Sunday, March 24, 2019

சண்டே போஸ்ட்! சாணக்யா Leaks! சதிவேலைகள்!

நேற்றிரவு ரங்கராஜ் பாண்டேவிடமிருந்து இப்படி ஒரு செய்தி வந்திருந்ததைக் காலையில் தான் கவனித்தேன்.

கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை பிரதீப் என்பவர் சந்தித்து, 'முதலமைச்சர் எடப்பாடி பெயரை இழுத்துவிட்டால் தான் நீங்கள் தப்பிக்க முடியும்; நாங்கள் சொல்கிறபடி சொன்னால், டில்லியில் இருக்கும் பத்திரிக்கையாளர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்' என சொல்லிக் கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ...! இதன் பிறகு தான், சாம் மாத்யூவின் வீடியோ வெளியே வருகிறது.
அப்படியானால்...? மேல் விவரங்கள் அடுத்த வீடியோவில்...! என்ற முன்னோட்டத்துடன் முதல்வீடியோ இன்று காலை 11.30
மணிக்கு முதல் வீடியோ வெளியாகியிருக்கிறது.

ஆடியோ கொஞ்சம் சுமார் ரகம்தான்! தமிழில் subtitle கொடுத்து ஈடுகட்டியிருக்கிறார்கள்.

அரசியல் சித்துவிளையாட்டுகளை இப்படி அம்பலப் படுத்துவதால் என்ன மாற்றங்கள் நிகழும் அல்லது நியாயம் கிடைக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். தா கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்சா என்று பலகொலைகளில் சம்பந்தப்பட்டிருப்பது யாரென்பது பொதுவெளியில் தெரிந்த விஷயமாக இருந்தும் கூட, இங்கே என்ன நடந்துவிட்டது?     

இருந்தாலும் ரங்கராஜ் பாண்டே முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை! 

நல் வாழ்த்துகள் ரங்கராஜ் பாண்டே!

தொடர்புடைய  இன்னொரு பதிவு: 

உள்ளடி வேலைகள்! கான்ஸ்பிரசி தியரி! நம்மூர் ஊடகங்கள்!

     

4 comments:

  1. எல்லா இடங்களிலும் உளவாளிகள் இருப்பார்கள் போல...

    ஆனால் இது அப்படியே காணாமல் போகுமே தவிர பெரிய பின்விளைவு ஏதும் வருமா, தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த விவகாரம் எப்படிப்போகும் என்று கணிக்க முடியவில்லை. திமுக தரப்பில் டமாரங்கள் எண்ணிக்கை அதிகம் .பூசி மெழுகவும் மூடி மறைக்கவும் வசதி வாய்ப்புள்ள தரப்பு அது.

      Delete
  2. Paid News என்று ஒன்று உண்டு. சம்பந்தப்பட்டவர்கள் பற்றி ஏதாவது செய்தி - சாதாரண செய்தி- தினமும் வந்துகொண்டே இருக்குமாம். எங்கோ படித்தேன் சமீபத்தில். இங்குத்தானோ!

    ReplyDelete
    Replies
    1. #paidnews பற்றி 2009 இலிருந்தே எழுதிவருகிறேனே ஸ்ரீராம்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)