமானப்படையும் கடற்படையின் P 81I ரக விமானமும் முழு மூச்சாகக் காணாமல் போன விமானம், பயணிகளைத் தேடிக்  கொண்டிருக்கும்போது அதைப்பற்றி  குஜராத்தின் கலகக்காரர் காங்கிரசின் கூட்டாளி ஹர்திக் படேல் படுஅபத்தமாக நாற வாய் திறந்திருக்கிறார். 


தெரியாத விஷயங்களில் தலையிடாமல் நாற வாயை மூடிக்கிட்டு இருங்கடே என்று சொல்லத் தோன்றுகிறதா?

மீண்டும் சந்திப்போம் 

4 comments:

 1. ஹர்திக் படேல், குஜராத்தின் ஹெச்.ராஜாவோ?

  ReplyDelete
  Replies
  1. பொருத்தமில்லை.

   Delete
  2. நெல்லை! H ராஜா மீது அப்படியென்ன கோபம் சார்? ஹர்திக் படேல் ஜாதிக்காக சாத்தியமில்லாத அளவுக்கு இட ஒதுக்கீடு கேட்டுப் போராடினமாதிரி ஏதாவது செய்திருக்கிறாரா?

   Delete
  3. H.ராஜா மீது அப்படியென்ன கோபம்?..

   நமது சொத்துகளை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!...
   - என்று சொல்வது குற்றமா?...

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

கொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை

பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள்! ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சின...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (244) அனுபவம் (216) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (88) செய்திகளின் அரசியல் (56) எண்ணங்கள் (45) புத்தகங்கள் (36) மனித வளம் (30) செய்திகள் (25) சிறுகதை (20) ரங்கராஜ் பாண்டே (20) எது எழுத்து (19) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) விமரிசனம் (13) Change Management (12) கமல் காசர் (12) புத்தக விமரிசனம் (12) தொடரும் விவாதம் (11) பதிவர் வட்டம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) அக்கம் பக்கம் என்ன சேதி (9) ஊடகப் பொய்கள் (9) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகங்கள் (8) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) திராவிட மாயை (7) பானாசீனா (7) (சு)வாசிக்கப்போறேங்க (6) மீள்பதிவு (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) அரசியல் களம் (5) எங்கே போகிறோம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) சமூக நீதி (5) தேர்தல் முடிவுகள் (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) வாசிப்பு அனுபவம் (5) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கண்டு கொள்வோம் கழகங்களை (4) கவிதை நேரம் (4) காங்கிரஸ் (4) கூட்டணிப் பாவங்கள் (4) தரிசன நாள் (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) இடதுசாரிகள் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) சீனா (3) சீனா எழுபது (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) லயோலா (3) Defeat Congress (2) The Sunlit Path (2) Tianxia (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஒளி பொருந்திய பாதை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சிறுபான்மை அரசியல் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பாரதியார் (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)