1967 தேர்தல் முதல் இப்போது வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் வரை பார்த்துக் கொண்டிருப்பதில், இந்தத் தேர்தல் சமயத்தில் பார்த்துக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு விசித்திரமான சூழ்நிலையை இதுவரை பார்த்ததில்லை. கருணாநிதி இல்லை, ஜெயலலிதா இல்லை என்கிற மாதிரிப் புலம்பல்களை விடுங்கள்! இன்னும் 15 நாட்களில் ஒரு சட்டசபைத் தேர்தல் வரப்போவதற்கான வழக்கமான அறிகுறிகள், பரபரப்பு எதையும் காணோம்! கரைவேட்டிகளுடைய நடமாட்டம் தெருக்களில் இல்லை! ஆட்டோக்கள், ஜீப் இன்னபிற வாகனங்கள் ஒலிபெருக்கியில் இன்ன சின்னத்துக்கு மறக்காமல் வாக்களியுங்கள் என்று அலறிக்கொண்டே போகிற சத்தமும் மிஸ்ஸிங்! இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை தானே வெளியாகிறது, அதற்குள் என்ன அவசரம் என்கிறீர்களா?
இந்த 8 நிமிட வீடியோவைப்பாருங்கள்! திரு கே. அண்ணாமலை IPS, 38வயதே ஆன பிஜேபி வேட்பாளர். இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி ஜமாத் ஊருக்குள் பிரசாரம் செய்யக் கூடாது என்று தாக்கீது அனுப்பியதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைக் கவனியுங்கள்! அதிகம் அலட்டிக்கொள்ளவே இல்லை. பள்ளப்பட்டி இந்தியாவில் தான் இருக்கிறது, இந்திய அரசியல் சாசனத்தின் கீழ்தான் இருக்கிறது. நாங்கள் வருவோம் பிரசாரம் செய்வோம் என்று உறுதிபடச் சொன்னதோடு நிற்கவில்லை. ஒரு 8 பேர் கையெழுத்துப் போட்டால் ஒட்டுமொத்த ஊரே சொன்னதாகிவிடுமா? திமுகவின் கிளை என்றே பெயர் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே என்றும் சாடுகிறார். இந்தமாதிரி மிரட்டல்களை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அண்ணாமலை!
இந்தத் தேர்தல் களேபரங்களில் என்னைக் கவர்ந்தது இந்த துடிப்பான இளைஞரின் அரசியல் பிரவேசம் ஒன்று மட்டும் தான்!
பதிவின் துவக்கத்தில் சொன்னதுபோல தேர்தல் களம் முந்தையகாலம் போல சூடேறின மாதிரித் தெரிகிறதா என்ன? ஜனங்களுமே கூட எங்கேயோ மழைபெய்கிறது என்றமாதிரி அலட்டிக்கொள்ளாமல் இருக்கிற மாதிரியே எனக்கு மட்டும்தான் படுகிறதா?
உங்கள் தொகுதியின் நிலவரம் என்ன? கொஞ்சம் வந்து சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment