இன்றைக்கு காலையில் மிகவும் ரசித்துப் பார்த்த அரசியல் காமெடி, செய்தி சோனியா காங்கிரசின் தமிழகக்கிளை ஏற்பாடு செய்திருக்கிற வாங்க ஒரு கை பாப்போம் என்கிற வாய்ச்சவடால் நிகழ்ச்சிதான்!
ராகுலோட ஒண்ணா கை கோர்ப்போம் - அட வாங்க ஒரு கை பாப்போம் என்று சொல்கிறார்களே, யாரை ஒரு கை பார்க்கப்போகிறார்களாம்? இவர்கள் கூட்டணி வைத்திருக்கிற திமுக, தனியாகவே தேர்தல் பரப்புரை செய்ய ஆரம்பித்துவிட்டது.புதுச்சேரியில் ஜெகத் ரட்சகனை வைத்துக் கொளுத்திப்போட்ட விஷயத்தை திமுக, அப்படியே உல்டாவாக மாற்றிவிட்டது ஆனாலும் அதிக சீட் கேட்க, வேண்டாம், செரிமானமாகாது என்று எச்சரிக்கை கொடுத்தாகி விட்டது 2011 இல் கருணாநிதி 63 தொகுதிகள் கொடுத்தார், 2026 இல் 41 சீட் கிடைத்தது என்ற பழங்கணக்கெல்லாம் வேண்டாம், ஒரு 15 சீட் வேண்டுயுமானால் கொடுக்கலாம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் ராகுல் காண்டி இன்றைக்கு கோவை வருகிறார்! ஷோ காட்டப்போகிறார் என்று காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கிறது என்ன ஷோ, ஜனங்களிடம் எடுபடுமா என்பதைவிட திமுகவிடம் ஜம்பம் பலிக்குமா என்பது தான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! தனி ஆவர்த்தனம் செய்யலாம் என்று துணிந்து இறங்கியிருக்கிறார்களே அதற்காகவே சோனியா காங்கிரசின் தமிழ்நாடு கிளையைப் பாராட்டலாம்! ஆனால் இந்திராவிடமிருந்து பிரிந்து போன காமராஜர் படத்தை? எதற்காகப் பயன் படுத்துகிறார்களாம்?
காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் இப்படி அரசியல் செய்யத் தெரியுமா? பாட்டாளி மக்கள் கட்சி இதோ நாங்களும் இருக்கிறோமே என்று அவர்கள் பங்குக்கு அதிமுகவுக்கு கொஞ்சம் மிரட்டலாகவே பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் நோட்டு விஷயம் ஓகே, சீட்டு எவ்வளவு என்பதை நாங்கள்தான் முடிவுசெய்வோம் என்று அதிமுக கறாராக இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.அப்படியானால் 2015 போலத் தனித்தே களம் இறங்குவோம் என்று சொல்வதாக வெளிவரும் செய்திகள்??
மருத்துவர் ராமதாசை நன்றாக அறிந்த எவரும் அந்தச் செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை! ஆக தேர்தல் களத்தில், கழைக்கூத்தாடிகள் வித்தை காட்டுவதுபோல, காங்கிரஸ், பாமக போன்ற உதிரிக்கட்சிகள் இப்படியுமல்லாமல் அப்படியும் இல்லாமல் வெறும் ஷோ காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைத் தாண்டி தமிழகத் தேர்தல் களம் இன்னமும் களைகட்ட ஆரம்பிக்கவில்லை!
மீண்டும் சந்திப்போம்
சார்....டீல் என்னன்னா... நாடாளுமன்றத் தேர்தல்ல மறுபடியும் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்ற ஹோதாவில் திமுக இறங்கும்.... சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த பிச்சையை வாங்கிக்கிட்டுப் போகணும் என்று சொல்லியிருக்காங்க. காங்கிரஸுக்கும் வேறு வழி கிடையாது. காங்கிரஸுக்கு (மத்தியில்) யார் தலைவராக வந்தாலும் தான் பிரதமர் வேட்பாளர் என்பது ராகுலின் நிலை. அனேகமாக பாண்டிச்சேரியை விட்டுக்கொடுக்கவும் தயங்கமாட்டாங்க.
ReplyDeleteவாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!
Deleteஇந்த மாதிரி டீல் ஓடுவதாகச் செய்திகளில் பார்த்தேன்.
ஆனால் சொந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பைக்கூட சரிவர செய்யமுடியாதவர், நாடாளுமன்றத்தில் 2004 முதலே உறுப்பினராக இருந்தும் நாடாளுமன்றநடைமுறைகளை அறியாதவர், அரசியலை ஒரு பொழுதுபோக்காக அதுவும் பார்ட் டைமாக செய்கிற ஒருத்தரை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வதற்கே வெட்கித் தலைகுனிய வேண்டும்!
அந்தவகையில் இசுடாலின் முற்றும் துறந்தவர்! வெட்கம் மானம் சூடு சொரணை காமன்சென்ஸ் இப்படி எல்லாவற்றையும் துறந்தவர் போடுகிற டீல் என்ன யோக்கியதையில் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பாண்டிச்சேரியைக் காங்கிரஸ் விட்டுக் கொடுத்தாலும், திமுக அந்த யூனியன் பிரதேச ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது இன்னொரு சுவாரசியமான விஷயம் ,
விடியக் காலையில் விளக்கெண்ணெய் குடிக்கலாமா?..
ReplyDeleteவாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteகாங்கிரஸ்கட்சி ஒரேயடியாக ஒழிந்து போனால், விளக்கெண்ணெயோ கெரோசீனோ எதையும் குடிக்க வேண்டிவராது!