Saturday, March 2, 2019

ரங்கராஜ் பாண்டே ! பிரியங்கா வாத்ரா! தேர்தல் களம்!

நெல்லைத் தமிழன் என்னிடம் பதிவில் வந்து இன்று எழுப்பிய கேள்விக்கு கூட இங்கே பதில் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! தொடர்ந்து தன்னை லைம்லைட்டில் (ஊடக வெளிச்சம்) வைத்துக் கொள்கிற கலையில் ரங்கராஜ் பாண்டே மிகத் தேர்ந்தவராக இருக்கிறார். நிறுவனபலம் என்று துணையெதுவும் இல்லாமல் ஊடகக்காரராக தொடர்வது அநேகமாக வேறு எவருக்கும் வாய்த்தது இல்லை! 
முகநூல் பக்கங்களில் எழுதுவதில்லையே தவிர நாட்டு நடப்பு எப்படியிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகக் கொஞ்ச நேரம் அங்கே செலவிடுவது உண்டு! அப்படிப் பார்த்ததில் கொஞ்சம் சுவாரசியமாக தி மு கழகத்தின் ஆட்சி லட்சணத்தை அமுதா என்பவர் புட்டுவைக்கும் பகிர்வு.   அங்கே அப்படியென்றால் தினசரி தளத்தில் சிறுத்த சிங்கிளா என்று செய்தி போட்டுக் கலக்குகிறார்கள்! 
தமிழகத்தில் சிலர் இப்படி சொன்னாலும் சொல்வார்கள்.. யாருன்னு கண்டுபிடிங்க.. கம்பெனி பரிசு கொடுக்கும்...
1. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் நடைபயணம் செய்யும் போதே... இம்ரான்கானுக்கு பந்துவீச நான்தான் கற்றுகொடுத்தேன்... அப்போதே அரசியலும் சொல்லி கொடுத்தேன்.
2. ஆக... இம்ரான்கான் தான் அரசியலுக்கு வந்ததிற்கு என் தந்தையே காரணம் என்று என் தந்தையில் கனவில் வந்து சொன்னதாக என் கனவில் என் தந்தை சொன்னார்.. என்று ஆரம்பித்து ஒன்பது விஷயங்களை சொன்னாலும் சொல்வார்கள் என்கிறார் இங்கே!



க்ளிக் செய்து படித்துத்தான் பாருங்களேன்! குபீர் சிரிப்புக்கு நான் காரண்டீ! போதுமா?     

எந்த நேரத்தில் எதைப்பேசவேண்டும், எப்படிப்பேச வேண்டுமென்பதை, இந்திரா வழித்தோன்றல்களிடம், எதிர் பார்க்க முடியாதுதான்! அதற்காக இப்படியா?நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதுள்ள 44 இடங்களாவது தேறுமா என்ற கேள்வி தலைக்குமேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ராவுல்பாபா இன்னமும் பப்பு தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறாரோ? 

Toot Jaega Danka, Fuss Ho Jaengi Priyanka என்று அமேதியில் வைக்கப்பட்ட இந்த பேனர் காங்கிரஸ்காரர்களைக் கொதிக்க வைத்திருக்கிறதாம்! நாளை நரேந்திர மோடி அமேதிக்கு வரவிருக்கும் தருணத்தில் வைக்கப்பட்ட  பேனருக்கே கொதிக்கிறவர்கள் Daily O தளத்தில் ரஷீத் கித்வாய், பிரியங்கா வாத்ராவைக் காங்கிரசார் என்னமோ பிரம்மாஸ்திரமாக நினைத்துக் கொண்டிருப்பதை, பாலாகோட் ஜெயிஷ் ஏ முகமது தீவீரவாதப்பண்ணை மீது சென்ற 26ஆம் தேதி நடத்தப் பட்ட விமானப்படைத்தாக்குதல் தவிடுபொடியாக்கி விட்டது என்று எழுதியிருப்பதைப் படித்தால் என்ன ஆவார்களோ? But deep inside, the Congress is concerned about Modi and the BJP reaping rich electoral benefits. The Congress is more worried actually about the political fate of its high-profile general secretary Priyanka Gandhi Vadra, who had taken a formal plunge into politics as a ‘game-changer’. என்கிறார் ரஷீத் கித்வாய். தொடர்ந்து புல்வாமா தாக்குதல் நடந்த 14ஆம் தேதிமுதல் பிரியங்கா வட்டாரத்திலிருந்து எந்தவொரு அசைவும் இல்லாமலிருப்பது, பாட்டியின் மூக்கு, முகச்சாடையிலிருப்பதே சாதித்துவிடும் என்கிற நம்பிக்கையையும் சேர்த்தே அசைத்துப் பார்த்திருக்கிறதாம்! மம்தா பானெர்ஜி, அரவிந்த் கேசரிவாலு இவர்களோடு மட்டுமல்ல, ஒரிசாவின் நவீன் பட்நாயக், ஆந்திராவில் தெலுகுதேசம் என்று வரிசையாக எந்தவொரு மாநிலக்கட்சியும் காங்கிரசை ஒரு கூட்டாளியாக மதிக்கவில்லை என்ற பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மோடி வேண்டாம் என்கிற ஒற்றை அஜெண்டா, காங்கிரசை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எதிர்க்கட்சி வரிசையில் தான் வைக்கப்போகிறதா என்ற கேள்வியையும் ரஷீத் கித்வாய் எழுப்புகிறார்.
But the Congress’ concerns do not end at these calculations. After an impressive road show, Priyanka and Jyotiraditya Scindia had painstakingly met over 2,000 influential leaders over 72 hours (as per one account, only seven hours were used for rest). The possibility of stitching alliances with smaller caste-based parties was also explored.
But the February 26 air strikes have altered these calculations and considerations என்று முடிக்கிறார் ரஷீத் கித்வாய்.  

முன்பே சொன்னதுதான்! மோடி மீதான பயமே இவர்களை இங்கே தி மு கழகம் ப்ளஸ் கூட்டாளிகளை, மோடிவெறுப்பு, மோடி எதிர்ப்பு என்று வானத்துக்கும் பூமிக்குமாக எகிற வைத்துக் கொண்டிருக்கிறதோ? 


                          

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)