Friday, July 19, 2019

இடுக்கண் வருங்கால் நகுக! கடுப்பேத்துறார் பீர்பால்!

ஐமு கூட்டணிக் குழப்பம் ஆட்சிசெய்த (?) அந்தப் பத்து ஆண்டுகளில், அரசியல் செய்திகளைப் பார்த்து மிகவும் நொந்துபோகிற தருணங்களில் எல்லாம் ஒரு பீர்பால் கதையைக் கொஞ்சம் அப்படி இப்படி டிங்கரிங் செய்து இந்த டில்லி பாதுஷாக்களே இப்படித்தான் என்று மனதைத் தேற்றிக் கொள்வதுண்டு! தேர்தல்முறை வந்து பாதுஷாக்களை ஒத்திக்கோ என்று தேர்தலில் தோற்கடித்தாலும், முந்தைய பாதுஷாக்கள் பழைய நினைப்பிலேயே இருக்கிற இன்றைய நிகழ்வுகளை எங்கு போய் டிங்கரிங் செய்வது?


பாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார்! பாதுஷாவுடைய ஆதரவு இல்லாவிட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள். 

க்பருக்கும் அப்படித்தான் தோன்றியது! இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான்! பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள்! எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர் பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது  என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.

ல்லாம் ஒரு செட் அப் தான்! இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்திரம் என்ற உடனேயே கற்பனை, 
புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா?

ரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார். 

"னக்குப் பிரியமானவர்களே! இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன்! எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்!" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார். 


சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! புரிந்து என்ன ஆகப் போகிறது! சபைக்குப் போவதே சம்பாதிப்பதற்குத்தானே!

"ன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால்  உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்." என்று சொன்னார் அக்பர்.

கோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்! பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை. 

பையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.

பீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்ன போதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா! இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்!
க்பருக்குக் கொஞ்சம் ஆச்சரியம்! முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்! என்ன ஆயிற்று இவனுக்கு?

"பீர்பால்! சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து!"

"ப்படியே ஆகட்டும் ஹூசூர்!" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்!
"ங்கே உன் கைகளில் முட்டையை காணோம்?" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர்தானே! இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.

"நான் சேவல் ஹூசூர்! என்னிடம் எப்படி முட்டை இருக்கும்?"

"முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்?" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ?

"ஹூசூர்! இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான்! ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா? அதற்கு சேவல் துணை வேண்டாமா? நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்?" என்றார் பீர்பால்.

ங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.

பாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை! 

கெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார், அது தனக்கும் ரசிச்சு அசலாகப் பொருந்துகிறது    என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

ன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு பீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா! கடுப்பேத்துறார் இந்த பீர்பால் என்று மனதுக்குள் பொருமுவதைத்தவிர......... 
வேறென்ன செய்ய முடியும்!  

இது கர்நாடகக் காங்கிரஸ்  கூத்து! 



  இது உத்தர பிரதேசக் காங்கிரஸ் கூத்து! 
   
கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் யோசித்து வையுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.

   

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)