Showing posts with label காங்கிரஸ் காமெடி. Show all posts
Showing posts with label காங்கிரஸ் காமெடி. Show all posts

Monday, March 1, 2021

#தேர்தல்நேரம் காமெடி டைம்! #தமிழ்நாடு #கேரளா #மேற்குவங்கம்

ஸ்டேன்லி ராஜன் முகநூலில் எழுதிய இந்தப்பகடியைப் புரிந்து கொள்வதற்கு ப்ரயாசைப்பட வேண்டியதில்லை. ஆனாலும் ராகுல் காண்டி தென் மாவட்டங்களில் அடித்துவரும் கூத்தை நேரடியாகப்பார்க்கிற மாதிரி வருமா என்ன? வீடியோ  13 நிமிடம்தான்!


பெந்தகொஸ்தே கும்பலுடைய ஹல்லேலூயா கூச்சல் ஒன்று மட்டும்தான் இந்தக்கூத்தில் மிஸ்ஸிங். ராகுல் பேசுவதும் நடனம் ஆடுவதும் உடற்பயிற்சி செய்வதும் ஒரு பாதிரி அதை மகிமைப்படுத்தி மொழி பெயர்ப்பதும்,அச்சுஅசல் கிறித்தவ ஜெப ஊழியத்தை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறதா இல்லையா? 
  

திருமதி நிர்மலா சீதாராமன் மல்லு தேசத்தில் பிணரயி விஜயன் அரசைக் கிழித்துத் தொங்கவிடுகிறார்! ஆனால் மல்லுதேசம் வாக்களிக்கிற விதமே அலாதி! UDF ஒருதரம் LDF மறுதரம் என்று மாற்றி மாற்றி வாக்களித்தே பழக்கப் பட்டவர்கள்! 2021 சட்டசசபைத்தேர்தலில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கிற ஒருவிஷயம் பிணரயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறையும் வெல்வாரா அல்லது பழைய மாதிரி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப்  பிடிக்குமா என்பதுதான் பிஜேபி அங்கே  அசெம்பிளியில் காலூன்ற முடிந்தால் அதுவே பெரிய  விஷயமாக இருக்கும்!  


லொள்ளு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜியை சந்தித்து இருப்பதில் முக்கியத்துவம் உண்டா?  மேற்கு வங்கத்தில் சுமார் 14% பீஹாரிகள் இருக்கிறார்களாம்! போதாதா?

2021 தேர்தல் களம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக சூடேறிக் கொண்டிருக்கிறது. பதத்துக்கு வர இன்னும் சிலநாட்கள் தேவைப்படலாம்..

மீண்டும் சந்திப்போம். 

Saturday, October 19, 2019

தேர்தல் களம்! கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கும் போல!

எது எழுத்து என்கிற கேள்விக்கு விடைதேடுவதில் நண்பர்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வருகிறார்கள் வந்து கருத்தும் சொல்கிறார்கள் என்பதால், முந்தைய பதிவின் தொடர்ச்சியை கொஞ்சம்   இடைவெளிவிட்டுப் பேசலாம்! அதுவரை என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது தேர்தலும் அரசியலும்!

   
மஹாராஷ்டிரா, ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் சட்ட சபைத்தேர்தல்கள் வருகிற திங்கட்கிழமை நடக்க இருக்கும் நிலையில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. பிஜேபி சிவசேனா கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் தேவேந்திர ஃபட்னவிஸ் முன்னிறுத்தப் படும் அதே நேரம் காங்கிரஸ் NCP கூட்டணியில் அப்படி  யாருமே இல்லை என்பது ஒரு விசித்திரம் என்றால் , ராகுல் காண்டியின் இமேஜ் ஹரியானாவில் மட்டுமல்ல, மஹாராஷ்டிராவிலும் கூடக் காங்கிரசுக்கு பாதகமாகத்தான் இருப்பது இன்னொரு விசித்திரம்! ஷரத் பவார் மட்டும் தான் இன்று கொட்டும் மழை என்றாலும் சதாரா தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் சளைக்காமல் இறங்கியதாக செய்திகள் சொல்கின்றன.  


முன்பு சலாம்போட்டு காசுவாங்கிக் கொண்டு  கூவிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது சோனியாG ராகுல் காண்டி கும்பலுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்! The Print தளத்தின் சேகர் குப்தாவின் முறை இப்போது! இதற்கு முன்னால் பர்கா தத் ஆவேசமாக உபதேசம் செய்துகொண்டிருந்ததை சொன்ன நினைவிருக்கிறதா?  இந்த 10 நிமிட வீடியோவில்  சேகர் குப்தா, இந்திராவிடமிருந்து அரசியலைக் கற்றுக் கொள்ளும்படி உபதேசம் செய்கிறார்! இதை  National Interest எனத் தலைப்பிட்டுச் சொல்லியிருப்பது காமெடிக் கொடுமை! 


ஹரியானா மஹேந்திரகார் தொகுதியில் நேற்றைக்கு சோனியா பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டத்தில் சோனியா கலந்துகொள்ளவில்லை. பதிலியாக ராகுல் காண்டி கலந்துகொண்டு பேசினார் என்பதில் கிளிப்பிள்ளை மாதிரி அதே ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவதுதான் என்றாகிப் போனதால் என்ன பெரிய நஷ்டம்? எப்படி இருந்தாலும் தோற்பதுதான், அது சோனியா பேசித் தோற்றால் என்ன? ராகுல் காண்டி உளறிக்கொட்டித் தோற்றால் தான் என்ன?


#brexit உடன்பாடு கிட்டத்தட்ட ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப் பட்டாலும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக, விவாதம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஒன்றரை நிமிட வீடியோ. பிரதமர்  போரிஸ் ஜான்சன் அவரது அஜெண்டாவில் தெளிவாக இருக்கிறார் என்றால், எம்பிக்கள் அவரவர் அஜெண்டாவில் உறுதியாக இருக்கிறமாதிரித்தான் இழுபறியாக இருக்கும் போல!

மீண்டும் சந்திப்போம்.       
       

Friday, October 11, 2019

சீன அதிபர் விஜயமும்! உள்ளூர்க் காமெடிகளும்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசுவதில் என்னென்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதை The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ரா விளக்குகிற இந்த  5 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்களேன்! ஆசியாவின் இரு பெரும் ஜனத்தொகை கொண்ட நாடுகள்! உலகின் மொத்தஜனத்தொகையில் இவ்விரு நாடுகளும் சேர்ந்தால்  மூன்றில் ஒருபங்குக்கும் மேல்(35%)! இதில்  ஒன்று வளர்ந்த பொருளாதாரமாகவும், ராணுவ சக்தியாகவும் இருக்கும் சீனா! இன்னொன்று ஒரு வலிமையான பொருளாதாரமாகவும், ராணுவ சக்தியாகவும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்தியா!      


சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றி ஆக்கபூர்வமான விஷயங்கள்  ஏதாவது விவாதிக்கப்படுகிறதா என்று தேடினால் மிஞ்சுவது ஏமாற்றம் தான்!  முகநூலில் ஒருவிதமாகவும் ட்வீட்டரில் வேறொரு விதமாகவும் கலாய்க்கப் படுவதை நிறைய இடங்களில் பார்த்தேன்.

  

அதே முகநூல் பக்கங்களில் கொஞ்சம் பொறுப்பான எழுத்தும் பார்க்கக் கிடைக்கிறதே! 

