Showing posts with label ராகுல் காண்டி. Show all posts
Showing posts with label ராகுல் காண்டி. Show all posts

Thursday, March 11, 2021

ஜனநாயகம் சரி! அது என்ன லிபரல் ஜனநாயகம்?

சுதந்திரத்தை எதைவைத்து எப்படி அளவிடுவது? இது மார்ச் 5ஆம் தேதியன்று இந்தப்பக்கங்களில் எழுதியது தான்!ஆனால், நண்பர்களுக்கு இந்தப்பதிவின் மீது என்ன கருத்து இருந்தது என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. இந்திய ஜனநாயகத்தைப்பற்றி மதிப்பீடு செய்வதில்,புதிது புதிதாகக் கிளம்பி யார் யாரெல்லாமோ வருகிறார்கள்.


2004 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட ட்வீட்டரில் எதையாவது கீச்சிவிட்டுப்போவது மட்டுமே முழுநேர அரசியலாகத் தெரிந்து வைத்திருக்கிற ராகுல் காண்டிக்கு கிளாஸ் எடுக்க யாரோ ஒரு அமெரிக்க NGO அல்லது V DEM மாதிரி ஒரு சுவீடிஷ் அமைப்போதான் வர வேண்டியிருக்கிறது. அதை எடுத்துக்கொடுக்கவுமே கூட உள்ளூரில் யாரோ சுபாங்கி மிஸ்ரா தான் வரவேண்டி இருக்கிறது என்பது சோனியா வாங்கிவந்த வரம். 


அந்த சுவீடிஷ் அமைப்பு வெளியிட்டிருக்கிற 52 பக்க அறிக்கையில்  என்ன அடிப்படைகளை வைத்து இப்படி இந்தியா ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று மதிப்பிட்டார்களாம்? ராகுல் காண்டிக்கு அதெல்லாம் தெரியாது, புரியவும் புரியாது! மோடி ஒயிக என்று கூவ ஒரு வாய்ப்பு என்பதற்குமேல் பப்புவுக்கு எதுவும் தெரியாது.


அமெரிக்கா, ஸ்வீடன்ல இருந்து ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கியிருந்தால் இப்படி லிபரல் ஜனநாயக க்ளாஸ் எல்லாம் எடுத்திருக்க மாட்டார்களே #சேகர்குப்தா ஐயா!
Quote Tweet
Shekhar Gupta
@ShekharGupta
·
Ok, people, the world hasn’t ganged up on India. We need to look within. After Freedom House Sweden’s respected @vdeminstitute downgrades Indian democracy to an electoral autocracy, with Kenya & Lebanon. The full report here. v-dem.net/files/25/DR%20
Image

ஜனநாயகம் சரி! ஏதோ குன்ஸாவாகப் புரிகிறது. அது என்ன லிபரல் ஜனநாயகம்? 

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? சொல்லுங்களேன்!     

Monday, February 22, 2021

#காமெடிடைம் துரை முருகன்! நாராயணசாமி! 'ராகுல் காண்டி!

தேர்தல் நேரம் நெருங்கினாலே காமெடி டைம் கூடவே சேர்ந்து வரும்! சீட் கிடைக்குமோ, கிடைத்தாலும் ஜெயிக்க முடியுமோ என்கிற ஜுரம், ஜன்னியாக மாறும்போது எழுகிற உளறல்கள் ஒருபக்கம்! திமுகவின் துரை முருகன் எப்போது வாயைத்திறந்தாலும் நையாண்டி ஒருபக்கம், என்னங்க இப்படிச் சொல்லிப்புட்டாரு என்கிற கோபம் கவலை மறுபுறமுமாக துரை முருகன் வாழ்கிறாரய்யா ஒரு வாழ்க்கை! 


வீடியோ 4 நிமிடம்தான்! வீடியோவை மூடிவிடலாம்! துரை முருகன் வாயை மூட,அவராலும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியாதே!


