Monday, January 14, 2019

எது சமூகநீதி! தொடரும் விவாதங்கள்

ராஜமுத்திரை புதினம், V P சிங், என்று கோடிகாட்டி விட்டுப் போனதில் எங்கள்blog  ஸ்ரீராம் தவிர வேறு யாராவது கவனித்தீர்களா? குறைந்தபட்சம் யாரந்த V P சிங் என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? பதிவை வாசித்தவர்கள் கொஞ்சம் தான்! ஆனால் அந்தக் கொஞ்சத்திலும் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதைச் சொல்லாமலே கடந்து விடுகிறவர்கள் தான் மெஜாரிடி!

புத்தகங்கள், வாசிப்பு என்று பேசுவதற்காகவே தொடங்கிய இந்தப்பக்கங்களில் திரைப்படங்கள், வெப்  சீரீஸ் என்று கூடப் பேசி இருக்கிறோமில்லையா!


ரங்கராஜ் பாண்டே இந்த காணொளியில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேறிய பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கும் 10% இட ஒதுக்கீடு மசோதாவைப் பற்றிய தனது கண்ணோட்டத்தைப் பதிவு செய்திருக்கிறார். இதில் பாண்டே சொல்ல விட்டுப் போன சங்கதிகள் நிறைய! அங்கே தான் V P சிங் மீண்டும் கல்லறையில் இருந்து கிளம்புகிறார்.  


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜன் குழப்புவதாக சொல்வது சரியல்ல. V P சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்துவதாக அறிவித்த போதே அதையும் ஏற்றுக் கொண்டு, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதையும் ஆதரித்து, இரட்டைக் குதிரைகள் மீது அங்கொரு கால் இங்கொரு கால் வைத்துச் சவாரி செய்வது இப்போதைய புது நிலை அல்ல.    

V P சிங் என்கிற விஸ்வநாத் பிரதாப் சிங்! ராஜீவ் காந்தி பிரதமராக 1984 இல் பொறுப்பேற்ற போது அவருடைய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர். சிலபல காரணங்களால் 1987 இல் பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்டார்  அதே ஆண்டில் ஆயுதக் கொள்முதல் விவகாரங்களைக் குறித்துக் கேள்வியெழுப்பி  காங்கிரசை விட்டு வெளியேறினார். தேசிய முன்னணி என்று ஒரு கூட்டணி அமைத்து, 1989 நவம்பரில் வந்த தேர்தலில் ஆட்சியையும் பிடித்தார். ஒரே சமயத்தில், வலதுசாரிக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த பிஜேபியுடனும் நேரேதிரான இடதுசாரிகளுடனும் கூட்டணி வைத்து, இங்கே திராவிடங்கள் அடிமடியிலேயே கைவைக்கிற அதே அரசியல் சித்துவிளையாட்டை கையில் எடுத்தவர்! 1979 இல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை கையில் எடுத்துக் கொண்டார்    

வாக்குவங்கியைக் குறிவைத்து  என்று அடிக்கடி சொல்கிறார்களே, அதை முதலில் ஆரம்பித்து வைத்த புண்ணியவான் V P சிங்! 

  
V.P.Singh, in his anxiety to stem the rapid growth of the BJP on the one hand, and to consolidate his own caste based vote Banks in the Northern India, picked up a decade old Mandal Commission Report, which was gathering dust all these years, and implemented with immediate effect,the controversial recommendations to include the Other Backward Castes, along with the Scheduled Castes and Scheduled Tribes, and increase the reservation quota in Education and Employment, particularly in the Government and public spheres, from 27% to 49.5%. Expectedly this move triggered massive protest from the students and others all over the country,especially in the North. Reservations, which until then was just an altruistic affirmative action in the social sphere,suddenly became a powerful political tool with Leaders from different castes clamoring for a piece of the reservation pie, and giving rise to a huge new wave of caste politics in the country. 

இது Quora தளத்தில் நாகராஜன் ஸ்ரீனிவாஸ் என்பவர் எழுதியிருந்ததன் ஒரு பகுதி இது.

