Sunday, March 3, 2019

சண்டே போஸ்ட்! இன்னொரு மூணு!

கவனிப்பதற்கு நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள், தகவல்கள் புதிது புதிதாகச் சேர்ந்து வருவதை, எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? மாற்றங்கள் வேண்டுமென்கிற குரல்கள் ஒலிப்பது வாடிக்கைதான் என்றாலும், மாற்றத்துக்குத் தயார் செய்கிற தலைமை இல்லாமலும், மாறுவதற்குத் தயாராக இல்லாத ஜனங்களுமாக இருப்பதில்  மந்தைத்தனத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
கமல் காசர் கட்சியின் செயற்குழு உறுப்பினர், தொழிலதிபர்   CK குமரவேல், இங்கே கடலூரில் போட்டியிடுகிற ஆசையோடு இருப்பதொன்றும் ஆச்சரியம் தருகிற செய்தியல்ல. இங்கே மதுரையில் அங்கிங்கெனாதபடி ஆட்டோ சங்கம் முதல் ரஜினி முதலான நடிகர்கள் ரசிகர் மன்றம், லோக்கல் மாரியம்மன் கோவில்          நிர்வாகம் வரை எல்லா இடங்களிலும் கழகக் கண்மணிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம், விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்தார்! கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் லோகல் திமுக  உபிக்களின் உறவுகள் தேதிமுகவுக்குப் பாய்ந்தோடினர்! அதில் ஒரு நபர் என்னிடம் சொன்னது, திமுகவிலேயே இருந்தால் ஜாதி/சொந்தக்கார வட்ட பிரதிநிதிகளுக்கு பின்னணி வாசிப்பதைத் தவிர மேலே வரவே முடியாது. புதுக்கட்சி  என்றால் விறுவிறுவென மேலே வந்துவிடலாம்! சொன்னவர் ஒரு ஆட்டோக்காரர்! சொன்ன மாதிரியே மாநகராட்சி தேர்தலில் மனைவிக்கு வேட்பாளராக இடமும் பிடித்து விட்டார்!  குமரவேல் மாதிரி பெரிய கோடீஸ்வர தொழிலதிபர்கள் அப்படியெல்லாம் இருப்பார்களா? மாட்டாரென்று ஒரு மய்ய உறுப்பினர் என்னிடம் கொஞ்சம் ஆவேசமாக மறுத்துப் பேசியதையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்! 

மாற்று அரசியல்! இந்த வார்த்தையை காங்கிரஸ்காரன் சோஷலிசம் பேசிய கதையைப் போலவே இங்கு தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை அந்த இளைஞனிடம் சொல்வதற்கு அவகாசமே கொடுக்கவில்லை! கமல் காசர் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கிறார் என்று நிஜமாகவே நம்புகிறவர்கள் இங்கே வந்து காரணகாரியத்தோடு சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்!  

பாட்டாளி மக்கள் கட்சியைத் திருமாவளவன் தொடர்ந்து காய்ச்சி எடுப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதைத் தவிர விசிகவுக்கு வேறு அஜெண்டாவே இல்லையா? அரை சதவீதம், முக்கால் சதவீதம் வாக்குவங்கிக்கே இத்தனை அலட்டலா?    

2016 இல் அன்புமணி ராமதாஸ் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று ஒரு வித்தியாசமான அரசியல் அணுகுமுறையோடு எல்லா சமூகத்தினருக்கும் இடம் கொடுத்து தமிழகமெங்கும் ஜனங்களை அணுகியதைப் பொய் என்று தள்ளிவிட முடியாது!  கூட்டம் சேர்ந்தது. ஆனால் அது வாக்குகளாகவோ, வன்னியர் பெல்ட்டைத் தாண்டி கட்சி வளர்ந்ததாகவோ ஆகவில்லை. அதில் ஏற்பட்ட ஏமாற்றம் அவர்களைப் பழையபடி வன்னியர் கட்சியாகவே ஆக்கிவிட்டது என்பதில் ஒரு நல்ல தலைமை வெளிப்படவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு ஜனங்களும் அன்புமணியின் மாற்று அரசியலுக்கு பாராமுகமாக அல்லது நம்பிக்கையில்லாமல் இருந்ததும்!

மறுபடியும் கமல் காசர் முன்னெடுப்பது என்னமாதிரி அரசியல் என்ற கேள்வியும், கூடவே  மாற்று என்பதை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுகின்றன.  

குஷ்பூ பேசுகிற சிறுபிள்ளைத்தனமான அரசியலுக்கும் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராவுல் பாபா 15 வருடமாக அரசியலில் குப்பை கொட்டிப் பேசிக்கொண்டிருக்கிற சிறுபிள்ளைத்தனத்துக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேசத்தை, தலைமையேற்று வழிநடத்த பலமுறை வாய்ப்பளித்தாகிவிட்டது. இன்னும் ஒரு வாய்ப்பு கேட்பதோ கொடுப்பதோ எந்தவகையில் சரியாக இருக்கும்? சொல்லுங்களேன்!       

கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காத, வலிமையான மத்திய அரசை நிறுவுவதில், வாய்ப்பிருந்துமே கூடக் கோட்டை விட்டவர், இப்போதைய மாநிலக்கட்சிகளின் கூக்குரல்களுக்குக் காரணமாக இருந்தவர் தாத்தன் நேரு என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது!


1971 போரில் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒன்றுக்கு இரண்டாக பாகிஸ்தான் தலைவலியை நிரந்தரம் தானோ என்ற அளவுக்கு வளர்த்துவிட்டவர் இந்திரா. 

வாஜ்பாய் கூடக்  கிடைத்த வாய்ப்பை, ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. 

இந்தப் பின்னணியில், நரேந்திரமோடியின் முதல் ஐந்தாண்டுகளை எடைபோட வேண்டியிருக்கிறது. ஆனால் மோடிக்கெதிரான கூக்குரல்களில் எதை எடைபோட்டு, எது முக்கியமானது என்று சொல்ல முடிகிறது?

நேரு, இந்திரா, ராஜீவ் மூவருக்கும் மெஜாரிடியுடன் வலுவான மத்திய அரசை நிர்வகிக்கக்   கூடிய வாய்ப்பும் கிடைத்தது. என்ன நடந்தது? தெளிவான பார்வை, இலக்கு எதுவுமில்லாமல் தாங்களும் கெட்டு, தேசத்தையும் பாழடித்தார்கள். 2004 முதல் 2014 வரை Defacto பிரதமராகப் பின்னிருந்து இயக்கிய சோனியா அண்ட் கோ பத்தாண்டுகளில் சாதித்தது வரிசையாக வெடித்துக் கிளம்பிய ஊழல்கள் மட்டுமே!

அரசியல் மாற்று, மாற்று அரசியல் எதுவானாலும் காங்கிரஸ் கட்சியையும்  அதன் கூட்டாளிகளையும் முழுமையாக  நிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது!

மாற்றத்துக்கான முதல்படி இதுவே!   

     

2 comments:

  1. 1. அது நாடாளுமன்றத் தேர்தலே ஆனாலும் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் எல்லாக் காலங்களிலும் லோக்கல் பாலிடிக்ஸ், லோக்கல் எதிரும் புதிருமான கட்சிகளை முக்கியப்படுத்தி விமர்சித்துக் கொள்வது தான்.

    2. அதனால் தான் அகில இந்திய கட்சிகளால் இங்கே குப்பை கொட்ட முடியவில்லை.

    அதனால் காங்கிரஸை நிராகரிப்பது என்ற கேள்வியே இங்கு எழுவதற்கு வாய்ப்பில்லை.

    இரண்டு அகில இந்திய கட்சிகளுக்கும் எதிரும் புதிருமாக போட்டியிடாதவாறும் பார்த்துக் கொள்கிறார்கள்.
    அதனால் தனித்து எந்த அ.இ.கட்சியையும் மக்களாகப் பார்த்து தவிர்ப்பதற்கும் வழியில்லாமலேயே போய்விடுகிறது.

    குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அகில இந்திய கட்சிகள் இந்திய மாநிலங்களில் தங்கள் வளர்ச்சியை நிலைப்படுத்தாமல் மாநிலக் கட்சிகளின் ஆதரவில் மத்தியில் ஆட்சி நடத்துவோம் என்ற நிலை இருக்கும் வரை எந்த அகில இந்திய கட்சியையும் மாநிலங்களில் புறந்தள்ளமுடியாத நிலை தான் இருக்கும்.

    காமராஜர் மாதிரி தமிழகத்தில் அகில இந்தியக் கட்சித் தலைவர் ஒருவர் வளராததும் அகில இந்தியக் கட்சிகளுக்கு ஒரு பின்னடைவு தான்.




    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! இது என்ன லாஜிக்?

      மாநிலக்கட்சிகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு தேசியக் கட்சியுடன் சேர்ந்துதான் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதால் தான் திமுக காங்கிரசைத் தூக்கிச் சுமக்கிறது!

      காங்கிரசை நிராகரிப்பது என்பது அதைத் தூக்கிச் சுமக்கிற கூட்டாளிகளையும் நிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது! பதிவின் கடைசியில் தெளிவாகச் சொல்லயிருக்கிறேனே!

      அப்புறம் காமராஜர் போன்றவர்கள் மாநில அளவில் வலுவாக்க காலை ஊன்றிக் கொண்டே அகில இந்தியத் தலைமைக்கும் வந்தார்கள்! அதையும் வேரறுத்தது, கெடுத்தது நேரு பெற்ற மகள் தான் என்பது மறந்துபோய் விட்டதா? YS ராஜசேகர ரெட்டி ஒருவர் மாநில அளவில் வளர ஆரம்பித்தார். இறந்தபின் அந்த செல்வாக்கை அவர் மகன் கைப்பற்றிவிடக்கூடாது என்பதில் மாமியார் பாணியிலேயே மருமகளும் முனைந்தது சமகால வரலாறு!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)