'தமிழ் பேசும் சீனர்கள்' என்று தமிழக ஊடகங்கள் செய்யும் பரப்புரைகள் ஏகம். அதிலும், 'தமிழை கொண்டாடும் சீனர்கள்' என்கிற அளவிற்கு தமிழக ஊடகங்கள் பூசும் முலாம் ஏகத்திற்கும் பளபளா!
முதலில்..நடக்கவிருப்பது முக்கிய அரசியல் சந்திப்பு.
இந்த நிலையில்..சீனாவின் மொழி கொள்கை குறித்த முழு உண்மைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே முழுமையான செய்தியாக இருக்க முடியும்.
இன்றைய உலக நாடுகளின் பூகோள அரசியலில் ...Data என்பது எந்த அளவிற்கு பெட்ரோலியத்தை பின்னுக்கு தள்ளி..மிக அதிக மதிப்பு வாய்ந்த ஒன்றாக மாறி இருக்கிறது என்பதை அறிவோம்.
அதே போல..மொழி என்பதும் ...பெரும் மதிப்பு வாய்ந்த வளமாக மாறி இருக்கிறது. மொழி என்பது வெறும் சக மனிதர்களுடனான தொடர்புக்கான கருவி மட்டும் அல்ல. மொழி என்பது, அது சார்ந்த பூகோள பகுதியின் வாழ்வியல், அறிவுசார் சொத்துகள், கலாச்சாரம், பண்பாடு, மதம், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் , இலக்கியங்கள், இலக்கணங்கள், திருவிழாக்கள், தேவைகள், பிரச்சினைகள், பிளவுகள் என்று அனைத்தையும் தன்னுள்ளே ஏற்றி செல்லும் வாகனம். இன்றைய உலக அரசியலில் ஆகப் பெரும் மதிப்பு வாய்ந்த Data-ன் main server-களில் ஒன்று மொழி என்று கூட சொல்லலாம்!
இதனை 1949-ம் ஆண்டிலேயே புரிந்து கொண்டு ...கம்யூனிச சீனா விவாதிக்கிறது. இன்னொரு நாட்டின் அந்நிய மொழியை சீனர்கள் கற்றுக் கொண்டால்..அந்த நாட்டின் கலாச்சாரம், பண்பாடு என்று அனைத்தும் அதனோடு சேர்ந்து உள்ளே வந்து நம் மொழியை அழித்து விடும் என்று உள்ளிருந்தே அடிப்படைவாத கம்யூனிஸ்டுகள் [ இங்குள்ள தி.க.& தி.மு.க போல ] எதிர்க்கிறார்கள். பல வருடங்கள் நடந்த முன் பின் முடிவுகளுக்கு பிறகு ...சீனாவின் அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு அந்நிய மொழிகள் கற்றுக் கொள்வது அவசியம் என்கிற முடிவிற்கு சீனா வருகிறது.
1986-ம் வருடம்.. சீனாவின் Foreign Language Education Planning -FLEP - ல் சில மாற்றங்களை செய்கிறது சீன அரசு.
உலக நாடுகளில்..அந்தந்த பிராந்திய முக்கியத்துவத்தை பொறுத்து ..அந்நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் அந்நிய மொழிகளை சீனாவில் கற்றுக் கொடுப்பது என்ற திட்டத்தை அமல் செய்கிறது. இதற்காக எடுத்த எடுப்பில் அம் மொழிகளை பேசும் பிற நாட்டினரை உள்ளே விடாமல்..முதலில் சீனர்களை ..அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி ...அம் மொழிகளை முழுமையாக கற்றுக் கொள்ள செய்தது.
அவ்வாறு பிற நாடுகளுக்கு மொழிகளை கற்றுக் கொள்ள செல்லும் சீனர்களுக்கு ..எவ்வாறு அந்நிய மொழியை கற்றுக் கொள்ள வேண்டும், எந்த அளவிற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை முழுமையாக போதித்து தான் அனுப்புகிறது சீன அரசு ! அந்நிய மொழியை கற்றுக் கொள்ளும் சீனர்கள்... மொழியை கற்றுக் கொள்வதோடு ..அம் மொழியின் இருப்பு, அம் மொழி பேசும் மக்களிடம் அது செலுத்தும் ஆளுமை, அம் மொழியில் இருக்கும் இலக்கியங்கள், அறிவுசார் சொத்துகள் ஆகியவை குறித்த விபரங்களையும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால்.. அம்மொழியோடு சேர்ந்து வரும் கலாச்சாரம் , பண்பாடு, மதம், கம்யுனிசத்திற்கு எதிரான கருத்துகள், தனிமனித உரிமை & கருத்துரிமை போன்றவற்றை சீனாவிற்குள் கொண்டுவரக் கூடாது.
ஏனெனில்..சீனா...அந்நிய மொழிகளை ஒரு தொடர்பு கருவியாக கருதவில்லை. மாறாக..உலகில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருக்கும் நாடுகளில் பேசப்படும் அந்நிய மொழிகள் அனைத்தும்..அப் பகுதிகளில் ..சீன ஆதிக்கத்திற்கு உதவக்கூடிய அரசியல் கருவி என்பதாக கணக்கிடுகிறது சீனா.
இன்றளவும்....சீனாவின் Foreign Language Education Planning -FLEP உலகில் சீன அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்.. மிகக் கூர்மையுடன் தீட்டப் பட்ட ஒரு அரசியல் திட்டம்.
இத்தகைய கூர்மையுடன் தந்திர அரசியல் செய்யும் சர்வாதிகார சீனாவை...கூடுதலான அரசியல் கூர்மையுடன் அணுகவேண்டியது அவசியம்.
கொஞ்சம் யோசிக்க வைக்கிற எழுத்துதான் இல்லையா? இங்கே தமிழேண்டா கோஷ்டிகளுக்குக் கொஞ்சம் கூடப் புரியாது என்கிறபோது அவர்கள் வேறு என்ன செய்வார்கள்?

