கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் நாளொரு திருப்பம் பொழுதொரு மறுப்புமாக ஜவ்வாக இழுத்துக் கொண்டே போவது என்று காங்கிரஸ் கட்சி சபாநாயகரை வைத்து தள்ளிப்போடும் முயற்சியில் இறங்கியிருப்பதும், ஜனநாயகத்தைக் காப்போம் என்று எவருமே கூவல், மாநாடு நடத்தாமல் இருப்பதும் இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி கூட்டிக் கொண்டிருக்கும் ஏழரை. காங்கிரஸ் உடைத்தால் வெறும் மண்குடம் என்று அலட்சியமாகப் போவதும் கண்ணை மூடிக்கொண்டு #GoBackModi என்று கூவுவதும் நல்லதற்கல்ல!
பதவி, அதிகாரம், வருமானம் இவற்றிலேயே குறியாக இருக்கும் அரசியல்வியாதி, அதிலும் காங்கிரஸ்வியாதி, சட்ட சபை மாண்புகளையோ அரசியல் சாசனத்தையோ கொஞ்சம் கூட மதிப்பதில்லை என்பதை சமீபகால நிகழ்வுகள் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றன. சுதாகர் என்கிற காங்கிரஸ் அதிருப்தி MLA சட்டசபை வளாகத்துக்குள்ளேயே அதுவும் ஏராளமான போலீசார் முன்னாலேயே காங்கிரஸ் குண்டர்களால் வளைக்கப்பட்டு ஒரு அறைக்குள் பூட்டிவைக்கப் படுவதையும், மீடியாக்கள் படமெடுப்பதைத் தடுக்க முயல்வதையும் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பில் காட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது ஆளுநர் தலையிட்டபிறகே சுதாகர் விடுவிக்கப் பட்டிருக்கிறார். அதனால் என்ன? வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் கைகளில் ஜனநாயகம் சிக்கிக் கொண்டு படாத பாடு படுவதை யார் கேள்வி கேட்க முடியும்?
மும்பையில் (பிஜேபியின் பாதுகாப்பில் இருக்கிற) அதிருப்தி MLA க்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான முடிவை எதிர்த்து தாக்கல் செய்திருக்கிற மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை அனேகமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்.
முன்பே இந்தப்பக்கங்களில் சொன்னபடி ராகுல் காண்டி இன்று அமேதி தொகுதிக்கு விஜயம் செய்திருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பின்னால் தொகுதிக்கு வந்து ஜனங்களைப் பார்க்க வேண்டுமென்று இந்திரா வாரிசுக்குத் தோன்றியதே மிகப் பெரிய அதிசயம். ராகுல் காண்டி அமேதிக்குப் போனதும் கட்சி ஊழியர்களைச் சந்தித்ததுமான நாடகத்தை அவுட்லுக் தளச் செய்தி இப்படிச் சொல்கிறது.
The meeting with party workers, including booth presidents from five assembly segments -- Salon, Amethi, Gauriganj, Jagdishpur and Tiloi - lasted barely 50 minutes.Gandhi then left for two villages in Chhatoh block on the way to Lucknow, from where he flew back to Delhi.
On reaching Amethi, the Congress leader first visited the Gauriganj house of his party's Tiloi assembly in-charge Mata Prasad Vaish to offer condolences over the death of a relative on June 25 என்று செய்தியை வாசித்ததும் தாங்கமுடியாத ஆச்சரியம்! இவ்வளவு கேவலப்பட்டபிறகும் கூட இந்திரா வாரிசுகளுக்கு டில்லி பாதுஷாக்கள் என்ற மிதப்பு போகவில்லை போல!
இது தமிழக காமெடி! தலீவா! எங்கே போறே? சட்டசபைக்கு! என்னா பண்ணுவே? வெளிநடப்புச் செய்வேன்! காரணமென்ன? ச்சும்மா லுலுலாயிக்கு!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment