Showing posts with label திரை இசை. Show all posts
Showing posts with label திரை இசை. Show all posts

Sunday, March 8, 2020

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் பாட்டு! கொஞ்சம் தகவல்!

ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் இனிதாய்ப் பொழுதைக் கழிக்க திரை இசைப்பாடல்களைத் தவிர வேறென்ன சிறந்த விஷயம் இருக்க முடியும் சொல்லுங்கள்! அதுவும் தெலுகுப் படப்பாடல்கள் ரசிகனையும் கூடச் சேர்ந்தாடச் செய்கிற ரகம்! ரசிகனைத் திருப்திப் படுத்துவது ஒன்று மட்டுமே ஆந்திரத் திரைப்படத் தயாரிப்பாளர்களுடைய தாரக மந்திரமாக இருக்கிறது. காசுபார்க்கிற வழியாகவும்!


படம் ரிலீசாவதற்கு இருவாரங்களுக்கு முன்னால் வெளியான ஆலா வைகுந்தபுரமுலோ படத்தின் ஒரு பாடல் ஷ்ரேயா கோஷல் பாடி வெளியானதில் இன்று வரை பார்வைகள் லட்சங்களில் மட்டுமே!  

  
ஆனால் ஆலா வைகுந்தபுரமுலோ படத்தின் இந்த ஒரு பாடல்  மட்டுமே இரண்டுகோடியே 95 லட்சம் பார்வைகளை யூட்யூப் தளத்தில் பெற்றிருக்கிறது. எஸ். தமன் இசையமைத்த இந்தப்படத்தின் பாடல்கள், படம் ரிலீசாகி இரண்டு மாதங்கள் ஆனபோதிலும்  இன்றும் டாப் 10 இல் இருக்கின்றன என்பதில்  அல்லு அர்ஜுன் நடனம் எப்படி ஜனங்களை ரொம்பவுமே வசீகரம் செய்திருக்கிறது என்பதும் புலப்படுகிறது. அதுதவிர இந்த இளைஞனுக்கு காமெடி மிக நன்றாக வருகிறது! சண்டைக் காட்சிகள் என்றால் இன்னும் பிரமாதமாக!  


ஆனாலும் பொதுவாகவே இந்தியத் திரைப்படங்களில் கதாநாயகி எப்போதுமே ஊறுகாய் மாதிரித்தான்! இந்த இலக்கணம் தெலுகுப்படங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக! கதாநாயகி பூஜா ஹெக்டேவை அழகாகக் காட்டியிருக்கிறார்கள், அவ்வளவு போதாதா!! Box Office இல் படம் செம ஹிட்! 

    
சரிலேறு நீக்கெவ்வரு படமும் மகரசங்கராந்தியை ஒட்டி வெளியான மகேஷ் பாபு படம் தான்! நாயகி ராஷ்மி மந்தனா, திரை இலக்கணப்படி, சரியான லூசு கேரக்டர்தான் என்றாலும் இந்தப்படத்தில் ரொம்பவுமே ஓவர் லூசு! கதாநாயகனை எதற்கெடுத்தாலும் I  am impressed என்று ஓடிப்போய்க் கட்டிக்க கொள்வது தவிர இந்த மாதிரி அயிட்டம் சாங்குக்கும் உபயோகப் படுகிறார். கதாநாயகியின் உபயோகம் அதுமட்டுமே! 

      
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பில் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் படம் ஆந்திரஜனங்களுக்கு ரொம்பவுமே பிடித்துப்போனதில் வெற்றிப்படமாக ஆக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தைக் குறித்து இன்னுமொரு சுவாரசியமான சங்கதியையும் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் படித்தேன். கதாநாயகன் மகேஷ் பாபு சம்பளம் என்று எதுவும் பேசாமல், லாபத்தில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் நடித்திருக்கிறார். தவிர மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவராக முதலீடும் செய்திருக்கிறார். இரண்டு வகையிலுமாக சுமார் 82 கோடி ரூபாய் அவருக்குக் கிடைத்திருப்பதாக! சம்பளம் மட்டும் என்றால் 30 கோடி மட்டுமே கிடைத்திருக்கும். இப்படி ஒரு புதுமையும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது.  

தொடர்புடைய பழைய பதிவு 

நான்கு படங்களுக்கு நாலைந்து வரிகளுக்கு மிகாமல் விமரிசனம்! இங்கே இந்தப்படங்கள் குறித்து சொன்னதில் இப்போதும் மாற்றிக்கொள்ள எதுவுமில்லை! 


மீண்டும் சந்திப்போம். 

Thursday, September 19, 2019

ச்சும்மா ஜாலிக்கு! துள்ள வைக்கும் திரை இசைப் பாடல்கள்!

அரசியல் அக்கப்போர்கள், எழுதுவதற்கு நிறைய இருக்கத் தான் செய்கின்றன! எவ்வளவு எழுதினால்தான் என்ன? மாறி விடப்போகிறதா என்ன? அதனால் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக யூட்யூபில் திரை இசையைத் தேடி! துள்ளல் இசையாக, இன்று  சில பாடல்களைக் கொஞ்சம் பார்க்கலாமா? கேட்கலாமா?


துள்ளல் இசை என்றால் ரன் படத்தில் இந்தப்பாட்டு இல்லாமலா? 12 வருடங்கள் ஆன பிறகும் கூட மாதவனையும், வித்யாசாகர் இசையில் இந்தப்பாடலையும் ரசிக்க முடிகிறதே!   


ஆறு! திரைப் படத்தில் நெஞ்சம் எனும் ஊரினிலே!  இந்தப் பாட்டை திரிஷாவுக்காக, தேவி ஸ்ரீ பிரசாத்தின்  துள்ளும் இசைக்காக மட்டும் திரும்பத் திரும்பப் பார்க்கலாம்! சூர்யாவை இந்த இரண்டுகாரணங்களுக்காக வேண்டுமானால் சகித்துக் கொள்ளலாம்! யூட்யூப் கமெண்டுகளில் இன்றும் கூட விருப்பப் பட்டியலில் இந்தப்பாட்டு இருப்பதைப் பார்க்கலாம்!


7G ரெயின்போ காலனி படத்துக்காக யுவன்சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் பாடல் சோகப்பாட்டு மாதிரி இருந்தாலும் ரிதம், பீட் எல்லாமாகச்  சேர்ந்து கைகொட்டிப் பாட வைக்கிறதா இல்லையா? 


தீபாவளி படத்துக்காக யுவன் சங்கர் ராஜா இசையில், விஜய் ஜேசுதாஸ் பாடிய இந்தப் பாடலில் ஒரு மெல்லிய சோகம் இழையோடினாலும், ஒரு சுகமான துள்ளல் இசை தெரிகிறதா?
    
     
ஈசன்! இயக்குனர் சசிகுமார் சுப்ரமணியபுரம் பட வெற்றிக்குப் பிறகு இரண்டாவது படமாக சொந்தமாகத் தயாரித்த படம். ஒரு வார்த்தை ஒருலட்சம் என்று பள்ளிமாணவர்களுக்கான வினா நிகழ்ச்சியில் பிரபலமான ஜேம்ஸ் வசந்தன் தான் இசையமைப்பாளர்! பாடியவர் தஞ்சை செல்வியாம்! வேறு பாடல்கள் பாடியிருக்கிறாரா? தெரியவில்லை. 


மைனா படத்துக்காக D இமான் இசையில் சோலார் சாயியும் கல்பனா ராகவேந்தரும் பாடிய இந்தப்பாட்டு வேறுரகம்! 

மீண்டும் சந்திப்போம். 

Monday, September 9, 2019

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் பாட்டு! கொஞ்சம் கேள்வி!

சிலவருடங்களுக்கு முன்னால் பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கத்துக்கும் எனக்கும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களில் யார் யார் குரல் எந்தெந்த நடிகர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற விவாதம் நடந்ததுண்டு. கதா நாயகனுக்குப் பாடவென்றே பாடகர்கள் வந்ததெப்போது என்ற கேள்வியும் கூடவே வந்ததுண்டு! 



சீர்காழி கோவிந்தராஜன்! வெண்கலக் குரலோன்! சில படங்களில் கதாநாயகனுக்காகவும் பாடியிருக்கிறார்! கொஞ்சம் கேலி கிண்டல் கலந்து பாடுவதென்றால் சீர்காழிக்கு குஷி வந்துவிடும் போல! 


மனிதன் மாறவில்லை படத்துக்காக ஜெமினி கணேசனுக்கு சீர்காழி பின்னணி பாடியிருப்பது அத்தனை பொருத்தமாகவா இருந்தது? 


அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் மாதிரி டைட்டில் சாங் பாடுவது சீர்காழிக்குக் கொஞ்சம் ராசியாக இருந்ததுண்டு! ஆனால் முத்துராமன் மாதிரி   நடிகர்களுக்குப் பாடியதை என்னவென்று சொல்வது?


சீர்காழி கோவிந்தராஜன் மாதிரியே அந்தநாட்களில் கதா நாயகனுக்கும் பாடியதுண்டு பின்னாட்களில் காமெடியனுக்கும் பாடியதுண்டு! A L ராகவன்! திறமையான பாடகர்!


மனிதன் மாறவில்லை படத்தில் A நாகேஸ்வர ராவுக்காக இந்தப்பாடலை A L ராகவனும், ஜமுனாவுக்காக P சுசீலாவும் பாடிய டூயட் இது!  

         
பதிபக்தி  படத்தில் ஜெமினி கணேசனுக்காகவும் இந்தப் பாடலை  A L ராகவன்சுசீலாவுடன் இணைந்து  பாடி இருக்கிறார். எப்படி இருக்கிறது? 



கல்யாண் குமாருக்காக  A L ராகவன் பாடிய இந்தப்பாடல் அந்த நாட்களில் ரொம்பவுமே பிரபலம்! காதல் தோல்வியில் துவண்ட விடலைப்பையன்களுடைய இதயகீதமாகவே அந்த நாட்களில் இந்தப்பாடல் இருந்தது. நம்ப முடிகிறதா? 


காசே தான் கடவுளடா! இந்தப் படத்துக்காக  A L ராகவன் கோஷ்டியாக பாடிய பாடல் இது. ஆனாலும் தனித்துத் தெரிவதைக் கேட்க முடிகிறதா?

எனக்கென்னவோ சீர்காழியை விட A L ராகவன் தான் சிறந்த பாடகராகத் தோன்றுகிறது! உங்களுக்கு??

மீண்டும் சந்திப்போம்.
   

Monday, August 12, 2019

அலுப்புக்கு மருந்து! கொஞ்சம் பாட்டு! #திரைஇசை

1980 இல் வந்த ஹிந்திப் படம் குர்பானி! படத்தின் கதை ஒன்றும் புரியவில்லை என்றாலும் பாடல்களுக்காகவே அந்த நாட்களில் பார்த்த படம். டைட்டிலுக்கேற்ற  ஒரு கவாலி!



கல்யாண்ஜி  ஆனந்த்ஜி இரட்டையர் இசையமைப்பில் எல்லாப் பாடல்களுமே ஹிட். அதுவும் அப்போது 15 வயதே ஆகியிருந்த பிரிட்டிஷ் குடியுரிமைபெற்ற நஜியா ஹசன் என்கிற இளம் பெண் பாடகி  பாடிய இந்தப்பாடல் ரொம்பவுமே பிரபலம். இது ஒரு பாகிஸ்தானியப்பாடகி இந்தியத்திரைப்படத்துக்காகப் பாடிய முதல்பாட்டு என்று சொல்கிறார்கள்.  

Nazia Hassan (3 April 1965 – 13 August 2000)


இந்தப் படம் இந்த ஒரு பாட்டுக்காகவே தமிழ்நாட்டில் ஓடியதென்றே சொல்லலாம்! லைலா ஓ லைலா!


பாடல்கள் எல்லாம்  ஹிட்டானதினாலேயே குர்பானி வெற்றிப் படமாகவும் ஆனதென்றுதான் சொல்லவேண்டும்! பத்து லட்சத்துக்கும் மேலாக காசெட்டுகள் விற்று பிளாட்டினம் ரிக்கார்ட் சாதனையைப் படைத்த படம் இது. கதையாவது புண்ணாக்காவது!


இப்போது பார்க்கும்போது வினோத் கண்ணா முதல் அம்ஜத் கான் வரை எல்லோரையும் மிக மிக இளமையாகப் பார்ப்பது போலத்தோன்றுவது எனக்கு மட்டும் தானா?

செய்திகளில் அலுத்துக் களைத்ததில் இதமான சங்கீதம்!  

 மீண்டும் சந்திப்போம். 

Wednesday, July 31, 2019

கீதம்! சங்கீதம்! ஒன்றில்லாமல் மற்றொன்றா?

