பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Tuesday, January 5, 2021
கொஞ்சம் சிந்திக்கணும் ::: சிந்திக்க வைத்த சில பகிர்வுகள்!
எதை எதையோ வாசிக்கிறோம். ஆனால் சில பகிர்வுகள் மட்டுமே படித்ததில் பிடித்ததாகவும், கொஞ்சம் யோசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படி படித்ததில் பிடித்ததாக சில பகிர்வுகள்!
பானு கோம்ஸ், நமக்கு ஏற்கெனெவே மிகவும் அறிமுகமான ஒரு சமூக ஆர்வலர்! இந்த வீடியோ இரண்டு மாதம் பழசு! ஆனாலும் சில முக்கியமான விஷயங்கள் தெரிந்து கொள்வதற்கு இருக்கின்றன.
கேரளாவில் .....புதிய வீரியம் மிக்க சீன வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருக்கும் அதே வேளையில்..பறவைக் காய்ச்சலும் பரவி வருகிறது - செய்தி
கேரளாவில் இருக்கும் அதிக தொற்று பரவலை கருத்தில் கொண்டு ....வைரஸ் தடுப்பு மருந்தில் ...கேரளாவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேரள அரசு... மத்திய மோடி அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக இன்னொரு செய்தி.
தொற்று தடுப்பில் கேரளா தான் இந்தியாவிற்கே & உலகத்திற்கே கூட உதாரண மாநிலம் என்றெல்லாம் பரப்புரை செய்தவர்களைத்தான் ஒருவரையும் காணோம் !!
1.1K1.1K
72 கருத்துக்கள்
246 பகிர்வுகள்
இது சுடச்சுட முகநூலில் இன்றைக்குப் பார்த்தது. காணாமல் போனவர்களைப் பற்றிய கிண்டல், நம்மூர் இடதுசாரிகளின் சித்தாந்த வறட்சி, பொய்த் தகவல்களில் மட்டுமே ஜீவிக்க முடிகிற அவலம் என்று நிறைய விஷயங்களை யோசிக்க வைத்தது!
ஜனநாயகம் என்பது வரம். இதை புரிந்து கொள்ள, இதை எதிர்மறையாக சொன்னால்தான் தெரியும்.
சௌதி போன்ற மன்னராட்சி நாடுகளில், இப்படியான பேச்சு எழுத்து உரிமைகள், ஏட்டளவில் கூட இல்லை. நிறைய எழுத இருக்கிறது.. பின்னர் எழுதலாம்.
சீனாவில் எந்த உரிமையும், சாதாரண, மத்திய, பணக்கார ஆசாமிகளுக்கு, ஏன் எவருக்குமே கிடையாது. எல்லாம் மேலே உள்ளவன் பார்த்துக்கொள்வான் என்பதாக, எல்லாம் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோவுக்கு மட்டும்தான். உள்ளூர் வாசிகளுக்கே இந்த கதி.. இதில் வெளிநாட்டு ஆசாமி இறங்கினால், திரும்பி ப்ளைட் ஏறும் வரையில் நிழலாய் போலீஸ் தொடரும். எங்கு தங்கினாலும், போலீஸூக்கு தகவல் போய்க்கொண்டே இருக்கும். சாதாரணமாக தங்கி இருந்தாலே, இந்த கதி. ப்ளாக்கிங், வ்ளாக்கிங்க்கெல்லாம் பண்ணினால்.. கதகளிதான் சாரி தினம் களிதான்.
இப்போது சீனாவில் ஃபேஸ் ரெகக்னிஷன் சிஸ்டம், 20 கோடி கேமராக்களால், படம் பிடிக்கப்பட்டு, அந்த ஆசாமிகளின் ஸோஷியல் க்ரெடிட் சிஸ்டத்தில்.. கைவைத்து, 24 மணி நேரமும் மக்களை உளவு பார்க்கிறது சீன அரசாங்கம். இதைப்பற்றி நம் உள்ளூர் கம்மிகளுக்கு தெரியுமா என்பது கூட சந்தேகம்தான். சீனாவில் வீட்டுக்குள் இன்னும் அரசு கேமரா வைக்கவில்லை அவ்வளவுதான்.
கோரோனா பற்றி உண்மையைச்சொன்ன டாக்டர், கொரோனாவில் செத்ததாக செய்தி. இதைப்பற்றி சொன்ன, பத்திரிக்கை நிருபர்கள், சீனாவின் செல்லில். இது அலிபாபாவின் ஜாக் மா வாக இருந்தாலுமே கூட இப்படித்தான் பொருந்தும்.
ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாக் மாவின் அலிபாபா ஷேர், மற்றும் ஆன்ட் கம்பெனி விலைகள் தடாலடியாய் சரிந்தது. ஆன்ட் கம்பெனியின் அமெரிக்க ஐபிஓ என்ட்ரியை.. ஷீ ஜின்பென்னின் பெர்ஸனல் ஆர்டரால் நிறுத்தி வைத்து.. நான்தான் எஜமான்டா என்று ஜாக்மாவிற்கு நிலைநிறுத்தியிருக்கிறார். அடிப்படையாய் மக்கள் மனத்தில் ஒரு பயத்தை உருவாக்குவதுதான்.. ஜனநாயகமில்லாத கம்யூனிஸ்ட் ஆட்சியோ, இஸ்லாமிய மன்னராட்சியோ செய்யும் முதல் காரியம்.
அலிபாபாவின் ஜாக்மா என்ன சொன்னார்..?
ஜாக்மா சொன்னது, வங்கிகள், ஈடுகள் இல்லாமல் கடன் தரவேண்டும்.. சீனாவின் பைனான்ஸ் ரெகுலேட்டர்ஸ் ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட சொல்கிறார்கள் எப்படி முடியும்..? இப்படியெல்லாம் தினம் இங்கு நாங்கள் பேஸ்புக்கில் எழுதுகிறோம் என்பவர்கள்.. மனசாட்சியை லேசாக அசைத்துப்பாருங்கள். இதை சொன்னதற்கே.. ஜாக்மாவின் அலிபாபா மீது ஆன்டி ட்ரஸ்ட்.. ஆன்ட் கம்பெனியின் அமெரிக்க ஐபிஓ அம்பேல். இப்போது ஜாக்மாவையே காணவில்லையாம்.
இந்தியாவில்.. ஆதார் எதிர்ப்பிலிருந்து.. தீவிரவாத வரவர ராவ் வரைக்கும்.. சிஏஏ வரை எதிர்ப்பது இப்படியான கம்மிகள்.. கேட்டால் பாஸிஸ ஆட்சி என்பார்கள்...
விரிவாகத் தெரிந்து கொள்ள மேலே ஒரு செய்தித் தொகுப்பு
முகநூல் இன்னமும் வம்பர்களுக்கானதுதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனாலும், இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுதான் விஷயம் என்று சுளீரென்று உறைக்கிற மாதிரியான பகிர்வுகளும் இருக்கத்தான் சேய்கின்றன.
உள்ளூர் கம்யூனிஸ்டுகளை விடுங்கள்! இந்திய ஜனநாயகம் அந்த ஆடுகளுக்கு வாலை அளந்துதான் வைத்திருக்கிறது வெறும் முகநூல் பகிர்வுகளிலேயே முழுவிஷயத்தையும் தெரிந்துகொண்டு விடமுடியுமா? கூடவே கொஞ்சம் விரிவான தகவல்களைச் சொல்கிற வீடியோ ஒன்றைக் கடைசியில் கொடுத்திருக்கிறேனே! பார்த்தீர்களா?
திரு பிரகாஷ் ராமசாமியின் பதிவுகள் எப்போதுமே சுவாரஸ்யமாய் இருக்கும்.
ReplyDeleteஇசுடாலின் கூட செம சீரியசாகக் காமெடி செய்கிறார் ஸ்ரீராம்! அதற்காக..........
Deleteஒரு பகிர்வு சுவாரசியமாக இருப்பது நல்லதுதான்! ஆனால் அதில் கொஞ்சம் விஷயமும் இருக்கவேண்டுமே! அது அல்லவா மிகவும் முக்கியம்!
பிரகாஷின் பதிவு உண்மையைச் சொல்கிறது...ஆனால் நம்மூர் கம்யூனிஸ்டுகள் சீன அடிமைகள் அல்லவா? அவங்க காதில் இது விழாதே.
ReplyDeleteவாருங்கள் நெ.த. சார்!
Deleteஉள்ளூர் கம்யூனிஸ்டுகளை விடுங்கள்! இந்திய ஜனநாயகம் அந்த ஆடுகளுக்கு வாலை அளந்துதான் வைத்திருக்கிறது வெறும் முகநூல் பகிர்வுகளிலேயே முழுவிஷயத்தையும் தெரிந்துகொண்டு விடமுடியுமா? கூடவே கொஞ்சம் விரிவான தகவல்களைச் சொல்கிற வீடியோ ஒன்றைக் கடைசியில் கொடுத்திருக்கிறேனே! பார்த்தீர்களா?