இசுடாலின் தலையெடுத்ததில் திமுகவுக்கு ஆதாயமோ இல்லையோ, மீம்ஸ் தயாரிப்பாளர்கள், கிண்டல் கேலியாக செய்திகளை உருவாக்கும் யூட்யூபர்கள் என நிறையப்பேருக்கு முழுநேர வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தந்திருக்கிறது. சாம்பிளுக்கு இந்த 3 நிமிட வீடியோவைப் பாருங்களேன்!
ஆனால் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா போன்ற பேச்சாளர்கள், காமெடியன்கள் இல்லாத குறையை 2ஆம் கலீஞரும் 3ஆம் கலீஞருமே நிரப்ப முனைந்துவிட்ட மாதிரித் தெரிகிறதே!
#ஸ்டாலின் - எடப்பாடியாரே, என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா ?
#முதல்வர் - நான் ரெடி!
#ஸ்டாலின் - ராயபுரம் தொகுதிக்கு அமைச்சர் ஜெயகுமார் எதுவும் செய்யவில்லை, முந்திரிகொட்டை மந்திரி ?
#ஜெயகுமார் - ராயபுரம் தொகுதியில் என்னோடு போட்டி போட தயாரா, நான் ரெடி !
#நிருபர் - தேர்தலில் போட்டியிடுவீர்களா ?
#குஷ்பு - கட்சி கேட்டுக்கொண்டால் ஸ்டாலினை எதிர்த்தும் போட்டியிட ரெடி !
#ஸ்டாலின் - அண்ணே, என்னணே, எந்த ball போட்டாலும் எல்லோரும் Sixerஆ அடிக்கறாங்க ?
#துரைமுருகன் - தம்பி, போனமா எழுதி் கொடுத்தத தப்பில்லாம ரெண்டு வார்த்தை பேசுனமானு வராம நீங்களே wantedஆ போய் வண்டியல ஏறரீங்க, பேசாம கொஞ்ச நாளைக்கி Hurt retire ஆயிடுங்க, அது தான் நல்லது.
மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்! இப்போ இல்லைன்னா எப்போவுமே இல்லை என்று யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசியவர் ஜகா வாங்கி விட்டார் ஆனாலும் கர்மா துரத்துகிறதே, என்ன செய்ய?
நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வா வா தலைவா என்று கோஷம் போட்டவர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப் பட்டவர்கள் என்று ரஜினி அறிவித்து இருக்கிறார்.
.
ரஜினியும் சரி ரஜினி ரசிகர்களும் சரி அரசியலை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த உளறல்நிதி பேச்சை இன்றுதான் கேட்டேன்! நன்றி!
ReplyDeleteநமக்குள் நன்றியெல்லாம் எதற்கு ஸ்ரீராம்?!
Deleteஊணாநிதி பேசியதை நிகழ்நேரத்திலேயே பார்த்திருந்தாலும், எதற்கு இந்தமாதிரி நபர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று ஒதுக்கித்தள்ளி விட்டேன். ஆனாலும் அந்த முதல் வீடியோவில் எப்படிக் கலாய்த்திருக்கிறார்கள் என்பதுதான் செய்தி, அதனால் பதிவிலும் இடம்.
இரண்டு கழகங்களுமே நிராகரிக்கப்பட வேண்டியவைதான் என்பதற்கான காலம் நெருங்கி வருகிறது.2021 தேர்தலில் சாத்தியமில்லை என்றாலும், சாத்தியமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை