Wednesday, March 13, 2019

டூப்ளிகேட் காண்டிகளும்! பல்லிளிக்கும் திராவிடங்களும்!

காந்தியா காண்டியா? மோடி வெர்சஸ் WHO? என்று எழுதிய பதிவுக்கு ஆதாரம் இருக்கிறதா? அல்லது இதுவும் நேரு, வாரிசுகள் மீது தொடர்ந்து கட்டமைக்கப் படும் அவதூறுகளில் ஒன்று தானா என்று யாரும் என்னைக் கேள்வி கேட்கவில்லை! ஆனாலும் சமூகப் பொறுப்புள்ள பதிவராக தெளிவு படுத்தவேண்டிய கடமை எனக்கும் தெரிந்துகொள்ள வேண்டிய கடமை உங்களுக்கும் இருக்கிறதே! அதுவும் நேற்று சோனியா G வாரிசுகளுடன் அகமதாபாத்  காந்தி நகரில் அரசியல் பிரசாரம் ஆரம்பித்த செய்திகளைப் பார்த்த பிறகு!


காங்கிரஸ் என்னவோ பிரியங்கா வாத்ரா, பாட்டி சாடை அச்சு அசலாக இருப்பதில் பிரம்மாஸ்திரமாக இருக்கப் போகிறார் என்று கணக்குப் போட்டுக் கொண்டு தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறது. ஆனால் உண்மையில் அப்படித்தானா? டூப்ளிகேட் காந்தியாக உலாவரும் பிரியங்கா, நேற்றைக்குத்தான் முதன்முதலாக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு வந்திருக்கிறார். பாட்டி இந்திரா மாதிரியே தெனாவட்டான தேர்தல் பிரசாரப் பேச்சு. 

The Nehru-Gandhi dynasty has milked the ‘Gandhi’ name to the hilt. In fact, one could reason that the Dynasty’s rise to prominence was largely based on them claiming the Mahatma Gandhi legacy through their surname. With that history, it came as a surprise when Priyanka Gandhi Vadra, in her debut election rally, made a startling admission that after the decades she claims to have been in politics, this was the first time she had visited the Sabarmati Ashram என்கிறது இந்தச் செய்தி 

ஒரிஜினல் காந்திக்கும் இந்த சோனியா G கும்பலுக்கும் சம்பந்தம் ஏதாவது உண்டா? இல்லவே இல்லையென்று, நேருவின் பரமரசிகர், ஆதரவாளரான ராமச்சந்திர குஹா தனது India After Gandhi நூலில் 14வது அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறார். அம்மாம்பெரிய புத்தகத்தில் எங்கேன்னு தேடறது என்று சோம்பலில் சலித்துக் கொள்ளவேண்டாம்! இன்னொரு reference கூட ரெடியாக இணையத்தில் இப்போதே சரிபார்த்துக் கொள்ள வசதியாகக் கிடைக்கிறது.

We remember Feroze Gandhi. During the independence movement he was arrested and jailed several times and was later elected as a Member of Parliament from Raebareli.

7:34 AM - 12 Sep 2018  இந்திரா உயிரோடு இருந்த நாட்களில் கூட நினைவுக்கு வராத பெரோஸ் காந்திக்கு சென்ற செப்டம்பரில் அவரது 106வது பிறந்த நாள் ட்வீட்டர் அஞ்சலியாக காங்கிரஸ் வெளியிட்டது ஒன்று.


          Feroze and Indira Gandhi during their wedding ceremony | File  

இந்திரா பெரோஸ் திருமணம் 1942 இல் நடந்தது. இந்திராவின் தாய் கமலாவுக்கோ நேருவுக்கோ விருப்பம் இல்லாமல் நடந்த திருமணம். அப்பனை வெறுப்பேற்றுவதற்காகவே இஸ்லாத்துக்கு மதம் மாறித் திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்திகள் நேருவின் பிம்பத்துக்குப் பின்னால் மறைக்கப்பட்டன.

