இங்கே இசுடாலின் பெருசா? ஈபிஎஸ் பெருசா ?ரேஞ்சுக்கு கூட்டணி பேச்சுவார்த்தைகள் திருகல் முறுகலாய் நடந்து கொண்டிருப்பதில் ஆண்ட கட்சி காங்கிரஸ் படும் பாடு என்னவென்று பார்க்க மறக்கலாகுமோ?
இன்றைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர்களோடு போய் முன்னாள் பிரதமர் தேவே கவுடா இல்லத்துக்குப் போய் தொகுதி பங்கீடு குறித்துப் பேசியிருக்கிறார்! 12 தொகுதிகள் கேட்ட தேவே கவுடா இறங்கி வந்து 10 தொகுதிகளாவது வேண்டுமென்று சொல்லி இருக்கிறார்! இப்படி ஒரு செய்தி வரும்போதே, 6 தொகுதிகளுக்கு மேல் இல்லை என்று கர்நாடக காங்கிரஸ் பிடிவாதம் பிடிப்பதாக செய்திகள்!
ஒரே விஷயத்தை இங்கே 4 ஊடகங்கள் எப்படிச் சொல்கின்றன? தேவே கவுடா தனது டிமாண்டைச் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் இன்னமும் இறுதி முடிவைச் சொல்லவில்லை. இதில் ஒரே நல்ல விஷயம், குமாரசாமி சிலநாட்களுக்கு முன்னால் சொன்னது போல, JD(S) கட்சிக்கு 20 சீட் ஜெயிக்கிற அளவுக்கு தொகுதிப் பங்கீடு இல்லை! தேவே கவுடா மீண்டும் பிரதமராகி, தூங்கிவழியும் காட்சிகளைப் பார்க்கும் துர்பாக்கியம் தவிர்க்கப்பட்டிருப்பது தான்!
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வான உமேஷ் ஜாதவ் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அவர் அளித்துள்ளார். ஆனால் ராஜினாமா ஏற்கப் படவில்லை. இன்றைக்கு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா கலபுரகிக்கு வருவதற்கு முன்னால் எடியூரப்பா முன்னிலையில் பிஜேபியில் சேர்ந்திருக்கிறார். குல்பர்கா தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராகக் களமிறக்கப்படக்கூடும் என்ற தகவல் கசிந்திருக்கிறது.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டு வேண்டாம் தனித்தே போட்டி என்று காங்கிரஸ் முடிவாம்!
உத்தர பிரதேசத்தில் கூட்டு சேர ஆட்களோ, கட்சியோ இல்லாமல் தனித்துவிடப்பட்டிருக்கிறது!
மற்ற மாநிலங்களையும் வரிசையாகப் பார்ப்போம்!
காங்கிரஸ் நம்புவது தேர்தலுக்குப் பின்னான பேரங்களை. பா சி போன்ற பணப் பெருச்சாளிகள் இருக்கையில் பேரம் பேசுவது மிக எளிதாக நடக்கும் என நினைக்கிறார்கள் போல! பி ஜே பி க்கு பெரும்பான்மை கிடைக்கக் கூடாது. அது ஒன்றே குறிக்கோள் என நினைக்கிறார்கள் போல!
ReplyDeleteநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
Deleteதெய்வம் ஏதுமில்லை!
கவிஞர் அன்றே பாடிவைத்திருக்கிறார்!