Freedom House என்றொரு அமைப்பு இருப்பது யாருக்காவது தெரியுமா? ஜனநாயகம், சுதந்திரம் ஒவ்வொரு நாட்டிலும் எந்த அளவுக்கு இருக்கிறது என்று இவர்கள் மதிப்பீடு செய்வதை இதற்கு முன்னால் கேள்விப்பட்டது உண்டா? ட்வீட்டர், முகநூல் முதலான big tech ஊடகங்கள் மீதான அவநம்பிக்கையும் கோபமும் எதிர்ப்பாகப் பெருகி வருகிற நேரம் பார்த்து இந்த அமெரிக்க அமைப்பு, இப்படி ஒரு மதிப்பீட்டை வெளியிட்டிருப்பது தற்செயலானது தானா? பாகிஸ்தான், இந்தியா இருநாடுகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்திருக்கிற இந்த மதிப்பீடு நம்பக கூடிய ஒன்றாக இருக்க முடியுமா?
சேகர் குப்தா இந்த 27 நிமிட வீடியோவில் விளக்கிச் சொல்லியிருப்பது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலை நீங்கள்தான் வந்து சொல்ல வேண்டும்!
சீன விவகாரத்தில் மட்டும் மத்திய அரசின் அணுகுமுறை மீது கடுமையாகச் சாடும் ப்ரம்ம செலானி சொல்கிற கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.
சுதந்திரத்தை, இங்கே கூக்குரலிடும் Paid Media வை வைத்து மதிப்பிடமுடியாதென்பது எவ்வளவு நிஜமோ அதுபோலவே வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்று அதை இந்த நாட்டுக்கெதிராகவே பயன்படுத்தும் PETA. AMENESTY போன்ற அமைப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவந்ததை வைத்தும் கூட மதிப்பிட முடியாது.
சேகர் குப்தா, அந்த அமைப்பு எது எதை வைத்து எப்படி மதிப்பீடு செய்தார்கள் என்று சொல்வதைக் கேட்டுவிட்டு உங்களுடைய கருத்தை இங்கே கொஞ்சம் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment