தேர்தல் வந்துவிட்டாலே நம்மூரில் அரசியல்வாதிகள் கோமாளிகளாகவும் ஆகிவிடுவது இங்கே தெரிந்த விஷயம்தான்! ஆனால் ஒரு சினிமாக் கோமாளி அரசியல்வாதியாகவும் ஆகிவிடுகிற கோமாளித் தனத்தை தமிழக அரசியலில் மட்டும் தான் பார்க்க முடியுமோ? பவர்ஸ்டார் சீனிவாசன் தென்சென்னைத் தொகுதியில் போ ட்டியிடுகிறாராம்!
இழுபறி கண்ணீர் மிரட்டல் என்று ஒருவழியாக CONகிரஸ் கட்சி சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜாமீன் வாரிசு கார்த்தி சிதம்பரத்தையே வேட்பாளராக அறிவித்து விட்டதாகத் தற்போதைய செய்திகள் சொல்கின்றன.
ஜெயிலுக்குப் போகாமல் இருக்கச் சிறந்தவழி மக்கள் பிரதிநிதி ஆகிவிடுவது ஒன்று தான் என்பதைக் கழகமும், கூட்டாளி CONகிரசும் தெரிந்துவைத்திருக்கின்றன என்பதற்குமேல் வேறென்ன சொல்ல முடியும்? நீண்ட இழுபறிக்குப் பின் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் தன் மகன் கார்த்திக்காக அதிகம் மெனக்கெடலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில் அது உறுதியாகியுள்ளது என்கிறது இந்து நாளிதழ்
ஓசிச் சோத்துல உடம்பை வளர்க்கிற கூட்டத்தை இனியும் வளர விடுவோமோ? சொல்லுங்களேன்!
சில நாட்களுக்கு முன்னால் நரேன் என்கிற கழகக் கண்மணி கூட கிட்டத்தட்ட இதே மாதிரி எழுதி இருந்ததைப் படித்த நினைவு வருகிறது.
கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுடைய கார்டூன்களை இங்கே பலமுறை பகிர்ந்ததுண்டு. இன்று அவருக்குப் பிறந்தநாளாம்! நஞ்சுண்டசுவாமி என்பவர் இப்படிக் கோட்டோவியமாகவே வரைந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார்! நாமும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்வோம்!
குமுதம் PV பார்த்தசாரதி மகன் கைக்கு மாறிவிட்டது! ஆனாலும் SAP அண்ணாமலை காலத்து அச்சு பிச்சுத்தனம் அப்படியே தொடர்கிறதோ?
பவர் ஸ்டார் தென் சென்னைலயா? - எனக்கு 2024 வாக்கை, இந்த எலெக்ஷன்லயே போடமுடியுமா? பவர் ஸ்டார் மிகச் சிறந்த படிப்பாளி, அறிவுத்திறன் மிக்கவர், நேர்மையானவர், நம் மக்களைப்போலவே. ஆனால் ஏற்கனவே தென் சென்னைக்கு யாருக்கு ஓட்டளிப்பது என்று தீர்மானித்துவிட்டதால், இப்போ என்ன செய்ய?
ReplyDeleteநெல்லைத்தமிழன்! அருமையான நையாண்டி! இப்படித்தான் இடுக்கண்கள் வரும்போதெல்லாம் நம்மையே நாம் நையாண்டி செய்துகொள்ள வேண்டும்! வேறு வழி இருக்கிறதா?
Deleteசிவகங்கைத் தொகுதிக்கு அருமையான வேட்பாளர் கிடைத்துவிட்டார். சிவகங்கை மக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம், யாரைத் தோற்கடித்தோம் இந்த எலெக்ஷனில் என்று. பாராட்டுகள் கார்த்தி சிதம்பரத்துக்கு, தனக்குப் பதில் தன் மகனையோ மனைவியையோ (அப்பாவிகளை) நிறுத்தி இம்சிக்காமல் இருந்ததற்கு.
ReplyDeleteசெட்டிநாட்டு ஜாமீன் குடும்பத்தில் பெண்களை முன்னிறுத்த மாட்டார்கள்! அது ஜாமீன் காளை வம்சத்துக்கே இழுக்கு! :))))
Delete