ஏ ஆர் ரஹ்மான் நடத்தும் KM Music Conservatory இல் பயிலும் 13 வயது சென்னைச் சிறுவன் லிடியன் நாதசுவரம் அமெரிக்க CBS டெலிவிஷன் நடத்திய இசைப் போட்டியில் "The World's Best," விருதை வாங்கியிருக்கிறார்.
அதுவும் ஒரு மில்லியன் டாலர் பரிசோடு! இத்தனை இளம்வயதில் ஒரு சென்னைப் பையன் முதல்முறையாக இசையில் உலக அளவிலான போட்டியில் சாதித்திருப்பது நிஜமாகவே எல்லோரும் கூடி வாழ்த்த வேண்டிய ஒன்று!
திடீரென்று இசைக்குத் தாவி விட்டேனோ? பொழுதுக்கும் இங்கே அரசியல் அபசுரங்களையே பார்த்துக் கொண்டிருப்பதில் இருந்து சற்றே புதுப்பித்துக் கொள்ளத்தான்! ஆனால், அரசியல் என்னை அதிகநேரம் விடாது என்று எனக்கே தெரியும்!
எதற்கெடுத்தாலும் நேருவைக் குறைசொல்லிக் கொண்டே இருப்பதா? தப்பிக்க வேண்டுமானால் நேருவே வந்து பிஜேபியில் சேர்வது ஒன்றுதான் வழி என்று சதீஷ் ஆசார்யா நக்கல் செய்கிறார்! அப்படி சேர்ந்தாலுமே கூட ஷோக்குப்பேர்வழி நேரு கியாதியை இங்கே சொல்வதை நான் நிறுத்த மாட்டேன்! வாரிசுகளையும் கூட!
சுமார் 38 வருடங்கள் நேரு இந்திரா ராஜீவ் என ஒரு குடும்ப உறவுகளே பிரதமராகவும், 10 ஆண்டுகள் சோனியா G பின்னால் இருந்து ஆட்டுவிக்கிற சக்தியாகவும் இருந்ததைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் சோனியா G வாரிசு ராகுல் காண்டி, அரசியலில் எந்த நேரத்தில் என்ன பேசுவது எப்படிப்பேசுவது என்று அறியாத பப்புவாகத்தான் இருக்கிறார். 72 வருட கால இந்திய அரசு அதிகாரத்தில் 48 வருடங்கள் ஒரே குடும்பத்தவரே பதவியில் இருந்த நிலையில் வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்பு, தீவிரவாதம் போன்றவற்றைப் பேசும்போது, எத்தனை சென்சிடிவான விஷயத்தைப் பேசுகிறோம் என்பதில் கூடுதல் கவனமும் பொறுப்பும் இருக்க வேண்டாமா?
ஒரு பயங்கரவாதியை ஜி என்று மரியாதையாக விளித்த ஒன்று தான் இங்கு விஷயம் என்றெண்ணாதீர்கள்!
நரேந்திர மோடிக்கு காமராஜர் பெயரைச் சொல்லத் தகுதி இருக்கிறதா என்று காங்கிரசுக்கு புது மாநிலத் தலைவராக வந்திருக்கிற கே எஸ் அழகிரி கேட்டிருக்கிறார். இந்திரா காங்கிரஸ் அதன் அடியொற்றி வந்திருக்கும் சோனியாG காங்கிரஸ்காரனுக்கு, காமராஜர் பெயரைச் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறதாம்?
உத்தரப்பிரதேச அரசியலில் பிரியங்கா வாத்ரா களம் இறக்கிவிடப்பட்டிருப்பதில் என்ன முன்னேற்றமாம்? மூக்கு முகசாடை பாட்டிமாதிரியே என்றால் திமிரும் தெனாவட்டும் கூடவா அப்படியே இருந்து தொலைக்க வேண்டும்?
NDTV தளத்தில் சுவாதி சதுர்வேதி என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள்!
மறுபடியும் புதிய தகவல்களோடு சந்திப்போம்!
No comments:
Post a Comment