ஸ்டேன்லி ராஜன் முகநூலில் எழுதிய இந்தப்பகடியைப் புரிந்து கொள்வதற்கு ப்ரயாசைப்பட வேண்டியதில்லை. ஆனாலும் ராகுல் காண்டி தென் மாவட்டங்களில் அடித்துவரும் கூத்தை நேரடியாகப்பார்க்கிற மாதிரி வருமா என்ன? வீடியோ 13 நிமிடம்தான்!
பெந்தகொஸ்தே கும்பலுடைய ஹல்லேலூயா கூச்சல் ஒன்று மட்டும்தான் இந்தக்கூத்தில் மிஸ்ஸிங். ராகுல் பேசுவதும் நடனம் ஆடுவதும் உடற்பயிற்சி செய்வதும் ஒரு பாதிரி அதை மகிமைப்படுத்தி மொழி பெயர்ப்பதும்,அச்சுஅசல் கிறித்தவ ஜெப ஊழியத்தை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறதா இல்லையா?
திருமதி நிர்மலா சீதாராமன் மல்லு தேசத்தில் பிணரயி விஜயன் அரசைக் கிழித்துத் தொங்கவிடுகிறார்! ஆனால் மல்லுதேசம் வாக்களிக்கிற விதமே அலாதி! UDF ஒருதரம் LDF மறுதரம் என்று மாற்றி மாற்றி வாக்களித்தே பழக்கப் பட்டவர்கள்! 2021 சட்டசசபைத்தேர்தலில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கிற ஒருவிஷயம் பிணரயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறையும் வெல்வாரா அல்லது பழைய மாதிரி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா என்பதுதான் பிஜேபி அங்கே அசெம்பிளியில் காலூன்ற முடிந்தால் அதுவே பெரிய விஷயமாக இருக்கும்!
லொள்ளு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜியை சந்தித்து இருப்பதில் முக்கியத்துவம் உண்டா? மேற்கு வங்கத்தில் சுமார் 14% பீஹாரிகள் இருக்கிறார்களாம்! போதாதா?
2021 தேர்தல் களம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக சூடேறிக் கொண்டிருக்கிறது. பதத்துக்கு வர இன்னும் சிலநாட்கள் தேவைப்படலாம்..
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment