வெற்றிகொண்டானை திமுகவினர் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்களோ இல்லையோ, கழகங்களோடு ஒட்டிக்கொண்டு திரிகிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் காரர்கள் (CPI), அவர் பேச்சை மனப்பாடமே செய்து ஒப்பிப்பார்கள் போல இருக்கிறது! கம்யூனிஸ்ட் கட்சி இப்படியெல்லாம் சீரழிந்து போனதைப்பார்க்க உண்மையிலேயே வயிற்றெரிச்சலாக இருக்கிறது!
இது திண்டுக்கல் இசுடாலின் நிகழ்ச்சியில் ஒரு CPI காரர் அவர்பாட்டுக்குப் பேசிக்கொண்டிருக்கிறார், உபிக்கள் பத்திரிகையாளர்களோடு கைகலப்பு என்று போய்க்கொண்டிருக்கிற அவலம் காணொளியாக!
இது ஒருபக்கம் என்றால் காங்கிரசின் கபில் சிபல் நேற்று வெளியிட்ட ஒருமுப்பதுநிமிட வீடியோ, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பிஜேபி ஆசாமி ஒருவர் 40% கமிஷன் கொடுத்து ரூ 5 கோடி மதிப்புள்ள நோட்டுகளை மாற்றினார் என்ற ரீதியில் இருக்க, பிஜேபி கொதித்தெழுந்திருக்கிறது. மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இந்தமாதிரி பொய்யான விவரங்களைப் பரப்புகிறவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
பொய்யான தகவல்களைப் பரப்புவதே வாடிக்கையாகவும் பிழைப்பாகவும் வைத்திருக்கிற எத்தனைபேர் மீது அப்படி சட்டநடவடிக்கை எடுத்துவிட முடியுமாம்? அதுவும் இப்போதிருக்கிற நீதிமன்ற நடை முறைகளில்? ச்சும்மா டமாஷ் பண்ணாதீங்க மேடம்!
ஓசிச்சோறு வீரமணியையும் அவர் தாங்கிப் பிடிக்கிற திமுகவையும் முழுமையாக நிராகரிப்பதற்கு இந்த ஒரு விஷயமே போதாதா?
அடடே! மதி என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டுமானால் சின்ன ஜாமீன் கார்த்தி தன்னுடைய சொத்துமதிப்பு, குற்றப் பின்னணி பற்றி வேட்புமனுவோடு பிரமாண பத்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டுமே!
காதுல பூ! காதுல பூ! என்கிறார்களே, அதை நம்மூர் வேட்பாளர்கள் சொத்துவிவரம் சொல்வதில் இருந்து தான் புரிந்து கொள்ள வேண்டுமோ?
திமுக, காங்கிரஸின் தில்லுமுல்லுக்களைப் படிக்க ஆரம்பித்தாலே தூக்கம் வராது. பொய்யும் புனைசுருட்டும் கொண்ட கூட்டம். அதற்கு கம்யூனிஸ்டுகள் முட்டுக்கொடுக்கிறார்கள். நிச்சயம் தமிழ்நாடு விளங்கிவிடும்.
ReplyDeleteஎப்படியிருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் என்று பல தலைவர்களை நினைத்து வருத்தப்படத்தான் வேண்டியிருக்கிறது. ராமச்சந்திர குகா ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னமாதிரி வலதுசாரிகள் வளர்ந்து வருவதைவிட, check and balance செய்வதற்குத் தகுதியில்லாமல் இடதுசாரிகள் தேய்ந்துவருவது அதிகம் கவலைப்பட வேண்டிய விஷயமாகத்தான் எனக்குப் படுகிறது.
Deleteஇதற்கு முக்கியக் காரணம் கூட்டணிதான். எப்போ ஒரு கட்சியோட கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திக்கிறாங்களோ அப்போ அவங்க, நியாயத்தைப் பேச முடியாது. ஜிங் சக் கோஷ்டிலதான் சேரணும் இல்லைனா, அவங்க வேற கட்சியோட கூட்டணி சேரும்போது முந்தைய கட்சியோட தவறுகளைச் சொல்வாங்க. அதனால அவங்க கருத்துக்கு மரியாதை இருக்காது.
Deleteஎன்னைக்கேட்டால் தமிழ்நாட்டில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக தவிர வேறு கட்சிகளுக்கு வேலை இல்லை, தேவை இல்லை. அப்புறம் இவங்களுக்குள்ள கூட்டணி ஏற்படறதும் தடை செய்யப்பட வேண்டும்.
இப்படி நீங்களும் நானும் சொல்லிவிட்டால் போதுமா? தேர்தல் சீர்திருத்தங்களில் தான் இது மாதிரி உதிரிகளை வடிகட்டுகிற மெக்கானிசம் உருவாக்கப்படவேண்டும். இங்கே உதிரிகளும் சரி பெருங்கொண்ட கட்சிகளும் சரி வாரிச் சுருட்டுவதில் தானே அக்கறை காட்டுகிறார்கள்? :(((
Delete