அரசியல் பதிவு இல்லாமல் இன்றைக்கு இந்தப் பக்கம் கொஞ்சம் டல்லடிக்கிறதோ? குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம்! மங்களகரமாக மதுரைச் செய்தியுடன், ஆரம்பித்துவிடலாமா?
உறுதியாகத் தோற்பதற்காகவே வெங்கடேசனை இங்கே நிறுத்தியிருக்கிறார்களோ? முதலில் வந்த வதந்திகளின் படி உ வாசுகி நிறுத்தப்படலாம் என்பது மாறி, சு வெங்கடேசன் என்றாகியிருக்கிறது. கோவையில் பி ஆர் நடராஜன் 2014 வரை மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் தொகுதியில் நல்ல அறிமுகமும், கண்ணியமான வாக்குகளையும் பெறக்கூடியவர் என்று ஒப்பிட்டுப்பார்த்தால் வெங்கடேசன் பூஜ்யம் என்றே சொல்லிவிடலாம். திமுக தொண்டர்கள் ஆதரவைப்பெறுவதும், கட்டிமேய்ப்பதும் ரொம்பவுமே கடினம் என்ற நிலையில் இரண்டு பேருமே ஜெயிப்பது குதிரைக்கொம்புதான்!
கூட்டணிப்பங்கீட்டில் இசுடாலின் சாதித்துவிட்டார் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி! ஆச்சரியமாகத்தான் இருந்தது! பார்க்கலாம்! போனமுறை பூஜ்யம் என்ற ரிசல்டிலிருந்து இந்தத்தேர்தலில் கொஞ்சம் சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்பதே ஆறுதலான செய்திதான்!
கூட்டணி உறுதி! தொகுதிப்பங்கீடும் ஒருவழியாக முடிந்தது! விசிக எந்தச் சின்னத்தில் நிற்கிறார்களாம்? இன்னமும் தெரியவில்லையே!
ராகுல் காண்டி டீ ஷர்ட், ஜீன்ஸில் வந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளை அசத்தியிருக்கிறார். சார் என்று அழைக்காதீர்கள் ராகுல் என்றே அழைக்கலாம் என்றாராம்! கட்சிக்காரர்கள் எவராவது அழைத்து விட முடியுமா? யாரும் கேட்கவில்லையே என்று விட்டுவிட முடியுமா? மாரிதாஸ் கேட்கிறார்! நீங்களும் கேளுங்கள்!
காங்கிரஸ்காரனுக்கும் திமு கழகத்துக்கும் உண்மையைப் பேசுவது என்றால் ரொம்பவுமே அலெர்ஜி! கேட்டால் தங்கபாலுவுக்கு ராகுல் காண்டி அழுத்தந்திருத்தமாக ரிப்பீட்டடாக உண்மை ஜெல்லும் என்று சொல்லச் சொன்னகதையை பார்த்திருக்கிறோம் இல்லையா?
ராகுல் காண்டி பேசியதில் உண்மை இருக்கிறதா?
ரங்கராஜ் பாண்டே என்ன சொல்கிறார் என்றுதான் கேளுங்களேன்!
இங்கே இசுடாலின் அங்கே ராகுல் காண்டி இவர்களோடு கூட்டாளிகளாக இருக்கிற உதிரிகள் எல்லோரையும் முற்றொட்டாக நிராகரிப்பதே நாம் நமக்கே செய்துகொள்ளக் கூடிய நல்ல விஷயம்!
ஏற்கெனெவே கொடுத்த்த வாய்ப்புக்களை abuse துஷ்ப்ரயோகம் செய்தவர்களை நிராகரிப்பது ஒன்றே சரியான அரசியல் செயல்பாடும் கூட!
உங்க அனுமானம் தவறுன்னு மனசு சொல்லுது. மதுரைல சிபிஎம் வெற்றி பெற நல்ல வாய்ப்பு. அதிமுக வாக்குகள் பிரியும். காங்கிரஸ் வாக்கு திமுக வாக்கு சிபிஎம்முக்குச் சேரும். பொறுத்திருந்து பாருங்க. ஆனா அதுக்கும் வெங்கடேசன் -இலக்கியவாதி என்பதற்கெல்லாம் சம்பந்தமில்லை.
ReplyDeleteஎனக்கென்னவோ இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றிபெரும் என்றே தோன்றுகிறது. அதற்கு 'மதச்சார்பின்மை' என்ற போலி லேபிள்தான் காரணமாயிருக்கும். ஆனால் வரும்காலத்தில் தமிழகத்தில் மதத்தைவைத்து முழுமையாக வாக்குகள் பிரிவதற்கு அந்த ரிசல்ட் காரணமாக இருக்கும்.
மனசு சொல்லுவதெல்லாம் சரியாக இருந்துவிடும் சந்தர்ப்பங்கள் எத்தனை? தவறுபவை எத்தனை?
Deletehttp://maduraimarxist.blogspot.com/2012/02/blog-post_04.html 2012 இல் எழுதப்பட்ட பதிவு இது. இதுதவிர எனக்குக் கிடைத்த சில விஷயங்களை பொதுவெளியில் பகிர முடியாத நிலையில் இருக்கிறேன்.