வீடியோ  நிமிடம். கோட்டைவாயாக ஒருகாலத்தில் இருந்தவர் நாசா! அதே வாயால் கெட்டவரும் அவரே! கடைசியாக ராஜினாமா செய்த காங்கிரஸ் சமஉ சொன்னாராம் :: எல்லோரும் நாளை ராஜினாமா செய்யத்தான் போகிறார்கள். நான் ஒரு நாள் முன்னதாகச் செய்கிறேன்! அவ்வளவுதான், விஷயம் முடிந்தது!


காங்கிரஸ்காரர்களே கிறுக்கு மாய்க்கான்கள் தான்!  சந்தேகமே இல்லை என்பதை  வயநாடு எம்பி, ரோட்டில் ட்ராக்டர் ஓட்டி நிரூபித்திருக்கிறாராம்! வீடியோ 1 நிமிடம் 

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, February 16, 2021

#நாசா தள்ளாடுகிறார்! #சிதம்பர ரகசியம்! ராமச்சந்திர குகா!

ராகுல் தேறுவாரா? இப்படித் தலைப்பிட்டு நேற்றைக்கு தினமலர் செய்தி ஒன்றைப் பார்த்தேன்.ரசித்தேன், சிரித்தேன்! தலைப்பே தேறமாட்டார் என்பதைச் சொல்லி விட்ட பிறகு வேறென்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்கள்! அவர் போகிற இடங்களில் எல்லாம் கோஷ்டிப்பூசலும் தோல்வியும் சேர்ந்தே துரத்துகிறது! இதில் ராகுல் காண்டியை மட்டுமே குறைசொல்லிப் பிரயோசனமில்லை. தும்பை விட்டு வாலைப்பிடிக்கிற காங்கிரஸ் கலாசாரம் வேறு இருக்கிறதே!   


மத்திய அரசில் ராஜாங்க மந்திரியாக இருந்த நாட்களில் கேள்வி கேட்பாரில்லாத கோட்டைவாயாக உளறித் திரிந்த நாராயணசாமி பாண்டிச்சேரி முதல்வரான பிறகு ஒப்பீட்டளவில் சற்று அடக்க ஒடுக்க, மாகவே இருந்தார் தான்! அவருடைய கர்மா, கிரண் பேடியை  புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக வரவழைத்து  அவருடன் மோதுவதையே முழுநேர அரசியலாகவும், தொழிலாகவும் ஆக்கிவைத்தது. வாய்தான் பெரிதே தவிர காரியத்துக்கு ஆகாதவர் என்று தெரிந்த பிறகு அவருடன் சேர்ந்து அரசியலில் பயணித்து தற்கொலை செய்துகொள்வதற்கு யார் தான் தயாராக இருப்பார்? ஆக இதுவரை காங்கிரஸ் ஊழல் கோட்டையாகவே இருந்துவந்த பாண்டிச்சேரி முதன்முதலாக, அந்த கெட்ட சகவாசத்திலிருந்து விடுபடுகிற நேரமும் வந்துவிட்டது போல! நாளைக்கு ராகுல் காண்டி புதுச்சேரிக்குத் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வரப்போகிறாராம்! வந்து நாராயணசாமி ஒப்பாரி வைப்பதைக் கேட்கப் போகிறாரா? பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்குமா? கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?   


கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?   


பானாசீனா 2009 தேர்தலில் வெற்றிபெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ.கண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்றைக்கு தேர்தல் வெற்றி செல்லும் எனத்தீர்ப்பளித்திருக்கிறது.
நீதிமன்றங்களில் இதுமாதிரியான வழக்குகள் வெற்றி பெறுவது எப்போதாவது நடக்கும் அதிசயம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால் ஆச்சரியம் ஏதுமில்லை. 


