சேத் கோடின் பதிவுகளைப் பற்றி இந்தப் பக்கங்களில் முன்னமே கொஞ்சம் பேசிவந்திருக்கிறோம்! வால் நீளமாக இருப்பது நல்லது என்று அங்கேயும் தலைமைப் பண்பு! பத்துத் திசைகளிலும்! என்று இந்தப்பக்கங்களிலும் பார்த்திருக்கிறோம்! பிப்ரவரி 27 அன்று அவர் எழுதிய The first piece of tape பகிர்வு சில தொடர் சிந்தனைகளைக் கிளறிவிட்டிருக்கிறது.
மோடியை மாற்று என்ற ஒற்றை அஜெண்டாவோடு, மாநிலக் கட்சிகளோடு, காங்கிரசும், சர்வ தேசியம் பேசுகிற இடதுசாரி அமைப்புகளும் கைகோர்த்துக் கூவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் அதிசயம் ஏதுமே இல்லை! தங்களுடைய இருப்பே கேள்விக்குறி ஆகி விடுமோ என்று பயப்படுகிறவர்கள் கூவும் அவலக்குரல் அது. மாற்று அவசியம்தான்! எதை நம்பி மாற்றுவது? என்ற கேள்விக்கு அவர்களிடம் நேர்மையான பதில் இருக்கிறதா? ஏதாவது சொல்லி இருக்கிறார்களா? இந்தக் கேள்வியை எழுப்பியதில்
இதுவரை ஒரு தெளிவான பதில் எங்கிருந்தும் வரவில்லை!
இப்போது சேத் கோடின் சொன்னதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஏதோ ஒரு தியேட்டரில் சீட் கிழிந்திருக்கிறது. யாரோ சிலர் டேப் போட்டு ஒட்டி இருக்கிறார்கள் என்கிற ஒரு சிறு காட்சியை வைத்து அவர் மாற்றத்துக்குத் தயாராக இல்லாத, முயலாத இயல்பைச் சொல்லிவிட்டு This is how we find ourselves on the road to decay.என்று முடிக்கிறார்!
அரசியலோ வேறு எதுவோ! மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறோமா?
நாங்க (நாம)அப்பாவி ஸ்ரீமான் பொதுஜனம் சார்.. எங்களைக் கேட்டீங்கன்னா..
ReplyDeleteஜீவிFebruary 5, 2019 at 7:22 PM
Deleteமுத்தாய்ப்பு அருமை! அவரவர் கட்டுப்பாட்டுடன் ஊழல் அரசியல்வாதிகளை புறக்கணிக்க முடிவெடுத்தால் சிறு துளிகள் பெரும் வெள்ளமாவது நிச்சயம்!.. மனம் சோர வேண்டும். நடக்க வேண்டிய நல்லவைகள் நடந்தே தீரும்!
இப்படியும் கூட ஸ்ரீமான் பொதுஜனத்திடமிருந்து பதில் வந்திருந்ததை ஞாபகம் வச்சிருக்கேனே ஜீவி சார்1