வேலை வெட்டி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அதையே இங்குள்ள திராவிடங்களும், இந்தியாவுக்கு எதிராக இதுமாதிரி விஷயங்களில் ட்வீட்டர் மற்றும் இணையக்கூட்டாளிகளாக இருக்கும் பாகிஸ்தானிகளும் செய்திருக்கிறார்கள். இதையும் ஆனந்த விகடன் தளம் வெகு ஆனந்தமாக அனுபவித்து ஒரு பரபரப்புச் செய்தியாகப் போட்டிருக்கிறார்கள். 

  

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே! நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே! என்று பாரதி பாடல் வரிகளைக் காட்டி இவர்களைத் திருத்த முடியாது தான்! காங்கிரசை இன்னமும் விட்டு வைத்திருந்தாலும் கூடத் தாழ்வே என்று சொல்கிற இந்த வீடியோ செய்தியையும் பார்த்துவிடுங்கள்! 


அதெல்லாம் சரி! இந்தியா வருவதற்கு முன்னால் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானை பெய்ஜிங்கில் சந்தித்து காஷ்மீர் விவகாரத்தைக் கவனித்துக் கொண்டிருப்பதாக கொஞ்சம் ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கும்  சீன அதிபர் நாளை இந்திய விஜயத்தை முடித்து விட்டு  நேபாளம் போகிறார் என்பதில் ஏதாவது புரிந்து கொள்ள முடிகிறதா? 

மீண்டும் சந்திப்போம். 

Monday, September 16, 2019

மறுபடியும் சுபவீ! கமல் காசர்! திருநாவுக்கரசர்!

திராவிட இயக்கத் தமிழர்  பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேசவைத்திருப்பது, அவர்களுடைய அரசியல் எந்த அளவுக்கு கீழிறங்கி இருக்கிறது என்பதை மட்டுமல்ல, சீனாதானாவுக்கு ஆதரவுக்குரல் எழுப்பவும் கூட காங்கிரஸ் வாடகைக்குத் தான் ஆள்பிடித்தாக வேண்டியிருக்கிறது என்கிற பரிதாபத்தை நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.  ஒரு 25 நிமிடக் காமெடியை அனுபவிக்க முடிகிறதா பாருங்கள்! 



திஹார் சிறையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சால்வை அழகர் பானாசீனாவின் மகன் அவருக்கு ஒரு கடிதம் எழுதி இருப்பதாக இங்கே  அதிலே என்ன சொல்லியிருக்கிறது என்பதை விட அதை எந்தெந்த ஊடகங்களுக்கு குறிப்பிட்டு tag செய்திருக்கிறார் என்பதை அவருடைய  ட்வீட்டரில் பார்த்துக் கொள்ளலாம்! இதில் பெரும்பாலான  ஊடகங்களின் சாயம் வெளுத்துப்போய் நீண்ட நாட்களாகிறது என்பது ஒரு புறம்! இன்னமும் கூட ஊடகப்பொய்களாலேயே சால்வை அழகருடைய பிம்பத்தைத் தூக்கி நிறுத்திவிடலாம் என்று நம்புகிறார்கள் பாருங்கள், அது இன்னமும் விசித்திரம்!


