என்னமோ பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எல்லாம் வழக்கம் போல கடுமையாக விமரிசித்தார்கள் என்பதோடு நம்முடைய கவனமும் அக்கறையும் முடிந்து போய்விடுகிறதா? என்னவென்று புரிந்துகொள்ள ஏதாவது முயற்சி செய்திருக்கிறோமா? அப்படி முயற்சி செய்ய ஆசைப்படுகிற ஒருசிலருக்காகவாவது இதைப் பகிர்ந்தே ஆக வேண்டும் இல்லையா?
இந்த வீடியோ 42 நிமிடங்கள் தான்! நிதியமைச்சர் உள்ளிட்டு பலரும் பட்ஜெட்டைப்பற்றிய பல விஷயங்களை எடுத்துச் சொன்ன வீடியோக்கள் யூட்யூப் தளத்திலேயே நிறைய இருக்கின்றன.
அதென்ன காஷ்மீருக்கு மட்டும் ஒரு விசேஷ அந்தஸ்து? 72 வருடங்களுக்குப் பின்னாலும் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுத்து இந்திய மக்கள் வரிப்பணத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து, அப்புறமும் அங்கே என்ன நடக்கிறது? அதெல்லாம் என்ன ஆனது? ஒவ்வொரு இந்தியனும் காஷ்மீரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. அதற்கு உதவியாக இந்த 9 நிமிடச் செய்தியைப் பார்த்து விடுங்கள்.
கொஞ்ச மூணுமாசப் பழசுதான்! ஆனால் இன்றைக்குத்தானே என் கண்ணில் பட்டது, கொஞ்சம் சுவாரசியமான பேச்சு! 39 நிமிடம் தான், தவற விடாமல் பார்க்கும்படி, வேண்டுகிறேன். இதன் அடுத்த பகுதி வீடியோ உடனடியாகக் கிடைக்கவில்லை. படித்ததில் பிடித்தது எவையெவை என்று கலியமூர்த்தி பேசுகிற இந்த வீடியோ 26 நிமிடங்கள் தான்!
இன்றைக்கு கொஞ்சம் வித்தியாசமான, அதே நேரம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக! வீடியோக்களை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment