Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

Tuesday, January 5, 2021

கொஞ்சம் சிந்திக்கணும் ::: சிந்திக்க வைத்த சில பகிர்வுகள்!

எதை எதையோ வாசிக்கிறோம். ஆனால் சில பகிர்வுகள் மட்டுமே படித்ததில் பிடித்ததாகவும், கொஞ்சம் யோசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படி படித்ததில் பிடித்ததாக சில பகிர்வுகள்!


பானு கோம்ஸ், நமக்கு ஏற்கெனெவே மிகவும் அறிமுகமான ஒரு சமூக ஆர்வலர்! இந்த வீடியோ இரண்டு மாதம் பழசு! ஆனாலும் சில முக்கியமான விஷயங்கள் தெரிந்து கொள்வதற்கு இருக்கின்றன.

கேரளாவில் .....புதிய வீரியம் மிக்க சீன வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருக்கும் அதே வேளையில்..பறவைக் காய்ச்சலும் பரவி வருகிறது - செய்தி
கேரளாவில் இருக்கும் அதிக தொற்று பரவலை கருத்தில் கொண்டு ....வைரஸ் தடுப்பு மருந்தில் ...கேரளாவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேரள அரசு... மத்திய மோடி அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக இன்னொரு செய்தி.
தொற்று தடுப்பில் கேரளா தான் இந்தியாவிற்கே & உலகத்திற்கே கூட உதாரண மாநிலம் என்றெல்லாம் பரப்புரை செய்தவர்களைத்தான் ஒருவரையும் காணோம் !!
1.1K
72 கருத்துக்கள்
246 பகிர்வுகள்


இது சுடச்சுட முகநூலில் இன்றைக்குப் பார்த்தது. காணாமல் போனவர்களைப் பற்றிய கிண்டல், நம்மூர் இடதுசாரிகளின் சித்தாந்த வறட்சி, பொய்த் தகவல்களில் மட்டுமே ஜீவிக்க முடிகிற அவலம் என்று நிறைய விஷயங்களை யோசிக்க வைத்தது!

ஜனநாயகம் என்பது வரம். இதை புரிந்து கொள்ள, இதை எதிர்மறையாக சொன்னால்தான் தெரியும்.
சௌதி போன்ற மன்னராட்சி நாடுகளில், இப்படியான பேச்சு எழுத்து உரிமைகள், ஏட்டளவில் கூட இல்லை. நிறைய எழுத இருக்கிறது.. பின்னர் எழுதலாம்.
சீனாவில் எந்த உரிமையும், சாதாரண, மத்திய, பணக்கார ஆசாமிகளுக்கு, ஏன் எவருக்குமே கிடையாது. எல்லாம் மேலே உள்ளவன் பார்த்துக்கொள்வான் என்பதாக, எல்லாம் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோவுக்கு மட்டும்தான். உள்ளூர் வாசிகளுக்கே இந்த கதி.. இதில் வெளிநாட்டு ஆசாமி இறங்கினால், திரும்பி ப்ளைட் ஏறும் வரையில் நிழலாய் போலீஸ் தொடரும். எங்கு தங்கினாலும், போலீஸூக்கு தகவல் போய்க்கொண்டே இருக்கும். சாதாரணமாக தங்கி இருந்தாலே, இந்த கதி. ப்ளாக்கிங், வ்ளாக்கிங்க்கெல்லாம் பண்ணினால்.. கதகளிதான் சாரி தினம் களிதான்.
இப்போது சீனாவில் ஃபேஸ் ரெகக்னிஷன் சிஸ்டம், 20 கோடி கேமராக்களால், படம் பிடிக்கப்பட்டு, அந்த ஆசாமிகளின் ஸோஷியல் க்ரெடிட் சிஸ்டத்தில்.. கைவைத்து, 24 மணி நேரமும் மக்களை உளவு பார்க்கிறது சீன அரசாங்கம். இதைப்பற்றி நம் உள்ளூர் கம்மிகளுக்கு தெரியுமா என்பது கூட சந்தேகம்தான். சீனாவில் வீட்டுக்குள் இன்னும் அரசு கேமரா வைக்கவில்லை அவ்வளவுதான்.
கோரோனா பற்றி உண்மையைச்சொன்ன டாக்டர், கொரோனாவில் செத்ததாக செய்தி. இதைப்பற்றி சொன்ன, பத்திரிக்கை நிருபர்கள், சீனாவின் செல்லில். இது அலிபாபாவின் ஜாக் மா வாக இருந்தாலுமே கூட இப்படித்தான் பொருந்தும்.
ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாக் மாவின் அலிபாபா ஷேர், மற்றும் ஆன்ட் கம்பெனி விலைகள் தடாலடியாய் சரிந்தது. ஆன்ட் கம்பெனியின் அமெரிக்க ஐபிஓ என்ட்ரியை.. ஷீ ஜின்பென்னின் பெர்ஸனல் ஆர்டரால் நிறுத்தி வைத்து.. நான்தான் எஜமான்டா என்று ஜாக்மாவிற்கு நிலைநிறுத்தியிருக்கிறார். அடிப்படையாய் மக்கள் மனத்தில் ஒரு பயத்தை உருவாக்குவதுதான்.. ஜனநாயகமில்லாத கம்யூனிஸ்ட் ஆட்சியோ, இஸ்லாமிய மன்னராட்சியோ செய்யும் முதல் காரியம்.
அலிபாபாவின் ஜாக்மா என்ன சொன்னார்..?
ஜாக்மா சொன்னது, வங்கிகள், ஈடுகள் இல்லாமல் கடன் தரவேண்டும்.. சீனாவின் பைனான்ஸ் ரெகுலேட்டர்ஸ் ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட சொல்கிறார்கள் எப்படி முடியும்..? இப்படியெல்லாம் தினம் இங்கு நாங்கள் பேஸ்புக்கில் எழுதுகிறோம் என்பவர்கள்.. மனசாட்சியை லேசாக அசைத்துப்பாருங்கள். இதை சொன்னதற்கே.. ஜாக்மாவின் அலிபாபா மீது ஆன்டி ட்ரஸ்ட்.. ஆன்ட் கம்பெனியின் அமெரிக்க ஐபிஓ அம்பேல். இப்போது ஜாக்மாவையே காணவில்லையாம்.
இந்தியாவில்.. ஆதார் எதிர்ப்பிலிருந்து.. தீவிரவாத வரவர ராவ் வரைக்கும்.. சிஏஏ வரை எதிர்ப்பது இப்படியான கம்மிகள்.. கேட்டால் பாஸிஸ ஆட்சி என்பார்கள்...
கர்ர்ர்ர்... நன்றி -
Prakash Ramasamy
ஜி

விரிவாகத் தெரிந்து கொள்ள மேலே ஒரு செய்தித் தொகுப்பு 

முகநூல் இன்னமும் வம்பர்களுக்கானதுதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனாலும், இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுதான் விஷயம் என்று சுளீரென்று உறைக்கிற மாதிரியான பகிர்வுகளும் இருக்கத்தான் சேய்கின்றன. 

மீண்டும் சந்திப்போம்.              

Monday, October 28, 2019

இருக்கும் இடம் தேடி வரும் செய்திகள்!

ஹிந்து ஆங்கில நாளிதழை விடுங்கள்! அது சிவப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு  மவுன்ட்ரோடு மாவோ என் ராமால் நடத்தப்படுகிற ஒருமாதிரியான கலப்படம்! சீனா பற்றியும் பேசுவார்கள்! உள்ளூரில் சீனாதானா மாதிரி கடைந்தெடுத்த ஊழல் ஆசாமிக்கு  ஜாமீன் கேட்டுத் தலையங்கம் கூட எழுதுவார்கள்! ஆனால் நம்மூர்  ஆங்கில  ஊடகங்கள் (TOI, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மாதிரி) சீனாவின் உள்ளூர் அரசியல் விவகாரங்களையும் அவ்வப்போது கவனித்துச் செய்திகளும் போடுகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியப்படுத்துகிற சமாசாரம்! இங்கே தமிழில் திமுகவின் காலடியைச் சுற்றிவந்து செய்திபோட்டால் போதுமென்று கிடக்கிற ஊடகங்களுக்கு இது நிறையவே வித்தியாசமானது இல்லையா? 

இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் 
முழு அளவிலான கூட்டம். ப்ளீனம் என்று சொல்வார்கள்.
இன்று திங்கள் தொடங்கி வியாழன் வரை நான்கு நாட்கள் 
கூடி விவாதிக்கப்போகிறார்கள் என்பதில் என்ன 
அத்தனை சுவாரசியம் இருக்கிறது? 

ஹிந்து ஆங்கில நாளிதழ் PTI செய்திகளை மேற்கோள் காட்டி Chinese Communist Party kicks off delayed conclave to discuss Hong Kong protests, trade war என்று தலைப்பிலேயே ரொம்பவும் பில்டப் கொடுத்து சொல்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம், வரைவுத் திட்டம் இவையெல்லாம் மிக மிக அலுப்பூட்டுகிற சாங்கியம். இதற்கு முன்னால் 2018 பிப்ரவரியில் நடந்த இதேபோன்ற கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஷி ஜின்பிங் ஆயுட்காலம் உள்ள வரை சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அதன்மூலம் சீன அதிபராகவும் நீடிப்பதற்கும்  வழிவகை செய்யும் சாஸனத் திருத்தம் செய்யப்பட்டது. மா சேதுங், டெங் சியாவோ பிங் இருவருக்குப் பின்னால் சீனாவின் Paramount Leader அந்தஸ்தும், ஷி ஜின்பிங்கின் சிந்தனைகள் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதிய வேதமாக அறிவிக்கப்பட்டதுமான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதால், இந்தக் கூட்டத்திலாவது சீனப் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும், விவாதம் நடந்து வெளியே தெரிய வந்தால் மட்டுமே எதிர்பார்ப்புக்களை எந்த அளவுக்கு இந்த ப்ளீனம் நிறைவேற்றப் போகிறது என்பதும்  தெரியவரும். The official Xinhua News Agency said the party’s 19th Central Committee opened its fourth plenary session Monday. It said Xi Jinping, the party’s leader and China’s president, discussed a draft document on strengthening party rule but gave no details.என்கிறது வாஷிங்டன் போஸ்ட் செய்தி  


நல்ல நாளிதழ்தான்! வாட்டர்கேட் ஊழல் என்று ரிச்சர்ட் நிக்சன் செய்த தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்ட நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட்! டொனால்ட் ட்ரம்ப் மீதுள்ள வெறுப்பு அபு பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதில் மிக விசித்திரமான obituary செய்தி வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது!


பிரிட்டிஷ் அரசியலும் சரி, அதன் அரச குடும்பத்தின் சர்ச்சைகளும் சரி மிக மிக விசித்திரமானவை. #Brexit  போரிஸ் ஜான்சன் வேண்டுகோளுக்கு  இணங்க ஐரோப்பிய ஒன்றியம், வருகிற ஜனவரி 31 வரை காலக்கெடுவை நீட்டித்திருக்கிறது. ஆனால் போரிஸ் ஜான்சனின் கனவுகளுக்கு வரவிருக்கும் பொதுத்தேர்தல் இடம் கொடுக்காதாமே! சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று எந்த நேரத்தில் மார்தட்டிச் சொன்னார்களோ?! இன்று கூனிக்குறுகிப்போய்க் கொண்டே இருப்பது காலத்தின் கட்டாயம்! 

        
Westminster தேர்தல்முறை  அரசியலின் அபத்தங்களை இங்கே மகாராஷ்டிராவில் சிவசேனா  மிகநன்றாகப் பயன்படுத்திக் கொண்டு ரவுசு காட்டுவதும்  பிஜேபி தொடர்ந்து அமைதி காத்து வருவதும் இங்கே இன்றைய அரசியலின் விசித்திரம்! 


இன்று கந்த சஷ்டி. திருச்செந்தூர் சூர சம்ஹாரம்.  

மீண்டும் சந்திப்போம். 

Friday, March 15, 2019

இந்தியா பாகிஸ்தான் சீனா! புதிய சவால்கள் #2

ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை பயங்கர வாதியாக அறிவிப்பதில் ஐநா பாதுகாப்புசபையில் சீனா நான்காவது முறையாகத் தனது வீட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டிருப்பதில் இங்கே காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காண்டிக்கும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கும் ஏக மகிழ்ச்சி.


அவர்கள் பார்வையில் இந்திய பிரதமர் சீனாவுக்கு முன்னால் பயந்து நிற்கிற பிரதமர், அவ்வளவுதான்! தேசத்தைவிட அவர்களுக்குக் கட்சி அரசியல் தான் முக்கியம். National Conference leader Omar Abdullah said on Thursday the BJP cannot claim to have been tough on terror as Prime Minister Narendra Modi "surrendered" to China on Masood Azhar இது News 18 செய்தி.  

ஆனால்  உண்மை நிலவரம் அப்படித் தானா?


The United States, France, and Britain were behind the most recent move (Russia has also been very supportive) and the "technical hold" means China has warded off the issue for three months. And then, if it wants a second "hold," more breathing space for another six months, after which a decision is mandatory. Then, China will have to say "Yes" or "No". Will it support the rest of the 15-member UNSC or will it support Pakistan's Masood Azhar? But are these countries, or for that matter, India, which is not a member of the UNSC, ready to wait? This time, they are not. என்கிறது டைம்ஸ் நவ் செய்தி.

பாகிஸ்தானோடு சேர்ந்து  சீனாவும் உலகின் இதர நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுகிற சூழல் இப்போது உருவாகி வருகிறது. இடதுசாரி வார இதழ் BLITZ இன் துணை ஆசிரியராக இருந்து, அப்புறம் வாஜ்பாய், அத்வானி இருவருக்கும் நெருக்கமாக இருந்து இப்போது பிஜேபி எதிர்ப்பாளராக ஆகியிருக்கும் சுதீந்த்ர குல்கர்னி NDTVயில் Best Way To Deal With China? Befriend Pakistan என்று நக்கலாகத் தலைப்பிட்டு உபதேசம் எழுதுகிறார். 

இப்படி இங்குள்ள ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் எதிர்மறையாய்ச் செயல்படுகிற விதம் குறித்து இங்கே இந்தியாவின் எதிரிகள் யார்? நமக்குள்ளேயே இருக்கிறார்களே! பதிவில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சீனா போட்டுவரும் முட்டுக்கட்டை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் இப்படிச் சொல்கிறது. This episode is not the end of the matter for India. The listing definitely would have been a diplomatic victory, but the unsuccessful effort does not mean that Masood Azhar is not a terrorist in the eyes of the world. In fact, just the opposite, as seen from the number of countries that supported the proposal. Each of those non-permanent members is a representative of its region in the Security Council. No one doubts that the JeM is headquartered in Pakistan, and that Azhar is based there too. India has succeeded in making clear both the JeM’s role in the February 14 Kashmir bombing, and its own intention of not holding back on exercising a military option against terrorist groups based inside Pakistan. 



இது டைம்ஸ்  ஆப் இந்தியா செய்தியில் இருக்கும் படம். சீனா தொடர்ந்துபோட்டுவரும் முட்டுக்கட்டை அதற்கே பாதகமாகக் கூட மாறலாம். சீனா தன்னுடைய சொந்தநலன்களைப் பாகிஸ்தானுக்காகக் காவு கொடுக்காது என்பது 1965 இந்தியா பாகிஸ்தான் போர் முதல் சென்றமாதம் பாலாகோட்  JeM பயிற்சிப்பட்டறை மீது இந்தியா எடுத்த நடவடிக்கைவரை வெளிப்பட்டதே!

Days after pledging to designate Pakistan-based Jaish-e-Mohammed chief Masood Azhar as a global terrorist at the United Nations, France has sanctioned him and frozen his assets on its soil. என்று முதலடியை இந்தியாவுக்கு ஆதரவாக பிரான்ஸ் எடுத்திருக்கிற செய்தியை இன்றைய Hindu நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

அப்படியானால் பாகிஸ்தான்......?


கேசவ் இன்று வரைந்த கோடுகளே சொல்கிறதே!


அக்கம் பக்கம்! என்ன சேதி! வலைப்பக்கங்களில் இன்று வெளியான பதிவு இது. பிடித்திருந்தால் புக்மார்க் செய்துகொள்ளுங்கள்! பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்!   

கொஞ்சம் வரலாறு! சீனா, நேரு, நட்வர் சிங்!

கே நட்வர் சிங், இந்திய வெளியுறவுத் துறைப் பணியில்,முப்பத்தோரு வருட காலம் பணி புரிந்து விட்டுஒய்வு பெற்றபிறகு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர். 1956-1958கால கட்டங்களில் சீனாவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தவர்பிறகுஅமெரிக்காயுனிஸெஃப் என்று பல இடங்களில் பணியாற்றிய பிறகுகடைசியாக 1984 இல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர்

இங்கே சாகும் தருவாயில் காசி நகரில் கங்கைக்கு அருகில் ஒண்டினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கைபணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியில் ஒண்டிக் கொள்வது எதற்காக, காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் தேவைப்படுவது எதற்காக என்பதை நான் விலாவாரியாகச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை அல்லவா!

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்நேருவின் காலத்தில் நட்வர் சிங் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார்சீனாவிலும் பணியாற்றியிருக்கிறார்அந்த நேரத்து அதிகாரபூர்வமான நிலையைநிலவரத்தை அறிந்தவர் என்பது தான். மற்ற அரசியல் வியாதிகளைப் போல ஒரு தகுதியுமில்லாமலேயேவாய்க்கு வந்ததைப் பேசி அதுவே இலக்கியம்மொழிக்கு இலக்கணம் என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிற கூட்டத்தோடு சேர்த்து விட முடியாது.

சீனா டயரி என்று நட்வர் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.ரூபா அண்ட் கோ வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் மீதான விவாதங்களில் பேசும்போது இந்திய சீன யுத்தத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்தார்.அது கீழே உள்ள சுட்டியில்! 


Former External Affairs Minister K Natwar Singh on Tuesday regretted that India has not yet comprehensively analysed the reasons behind the 1962 war with China, saying such an exercise was "really necessary."

Speaking at a discussion on his recent book 'My China Years -- 1956-88, he touched upon various phases of Sino-India relationship in the last 60 years and felt things would have been different had Rajiv Gandhi won the 1989 elections.

"Why 1962 happened. No serious analysis of it took place on our side," Singh said indirectly criticising Government's secretive policy in revealing details of the war.

About the war with China, he said "Mao-Tse Tung decided to teach India a lesson after they felt that we were encroaching on their land."

India missed an opportunity to resolve the issues with China in 1960 as the country "did not understand the power game", the former minister said, without elaborating on his observation.

On the border dispute, he said Tawang did not figure in the map of India in 1953.

திரு நட்வர் சிங் சில அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறார்1962 யுத்தம் ஏன் நிகழ்ந்ததுநம்முடைய தரப்பில் பிரச்சினையை ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியது ஏன்?

அடுத்து நட்வர் சிங் எழுப்பும் ஒரு முக்கியமான பிரச்சினை 1960இல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அன்று நிலவிய பலப்பரீட்சையை புரிந்து கொள்ளாமல் இந்தியா தவற விட்டு விட்டது என்பது தான்.இதைப் பற்றி மறந்து கூட இந்திய அரசோகாங்கிரஸ் கட்சியோ இன்றுவரை எதுவும் பேசுவது இல்லைநட்வர் சிங்கும் இதைப் பற்றி விலாவாரியாக எதுவும் கூறாமல் வாய்ப்பை நழுவ விட்டு விட்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்
படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கி படிக்கலாம்
இந்திய சீன உறவில்திபெத்திய பிரச்சினை பெரும் விரிசலை ஏற்படுத்தியது போகபிரிடிஷ்காரர்கள்இந்திய சீன எல்லைகளை நிர்ணயிப்பதில் மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டிருந்ததும் அடுத்த பிரச்சினைக்கான விதையாக வீரியத்தோடு கிளம்பியது.

1960 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப்பிரதமர் சூ என் லாய் பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துஅதாவது அக்சாய் சின் பகுதியை இந்தியா விட்டுக் கொடுப்பதுபதிலுக்கு சீனா அருணாச்சல பிரதேசம் என்று தற்போது அழைக்கப் படும் பகுதி மீது உரிமை கொண்டாடாமல் இருப்பது என்ற மாதிரி எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது,நேரு அதில் அதிக ஆர்வம் காட்டவில்லைஅப்படிச் செய்தால்,நான் இங்கே பிரதமராக இருக்க முடியாது என்று சொன்னதாகவும் ஒரு குறிப்பு உண்டுநேருவின் அணுகுமுறை,தங்களை அவமதிப்பதாக சீனா கருதியதும்நேருவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே யுத்தம் தொடங்கப் பட்டதாகவும் தகவல்கள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்தன 

இதைத் தான்நட்வர்  சிங்என்னவென்று விவரித்துக் கூறாமல்1960 வாக்கிலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு வந்ததைத் தவற விட்டு விட்டது என்று மட்டும் சொல்கிறார்.

(இதே மாதிரி 1948 இல் பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த நேரம், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், நேருவிடம் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளலாம் என்று வேண்டிய போது,  "joint defence..! against whom?" என்று நக்கலாக நேரு நிராகரித்ததாகவுமே கூட ஒரு செய்தி உண்டு. அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே, பாகிஸ்தான் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல், இன்று வரை ராணுவம் நேரடியாகவோ, அல்லது தங்களது பொம்மை அரசை வைத்தோ தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது)

ஐம்பத்தேழு ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட இந்திய சீன எல்லைப் பிரச்சினை ஒரு போரில் முடிந்தது ஏன் என்பதைப் பற்றியோஅரசு இயந்திரம் மரத்துப்போன ஜடமாகஅரசியல்,ராணுவ ரீதியாகராஜதந்திர ரீதியாக தயாராக இல்லாமல் இருந்த கேவலத்தைப் பற்றியோ இன்றைக்கும் கூட ஒரு சரியான விமரிசன அணுகுமுறை இல்லைஇந்திய அரசும் சரிகாங்கிரஸ் கட்சியும் சரி இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு மூடு மந்திரமாக வைத்திருக்க முடியுமோஅந்த அளவு மூடி வைக்கவே விரும்புவது வெளிப்படை.

எவரோ செய்த முட்டாள்தனத்துக்கு எவரையோ பலிகடா ஆக்கி விடுவது காங்கிரஸ் கட்சி அன்றையிலிருந்து இன்றைக்கும் செய்து கொண்டிருக்கும் உத்திசீனாவிடம் கேவலமாக அடிவாங்கியதில் மக்களிடம் எழுந்த கோபத்திற்கு பலிகடாவாக வி கே கிருஷ்ண மேனன் ஆக்கப் பட்டுஅவரும் பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்

நேருவுடைய பிரம்மாண்டமான சமாதானப் புறா இமேஜ் வெறும் காற்றடைத்த பலூன் தான் என்பதை ஒரு சின்ன ஊசிக் குத்திலேயே சீனா நிரூபித்த பரிதாபத்தை எடுத்துச் சொல்ல, நேருவுக்குப் பக்கத்தில் எவருமே இல்லை.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பாரிலானுங் கெடும்

தவறு செய்யும் பொது அதை இடித்துரைத்துசரியான பாதையைக் காட்டுபவரைத் துணைக் கொள்ளாத அரசன்,கெடுப்பதற்கென்று எவருமில்லாமலேயே கெடுவான் என்ற வள்ளுவர் கூறும் வாழ்வியல் உண்மைக்கு நேருவுடைய அன்றைய கையைப் பிசைந்து கொண்டு நின்ற நிலையே சரியான சமீப காலத்து உதாரணம் 

அதைவிடக் கேவலம்சீனப்போர் முடிந்து ஒரு வருடம் ஆன பின்னாலும் கூடஅவர் சரியாகப் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு "The efficacy of nonviolence is not entirely convincing" என்று ஒரு பேட்டியில் சொன்னதே சரியான நிரூபணம்.