கமல் காசருடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு  என்ன ஆயிற்று என்று இங்கே யாரும் தேடுவதாகவோ கவலைப் படுவதாகவோ தெரியவில்லை. ஆனாலும் மனிதர் நானும் இருக்கிறேன் என்று திடீரென்று உறக்கம் கலைந்து தமிழ் மொழி, ஜல்லிக்கட்டு என்றெல்லாம்  பெனாத்தியிருக்கிறார்! 

Moron Kamalahasan and DMK Chieவந்த Stalin are howling about imposition of Hindi. What about their imposition that no Hindi will be taught in TN? Let Hindi be an optional third language and the choice on which language to opt left to the student
1:41 PM · Sep 16, 2019  

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியிடமிருந்து வந்த பதிலடி இது ஒரு பக்கம் என்றால் யூட்யூபில் இப்போது பார்த்த இந்த வீடியோ செம கலக்கல்!  


சமோசா, டீ, பஜ்ஜி, அப்புறம் கொஞ்சம் திருநாவுக்கரசர் எம்.பி.: மாஜி கே.என்.நேருவின் ’கை கழுவும்’ அரசியல் என்ற தலைப்பில் இங்கே கொஞ்சம் தமாஷாக ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்! 


ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் முதல் ஆளாய் அல்வா கொடுத்த கே.என்.நேரு, சமீபத்தில் காங்கிரஸின் எம்.பி. திருநாவுக்கரசருக்கு சமோசா கொடுத்ததுதான் செம்ம கலாய்ப்பான சேதி. அதாவது திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் திருநாவுக்கரசர், நன்றி சொல்லி தொகுதி எங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நன்றி தெரிவிக்க சென்ற அரசருடன் நேருவும் சென்றிருக்கிறார். எம்.பி.க்கு அங்கிருக்கும் பிரபல கடை ஒன்றில் சமோசா, பஜ்ஜி, டீ என ஏகப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களை வாங்கிக் கொடுத்து குஷியாக்கி இருக்கிறார் நேரு. சாப்பிட்டு முடித்த பின், ‘சரி மறுபடியும் நன்றி அறிவிப்பை தொடரலாமா?’ என்று அரசர் கேட்க, ‘கை எண்ணெய்யா இருக்குது. கழுவிட்டு வந்துடுறேன். நீங்க ஆரம்பிங்க ’ என்று சொல்லி கிளம்பியவர் அதன் பிறகு அந்த திசைக்கே வரலையாம். காத்திருந்து காத்திருந்து அரசரும் நொந்துட்டாராம். 

ஹும் காங்கிரஸை கை கழுவுறதுல நேரு ரொம்ப சுட்டியா இருப்பார் போல என்கிறார்களே மெய்யாலுமா?

மீண்டும் சந்திப்போம்.
  

Wednesday, August 21, 2019

உள்ளூர்க் காமெடி! செட்டிநாட்டுக் காமெடி கொஞ்சம் எக்ஸ்ட்ரா!

பானாசீனா விவகாரம் இங்கே ஒருமாதிரி காமெடியாகப் போய்க் கொண்டிருப்பதைப்  பார்ப்பதற்கு முன்னால் இங்கே ஒரு உள்ளூர்க் காமெடியையும் பார்த்துவிடலாம்! முனைந்து முனைவர் பட்டம் பெற்றவர் திருமாவளவன் என்று பாராட்டி எங்கேயோ எழுதிவிட்டேனோ? முனைவர் பட்டம் வாங்கப் படித்து, விஷயங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற அடிப்படைத் தேவை எல்லாம் கிடையாது என்கிற மாபெரும் உண்மையை மதன் ரவிச்சந்திரன் திருமாவளவனுடன் நடத்திய இந்த நேர்காணலில் தெரிந்து கொண்டேன்.


