Showing posts with label ஸ்ரீ அரவிந்த அன்னை. Show all posts
Showing posts with label ஸ்ரீ அரவிந்த அன்னை. Show all posts

Friday, February 12, 2021

"அன்னை என்னும் அற்புதப் பேரொளி"

 "அன்னை என்னும் அற்புதப் பேரொளி"



இந்தத் தலைப்பில் திருமதி விஜயா சங்கர நாராயணன் எழுதிய நூலை, வெகு நாட்களுக்கு முன் வாசித்த நினைவும், பரவசமும் இந்தப் பதிவை எழுதும் போது முன் வந்து நிற்கிறது.

அம்மா, அம்மா என்று அரற்றுவதைத் தவிர ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னைப் பற்றி, என்ன எழுதிப் புரிந்து கொள்ளவோ, புரிய வைக்கவோ முடியும்? அறியாமையின் உச்ச கட்டமாக, ஆசிரம சாதகர் ஒருவரிடம் அவருக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றிக் குழந்தைத்தனமாகக் கேட்ட போது, "எவ்வளவோ இருக்கிறது, அதில் எதைச் சொல்வது?" என்ற கேள்வியே பதிலாக வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஸ்ரீ அரவிந்த அன்னையை ஏற்றுக்கொள்கிறேன் என்று மேலோட்டமாகவே நாம் சொன்னாலும், "ஒரு கணமாவது நான் ஒருவரைப் பார்த்திருந்தாலும் போதும், அவருடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று ஸ்ரீ அன்னை சொல்லும் சத்திய வாக்கு அங்கே செயல் படுவதை, என்னுடைய அனுபவமாகவே இப்போது பார்க்கிறேன்.

"Remember and Offer" இது தன்னுடைய அடியவர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் ஒரு எளிய முயற்சி. எதுவானாலும், நினைவிற்கொண்டு வந்து, ஆத்ம சமர்ப்பணமாகச் செய்து வரத் தடைகள் நீங்குவதும், காரிய்ம் கை கூடுவதும் இறையருளால் நடத்தப்படும் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

புதுவையிலிருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும், ஆசிரம வாழ்க்கையின் ஒரு அங்கமாக உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட்ட வெகு சிலருள் ஒருவனாக இல்லாதிருக்கும் போதிலும், ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தை பற்றி முழுமையாக அறிந்தவனாக, அனுஷ்டிப்பவனாக இல்லாத நிலையிலும் கூட, இவனது சில அனுபவங்கள், உன்னை என்னுடைய அன்னையாகவே அறிந்து கொள்ளவும், அம்மா, என்னையும் உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக ஏற்றுக் கொள்வாய் என்று உன்னிடத்தில் உரிமையோடு விண்ணப்பித்துக் கொள்ளவும் தூண்டின. ஏற்றுக்கொள்வாய், ஒருபோதும் கைவிட மாட்டாய் என்கிற நம்பிக்கை உன் வாக்கினாலேயே இவனுள் விதைக்கப் பட்டிருப்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

1965-1966 களில் அறியாச் சிறுவனாக, உன்னுடைய உரையாடல்கள் தொகுப்பு ஒன்றில் உன்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவுடன், என்னைப் பெற்ற தாயாகவே தோன்ற, 'அட இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே' என்று திரும்பத் திரும்ப அதே அனுபவத்தைப் பல முறை அனுபவித்ததுண்டு. அளியன், அன்னை நீ தான், இவனைப் பெற்ற தாயின் சாயலில் இவனுக்குக் காட்சி கொடுத்திருக்கிறாய் என்பது புரிந்து கொள்ளவே வெகு நாட்களாயிற்று.

இடையில், தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திகனாகத் திரிந்த காலம் ஒன்று இருந்தது. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகச் சொல்வது போல இவனது வாழ்விலும் அது ஒரு இருண்ட காலம்.

1986- 1987 களில் அமுதசுரபி மாத இதழில் திரு. கர்மயோகி அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள், உலகாயத விளையாட்டில், அன்னையை மறந்து போனவனை மீண்டும் அன்னையிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக உதவின. Mothers Service Society என்ற அமைப்பின் கீழ் தமிழகமெங்கும் ஸ்ரீ அரவிந்த அன்னை தியான மையங்களை ஏற்படுத்தவும், ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடி தியானம் செய்வதும், மலர் வழிபாடு செய்வதும் 1980 களின் இறுதியில் பரவலாக நடந்து வந்தன.ஆர்ப்பாட்டம், ஊர்வலம், முரண்பாடுகள் என்றே கிடந்த இவன், அதற்கு நேர் எதிர் மாறான அனுபவத்தைப் பெறுவதற்காக, இந்த மாதிரி கூட்டங்களில் பங்கேற்றதும் நடந்தது.