அதீதக்கற்பனைகளினாலேயே இந்திய சரித்திரத்தை எழுதிவரும் ராமச்சந்திர குகா இன்றைக்கு  NDTV தளத்தில் Why Modi And Shah Fear Young Activists என்ற தலைப்பில் மோடி அமித் ஷா இளைஞர்களைக் கண்டு பயப்படுவது ஏன் என்கிற மாதிரிப் பொருமித் தீர்த்து எழுதியிருக்கிறார் 

The first reason is that the Modi-Shah regime fears independent thinking in general. Indians must be obedient, conformist, loyal to the state and the ruling regime, and worshipful towards the Great and Visionary Leader. Ideally, the Indian state would like no critical, objective, detailed, scrutiny of its policies and actions to be permitted at all. However, while democratic freedoms have been greatly attenuated since May 2014, they have not been fully extinguished. There still exists (bare) elements of a free press, some (rapidly shrinking spaces) in civil society, and a few major states which are not ruled by the BJP. இது ராமச்சந்திர குகா எழுதியிருப்பதிலிருந்து ஒரு பகுதி.

உண்மையே உன் விலை என்ன? இது சோ. ராமசாமி எழுதி நடித்த ஒரு நாடகத்தின் தலைப்பு.பின்னாட்களில் திரைப்படமாகவும்! உடனடியாக நினைவுக்கு வந்தது.
ராமச்சந்திர குகா போன்றவர்களிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாதுதான்! ஆனால் அவர் போல நிறையப்பேர் எழுப்புகிற ஜனநாயகம்,கருத்து சுதந்திரம் இவைகளைப் பற்றி நம்முடைய புரிதல் என்ன? கட்டுப்பாடுகளில்லாத கருத்து சுதந்திரம், ஜனநாயகம் என்று இவர்கள் கூக்குரல் எழுப்புவது போல எங்காவது முன்னுதாரணம் அல்லது definition இருக்கிறதா?


மீண்டும் சந்திப்போம்      

Wednesday, November 11, 2020

#தனிக்கச்சேரி பீஹார் தேர்தல் முடிவுகளும் ரீல் அறுந்து தொங்கும் காங்கிரசும்!

பீஹார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கொஞ்சம் லேட்டாக வந்தாலும், முக்கியமான சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்கிற மாதிரி வந்திருக்கிறது. இதை பிஜேபியின் வெற்றியாகப் பார்க்கப் பொறுக்காத சில ஊடகங்கள் பீஹாரின் சாணக்கியர் நிதீஷ் குமாரின் நிர்வாகத் திறமைக்கு கிடைத்தது என்று ஆரம்பித்து, அப்புறம் தான் பிஜேபியும் வெற்றிக்கு இன்னொரு காரணம் என்று இழுவையாகச் சொல்ல முயன்றதை இன்று பார்க்க முடிந்தது. ஒரு சாம்பிளுக்கு பர்கா தத்! 


பெரும்பாலானஇந்திய ஊடகங்கல்  நேர்மையான செய்திகளை  வழங்கியதே இல்லை என்பதை 2004 முதலே பார்த்திருக்கிறோம் இல்லையா! பர்கா தத் இப்படியென்றால் இன்னொரு ஊடகத்தில் கீழே! 


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக்களில் தேஜஸ்வி யாதவ் தான் பீஹார் முதல்வராகிறார் என்று தம்பட்டமடித்த அதே ஊடகங்கள் தான்  இப்படி சாமர்த்தியமாக தேர்தல் முடிவுகள் இப்படித்தான், எந்த மாற்றமும் இல்லை என்கிற மாதிரிப் பூசிமெழுகப் பார்த்தன. ஆனாலும் இந்தத் தேர்தல் முடிவுகளில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக அசாதுதீன் ஒவைசி தலைவராக இருக்கும் AIMIM கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு முதல்முறையாக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது. சிறுபான்மைக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் லாலுவின் RJD, காங்கிரஸ் கட்சிகளைத் தாண்டி இஸ்லாமியர்களின் வாக்குகள் ஒரு இஸ்லாமியக் கட்சிக்கு கிடைத்திருப்பது கூர்ந்து கவனித்தால் புரியும். 


Big Parties Treated Me Like Untouchable: says Asaduddin Owaisi வீடியோ 10 நிமிடம்  

இங்கே காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 19 சீட்டுகள் என்று சொல்லும் போது CPIML கட்சி 11 இடங்களிலும் வலது, இடது கம்யூனிஸ்ட் காட்சிகள் முறையே 2 மற்றும் 3 இடங்களில் ஜெயித்திருப்பது இன்னொரு ஆச்சரியம். 70 தொகுதிகளில் கடந்த 2015 தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி பெற்றது இப்போதும் அதே 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 இடங்களை மட்டுமே வெற்றி என்று ராகுல் காண்டியின் முகத்துக்கு, பிரசாரத்துக்கு கிடைத்த சறுக்கல் என்று நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

2015 தேர்தலை விட இந்தத்தேர்தலில் பிஜேபி 74 (+21) இடங்களில்  வெற்றி பெற்றிருக்கிறது. நிதீஷ் குமாரின்JDU வெறும் 43 (-28) இடங்கள் பெற்றிருக்கிறது. சென்ற தேர்தலில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற கூட்டணி உதிரிகள் இப்போது 9 இடங்களில் வெற்றி பெற்று மொத்தம் 125 என்று மெஜாரிடி கிடைத்து இருக்கிறது தேர்தலுக்கு முன்பு அறிவித்தபடியே பிஜேபி இப்போதும் தங்களுடைய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்தான் என்று தனது கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியிருக்கிறது இது இப்போது மட்டுமல்ல 2005 தேர்தல்களிலும் நிதீஷ் குமார் கட்சியை விட பிஜேபி அதிக இடங்களில் ஜெயித்திருந்த போதிலும் தேர்தலுக்கு முன் அறிவித்திருந்தபடியே நிதீஷ் குமாரை முதல்வராக்கியது என்பதோடு ஆனால் நிதீஷ் குமார் அப்படி நடந்து கொண்டதில்லை.என்பதையும் சேர்த்து இந்த நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும்!. 

சிராக் பாஸ்வானுடைய LJP எதிர்பார்த்தபடியே நிதீஷ் குமாரை நிறையவே பஞ்சர் செய்திருக்கிறது. நிறையத் தொகுதிகளில் வெற்றி மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் என்பதே சாட்சி! உதிரிக் கட்சிகளால் இந்தமாதிரி பஞ்சர் செய்யத்தான் முடியும், உருப்படியாக வேறு எதையும் செய்ய முடியாது என்பதை நான் பலமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறேன்.

இந்தத் தேர்தலின் இன்னொரு ஆச்சரியம் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ்! லல்லு பிரசாத் யாதவின் மோசமான இமேஜையும் மீறி, கொஞ்சம் நம்பிக்கையளிக்கிற மாதிரியான தேர்தல் செயல்பாடுகள்! கொஞ்சமும் சளைக்காமல் தேர்தல் பிரசாரம் செய்தவிதம் பாராட்டியே ஆக வேண்டும்! ராகுல் காண்டி எதையும் கற்றுக்கொள்கிற பிறவி இல்லை என்பதால் News 18 தளத்தில் ஜோ பைடன், தேஜஸ்வி யாதவ் இருவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதியது வெறும் நப்பாசை தான்!         

Naysayers may have rejected the Modi government’s plan to provide free ration to more than eight crore people of Bihar, but by doing this, the Prime Minister has ensured that not a single person goes hungry to the bed in the night. Out of the 4.7 crore accounts opened under the Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) in Bihar, more than 2.5 crore belong to women. The government has transferred more than Rs 13,000 crore into these accounts. It became difficult even for leaders of the opposition parties to discount these welfare measures that have benefitted a large segment of the population. The opening up of academic institutions of eminence such as AIIMS, Nalanda University and NIFT among others, and infrastructure development like airport in Darbhanga, will transform the lives of the people of Bihar.