கொக்கரக்கோ என்றொரு படம் 1983 இல் வந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது! இளையராஜா இசையில் SPB, SP ஷைலஜா பாடிய இந்த ஒரு பாட்டுக்காகவே படத்தின் பெயர்  இன்னும் மனதில் நிலைத்திருக்கிறதோ? பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கத்திடம்  கேட்டு இருந்தால் இன்னும் தரமான வீடியோவைத்  தேடிக் கொடுத்து  இருப்பார் என்று டைப் செய்து கொண்டிருக்கும் போதே நல்ல வீடியோவாக ஒன்று கிடைத்து விட்டது! மோகனராகம் என்று சொல்கிறார்கள்! எனக்கு ராகங்களைக் கண்டுபிடிக்கிற அளவு ஞானமில்லை! படத்தில் பாடுவது மகேஷ், இளவரசி என்று மட்டும் தகவல் தெரிகிறது.  


1993 இல் கமல் ஹாசன் கலைஞன் என்ற படத்தில் கொக்கரக்கோ  கோழி என்று பாடி ஆடியதும் இளையராஜா இசையில் தான்! சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் தயாரிப்பாம்! 


என்னுடைய நல்லகாலம், இந்தப் படத்தைப் பார்த்ததாக நினைவில் இல்லை! பாட்டென்னவோ கொஞ்சம் சுமார்தான்!


கொக்கரக் கொக்கரக்கோ! கில்லி  படத்தில் விஜய் , த்ரிஷாவுக்காக உதித் நாராயணன், சுஜாதா பாடியது. இசை அமைப்பாளர் வித்யா சாகர் நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.   


D இமான் இசையில் சிவகார்த்திகேயன் ரஜினிமுருகன் படத்துக்காக கொக்கரக்கோ கோழி கூவ என்று ஆடிப்பாடி அசத்துகிறார். இசை பட்டையைக் கிளப்புகிறது என்பது கேட்கும்போதே யாரும் சொல்லாமலேயே புரியக் கூடியது தான்!


கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! என்று ஜிக்கி ஆரம்பிக்க. TMS தன்  கணீர்க் குரலில் தொடர்கிற இந்தப் பாட்டு இடம் பெற்றபடம்  பதிபக்தி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் இது.

மீண்டும் சந்திப்போம்.
           

Sunday, July 14, 2019

ச்சும்மா ஜாலிக்கு! திரை இசைப் பாடல்கள்!

என்னதான் தினசரி புதுசுபுதுசாக எத்தனையோ வந்து கொண்டே இருந்தாலும் பழசுக்கென்று ஒரு தனிமரியாதை, நேயர் விருப்பம் என்று இருந்து கொண்டே இருக்கிறது வாஸ்தவம் தான்! இல்லையா பின்னே? இந்தப் பாடலைக் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்! 

 

குலேபகாவலி! 1955 இல் வந்த படம். எம்ஜியார், TR ராஜகுமாரி, G வரலட்சுமி ராஜசுலோசனா நடித்து வெளிவந்த  படம். இந்தப் பாட்டில்  ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்திலே ஏங்குவதைப் பாராயடா என்று உருகுகிறதே ஒரு பின்னணிக் குரல் யாருடையது என்று நினைவுக்கு வருகிறதா? இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் என்றிருந்த நாட்களில் பழைய பாடல்கள், பாடியவர், இசையமைத்தவர்  யாரென்ற விவரங்களோடு தினசரி கேட்டுக் கொண்டிருக்கிற வாய்ப்பு இருந்தது. முகம் தெரியாது ஆனால் பெயர் மட்டும் மறந்து போகாமல் இருக்கச்செய்ததில் இலங்கை வானொலிக்கு ஒரு முக்கியப்பங்கு இருந்தது.


ஆணாக பிறந்து எல்லாம் அழகென்று தெரிந்த பின்னும் வீனான ஜம்பம் ஏனடி?. என்று சபாஷ்மீனா (1958) படத்தில் சரோஜாதேவிக்காக ஒரு துள்ளல் இசைப்பாடல் பாடியவரும்  கீழே படத்தில் இருப்பவர்தான்! K ஜமுனா ராணி!  


கே ஜமுனா ராணி! இன்றைக்கு 81 வயதாகும் ஜமுனா ராணி தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் சேர்த்து 6000 பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது, இன்றைக்கு வெறும் 25, 50 பாடல்கள் பாடியதோடு காணாமல் போய்விடுகிற, பெரும்பாலான நேரங்களில் பெயர்கூட ஞாபகமில்லாமல் போய்விடுகிற இளம்பாடகர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வளவு காலம் தாக்குப்பிடித்த  குரல் என்பதும்  புரியும். 


குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே! இது 1959 இல் மரகதம்  படத்துக்காக சந்திரபாவுவோடு  பாடிய கலக்கல் பாடல்.மறந்துவிட முடியுமா? 


பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதைப் பாடவில்லை என்று பாசமலர் (1961) படத்தில், குழைவாகப் பாடியவர்  கே ஜமுனா ராணிதான்!  


ஒரு பத்துப் பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு நான் சிரித்தால் தீபாவளி என்று நாயகன் படத்துக்காக MS ராஜேஸ்வரியுடன் 1987 இல்  பாடியதற்கு அப்புறம் 1992 இல் அண்ணன் என்னடா தம்பி  என்னடா படத்தில் பாடியிருக்கிறார்!


மாமா மாமா மாமா என்று ஆரம்பித்து ஜமுனாராணி பாடிய பாடல்களின் தொகுப்பாக ஒரு இரண்டேகால் மணிநேரம்!

ரசனை உள்ளவர்கள் அனுபவித்துக்  கேட்பதற்காக!  

மீண்டும் சந்திப்போம்.

Thursday, July 11, 2019

அரசியல் போரடித்தால் என்ன? கொஞ்சம் திரை இசை போதுமே!

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தான் ஒரு பழம் தின்று கொட்டைபோட்ட காங்கிரஸ்காரர் என்று நிருபர்கள் சந்திப்பில் நிரூபித்திருக்கிறார். இன்றோ நாளையோ ஒன்றும் பெரிதாக நடக்கபோவதற்கான அறிகுறிகள் இல்லை. அதனால் என்ன? சில அருமையான திரைப்பாடல்களில் இன்றைய பதிவை ரசிக்கலாமே!

    
மாலையில் மலர் சோலையில் என்று PB ஸ்ரீனிவாஸ் கொஞ்சும் குரலில் ஆரம்பிக்கிற இந்தப் படம் அடுத்த வீட்டுப்பெண் 1960 இல் வெளிவந்தது. வேதாந்தம் ராகவையா இயக்கத்தில், அஞ்சலி தேவி சொந்தத்தயாரிப்பில் வந்தபடம். அவருடைய கணவர் P ஆதிநாராயண ராவ் தான் இசையமைப்பாளர்   டணால் தங்கவேலுவுக்கு இந்தப்படம் தவிர PB ஸ்ரீனிவாஸ் வேறெந்தப் படத்திலாவது பின்னணி கொடுத்திருக்கிறாரா? கேள்வி  எங்கள்Blog ஸ்ரீராம் மாதிரிப் பாட்டுப்பிரியர்களை engage செய்வதற்காக! இதே படத்தில் இன்னொரு PBS அமுத கானம், கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!

  
அந்த நாட்களில் ஜூபிடர் பிக்சர்ஸ் என்றொரு தயாரிப்பு நிறுவனம்! மிக அருமையான செட், அருமையான திரைக்கதை என்று படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த நிறுவனம். சிலப்பதிகாரம் கண்ணகி கதையையே கொஞ்சம் உல்டா  அடித்து தங்கப்பதுமை என்றொரு படம். ML வசந்த குமாரி சூலமங்கலம் ராஜலட்சுமி இருவரும் பாட TR ராஜகுமாரி நடனத்துடன், வருகிறாள் உன்னைத்தேடி! SA சாமி இயக்கத்தில் 1959 இல் வந்த படம். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.  


பதி பக்தி! பீம்சிங் இயக்கத்தில் 1958 இல் வந்த வெற்றிப்படம். இந்தப் படத்தின் க்ளைமேக்சுக்கு கொஞ்சம் முன்னால் சிவாஜி கணேசன் மழையில் உருண்டு புரண்டு நாலைந்து பக்க வசனம் பேசுவதை இப்போது நினைத்தால் கூட செம அலெர்ஜி! இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி TMS மற்றும் சந்திரபாபு  குரல்களில் ஒரு அருமையான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டு 

  
நீலமலைத்திருடன் என்றொரு படம். இதை தேவகோட்டை லட்சுமி திரையரங்கில் மிகச்சிறு வயதில் பார்த்த ஞாபகம். அனேகமாக 2nd run ஆக இருக்கலாம்!  


1957 இல் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில்  MA திருமுகம் இயக்கத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்து வந்த படம். சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா என்று கணீர்க் குரலில் பாடுவது மதுரைக்கார TMS தான்! இசை கே வி மஹாதேவன். 

பாடல்களைக் கேட்டீர்களா? பிடித்திருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.   
           

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)