கெக்கேபிக்குணி தயாநிதி மாறன் தன்னுடைய நாற வாயை மறுபடியும் திறந்திருக்கிறார்.தயாநிதி பேச்சை புளகாங்கிதத்தோடு முதலில் பிரசுரித்த இந்து தமிழ் திசை, பிரச்சினை வேறுமாதிரி ஆகிவிடும் என்று நினைத்தோ என்னவோ சத்தமில்லாமல் செய்தியை எடுத்துவிட்டது.
என்ன தயா இதெல்லாம்? என்று கேட்டுவிடக்கூடாது! கெக்கேபிக்கென்று சிரிப்பதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது, தெரியுமில்லையா? 😀😂
சொல்வது தினமலர் தானே ,என்று அலட்சியப்படுத்த முடியாத படி, இந்தச்செய்தி திமுகவின் ஆர்வக்கோளாறு மட்டுமல்ல, கழகத்தின் நேற்றைய இன்றைய ஏன் நாளைய வரலாறும் கூட!
சொல்வதெல்லாம் உண்மையா? பலசமயங்களில் குறிப்பாக அரசியலில் சொல்லாமல் போனதெல்லாம் கூட உண்மைதான் என்று சொல்கிறது இந்தவார துக்ளக் அட்டைப்படம்!
ஆனாலும் கூட கமல் காசர் தன்னுடைய நட்டத்துக்கு இரண்டு பூஜ்யங்கள் அசேர்த்துச் சொல்கிறாரோ என்ற பெருத்த சந்தேகம் எனக்கு! எது எப்படியாகிலும், கமல் காசருடைய நட்டம், தயாரிப்பாளர்களுக்கும்,காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் பெருத்த லாபம் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டுமா?
மீண்டும் சந்திப்போம்.
எனக்கென்னவோ இந்தமுறை அவர்களுக்குத்தான் வாய்ப்பு என்று தோன்றுகிறது!
ReplyDeleteகாமெடிடைம் என்று தலைப்பு வைத்திருந்தாலும் விஷயம் படுசீரியசானது ஸ்ரீராம்! ஒரு பொய்யைத் திரும்பத்திரும்பச் சொன்னால் அதுவே உண்மையாகிவிடும் என்று ஹிட்லரின் பிரசார மந்திரி கோயபல்ஸ் சொன்னதுதான் இப்போது திமுகதான் ஜெயிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வரிசைகட்டி வருவதிலும் நடந்துகொண்டிருக்கிறது.
Deleteஜனங்களை வெறும் ஆட்டுமந்தைகள் போல நடத்துகிற மனோபாவம். ஜனங்கள் தான் தாங்கள் மந்தைகள் இல்லை என்பதை நிரூபித்தாக வேண்டும்.