என்னதான் தினசரி புதுசுபுதுசாக எத்தனையோ வந்து கொண்டே இருந்தாலும் பழசுக்கென்று ஒரு தனிமரியாதை, நேயர் விருப்பம் என்று இருந்து கொண்டே இருக்கிறது வாஸ்தவம் தான்! இல்லையா பின்னே? இந்தப் பாடலைக் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்!
குலேபகாவலி! 1955 இல் வந்த படம். எம்ஜியார், TR ராஜகுமாரி, G வரலட்சுமி ராஜசுலோசனா நடித்து வெளிவந்த படம். இந்தப் பாட்டில் ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்திலே ஏங்குவதைப் பாராயடா என்று உருகுகிறதே ஒரு பின்னணிக் குரல் யாருடையது என்று நினைவுக்கு வருகிறதா? இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் என்றிருந்த நாட்களில் பழைய பாடல்கள், பாடியவர், இசையமைத்தவர் யாரென்ற விவரங்களோடு தினசரி கேட்டுக் கொண்டிருக்கிற வாய்ப்பு இருந்தது. முகம் தெரியாது ஆனால் பெயர் மட்டும் மறந்து போகாமல் இருக்கச்செய்ததில் இலங்கை வானொலிக்கு ஒரு முக்கியப்பங்கு இருந்தது.
ஆணாக பிறந்து எல்லாம் அழகென்று தெரிந்த பின்னும் வீனான ஜம்பம் ஏனடி?. என்று சபாஷ்மீனா (1958) படத்தில் சரோஜாதேவிக்காக ஒரு துள்ளல் இசைப்பாடல் பாடியவரும் கீழே படத்தில் இருப்பவர்தான்! K ஜமுனா ராணி!
கே ஜமுனா ராணி! இன்றைக்கு 81 வயதாகும் ஜமுனா ராணி தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் சேர்த்து 6000 பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது, இன்றைக்கு வெறும் 25, 50 பாடல்கள் பாடியதோடு காணாமல் போய்விடுகிற, பெரும்பாலான நேரங்களில் பெயர்கூட ஞாபகமில்லாமல் போய்விடுகிற இளம்பாடகர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வளவு காலம் தாக்குப்பிடித்த குரல் என்பதும் புரியும்.
குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே! இது 1959 இல் மரகதம் படத்துக்காக சந்திரபாவுவோடு பாடிய கலக்கல் பாடல்.மறந்துவிட முடியுமா?
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதைப் பாடவில்லை என்று பாசமலர் (1961) படத்தில், குழைவாகப் பாடியவர் கே ஜமுனா ராணிதான்!
ஒரு பத்துப் பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு நான் சிரித்தால் தீபாவளி என்று நாயகன் படத்துக்காக MS ராஜேஸ்வரியுடன் 1987 இல் பாடியதற்கு அப்புறம் 1992 இல் அண்ணன் என்னடா தம்பி என்னடா படத்தில் பாடியிருக்கிறார்!
மாமா மாமா மாமா என்று ஆரம்பித்து ஜமுனாராணி பாடிய பாடல்களின் தொகுப்பாக ஒரு இரண்டேகால் மணிநேரம்!
ரசனை உள்ளவர்கள் அனுபவித்துக் கேட்பதற்காக!
மீண்டும் சந்திப்போம்.
I don't know the basics of music. But I feel , there is some similarities of voices between Swarnalatha and Jamunarani. Neeyo Naano Yaar Nilave also one of her good songs. After L.R Eswari's arrival she lost her chances.
ReplyDeleteஸ்வர்ணலதா நல்ல பாடகிதான்! ஆனால் குழந்தைக் குரலில், குழைவான குரலில், husky voice இல் பலவிதமாகவும் பாடுகிற வாய்ப்பு ஸ்வர்ணலதாவுக்கு கிடைக்கவில்லையே! இருவரையும் ஒப்பிடமுடியாதென்றுதான் எனக்குப் படுகிறது. எனக்கும் முறையான சங்கீத ஞானம் கிடையாது.பிடித்திருந்தால் கூடச் சேர்ந்து ஹம் பண்ணுவேன் அவ்வளவுதான்!
DeleteLR ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன், கண்ணதாசன் இருவருக்குமே செல்லம்! ஆனால் இவர்வந்ததால் தான் அவர் வாய்ப்பு குறைந்துபோனது என்று சொல்ல முடியுமா என்ன? நல்ல மெலடி,பாட்டுக்களை, கடைசியாக ஒரு இரண்டேகால் மணிநேர வீடியோவாய்ப் பகிர்ந்திருக்கிறேனே, அதில் கேட்டுவிட்டு அபிப்பிராயம் இதேதானா அல்லது மாற்றம் இருக்கிறதா என்று சொல்லுங்கள்!