Prime Minister Modi has asserted that the development of India is incomplete without the development of Bihar. 

இப்படி ஒரு கருத்து வெளியாகியிருப்பது சேகர் குப்தாவின் The Print தளத்தில் தான் என்றால் அது மிகப் பெரிய ஆச்சரியம். 

மீண்டும் சந்திப்போம்.  

Friday, June 21, 2019

மீண்டுவந்த விஜய்காந்தும் மீட்கமுடியாத ராகுல் காண்டியும்!

என்னது? வெறும் ஐந்தரைக்கோடி ரூபாய் கடனுக்காக நூறு கோடி ரூபாய் சொத்து ஏலமா? கேப்டன் விஜயகாந்துக்கே இந்தக் கதியா என்று ஏகப்பட்ட உச்சுக்கொட்டல்கள்! கடனைக் கொடுத்து விட்டு திரும்ப வசூலிக்க முடியாமல்  தவிக்கிற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பரிதாபமான நிலைமை குறித்து யாராவது கவலைப்பட்டீர்களா? 


இங்கே பிரேமலதா கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்கிறார்! கூடவே நிற்கிற கல்லூரியின் தாளாளர் சுதீஷ் வாய்மூடி மௌனியாக நிற்கிறார். இவரை நம்பி விட்ட கல்லூரியோ  கேப்டன் டிவியோ உருப்படாமல் முட்டுச்சந்தில் நிற்பதற்கு  என்ன காரணம் என்று யாரும் கேள்வி கேட்கமாட்டோம்! கடன் கொடுத்தவனும் கேட்கக் கூடாதென்றால் அது எந்த ஊர் நியாயம்? என்ஜினீயரிங் கல்லூரிகள் காலத்துக்கும் காசைவந்து கொட்டும் என்ற நம்பிக்கையில் தொடங்கியவர்கள், அந்தத் தொழிலை முறையாக நிர்வகித்தார்களா? 

  
சத்தியம் டிவி அனுதாபப்படுகிற சாக்கில் சந்தோஷமாகக் கூவிக்கூவிச் சொல்கிறது. இப்போது வங்கி செய்திருப்பது ஒரு முன்னெச்சரிக்கை   நடவடிக்கைதானே தவிர இறுதியானது அல்ல. ஏலத்தேதிக்கு முன்னால் கடனை முழுமையாகவோ, கணிசமான பகுதியைக் கட்டி விட்டு மீதத்தை எவ்வ்ளவு காலத்துக்குக்குள் காட்டமுடியும் என்று நியாயமாக ஒரு காரணத்தை சொல்லமுடிந்தாலே போதுமானது. பொதுத்துறை வங்கி என்னமோ விஜயகாந்தை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டமாதிரிப் பேசுவது கொஞ்சமும் சரியல்ல. நேர்மையானவர்களுக்குத்தான் சோதனைவரும் என்று பிரேமலதா பேசினால் மட்டும் போதுமா? நேர்மையைச் செயலிலும் காட்டியிருக்க வேண்டாமா?  


ராகுல் காண்டிக்கு சித்தம் கலங்கிப்போய் விட்டதா என்ன? இன்று ஜூன் 21 யோகா தினமாகக் கொண்டாடப்படுவதை நக்கலடிக்கிற சாக்கில் ராணுவத்தையும் இழிவு படுத்துகிற மாதிரி ட்வீட்டரில் படம் போட்டிருக்கிறார். பப்பு (முதிர்ச்சி பெறாத சிறுபிள்ளை) என்று அழைக்கப்பட்டதில் தவறே இல்லை!


உறைக்குமாம் 
ட்வீட்டரில் தாளித்துக் கொண்டிருக்கிறார்கள். சொரணை உள்ளவர்களுக்குத்தானே அதெல்லாம் உறைக்குமாம்? 

ராகுல் காண்டி மீண்டுவரவே முடியாத நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிக் கொண்டே வருகிறது. 

மீண்டும் சந்திப்போம்.



இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)