இந்து தமிழ் திசை நாளிதழை அதன் காமெடி வால்யூவுக்காக மட்டுமே வாசிப்பதாக ஏற்கெனெவே சொல்லியிருந்தேன் இல்லையா? அது சரிதான் என்று இன்றைய செய்திகளில் சில மெய்ப்பிக்கின்றன! ஓவர் சவுண்டு பார்ட்டிகளாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர் குசுபு அம்மையாருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிதாய்க் கிளம்பியிருக்கும் இன்னொரு சவுண்டு பார்ட்டி ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை இந்து தமிழ் திசை சொல்கிற விதமே அலாதி!
அனைத்தும் டெல்லி மேலிடம் ராகுலின் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவிக்கும் முக்கிய நிர்வாகிகள் ஈவிகேஎஸ் பழைய பந்தாவில் செய்த சில காரியங்கள் அவரை ராகுலிடமிருந்து தள்ளிவைத்தது, கடந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றதும் தன்னிச்சையாக பதவியை ராஜினாமா செய்தது, திருநாவுக்கரசர் தலைமை ஏற்றவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு அவர் மாவட்ட தலைவர்களை நியமித்தபோது தனது ஆதரவாளர்களுக்காக மோதியது போன்றவை அவருக்கு எதிராக திரும்பியுள்ளது என்கின்றனர். அதுதான் தற்போது எதிரொலிக்கிறது என்றனர். இதே நிலைதான் குஷ்புவுக்கும் என்கின்றனர். என்னதான் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருந்தாலும் அவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளராக மாறி கோஷ்டி பூசலில் ஈடுபட்டதும், கட்சி அலுவலகத்திற்கு வருவதை நிறுத்தி செயல்பாடுகளை குறைத்துக்கொண்டதும் அவர் இளைய தலைமுறையாக(?!!) இருக்கிறார், கட்டாயம் அவருக்காக சீட்டு கிடைக்கும் என நினைத்த நேரத்தில் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
சிதம்பரத்தின் குடும்ப சொத்தா சிவகங்கை?- சுதர்சன நாச்சியப்பன் போர்க்கொடி என்கிறது இன்னொரு செய்தி!
மக்கள் நலன், மதச்சார்பின்மை, முற்போக்கு இவையெல்லாம் வெறும் வார்த்தை அலங்காரம் மட்டுமே என்று சொல்கிறது இன்றைய தினமலர் கார்டூன்.
வடக்கே தான் வாழ்வு! தி.மு.க., திசை மாறியது ஏன்? வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில், பெரும்பாலான தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு, தனக்கு சாதகமான, எம்.எல்.ஏ.,க் கள் அதிகம் உள்ள, வட மாவட்டங்களில், தி.மு.க., அதிக தொகுதிகளில் களம் இறங்குகிறது என்பது தினமலர் அலசல்!
மே 23 வரப்போகும் ரிசல்ட்டுக்காக இப்போதே (மார்ச் 13, நாகர்கோவில்) கட்டிப் பிடித்து ஒப்பாரி வைக்கிறாரா வைகோ?
மீண்டும் சந்திப்போம்!
அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்... ஸ்டாலின் அவர்கள் குஷ்பூ போட்டியிடுவதை அனுமதிக்க மாட்டார். குஷ்பூவின் வளர்ச்சி, ஸ்டாலினுக்கான ஸ்டார் வேல்யூவைக் குறைத்துவிடும் (குஷ்பூ, அடுத்த வைகோவாக ஆகும்வரை... அதாவது 'தலைவர் ஸ்டாலினை' முதல்வராக்குவதே என் முதல் வேலை என்று தனக்கான ஆதரவுத்தளத்தை இழந்தபிறகு கூறும்வரை)
ReplyDeleteவைகோ, ராகுல்காந்தியைக் கட்டிப்பிடித்த போஸ் - மிக அருமையாக இருக்கு. அரசியலில் எதிரிகள் இல்லை, கொள்கை என்பது சுத்தமாக இல்லை, சுயநலமே பிரதானம் என்பதை இதைவிட அருமையாக யாருமே காட்டிவிடமுடியாது.
இசுடாலின் தலையீடு இருந்ததா இல்லையா என்பது வெறும் ஊகம்! ஆனால் குசுபு தன்னுடைய திமிரான போக்கினாலேயே வாய்ப்பை இழந்திருப்பார் என்று தான் தோன்றுகிறது! இந்த அரசியல் இருக்கிறதே, யார் ஆகக் கூடுதலான கழிசடை என்று பார்ப்பதிலேயே கழிந்துவிடுகிறது! :(((
Deleteவைகோ தேய்ந்துபோன திராவிடம், திமுகவின் பரிதாபமான அடையாளம்.