தமிழகத்தில் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களில் நம்பிக்கை ஊட்டும் நபர்களாகத் தெரிந்த இருவர் வைகோ, தொல்.திருமாவளவன்! எப்படிக் காலம் செல்லச் செல்ல, தேய்ந்து படுபாதாளத்துக்குப் போய் விட்டார்கள் என்பதைப் பார்க்கையில் உண்மையிலேயே வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் இப்படியானது அவர்களுடைய சொந்தத்தேர்வினால் தானே தவிர வேறு எவர்மீதும் பழிசொல்ல முடியாது. இங்கே மதன் ரவிச்சந்திரன் கேட்கிற கேள்விகளில் திருமாவளவன் எரிச்சல் அடைவது மிக வெளிப்படையாகவே தெரிகிறது. மதனுக்குப் பின்விளைவுகள் எதுவும் நேராமல் அந்த பராசக்தி தான் காப்பாற்ற வேண்டும்.  


அர்த்தமிழந்து போன புதியதலைமுறை சேனல் என்ன புதுப் புது அர்த்தங்களைத் தேடிக் கண்டுபிடித்துவிடப் போகிறதாம்? சுபவீ  செட்டியார் எப்படி  முட்டுக் கொடுத்து விடப் போகிறாராம்? ஒரு காமெடிக்காக வீடியோ 25 நிமிடம்.

  
இது சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கிற காமெடி டூன்! என்ன சொல்ல வருகிறார்? பானாசீனா கட்சிமாறாமல் நேர்வழியில் போய்க்கொண்டிருக்கிறார் என்றா? வாய்க்கொழுப்பு உச்சம் உள்ள ஒருவரை பிஜேபி வரவேற்கும் என்றா?
‪வாழ்க்கை ஒரு வட்டம்டா -அது
சுத்திவந்து ஆப்பு வைக்கும்டா
சும்மா ஒரு டிவிட்டு போட்டதுக்கே பாண்டிச்சேரிக்காரரை வீடு பூந்து கைது பண்ணவெச்சு எங்கப்பா நிதி மந்திரிடானு கெத்து காட்டினாரு எம்பி கார்த்தி சிதம்பரம். இப்ப அந்த அப்பாக்காரரே அப்ஸ்காண்டிங்🤪‬     


கபில் சிபல், எங்களின் மனு இன்று விசாரணைப் பட்டியலில் இல்லை. தற்போது தலைமை நீதிபதி அரசியல்சாசன அமர்வில் இருக்கிறார், மாலை 4 மணிக்குள் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்றார். இருப்பினும், இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும், ஏற்கனவே இந்த மனு குறித்து தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கபில் சிபில் முறையிட்டார்.
ஆனால், நீதிபதி ரமணா பட்டியலில் இல்லாத மனுக்களை விசாரிக்க முடியாது என்று மறுத்தார். அப்போது அவர் கூறுகையில், " வழக்கமாக மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதிக்கு சென்று அவரின் பார்வைக்குப்பின்புதான் பட்டியலிடப்படும். காலையில் நாங்கள் அனுப்பிவிட்டோம். ஆனால் மனுவில் குறையிருந்தது. மாலைக்குள் பட்டியலிட்டால் மட்டுமே எங்களால் விசாரிக்க முடியும் இல்லாவிட்டால் விசாரிக்க இயலாது. இது எங்களின் கைகளில் இல்லை " எனத் தெரிவித்தார்.
இதனால் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று தெளிவாகிறது.இதற்கிடையே ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் சிபிஐ, மற்றும் அமலாக்கப்பிரிவு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளன. அதாவது ப.சிதம்பரத்தின் ஜாமீன் குறித்து எந்தவிதமான உத்தரவு பிறக்கும் முன் தங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்துள்ளன.
இதனால், ப.சிதம்பரம் முன்ஜாமீன் பெறுவதில் மீண்டும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு செக் வைத்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளன என்று இந்துதமிழ்திசை நாளிதழ் ஒப்பாரி வைக்கிறது.  அப்படியானால் .......?


