Monday, March 4, 2019

கூட்டணிக் குழப்பங்கள்! பம் பம் பம்! ஆரம்பம்!

சண்டேபோஸ்ட்!இன்னொரு மூணு!   நேற்றைய பதிவை இன்னொரு தரம் வாசித்துவிடுவது நலம்!

இசுடாலின் தந்தையின் இடத்தை நிரப்பப் படாதபாடு படுவதை சமீபத்தைய கூட்டணிக்கணக்குகள் சுட்டிக் காட்டுவதைத் தெளிவாகவே பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் கட்சியின் சீனியர்கள் துரைமுருகன், TR பாலு இவர்கள் ஒருபக்கம், ஆ.ராசா முதலானவர்கள் ஒரு பக்கமுமாக இழுப்பதும் கிச்சன் கேபினெட் (குடும்ப உறவுகள்) வேறுமாக, இசுடாலின் ஒரு தெளிவான முடிவை எடுக்கத் தவறுவதாகப் பார்க்க முடிகிறது.

இதயத்தில் இடம் என்று கருணாநிதி அந்தநாட்களில்  கூட்டாளிகளுக்கு அல்வா கொடுத்தமாதிரி இசுடாலின் அத்தனை சக்திவாய்ந்தவராக இல்லையோ? இதற்கு முக்கியமாக, காங்கிரசுக்கு முந்திக்கொண்டு 10 சீட் கொடுத்ததும் பலவீனத்தின் அடையாளமாகவே கருத வேண்டியிருக்கிறது! ஒரு கணக்கின் படி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக திமுகவுக்கு மிஞ்சுவது வெறும் 20 தொகுதிகள்தான் என்கிறார்கள்! கர்நாடக முதல்வர் குமாரசாமி தைரியமாகச்சொன்னமாதிரி இதைவைத்து துணை பிரதமராகவாவது ஆகிவிட முடியுமா என்ன? 
அதிமுக மட்டும் விதிவிலக்கா? அவர்களும் தான் தடுமாறுகிறார்கள்! பாமகவுக்குக் கொடுத்த விலையை விடக் கொஞ்சம் கூடுதலாகக் கேட்டு பிரேமலதா தரும் அழுத்தம் வெளிப்படையாகவே தெரிகிறது! கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக அதிமுகவுக்கு மிஞ்சுவது வெறும் 19 தொகுதிகள்தான் என்றால், சிட்டிங் எம்பிக்களுக்கு, புதிதாகக் களம் காண விரும்பும் வாரிசுகளுக்கு எப்படிப் பங்கிடுவார்களாம்?

ஒரு சூப்பர் சமாளிஃபிகேஷன் கண்ணில் பட்டதை அப்படியே!     

Haran Prasannaஇடுகையைப் பகிர்ந்துள்ளார்.
50 இடம் கொடுத்து ஜெயிக்க விட்ருக்கலாமே. நமக்கென்ன, அவங்க கட்சி. அவங்க இஷ்டம்.  நாளைக்கு ஸ்டாலின் ரெண்டு சீட் கொடுத்தா அதுக்கும் கட்டுரை எழுத பாய்ண்ட் வெச்சிருப்பாங்க.
M.m. Abdulla
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் தலைவர் கலைஞர் இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா பத்து, பதினோரு இடங்களை வழங்குவார்!
அவர்களுக்கு மட்டுமல்ல..சிறிய இயக்கங்களுக்குக் கூட சீட் குடுப்பார். எரிச்சலாக இருக்கும் எனக்கு!
"ஊருக்கு பத்து பேரு கூட இல்லாத கட்சிக்கெல்லாம் என்னத்துக்கு பத்து சீட்டு? சாதாரண தொண்டனான 25 வயசு பையனான எனக்கே இதெல்லாம் தெரியுதே! ஆனால் இவ்வளவு பெரிய இயக்கத்தின் தலைவராக இருக்கும் இவர் இந்த எதார்த்தம் கூட புரியாமல் தூக்கிக் குடுக்குறாரே!" என்றெல்லாம் நினைத்து கலைஞரை விட எனக்கு அதிக விஷய ஞானம் இருப்பதாய் என்னை நானே பெருமையாகக் கூட நினைத்துக் கொள்வேன்.
2016 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் நாள். காலையில் இருந்து நியூஸ் செவன் சேனல் ஸ்டுடியோவில் தேர்தல் முடிவுகள் குறித்த விவாத நிகழ்வுக்காக அமர்ந்து இருக்கிறேன்.. தொடர்ந்து வரும் செய்திகள் உவப்பாய் இல்லை. மதியம் மூன்று மணி அளவில் முன்னணி முடிவை வைத்து "இனி நமது ஆட்சி இல்லை" என்ற முடிவிற்கு வந்து விட்டேன். எனக்கு அடுத்து அமர்ந்து இருந்த..அதிமுக சார்பாக பங்கேற்க வந்த நகைச்சுவை நடிகர் அண்ணன் செந்திலிடம் "அண்ணே, நான் கிளம்புறேன்ணே" என்று சொன்னேன். அதற்கு அவர் "ஏம்ப்பா.. மாலை வரை இருந்துட்டு போகலாமே?" என்றார். "இல்லைண்ணே.. உங்க கட்சி ஆட்சிக்கு மீண்டும் வந்திருச்சு. நீயி ஜாலியா இருப்ப. ஆனா இனி நாங்க ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. என்னால முகத்தில் சோகத்தை காட்டாமல் இயல்பா அமர முடியலை. அதை மத்தவங்க உணர்வதற்கு முன்னாடி நான் வெளிய போறதுதான் நல்லது" என்றேன். "செரி தம்பி..அப்ப நெல்சன்கிட்ட சொல்லிட்டு கிளம்பு" என்றார். கிளம்பி நேராக அறிவாலயம் வந்து அண்ணா சிலையின் கீழ் வருத்தத்தோடு அமர்ந்து விட்டேன்.
மாலை ஆறு மணி இருக்கும். தலைவர் கலைஞர் வந்தார். பத்திரிக்கையாளர்கள் சூழ்கின்றனர். நானும் அருகில் சென்று வேடிக்கை பார்க்கிறேன்.
ஒரு பத்திரிக்கையாளர் கலைஞரை நோக்கிக் கேட்கிறார். "இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?"
இந்தக் கேள்வி என் காதில் விழுந்ததும் " பண நாயகம் வெற்றி பெற்றது".. " இது ஒரு மோசடி தேர்தல்".. " தமிழக வரலாற்றில் முதல் முறையாக எதிர்கட்சி ஒன்று 89 இடங்கள் பெற்று அமர்கிறது"... என்றெல்லாம் தலைவர் பதில் சொல்வார் என்று என் மனதில் ஓடுகிறது.
தலைவர் கலைஞருக்கு மிக நன்றாகத் தெரியும்.. தான் முதல்வராக வாய்ப்பு இருந்த கடைசித் தேர்தல் இதுதான் என்று! இனி எந்தக் காலத்திலும் தான் முதல்வராகும்.வாய்ப்பு இல்லை என்பதும் அவருக்குத் தெரியும்! அதை விட பெரிய சோகம் அந்த மனிதருக்கு அவர் வாழ்நாளில் வேறு எதுவும் இருக்க முடியவே முடியாது!!!
ஆனால் அதையெல்லாம் பெரிதாகக் கருதாமல் உண்மையான வருத்தத்தோடு கலைஞர் சொன்னார் "கம்யூனிஸ்டுகள் ஒருவர் கூட இடம் பெறாத சட்டமன்றம் முதல் முறையாக அமைகிறது..அதுதான் எனக்கு மிக.வருத்தமாக இருக்கிறது".
என் மனதில் ஒரு மின்னல் வெட்டுகிறது. "இவரா எதார்த்தம் தெரியாதவர்? இவரா புரியாத மனிதர்? இவரை இதுநாள் வரை புரிந்து கொள்ளாத நான் அல்லவோ அடி முட்டாள்! ஒரு ஜனநாயகத்தில் அத்தனை பேரின் குரலும் ஒலிக்க வேண்டும் என்று இந்த மனிதர் நினைக்கிறார். பத்து இடம் குடுத்தால்தான் ரெண்டு இடங்களிலாவது வென்று வருவார்கள் என்று நினைத்து இருக்கிறார். "ரெண்டு இடம் குடுத்து ஒன்று கூட வராமல் போனால் அவர்கள் குரல் சட்டமன்றத்த ஒலிக்காதே...இது அனைவரும் பங்கேற்கும் ஜனநாயகத்திற்கு நல்லதில்லையே" என்று நினைத்து இருக்கிறார் . இது நம் மரமண்டைக்கு இது நாள் வரை புரியவில்லையே என்று நினைத்த சமயத்தில் என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழியத் துவங்கியது.
அந்தத் தலைவரின் வழி வந்த இன்றைய கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பின் குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு இடத்தில் தோற்றாலும் இன்னொரு இடத்தில் வென்று வரட்டும் என்று நினைத்து இடங்களை அளிக்கிறார்.
நம் வேலை.."தலைவர் அதிக இடங்களை அளிக்கிறார் என்று வருந்தாது ஏன் அளிக்கிறார் என்பதை உணர்ந்து" நம்மோடு நம் கூட்டணித் தோழர்கள் வெற்றி பெறவும் பாடுபடுவதே!நாடும் நமதே! நாற்பதும் நமதே!   
இதற்கென்ன சொல்வீர்கள்? 

                 

8 comments:

  1. பெரும் பக்தராக இருந்தால் தான், சமாளிப்புகளை சரித்திரமாக பார்க்க முடியும். அப்துல்லா அவர்களும் அப்படியே இருக்கிறார்! இல்லை என்றால், 'இந்த ஆள் எதையாவது பண்ணி சொதப்பிடறான். நாம தான் எப்படியாவது சமாளிக்க வேண்டியிருக்கிறது!' ன்னு நினைப்பாரோ என்னமோ!

    ReplyDelete
    Replies
    1. திமு கழகத்தில் பக்தர்கள் என்று எவருமே இல்லை! தனக்கென்ன ஆதாயம் என்றிருக்கிற பாளையம், ஜாகீர்தாரர்கள் மட்டுமே இருக்கிற கட்சியாக ஆகி நீண்டகாலம் ஆகிவிட்டது!

      Delete
  2. பொதுவா திமுக காரங்க (அடிப்பொடிகள்), அவங்க தலைவர், கட்சி என்ன செய்தாலும் சொன்னாலும் அதையும் வித்தியாசமாச் சொல்லி ஜஸ்டிஃபை பண்ணுவாங்க.

    இருந்தாலும், 20 சீட்டில் போட்டிபோட்டு, 18 அல்லது 20ம் வெற்றி பெறுவது நல்லது இல்லையா? சும்மா 65 சீட் வாங்கி 5 சீட் வெற்றி பெறுவதைக் காட்டிலும். ஆனாலும், காங்கிரஸுக்கு இவ்வளவு சீட் ஒதுக்கியது ஏதோ திரை மறைவு காரணம் இருக்கு என்றுதான் எனக்குத் தோணுது.

    ReplyDelete
    Replies
    1. போட்டியிடுகிற அத்தனை இடங்களிலும் இல்லாவிட்டாலும் ஏதோமுக்கால்வாசியாகிலும் ஜெயிக்க, கொஞ்சம் திறமையுள்ள தலைமை வேண்டும்! காங்கிரசுக்கு முந்திக்கொண்டு 10 ஒதுக்கியதிலேயே, அது இல்லை என்பது வெளிப்பட்டுவிட்டதாகவே நினைக்கிறேன். தவிர தென் மாவட்டங்கள் ஒரு சவாலாக இருக்கும்! மேற்கே கொங்குநாடு ஈஸ்வரன் ஒருத்தருக்கு சீட் கொடுத்ததாலேயே ஒரு பெரிய மாறுதலும் இல்லை. கவுண்டமார் ஓட்டில் ஒரு 10% வாங்கினாலே அசுர சாதனை! வடமாவட்டங்களில், நிலவரத்தைக் கவனித்துக்கொண்டிருப்பதில் தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை.

      Delete
  3. இது எல்லாவற்றையும்விட, வைகோவை தன் காலில் விழவைத்தது ஸ்டாலினின் சாதனை என்றே நான் நினைக்கிறேன். தனக்குப் பின்னால் வந்த மற்றவர்களெல்லாம் சொல்லக்கூடிய அளவில் கட்சிகளையும், சீட்டுகள் டிமாண்ட் செய்யக்கூடிய நிலையிலும் இருக்கும்போது, தான் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிடும்' கதைபோல ஆவதை நினைத்தால்... பேசாமல் அவர் திமுகவில் சேர்ந்து, அதிகாரம் இல்லாத ஒரு பதவியைப் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற்றுவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. வைகோ விழுந்ததில் இசுடாலின் சாதனை என்ன? கருணாநிதி இருந்த காலத்திலேயே மதிமுகவை fuse போன பல்பாக்கி வைத்துவிட்டாரே!

      Delete
  4. பொதுவா, அதிமுக, பாஜக ஆட்டுவித்தபடி ஆடுகிறது என்று எல்லோரும் இணையத்தில் எழுதறாங்க. ஆனால் அதிமுக, பாஜகவுக்கு 5 சீட்டுகள்தான் கொடுத்திருக்கு. ஆனால் தமாகா பிரிந்தபோதும், காங்கிரசுக்கு ஸ்டாலின் 10 சீட்டுகள் கொடுத்திருக்கிறார். இதுல இருந்து அவருடைய குடுமி காங்கிரசிடம் இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏன் யாருக்கும் வரவில்லை?

    ReplyDelete
    Replies
    1. அரசியலில் எவர் குடுமியும் வேறு எவரோ ஆட்டுவிப்பதில்லை! குடுமிகள் ஆடுவதே ஆதாயத்துக்காகத்தான்!
      திமுக காங்கிரஸ் நெருக்கத்தின் பின்னணியில் தயாநிதி ஆ ராசா டி ஆர் பாலு காலத்து விவகாரங்கள் இருக்கலாம்! ஆனால் ஆ ராசா கையில் இத்தாலிய மம்மி குடுமி சிக்கிஇருக்கிற மாதிரித்தான் அந்த நாட்களில் இருந்து ஊகங்கள் இன்னமும் நீடிக்கின்றன

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)