ஆயுத பலமோஎதிரியை இனம் கண்டுகொள்ளும் பக்குவமோ இல்லாத பாமர மக்களைசுதந்திர வேட்கை கொள்ளச் செய்வதற்கும்அந்நியர் ஆட்சியை எதிர்த்து உறுதியாக நிற்பதற்கும்அப்பாவி ஜனங்களை ஆயுத பலம் கொண்ட மிருகத்தனமான அரசு இயந்திரத்தை செயலற்றுப்போகச் செய்யமகாத்மா காந்தி சாமர்த்தியமாகக் கையிலெடுத்த ஆயுதம் சாத்வீக மறுப்பு எனும் சத்தியாக்கிரகம்தடியால் அடித்து மண்டையை பிளந்து ரத்தம் கொட்டிய போதிலும்எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்த சத்தியாகிரகிகளைக் கண்டு தடியெடுத்தவன் பயந்தான்அந்த சூழ்நிலையே வேறு!

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பார்த்த நினைவு வருகிறதாபாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு முன்னால் பீரங்கிகளோடு முற்றுகை இட்ட வெள்ளையர் படையை எதிர்த்து வெற்றிவேல்வீர வேல் என்று உணர்ச்சி கொப்பளிக்க போர் புரிய வந்த படை,நவீன ஆயுத பலம், பழக்கமில்லாத போர்முறைக்கு முன்னால்   பீரங்கி குண்டுகள் முழங்கவுமே காணாமல் போகும் காட்சி நினைவுக்கு வருகிறதா?

ஒரு அரசைத் தலைமை ஏற்று நடத்துபவன்அதே மாதிரி நின்றால்இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு போய்ச் சமாதானம் பேசும்போதுதியாகு காறித் துப்புவது போலத் தான் நடக்கும்அப்படித்தான் நடந்தது!

ஆக காந்தியோடு நீண்ட காலம் இருந்தும் நேருவுக்கு காந்தியின் மிக எளிமையானநேர்மையான உத்திகளும்காந்தீயமோ அகிம்சைப் போராட்டம் என்றால் என்ன என்பதோ புரியவில்லைஐரோப்பிய நாகரீகத்தில் மிகவும் ரசிகராக இருந்துவெள்ளையர்களோடு உறவாடின போதிலும்,அவர்களிடமிருந்து தந்திரத்தையும் நவீன உத்திகளையும் கற்றுக் கொள்ளவும் தெரியவில்லைஇந்த லட்சணத்தில்உலக சரித்திரத்தை வெறும் ஏட்டளவில் கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டுஅதைத் தன் மகளுக்கும் கடிதங்களில் கற்றுக் கொடுக்க முனைந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது?

இதே மாதிரி லண்டனிலேயே பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்துஆங்கிலம் பேசும் மக்களிடம் உணர்ச்சி பொங்க இந்திய விடுதலைக்காக ஆதரவுப் பிரசங்கங்கள் மட்டுமே நிகழ்த்துவதில் வல்லவராக இருந்த விகே கிருஷ்ண மேனன்.இன்னொரு ஆங்கிலேய நாகரிக ரசிகர்நேருவுக்கு ஏற்றார்போலசரியான ஜாடிக்கேற்ற மூடியாக வந்து அமைந்ததை என்னவென்று சொல்வது?