குடும்பம் ஒரு இடத்தில், பணியில் இருந்தது மற்றோரிடத்தில் என்றிருந்த காலம்.

டாக்டர் சுந்தர வடிவேல் இவனது மகனுக்கு வைத்தியர் என்கிற முறையில் அறிமுகமாகி, நண்பரான காலம். ஸ்ரீ அரவிந்தர் அன்னையிடத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் தான் ஸ்ரீ அன்னையிடம் இவன் மறுபடி தஞ்சம் அடைய வேண்டும் என்கிற வேட்கையும், ஈர்ப்பும் ஏற்பட்டது. விடுமுறையில் ஊருக்கு வருகிற நாட்களில் கணிசமான நேரம் டாக்டருடன் ஆன்மீகத்தைப் பற்றி விவாதிக்கும் பழக்கமும், இதே போல் ஈடுபாடு உடைய வேறு பலருடைய தொடர்பும் உண்டானது. சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்பதற்கொப்ப, பழைய வரட்டுப் பிடிமானங்களில் இருந்து விடுபட இவை உதவின. அந்த அளவோடு ஒதுங்கியும் போயின.

நம் உடலில் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் உண்டாகிக் கொண்டே இருப்பது போல, "பழையன கழிதல், அதன் பின் புதியன புகுதல்" என்பதற்கொப்ப ஒவ்வொரு அனுபவமும், அதற்கு முந்தைய அனுபவங்களின் எச்சங்களைத் துடைத்துவிட்டுப் புதிதாய்ப் பிறந்தது.

"வாய்ப்பு என்பது மிகப் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் தருணம். அதனால் ஒருபோதும் வாய்ப்பைத் தவற விட்டு விடாதே" என்கிறார் ஸ்ரீ அன்னை. எவ்வளவு வாய்ப்புக்களைத் தவற விட்டிருக்கிறேன் என்பது இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

உள்ளது உள்ளபடி சமர்ப்பணத்துடன் சொன்னால், எளிய வார்த்தைகளுக்குள்ளும் பேருபதேசம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries in the Mother's Ministry என்ற நூலில் இருந்து இந்தப் பகுதியை பார்ப்போமா?


Incalculable Divine

“There are quite a number of stories about the Divine's help arriving at the very moment man gives up his egoistic struggle. There is, for instance, the case of a man who was falling down from the top of a high tree. He cried out to God to save him and God did respond. The falling man landed on a branch of the tree and he exclaimed to himself: “Ah, now I will take care of myself”. That very moment the branch started cracking and our friend got alarmed and called out, “God, I did not mean it!”

The point in this and similar stories is that as long as man depends upon his own strength—which is in fact so puny—or on that of other human sources, the Divine does not enter into the picture. Man is allowed to struggle and realise the limitations of human effort. The inner soul-strength comes to the fore when the external being, in its moment of truth, realises its utter failure to meet the challenges that face it and appeal to the Divine, whether within or above. In a slightly different context, Sri Aurobindo puts it graphically in SAVITRI how in moments of crisis man is forced to look to the Divine:


An hour comes when fail all Nature's means,

Forced out from the protecting Ignorance

And flung back on his naked primal need,

He at length must cast from his surface soul...


When our strength fails, when our human resources fail, when we sincerely call for the Divine's help, the Divine never fails. Only we must have the eye to perceive the Hand of God which may be cloaked in appearance that may be misleading at first sight. The help may not come in the form in which we expect. It may even come in the form of happenings that go counter to our expectations. The ways of the Divine Saviour are mysterious, as complex as the causes of our difficulties. The most unlikely elements play a helpful role. At times even enemies are moved to fraternise with us. We are baffled. We try to find explanations and at times attribute ulterior motives to the benefactors. But the fact remains that individuals are moved to act helpfully, circumstances are shaped favourably—all because the Divine has willed to save.

We may not always understand the manner in which the Will operates. It is not immediately necessary either, to know it. It is enough if we have the faith that the Divine response is certain and when we are helped out, to own gratitude to the Divine. There is often a tendency to attribute the favourable turn to our strength of intelligence and will or to external human agencies. It is well to remember at such moments that men and events are only instrumentations of the Divine Will to protect and save.”
*

அம்மா! எவ்வளவு தான் தவறுகள் இழைத்திருந்த போதிலும், அகங்காரச் செருக்கோடு நான் நான் என்று இல்லாததை எல்லாம் கற்பிதம் பண்ணிக் கொண்டு திரிந்த போதிலும்,

"நான்" என்பது அகங்காரத்தின் கூப்பாடு அல்ல; உனக்குள்ளே இருக்கிற தெய்வீகமே, உள்ளொளியே உண்மையான நான் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறாய்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

உனது திருவடிகளையே அடைக்கலமாகப் பற்றிக் கொள்வது முழுமையாகிற வரம் அருள்வாய். கரணங்கள், மனம், ஜீவன் இவை அனைத்தையும் முழுமையாக உன்னிடத்தில் சமர்ப்பிப்பதற்குத் தகுதியும், சக்தியும் அருள்வாய்.