தினசரி தள ஓனருக்கு இம்புட்டு நக்கல் ஆவாது! 

ஒரே ஒருதடவை ஜாமீன் கிடைக்காதுன்னு தெரிஞ்சதுலேயே இம்புட்டு பயம் ஓட்டமா? இல்லாத கான்ஸ்பிரசி தியரி எல்லாம் ஒவ்வொண்ணா வெளியே வருதே!  #சால்வைஅழகர் 
காமெடியை ரசித்தீர்களா? கொஞ்சம் யோசித்தீர்களா? 
மீண்டும் சந்திப்போம்.    

Wednesday, July 10, 2019

கரு நாடகம் To தமிழ்நாடு! #அரசியல்காமெடி இன்று!

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் நாளொரு திருப்பம் பொழுதொரு மறுப்புமாக ஜவ்வாக இழுத்துக் கொண்டே போவது என்று காங்கிரஸ் கட்சி சபாநாயகரை வைத்து தள்ளிப்போடும் முயற்சியில் இறங்கியிருப்பதும், ஜனநாயகத்தைக் காப்போம் என்று எவருமே கூவல், மாநாடு நடத்தாமல் இருப்பதும் இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி கூட்டிக் கொண்டிருக்கும் ஏழரை. காங்கிரஸ் உடைத்தால் வெறும் மண்குடம் என்று அலட்சியமாகப் போவதும் கண்ணை மூடிக்கொண்டு #GoBackModi என்று கூவுவதும் நல்லதற்கல்ல! 


பதவி, அதிகாரம், வருமானம் இவற்றிலேயே குறியாக இருக்கும் அரசியல்வியாதி, அதிலும் காங்கிரஸ்வியாதி, சட்ட சபை மாண்புகளையோ அரசியல் சாசனத்தையோ கொஞ்சம் கூட மதிப்பதில்லை என்பதை சமீபகால நிகழ்வுகள் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றன. சுதாகர் என்கிற காங்கிரஸ் அதிருப்தி MLA சட்டசபை வளாகத்துக்குள்ளேயே அதுவும் ஏராளமான போலீசார் முன்னாலேயே காங்கிரஸ் குண்டர்களால் வளைக்கப்பட்டு ஒரு அறைக்குள் பூட்டிவைக்கப் படுவதையும், மீடியாக்கள் படமெடுப்பதைத் தடுக்க முயல்வதையும் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பில் காட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது ஆளுநர் தலையிட்டபிறகே சுதாகர் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.  அதனால் என்ன? வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் கைகளில் ஜனநாயகம் சிக்கிக் கொண்டு படாத பாடு படுவதை யார் கேள்வி கேட்க முடியும்?


மும்பையில் (பிஜேபியின் பாதுகாப்பில் இருக்கிற) அதிருப்தி MLA க்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான முடிவை எதிர்த்து தாக்கல் செய்திருக்கிற மனு உச்ச  நீதிமன்றத்தில் நாளை அனேகமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். 


முன்பே இந்தப்பக்கங்களில் சொன்னபடி ராகுல் காண்டி இன்று அமேதி தொகுதிக்கு விஜயம் செய்திருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பின்னால் தொகுதிக்கு வந்து ஜனங்களைப் பார்க்க வேண்டுமென்று இந்திரா வாரிசுக்குத் தோன்றியதே மிகப் பெரிய அதிசயம்.  ராகுல் காண்டி  அமேதிக்குப் போனதும் கட்சி ஊழியர்களைச் சந்தித்ததுமான நாடகத்தை அவுட்லுக் தளச் செய்தி இப்படிச் சொல்கிறது. 

The meeting with party workers, including booth presidents from five assembly segments -- Salon, Amethi, Gauriganj, Jagdishpur and Tiloi - lasted barely 50 minutes.Gandhi then left for two villages in Chhatoh block on the way to Lucknow, from where he flew back to Delhi. 
On reaching Amethi, the Congress leader first visited the Gauriganj house of his party's Tiloi assembly in-charge Mata Prasad Vaish to offer condolences over the death of a relative on June 25 என்று செய்தியை வாசித்ததும் தாங்கமுடியாத ஆச்சரியம்! இவ்வளவு கேவலப்பட்டபிறகும் கூட இந்திரா வாரிசுகளுக்கு டில்லி பாதுஷாக்கள் என்ற மிதப்பு போகவில்லை போல!