இந்த இரண்டு நபர்கள்தங்களுடைய ஐரோப்பிய ஞானத்தைக் கொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தார்கள்ஆங்கிலேயர்கள் விட்டுப்போன ஐசிஎஸ் எச்சங்களுடைய உதவியுடன்இந்தியாவைச் சுற்றியிருந்த சூழ் நிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே கொள்கைகளை வகுத்தார்கள்முதல் சோதனை 1948 இல் பாகிஸ்தானிய காஷ்மீர் ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்தது

அங்கிருந்தாவது சரிசெய்துகொள்ளும் போக்கு தொடங்கியிருந்தால்நேரு என்ற ஷோக்குப்பேர்வழிகாந்தியின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அரசியல் வாதியும் ஆன மாதிரி,ஒரு ராஜதந்திரியாக உயர்ந்த நிலையாகவும் மாறியிருக்கும்

1951 இல் திபெத்தை சீன ராணுவம் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது அக்கினிப் பரீட்சைக்குநேருவின் அயலுறவுக் கொள்கைஉள்ளானதுதலாய் லாமா தன்னுடைய ஆதரவாளர்களோடு இந்தியாவுக்கு ஓடி வருகிறார்ஒரு மதத் தலைவர் என்ற முறையில்மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக முடிவெடுத்திருந்தால் அது,சோதனையாக இல்லாமல்சாதனையாகவும் மாறியிருக்கும்!திபெத் சீனாவின் ஒரு பகுதிதான் என்று வெளிப்படையாக இந்திய அரசு ஒப்புக் கொள்வதற்கே அடுத்து பதினேழு வருடங்கள் தேவைப்பட்டனஅப்போது கூடஇரட்டை நாக்குடனேயே திபெத் பிரச்சினை அணுகப்பட்டது

நேருவின் கண்களை அந்த கால கட்டத்தில்கண்முன்னால் தெரிந்த யதார்த்த உலகைப் பார்க்க விடாமலும்புரிந்துகொள்ள விடாமலும்வெறும் கற்பனாவாதியாகவே இருக்கச் செய்தது எது என்று இன்னமும் எனக்குப் புரியவே இல்லை 

சோஷலிசக் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கனவு காண ஆரம்பித்த நேருவிழித்துக் கொள்ளவே இல்லையோ என்றுகூட சமயங்களில் அவரைப் பற்றி அங்கேயும் இங்கேயும் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவதுண்டு.

தன்னுடைய பகல் கனவு குரூரமாகக் கலைக்கப் பட்டு,சமாதானப் புறா இமேஜும் பறிபோய்மனமுடைந்த நிலையில் நேருவின் மரணம் நேர்ந்தது.

தயிர்வடையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீதேறி நரகத்துக்குக் கூடப் போகலாம்!" இந்த வார்த்தை நினைவுக்கு வரும் போதெல்லாம்நேருவின் கதை சொல்லும் பாடம் தான் எனக்கு நினைவுக்கு வரும்.

அப்புறமாவது காங்கிரஸ் கட்சியும்இந்திய அரசும் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார்களா என்று பார்த்தால்இன்று வரை அதற்கான அறிகுறி ஒன்றுமே புலப்படவில்லை!. 


இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எந்த அர்த்தமுமில்லாமல் போனதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம்சுப்ரமணிய சாமி என்றாலே ஒரு கோமாளி,ரீல் மன்னன்முட்டையடி வாங்குவதற்கே பிறந்தவர் என்றமாதிரி நக்கலான எண்ணம் உங்களுக்கு இருந்தால்அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை 

ஆனாலும்சீனப் பிரச்சினையில்இங்குள்ள அரசியல்வாதிகள் எவரையும் விட அதிகம் அறிந்தவர் என்ற முறையில் அவர் எழுதிய கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.

பிரச்சினையை இன்னமும் விரிவாகப் புரிந்துகொள்ள அவை உதவும்.

திரு.நட்வர் சிங், அவருடைய புத்தகம் குறித்து எழுதிய  இந்தப் பகுதிகள் ஏற்கெனெவே எழுதியதன் மீள் பதிவு தான்! கேள்விகள் அப்படியே இருக்கின்றன என்பதால்!

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)