தேர்தல் அறிக்கை, தேர்தல் வாக்குறுதி என்பதெல்லாம் அந்தநேரத்து சிலிர்ப்பு என்பதற்கு மேல் வேறு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? இந்தத் தேர்தலில் எல்லோரையும் முந்திக்கொண்டு பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது என்றால் இரு கழகங்களும் இன்றைக்குத் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஒரு சாங்கியத்தை நடத்தி முடித்திருக்கின்றன. ரங்கராஜ் பாண்டே இதுமாதிரி தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகள் நிறைவேற்றப் படக்கூடியதுதானா என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். சாமானிய ஜனங்களுக்கு இதெல்லாம் வெறும் பொழுதுபோக்கு என்றிருக்கும் நிலைமை மாறாத வரை அரசியல்வாதிகளின் ஆகாசப்புளுகுகளுக்கு முடிவேது?
காமெடி நடிகைதான்! ஆனால் சிறுவயதிலேயே அதிமுக மேடையேறிப் பேசி, எம்ஜியாருடைய கவனத்தையும் ஈர்த்தவர் கோவை சரளா! CK குமரவேல் யார் என்ன என்ற விவரம் தெரியாமல் வம்புக்கிழுத்து விட்டாரோ?
புதியதலைமுறைக்காக நேர்காணல் நடத்தியவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. முதலாளி திமுக அணி வேட்பாளராகபோய்விட்டதால், நிகழ்ச்சியை எப்படிக் கொண்டபோவது என்பதில் ஒருவித தடுமாற்றம், புரிந்துகொள்ள முடிகிறது.
காரியமாகிற வரை கழுதை காலைக் கூடப் பிடிக்கத் தயாராக இருக்கும் அரசியல் களத்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா! படத்தில் மூன்றாம் கலீஞருக்குப் பொன்னாடை போர்த்தி, தயாநிதி ஆசி வாங்குகிறாரா என்ன?
பிரியங்கா வாத்ரா கங்கைநதிக்கரையில் படகுசவாரி பிரசாரமாக நடத்திக் கொண்டிருப்பதை நக்கலடித்து சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கும் இந்த கார்டூன் நிறைய செய்திகளைச் சொல்கிறது.
தினத்தந்தி புருடாவை விடுங்கள்! திருவிளையாடல் படத்தில் பாலையா சலித்துக்கொள்வாரே! என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை? அதேமாதிரி என்னையும் புலம்ப வைத்துவிட்டார்களே!
அதிமுக அணியில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன்
திமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சு வெங்கடேசன்
அமமுக வேட்பாளராக மறைந்த கா காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை
பாவிகளா! வேறு யாரையாவது வேட்பாளராக அறிவிக்க ஒரு அணிக்கும் தெம்பில்லையா?
முதல் ஆப்ஷன் ruled out. மீதமிருக்கிற இரண்டில் எந்தக் கொள்ளி கம்மியாகச் சுடுகிற கொள்ளி என்று பார்த்து ஓட்டுப் போட வேண்டுமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் சு வெங்கடேசனையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டுமா? காவல்கோட்ட எழுத்தாளரை அப்படியெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது!
காளிமுத்து மகன் இருப்பதிலேயே குறையெதுவும் இன்னமும் வெளியே தெரியாத வேட்பாளர்தான்! ஆனால் தினகரன் முகாம் என்பது ரொம்பவே நெருடுகிறது.
அப்படியானால் மய்யமா? அய்யோ சாமி ஆளைவிடு!
என்னடா இது? மதுரைக்கு வந்த சோதனை? !!
//சேதுகால்வாய் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
ReplyDeleteநதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வழி வகை செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் இலங்கை போர் நிறுத்தம் ஏற்பட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.
கச்சத்தீவில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்துவோம். சென்னையில் புயல், வெள்ள பேரிடர் நிவாரண ஆணையத்தை அமைக்க வேண்டும்.
திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ள சாயபட்டறைகள் மற்றும் ஆடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து கடலில் கலக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, மேம்படுத்த வேண்டும்.
சேலம், தஞ்சை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ விமான தளங்களை பயணிகள் விமான நிலையங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் குழாய் மூலம் எரிவாயு சப்ளை செய்யப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு மத்திய அரசின் ஒட்டுமொத்த வரிவருவாய் 60 சதவிகிதத்தை அளிக்க வேண்டும்.
சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை முன்னோடி திட்டமாக தமிழகத்தில் அமைக்க வேண்டும். புலம்பெயர்ந்தோர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை விரிவுபடுத்த வேண்டும்.
சென்னை- கோவை, சென்னை- மதுரை ஆகிய இடங்களுக்கு அதிவேக புல்லட் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
தஞ்சை- அரியலூர் உள்ளிட்ட புதிய ரெயில் பாதைகளை அமைக்க வேண்டும்.//
மேலே உள்ளது எல்லாம் திமுகவின் 2009 தேர்தல் அறிக்கையில் இருந்த பாயிண்டுகளில் சில. இவற்றில் ஒன்றாவது நிறைவேறியதா இல்லை, அவர்கள் 2ஜி, தொலைக்காட்சி ஊழல், கேபிள் ஊழல் இவற்றில் பிஸியாக இருந்தார்களா என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
தேர்தல் அறிக்கை என்பது ஒரு பொழுதுபோக்கு சமாச்சாரம். இதற்கு ஒரு குழு, வெளியீடு என்று காட்சி ஜோடனை, தொலைக்காட்சி விவாதம் என்று நடக்கும். இதற்கும், தொலைக்காட்சியில் வரும் சீரியல்களுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா?
அடடடே! தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகள் எல்லாம் அர்த்தமில்லாத சாங்கியம்தான் என்கிறபோது இத்தனை ஞாபகம் வைத்து எடுத்துப்போடுவது உடல்நலம் மனநலத்துக்குத் தீங்கானது என்று தெரியாதா நெல்லைத்தமிழன்? :))))
Delete//காரியமாகிற வரை கழுதை காலைக் கூடப் பிடிக்கத்// - வாய்ப்புக் கிடைத்தால் உதயநிதியின் பையனுக்கு பேம்பர்ஸ் மாற்றிவிடக்கூட தயங்கமாட்டார் தயாநிதி மாறன். (இவர் சோனியாவின் காலில் விழுந்தார் தன்னைக் காப்பாற்றச் சொல்லி என்று நாம் படித்தோமே). இல்லாவிட்டால், குற்றச்சாட்டில் அரசியல் எதிர்காலமே பாதிக்கப்படுமே.
ReplyDeleteபெர்சனலாக இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ரொம்ப அசிங்கமாக இருக்கு.
அதையே உல்டாவாக வாய்ப்புக் கிடைத்தால் முதுகில் குத்தவும் தயங்கமாட்டார் என்றும் பாருங்கள்! அதுதான் அரசியல்!
Delete