இது தமிழக காமெடி! தலீவா! எங்கே போறே? சட்டசபைக்கு! என்னா பண்ணுவே? வெளிநடப்புச் செய்வேன்!  காரணமென்ன? ச்சும்மா லுலுலாயிக்கு!
மீண்டும் சந்திப்போம்.  
        

Wednesday, July 3, 2019

காங்கிரஸ் ராஜினாமா தமாஷா! முதல்பாகம் முடிந்தது அடுத்தது எப்போ?

நீங்கள் ஒரு நிறுவனத்தில் தலைவராக இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு ஞானோதயம் வந்து நிறுவனத்தின் தோல்விக்கு நானே காரணம் என்று ராஜினாமா செய்கிறீர்கள் என்றால் அந்த நிறுவனம் என்ன செய்யும்? சொரணையுள்ள நிறுவனமாக இருந்தால், என்ன நடக்கும்? ஒரு தாட்சணியத்துக்காக ராஜினாமா முடிவு உறுதிதானா அல்லது முடிவை மாற்றிக்கொள்கிறீர்களா என்று ஒரு வாய்ப்பு தரும்.  முறுக்கிக் கொண்டேபோனால் போய்வா மகனே என்று அனுப்பிவைத்துவிட்டு அடுத்த தலைவர், அடுத்தடுத்த வேலைகள் என்று போய்க்கொண்டே இருக்குமா இல்லையா? 

  
இதுவே சோனியா மற்றும் வாரிசுகள் நடத்தும் காங்கிரஸ்  கம்பெனி என்றால் என்னென்ன நடக்கும் என்பதை ஒருமாத காலத்துக்கும் மேலாக நடக்கும் தமாஷா காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  முதலாளியே ராஜினாமா நாடகம் நடத்தி போய்வருவேன் சபையோரே போய்வருவேன் நான் என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்தால், அடிமைகள் கூட்டம் பதிலுக்குப் போகாதே போகாதே என்தலைவா என்று கண்ணீர் விடத்தான் செய்யும். ஆடியன்சுக்கே அலுப்பு வந்து கல்லெறிகிற நேரமும் வந்து விடுமென்ற பயம் வந்துவிட்டதோ என்னவோ ராஜினாமா நாடகத்தின் முதல் பாகம் இன்றைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. 

அந்தநாளைய காமராஜர் பிளான் போல 
நினைத்துக்கொண்டு ராகுல் செய்தால் 
சரிவருமா? இது 2019! 1963 அல்ல! 
ராஜ்தீப் சர்தேசாய் சரியாத்தான் 
சொன்னாராம்! கேட்டீங்களா?
“It is an honour for me to serve the Congress Party, whose values and ideals have served as the lifeblood of our beautiful nation. I owe the country and my organisation a debt of tremendous gratitude and love,” Rahul tweeted along with the four-page letter. He had earlier told news agency ANI that he was “no longer the party president” and the Congress Working Committee (CWC) must soon decide on his replacement.  என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். ஆக ராகுல் காண்டி தான் இனிமேல் காங்கிரஸ் தலைவர் இல்லை என்று இன்றைக்கும் சொல்லிவிட்டதால் முதல்பாகம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது  90 வயசு தாண்டின மோதிலால் வோரா  இடைக்காலத்தலைவராகலாம் என்ற தகவலுடன்!
சின்ன முதலாளி ராகுல் பிடிவாதமாக இருக்கிறார். பெரிய முதலாளி சோனியா எப்படி சமாளிக்கப்போகிறார், முடிவு செய்யப்போகிறார் என்பதில் இருந்து அடுத்தபாகம் தொடங்கி ஆகவேண்டும் இல்லையா? ஒரு மெகா சீரியல் போல இந்த தமாஷா தொடர்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாகவே இருக்கிறது!  
மீண்டும் சந்திப்போம்.
     

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)