கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தான் ஒரு பழம் தின்று கொட்டைபோட்ட காங்கிரஸ்காரர் என்று நிருபர்கள் சந்திப்பில் நிரூபித்திருக்கிறார். இன்றோ நாளையோ ஒன்றும் பெரிதாக நடக்கபோவதற்கான அறிகுறிகள் இல்லை. அதனால் என்ன? சில அருமையான திரைப்பாடல்களில் இன்றைய பதிவை ரசிக்கலாமே!
1957 இல் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில் MA திருமுகம் இயக்கத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்து வந்த படம். சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா என்று கணீர்க் குரலில் பாடுவது மதுரைக்கார TMS தான்! இசை கே வி மஹாதேவன்.
மாலையில் மலர் சோலையில் என்று PB ஸ்ரீனிவாஸ் கொஞ்சும் குரலில் ஆரம்பிக்கிற இந்தப் படம் அடுத்த வீட்டுப்பெண் 1960 இல் வெளிவந்தது. வேதாந்தம் ராகவையா இயக்கத்தில், அஞ்சலி தேவி சொந்தத்தயாரிப்பில் வந்தபடம். அவருடைய கணவர் P ஆதிநாராயண ராவ் தான் இசையமைப்பாளர் டணால் தங்கவேலுவுக்கு இந்தப்படம் தவிர PB ஸ்ரீனிவாஸ் வேறெந்தப் படத்திலாவது பின்னணி கொடுத்திருக்கிறாரா? கேள்வி எங்கள்Blog ஸ்ரீராம் மாதிரிப் பாட்டுப்பிரியர்களை engage செய்வதற்காக! இதே படத்தில் இன்னொரு PBS அமுத கானம், கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!
அந்த நாட்களில் ஜூபிடர் பிக்சர்ஸ் என்றொரு தயாரிப்பு நிறுவனம்! மிக அருமையான செட், அருமையான திரைக்கதை என்று படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த நிறுவனம். சிலப்பதிகாரம் கண்ணகி கதையையே கொஞ்சம் உல்டா அடித்து தங்கப்பதுமை என்றொரு படம். ML வசந்த குமாரி சூலமங்கலம் ராஜலட்சுமி இருவரும் பாட TR ராஜகுமாரி நடனத்துடன், வருகிறாள் உன்னைத்தேடி! SA சாமி இயக்கத்தில் 1959 இல் வந்த படம். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
பதி பக்தி! பீம்சிங் இயக்கத்தில் 1958 இல் வந்த வெற்றிப்படம். இந்தப் படத்தின் க்ளைமேக்சுக்கு கொஞ்சம் முன்னால் சிவாஜி கணேசன் மழையில் உருண்டு புரண்டு நாலைந்து பக்க வசனம் பேசுவதை இப்போது நினைத்தால் கூட செம அலெர்ஜி! இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி TMS மற்றும் சந்திரபாபு குரல்களில் ஒரு அருமையான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டு
நீலமலைத்திருடன் என்றொரு படம். இதை தேவகோட்டை லட்சுமி திரையரங்கில் மிகச்சிறு வயதில் பார்த்த ஞாபகம். அனேகமாக 2nd run ஆக இருக்கலாம்!
1957 இல் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில் MA திருமுகம் இயக்கத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்து வந்த படம். சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா என்று கணீர்க் குரலில் பாடுவது மதுரைக்கார TMS தான்! இசை கே வி மஹாதேவன்.
பாடல்களைக் கேட்டீர்களா? பிடித்திருக்கிறதா?
மீண்டும் சந்திப்போம்.