1990 நவம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பதவியை ராஜினாமா செய்த பிறகு விபி சிங் அரசியலில் தலை தூக்கவே இல்லை! அதனாலென்ன? இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இந்தியாவை இரண்டுபடுத்திவிட்டு 2008 இல் இறந்தும் போனார்.

#EPW தளத்தில் வருவதை அப்படியே மொழி பெயர்த்துப் போடுவது   விவாதங்களில் புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை என்பதன் அடையாளமோ?

உயர் சாதியினர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என திமுக அறிவிக்குமா?- பாமக தலைவர் ஜி.கே.மணி கேள்வி


அதுபோகட்டும்! ராஜமுத்திரை புதினத்தில் வருகிற மத்திய அமைச்சர்! யாரை நினைவு படுத்துகிறார் என்பதை இன்னமுமா கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?


  

4 comments:

  1. ரங்கராஜன் கனிமொழி பேசியதும் குழம்பிவிட்டார் போல! ராஜமுத்திரை புதிரைத்தான் நீங்களே சொல்லி விட்டீர்களே... ரங்கராஜ் பாண்டே இது தேவையா என்று கேட்கிறார். மாற்றுக்கருத்து இருக்கிறதாம்... மாற்றுவழி என்ன என்று யாராலும் சொல்ல முடியாது! இந்த ஒதுக்கீட்டுக்கே கூட சொல்லப்படுகிற கண்டிஷன்ஸ் சிரமமான ஒன்றுதான்.

    ReplyDelete
    Replies
    1. டிகே ரங்கராஜனை கனிமொழி குழப்பவில்லை. ஒன்பதாம் தேதி சென்னை விமான நிலையத்தில் கனிமொழியும் டிகே ரங்கராஜனும் கொடுத்த பேட்டி யூட்யூபிலேயே கிடைக்கும். மார்க்சிஸ்டுகள் மண்டல் அறிக்கையையும் பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டையும் ஒரே நேரத்தில் ஆதரித்த பழையகதை இப்போது திமுக கூட்டணியில் கிடைக்கும் ஒன்றிரண்டு சீட்டுக்காக, மழுப்பலாக வெளிப்படுகிறது.

      தேர்தல் அரசியல் லட்சியவாதிகளையும் எப்படிச் சீரழிக்கும் என்பதை 1962 இற்கும் இப்போதைய நிலைமைக்கும் இடைப்பட்ட கம்யூனிஸ்டுகளின் வரலாறே சொல்லும்! கருணாநிதியிடம் நடையாய் நடந்து ஒருசீட் இரண்டு சீட் improved பேரத்தை நடத்திய தோழர் என் வரதராஜன் இப்போது நினைவுக்கு வருகிறார்.

      Delete
  2. வாக்குவங்கி அரசியல் என்று வந்துவிட்டாலே அங்கு நியாயத்துக்கு இடமேது?

    பேசாமல் அந்த அந்த சாதி வாரி சதவிகிதத்துக்கு இணையாக அரசு வேலை, கல்வி வாய்ப்பு, மற்றும் அந்த அந்த சாதி சதவிகிதத்துக்கு நிகரான வருமான வரி அரசுக்கு கட்டிவிடவேண்டும் என்று சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை. இந்தியாவுக்கு வருடத்துக்கு 1 லட்சம் கோடி வருமானம் வரணும்னா, அதுல 20,000 கோடி இந்தச் சமூகத்திலிருந்து வரணும், 5,000 கோடி இந்தச் சமூகத்திலிருந்து என்று சதவிகிதம் வாரியாக வரியையும் கலெக்ட் செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. கஞ்சின்னா கலம் குடிப்பேன் வேலைன்னா விழுந்து படுப்பேன் என்று சொல்லக் கேட்டதில்லையா நெல்லைத் தமிழன்? இங்கே கஞ்சின்ற இடத்தில் இட ஒதுக்கீட்டையும் வேலைன்ற இடத்தில் ஒதுக்கீட்டுக்குத் தகுந்த வரி என்பதையும் வைத்துப் பாருங்களேன்!

      ஐடியா ஒர்க் அவுட் ஆவுமா ஆவாதா? அதையும் நீங்களே சொல்லுங்களேன்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)