Showing posts with label ராஜமுத்திரை. Show all posts
Showing posts with label ராஜமுத்திரை. Show all posts

Monday, January 14, 2019

எது சமூகநீதி! தொடரும் விவாதங்கள்

ராஜமுத்திரை புதினம், V P சிங், என்று கோடிகாட்டி விட்டுப் போனதில் எங்கள்blog  ஸ்ரீராம் தவிர வேறு யாராவது கவனித்தீர்களா? குறைந்தபட்சம் யாரந்த V P சிங் என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? பதிவை வாசித்தவர்கள் கொஞ்சம் தான்! ஆனால் அந்தக் கொஞ்சத்திலும் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதைச் சொல்லாமலே கடந்து விடுகிறவர்கள் தான் மெஜாரிடி!

புத்தகங்கள், வாசிப்பு என்று பேசுவதற்காகவே தொடங்கிய இந்தப்பக்கங்களில் திரைப்படங்கள், வெப்  சீரீஸ் என்று கூடப் பேசி இருக்கிறோமில்லையா!


ரங்கராஜ் பாண்டே இந்த காணொளியில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேறிய பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கும் 10% இட ஒதுக்கீடு மசோதாவைப் பற்றிய தனது கண்ணோட்டத்தைப் பதிவு செய்திருக்கிறார். இதில் பாண்டே சொல்ல விட்டுப் போன சங்கதிகள் நிறைய! அங்கே தான் V P சிங் மீண்டும் கல்லறையில் இருந்து கிளம்புகிறார்.  


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜன் குழப்புவதாக சொல்வது சரியல்ல. V P சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்துவதாக அறிவித்த போதே அதையும் ஏற்றுக் கொண்டு, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதையும் ஆதரித்து, இரட்டைக் குதிரைகள் மீது அங்கொரு கால் இங்கொரு கால் வைத்துச் சவாரி செய்வது இப்போதைய புது நிலை அல்ல.    

V P சிங் என்கிற விஸ்வநாத் பிரதாப் சிங்! ராஜீவ் காந்தி பிரதமராக 1984 இல் பொறுப்பேற்ற போது அவருடைய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர். சிலபல காரணங்களால் 1987 இல் பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்டார்  அதே ஆண்டில் ஆயுதக் கொள்முதல் விவகாரங்களைக் குறித்துக் கேள்வியெழுப்பி  காங்கிரசை விட்டு வெளியேறினார். தேசிய முன்னணி என்று ஒரு கூட்டணி அமைத்து, 1989 நவம்பரில் வந்த தேர்தலில் ஆட்சியையும் பிடித்தார். ஒரே சமயத்தில், வலதுசாரிக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த பிஜேபியுடனும் நேரேதிரான இடதுசாரிகளுடனும் கூட்டணி வைத்து, இங்கே திராவிடங்கள் அடிமடியிலேயே கைவைக்கிற அதே அரசியல் சித்துவிளையாட்டை கையில் எடுத்தவர்! 1979 இல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை கையில் எடுத்துக் கொண்டார்    

வாக்குவங்கியைக் குறிவைத்து  என்று அடிக்கடி சொல்கிறார்களே, அதை முதலில் ஆரம்பித்து வைத்த புண்ணியவான் V P சிங்! 

  
V.P.Singh, in his anxiety to stem the rapid growth of the BJP on the one hand, and to consolidate his own caste based vote Banks in the Northern India, picked up a decade old Mandal Commission Report, which was gathering dust all these years, and implemented with immediate effect,the controversial recommendations to include the Other Backward Castes, along with the Scheduled Castes and Scheduled Tribes, and increase the reservation quota in Education and Employment, particularly in the Government and public spheres, from 27% to 49.5%. Expectedly this move triggered massive protest from the students and others all over the country,especially in the North. Reservations, which until then was just an altruistic affirmative action in the social sphere,suddenly became a powerful political tool with Leaders from different castes clamoring for a piece of the reservation pie, and giving rise to a huge new wave of caste politics in the country. 

இது Quora தளத்தில் நாகராஜன் ஸ்ரீனிவாஸ் என்பவர் எழுதியிருந்ததன் ஒரு பகுதி இது.

1990 நவம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பதவியை ராஜினாமா செய்த பிறகு விபி சிங் அரசியலில் தலை தூக்கவே இல்லை! அதனாலென்ன? இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இந்தியாவை இரண்டுபடுத்திவிட்டு 2008 இல் இறந்தும் போனார்.