Compared with the other members from the Nehru-Gandhi family, there's very little known about Feroze. There are many theories about his Gandhi surname. The most popular one says that Feroze was born to Faredoon Jehangir Ghandy and Ratimai, who lived in Mumbai. In his prime, Feroze was drawn to India's independence movement. He soon got inspired by Mahatma Gandhi and changed the spelling of his surname from ‘Ghandy’ to ‘Gandhi’. Apparently, Feroze considered himself a Parsi. At the same time, he was not religious என்று சொல்கிற இந்தச் செய்தி       மாமியார் இந்திராவே மறந்து போன பெரோஸ் காண்டியை மருமகள் சோனியா G நினைவில் வைத்துப் போற்றுகிற மாதிரி!

டூப்ளிகேட் காந்திகளுக்கு இப்போது ஒரிஜினல் காந்தி ஞாபகம் கூட வந்திருப்பது, காலம் செய்யும் கோமாளித் தனம் என்றுதான் சொல்லவேண்டுமோ?  



On the anniversary of Gandhi Ji’s historic Dandi March, the Congress Working Committee in Ahmedabad, resolved to defeat the RSS/ BJP ideology of fascism, hatred, anger & divisiveness. No sacrifice is too great in this endeavour; no effort too little; this battle will be won.

எதற்கு இந்தப் பழைய கதை? நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த M O மத்தாய் எழுதிய புத்தகம் இன்னும் துல்லியமாகச் சொல்கிறதே? இலவசமாய்க் கிடைத்தாலும் இங்கே புத்தகம் வாசித்துத் தகவலை கிரகித்துக் கொள்வதற்கு ஜனங்களுக்கு வரும் சோம்பல் இருக்கிறதே! அதைத்தான் மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு டுபாக்கூர்கள், ஒரிஜினல் காந்தியைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு இவர்களே காந்தி ஆகிவிட்டதாக ஒரு அய்யம்பேட்டை வேலை!


ராவுல் பாபா ஒரு கூட்டத்தில் மசூத் ஆசார் ஜி என்று ஒரு பயங்கரவாதியை மரியாதையாக அழைக்கும் வீடியோ கிளிப் ஒன்றை ட்வீட்டரில் பார்த்தேன். அதை வைத்து @timeshow என்ற ஐடியில் ராவுல் பாபாவை வச்சு செஞ்சதன் ஸ்க்ரீன் ஷாட் இது. அந்த அக்கௌன்ட் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறது.


உளறுவாயர்களுக்காக எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது? !!

அதுசரி! இங்கே இசுடாலின்! அங்கே ராவுல் பாபா என்று உளறுவாயர்கள் கூட்டணி சேர்ந்திருக்கிற விசித்திரம், என்னவென்று சொல்வது? 

இவர்களை முற்றொட்டாக நிராகரிப்பது தவிர வேறு சாய்ஸ் இருக்கிறதா என்ன?        

  

2 comments:

  1. இதற்கெல்லாம் பதில் மன்மோகன் சிங் காலத்து ஒவ்வொரு ஊழல்களாக எடுத்து எழுதலாம். வாசிக்கிறவர்களுக்கு நினைவூட்டுகிற உருப்படியான வேலையாக இருக்கும்.

    அதெல்லாமா படித்து வாக்குச்சாவடிக்கு போகிறார்கள் என்பது பதிலாக இருக்குமானால், இன்றைய பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களும் அதனால ஆய பயன்களும் என்ற தலைப்பில் எழுதலாம். இது அந்தக் கட்சியின் மாநில தலைவர்களுக்கே தெரியாத விஷயம். இதுவும் வேண்டாம் என்றால்--

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையும்ன் அதனால் வீளைந்த பயன்களும் அல்லது ஜிஎஸ்டியின் வெற்றி -- என்று தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தலைப்புகளில் விஷயத் தெளிவு கொண்டவர்கள் தமிழகத்தில் அதிகம் பேர் இல்லையாதலால்
    புதுமையாகவும் பயன் உள்ளவைகளாகவும், எதிர்கால திருப்பிப் பார்ப்பதற்கு உபயோகமாகவும் இருக்கும்.
    எழுதுவதில் ஆத்ம திருப்தி தாராளாமாகக் கிடைக்கும்.

    எதுவுமே வேண்டாம் எனில் இப்படியே தொடரலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் ராவுல் பாபா அந்த வேலையைத்தானே செய்து கொண்டிருக்கிறார்? :))))

      யூட்யூபில் ராவுல்பாபா ஸ்டெல்லாமேரிஸ் மற்றும் பிரஸ் மீட் பார்த்தீர்களோ?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)