ஒரு சினிமா நடிகன் சொல்ல முடியாத சொந்தக் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை விமரிசிப்பதை மிகவும் ஆவலோடு தேடிப் படிக்கிறோம்! ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இசுடாலின் மாதிரி ஒரு வாடிக்கையாகிப்போன டெம்பிளேட்டாகப் பேசுகிறாரா அல்லது விஷயத்தைப் புரிந்துகொண்டுன் பேசுகிறாரா என்று எப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்?
கல்வியாளர் வெற்றி விடியல் சீனிவாசன் சூர்யா கிளப்பி விட்டுப் போன கேள்விகளுக்கு பொறுமையாக, சுருக்கமாகவே பேசுவதைக் கேட்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் எப்போது தயாராகப் போகிறோம்?
இங்கே கர்நாடகாவில் 40000 இஸ்லாமியக் குடும்பங்களின் சேமிப்பை கர்நாடக காங்கிரஸ் அரசியல்வாதிகளுடைய துணையோடு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஹலால் செய்யப்பட்ட மோசடியாக சுருட்டிக் கொண்டு துபாய்க்கு ஓடிப்போன மொகமது மன்சூர்கான் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைதுசெய்யப்பட்டு பெங்களூரு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கிறார். எத்தனை கர்நாடக அரசியல்வாதிகளுடைய பெயர்கள் சந்திக்கு வரப்போகிறதோ தெரியாது! ஆனால், இந்த மோசடிமன்னன் கைது விவகாரமோ, மோசடி நடந்தவிதம் எப்படி, ஏமாந்த ஜனங்களுக்கு அவர்களுடைய அசலாவது திரும்பக் கிடைக்குமா என்பதைப் பற்றி காங்கிரசும் கூட்டாளிகளும் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை! சரி, ஜனங்களோ ஊடகங்களோ கொஞ்சமாவது அலட்டிக் கொண்டிருப்பதாக சிறிதளவு அசைவாவது தெரிகிறதா?
SIT arrested Umar Shariff, 42 yrs, running a school by name "Al Basheer" off Bannerughatta Road, Bengaluru. Accused was propagating for IMA & Mansoor Khan for last 5 yrs; sent to judicial custody till July 22
இது ஆடிட்டர் குருமூர்த்தி இந்த ஆண்டு பட்ஜெட் பற்றி பேசியது. ஸ்ருதி டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும்தான்! ஆனால் அவர்கள் எந்த ஒரு நிகழ்வையும் ஆதி அந்தம் இரண்டும் இல்லாமல் Bitடு Bit ஆகப் பதிவேற்றுவதில் என்ன சுகம் காண்கிறார்களோ? எனக்கந்த உண்மை தெரிஞ்சாகணும் ஜாமி!
மீண்டும் சந்திப்போம்.
>>> இந்த மோசடிமன்னன் கைது விவகாரமோ, மோசடி நடந்தவிதம் எப்படி, ஏமாந்த ஜனங்களுக்கு அவர்களுடைய அசலாவது திரும்பக் கிடைக்குமா என்பதைப் பற்றி காங்கிரசும் கூட்டாளிகளும் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை! சரி, ஜனங்களோ ஊடகங்களோ கொஞ்சமாவது அலட்டிக் கொண்டிருப்பதாக சிறிதளவு அசைவாவது தெரிகிறதா?.. <<<
ReplyDeleteஅதெல்லாம் தெரிஞ்சாத்தான் ஜனக்கூட்டம் எப்பவோ முன்னேறியிருக்குமே...
IMA மன்சூர் கான் சின்னத் திருடன்தான்! அவனைவிடப் பெரிய அரசியல் திருடர்களிடம் சிக்கிக் கொண்டு கர்நாடக ஜனங்கள் அவஸ்தையையே ரசிக்கப் பழகிவிட்டார்கள் துரை செல்வராஜூ சார்!
DeleteT20 மாட்சைக் கூட டெஸ்ட் மாட்ச் மாதிரிக் காங்கிரஸ் ஐந்து நாட்களுக்கும் மேல் இழுத்துக் கொண்டேபோவதில் இருந்தே தெரியவில்லையா? :-(((