#EPW தளத்தில் வருவதை அப்படியே மொழி பெயர்த்துப் போடுவது   விவாதங்களில் புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை என்பதன் அடையாளமோ?

உயர் சாதியினர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என திமுக அறிவிக்குமா?- பாமக தலைவர் ஜி.கே.மணி கேள்வி


அதுபோகட்டும்! ராஜமுத்திரை புதினத்தில் வருகிற மத்திய அமைச்சர்! யாரை நினைவு படுத்துகிறார் என்பதை இன்னமுமா கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?


  

Wednesday, January 9, 2019

ராஜமுத்திரை! இது எண்டமூரி வீரேந்திரநாத் முத்திரை!

தேவியர் இல்லம் ஜோதிஜி தன் பக்கங்களில் சாம் பிட்ரோடா பற்றிய செய்திகளை, இன்னொரு பதிவர் தன் பக்கங்களில் ஐந்துபகுதிகளாகப் பகிர்ந்திருந்ததை இங்கே ஒரே பதிவாகப் பகிர்ந்திருந்தார். 1984-ஆம் ஆண்டு சி-டாட், C-DOT (Centre for Development Telematics) என்ற இந்திய அரசின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி தலைமைப் பொறுப்பேற்று வழி நடத்தி ஆறு ஆண்டுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் என்று சாம் பிட்ரோடாவைப் புகழ்கிற பதிவு அது. ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் முழுமையாக நடந்த வளர்ச்சி அது ஒன்று தான்! பாகிஸ்தானின் இளம் பிரதமர் பெனாசிர் புட்டோவுடன் சுமுகமான உறவு, 1988 இல் சீன விஜயம் செய்த இரண்டாவது இந்தியப் பிரதமர்! 

(அதற்கு 34 வருடங்களுக்கு முன்னால் 1954 இல் சீன விஜயம் செய்தவர் தாத்தன் நேரு, இரண்டு ஆண்டுகளிலேயே சீன உறவு கசந்து 1962 இல் போர் என்றானது தனிப்பெரும் கதை)  

ப்படி அண்டைநாடுகளுடன் சுமுகமாக இருக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தும் வேறு குழப்பங்களால் கருகியும் போன பழைய அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வந்ததில் மீண்டும் எண்டமூரி! அவர் எழுதிய ராஜமுத்திரை நாவலில் பூடகமாகச் சொல்லியிருந்த சில சங்கதிகளும் கூடவே சேர்ந்து வந்தன!

ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த V P சிங் செய்த சில உள்ளடி வேலைகள், Bofors பீரங்கிகள் வாங்கியதில் 64 கோடி ரூபாய் கமிஷன் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் lotus என்ற ரகசியக்கணக்கில் போடப்பட்டது எல்லாமாகச் சேர்ந்து எப்படி ராஜீவ் காந்தியை நிலைகுலைய வைத்தது என்பதெல்லாம் பூடகமாகக் கதைக்குள் கொண்டு வருகிற லாவகம், சாமர்த்தியம் எண்டமூரி வீரேந்திரநாத்  ஒருவருக்கே உரித்தானது என்பதை
நாலாவது தூண் கதை விமரிசனத்திலேயே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்!

ராஜீவ் காந்தி தேர்தலில் தோற்றுப்போனபிறகு சமூகநீதிக்காவலர் V P  சிங் பிரதமரானார். Bofors ஊழலைக் குறித்து மகராசன் என்ன செய்தார் என்கிற பழைய செய்தி    விசாரணை என்பதற்குமேல் எந்தத் திக்கில் எந்தக்குட்டிச்சுவற்றில் முட்டி மோதி நிற்கிறது என்பது இன்றுவரை யாருக்குமே தெரியாது!


இங்கே ஒரு மணிநேர தெலுங்கு நேர்காணலுடைய சுட்டி   ராஜமுத்திரை கதை வழக்கம்போல இருவேறு களங்களில் கதாபாத்திரங்கள் எப்படிப் பின்னிப் பிணைந்து மூன்றாவதாகக் காதலில் முடிகிறது என்ற ஒன்லைனர் தான்!

வாகீஸ்வரன்! விசுவாசத்துக்குப் பரிசாக தனக்குக் கிடைத்த ஒரு பழைய (ராஜமுத்திரை) கலைப் பொருள் ஒன்றைத்தவிர மற்றெல்லாவற்றையும் குதிரைப் பந்தயத்தில் தோற்று நிற்கிறவர்! தன்னிடமிருக்கும் ஒரே சொத்தான அந்த ராஜ முத்திரையை நண்பர் ஒருவர் உதவியுடன் ஸ்விஸ் வங்கி லாக்கரில் வைத்து விடுகிறார்! உள்நாட்டில் ஒரு வங்கி லாக்கரை வாடகைக்கு எடுத்து ஒரு கடிதத்தை லாக்கரில் வைத்துப் பூட்டிவைத்து விட்டு வெளியே வருகிற வழியில் ஒரு வாகனவிபத்தில் இறந்தும் போகிறார். தன்னுடைய ஒரே மகள் சந்தியாவை nominee ஆக நியமித்து ஸ்விஸ் வங்கிக்கு எழுதிக் கொடுத்த விவரம், அந்த லாக்கருக்குள் வைத்திருக்கிற விவரம் எதுவுமே மகளுக்குத் தெரியாது.

பலையாக நிற்கும் கதாநாயகி அறிமுகம் இப்படி!
அடுத்தது நாயகன் முறை! வேலை எதுவும் கிடைக்காத இளைஞன் அர்ஜுன் #நமக்குநாமே திட்டப்படி, சிலரோடு கூட்டணி வைத்து சுரங்கம் தோண்டி அதே வங்கியின் பெட்டக அறையைக் கொள்ளை அடிப்பதில், வாகீஸ்வரன் ஸ்விஸ் வங்கிக்கு எழுதிய வாரிசுரிமைக் கடிதம், நாயகன் கைக்கு வந்து சேர்கிறது.

ப்புறம் வில்லன், வில்லனுடைய பரிவாரங்கள் என அறிமுகம் ஆகவேண்டுமே! ராம் பிரசாத் என்றொரு மத்திய அமைச்சர்! பிரதமர் பதவி மீது கண்வைத்துக் காத்திருக்கிறவர்! இவருடைய கையாட்களாக செரியன், ஹரிராம் என்று இருவர்! இதில் செரியன் காவல்துறை அதிகாரி! ஹரிராம் தொழில்முறை ரவுடி! ஸ்விஸ் வங்கியில் இருக்கிற ராஜமுத்திரை பற்றிய  தகவல் எப்படியோ மந்திரிக்குக் கசிய கையாட்கள் இருவரும் அவரவர் வழியில்     ராஜமுத்திரையைத் தேடுகிற சமயம் நிறைய வன்முறைகள்!

ப்படியாக நாயகன், நாயகி, வில்லன் கையாட்கள், வில்லன் என்று வரிசையாகக் களத்தில் ஒன்றிணைக்க வேண்டுமே! நாயகன், நாயகியின் நிராதரவான நிலையைக் கண்டு இரக்கப்பட்டு உதவ முன்வருகிறான்! மந்திரியுடைய மெயின் கையாட்கள் கொல்லப்படுகிறார்கள்! 74 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன ராஜமுத்திரை இன்னொரு அடியாள் கையில் சிக்கி க்ளைமேக்சில் அவனும் ராஜமுத்திரையும் தீயில் கருகிவிட்ட பிறகு..... 
ப்புறமென்ன? வங்கியில் கொள்ளையடித்த நாயகனுக்கு வங்கியிலேய  வேலை கிடைக்கிறது.
ராஜமுத்திரை எப்படிப்போனால் என்ன? நாயகிக்குத் துணை நின்றானல்லவா, காதல் வராமல் போய் விடுமா என்ன?  

தை இப்படியாக முடிகிறது! ஒரு பூவைப் பிய்த்துப் பார்த்தால் எப்படி ஒன்றுமே மிஞ்சாதோ அதேபோல ஒரு கதைக்குள் லாஜிக் ரொம்பப் பார்த்தாலும் ஒன்றும் மிஞ்சாது என்பதையும் மீறி இப்போது படித்த போதும் கூட விறுவிறுப்புக் குறையாமல் ஒரே மூச்சில் படிக்கிற மாதிரித்தான் இருக்கிறது!

அதுதான் எழுத்தாளனுடைய, எழுத்தின் வெற்றி!



                 
       

    

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)