ஒவ்வொரு தருணத்திலும் நீ எனக்களித்திருக்கிற அருளை மறவாமல், நன்றியோடு ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை அருள்வாய் தாயே!

*quoted text thankfully excerpted from and acknowledged”

“Commentaries on The Mother's Ministry” by Shri M P Pandit, 
Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.



**2009 பிப்ரவரியில் இங்கே எழுதியதன் மீளபதிவு 

Tuesday, November 24, 2020

இன்று வெற்றித்திருநாள்! ஸ்ரீ அரவிந்தரும் ஒளி பொருந்திய பாதையும்!

இன்று நவம்பர் 24. ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வெற்றித் திருநாள் (Sidhdhi Day) என்று அழைக்கப்படுகிற தரிசன நாள். 1926 இல் ஸ்ரீ அரவிந்தருக்குள்  ஸ்ரீ கிருஷ்ண சைதன்யம் புகுந்து நிறைந்த தினம். கிருஷ்ணனுடைய ஒளி ஒரு மானுட உடலில் புகுந்து நிறைந்ததான அந்த அனுபவமே ஸ்ரீ அரவிந்தர் அடுத்த 24 ஆண்டுகள் மேற்கொண்ட தவமாக விரிந்து அதிமானச ஒளி Supramental Light ஸ்ரீ அரவிந்தருடைய ஸ்தூல உடலில் தங்கிய அற்புதமாகவும் ஆகியது.


இன்று புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வழங்கப் பட்ட தரிசன நாள் செய்தி

ஸ்ரீ அரவிந்தாசிரமம் உருவான விதத்தை ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை வார்த்தைகளிலேயே சென்ற ஆண்டு தரிசன நாள் செய்தியாக வெளியிடப்பட்டதை இந்தப்பக்கங்களில் பார்த்தது நினைவிருக்கிறதா? 

இந்த நாளுடைய அருமை என்ன என்பதைப் பிந்தைய நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இப்படி 

ஸ்ரீ அரவிந்தருடைய திருவடிகளைச் சரணடைகிறேன். 

ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச் சரணடைகிறேன்   

Wednesday, November 18, 2020

எனக்கென்ன மனக்கவலை! என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை?!



 "இதுவும் கடந்து போகும்."

எப்போது?

ஹரிமோகனுடைய கனவைப் படிக்க ஆரம்பித்தபோதுஏதோ என்னுடைய சொந்தக் கதையைப் படிக்கிற மாதிரியே இருந்ததுபடித்து முடித்த போதுஇந்த அனுபவம்இந்தக் கனவு என்னுடையதாக இருக்கக் கூடாதா என்கிற ஏக்கமே பெரிதாக இருந்தது.

"இதுவும் கடந்து போகும்என்ற வார்த்தை மறுபடி என்னுள் எதிரொலித்தது.

ஒரு ஜென் கதை.

ஒரு ஜென் ஞானிஒரு மலையடிவாரத்தில் அமர்ந்து எதிரே தெரிகிற மலையையும்வானத்தையும் பார்த்துக் கொண்டே இருப்பார்தினமும் அவர் மௌனமாகஇப்படி பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தவர்கள்ஆவலை அடக்க மாட்டாமல் அவரிடமே கேட்டு விட்டார்கள்:

"அங்கே என்ன தான் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?"

"அங்கே பாருங்கள்வானத்தில் மேகத்திரள் இருக்கிறதல்லவாஓரிடத்தில் திரளாகஇன்னோரிடத்தில் அங்கே ஒன்றுஇங்கே ஒன்று என்றிருக்கிறதல்லவாஅதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்." அந்த ஜென் துறவி அமைதியாகச் சொன்னார்மறுபடி மேகங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கேள்வி கேட்டவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லைஇன்னொரு கேள்வி கேட்டார்கள்.

"வானத்தில் மேகங்கள் காணப் படுவது இயற்கை தானேஇதில் என்ன அதிசயம் இருக்கிறது?"

"அங்கே பாருங்கள்கூட்டமாக இருந்த மேகத்திரள்காற்று வீச வீசஅப்படியே கலைந்து கடந்து போகிறதல்லவாஆனால்மலை அங்கேயேஅப்படியே தான் இருக்கிறதுஅது போலவேநமக்குள் எண்ணங்களும் ஒருசமயம்கூட்டமாகவும் இன்னொரு சமயம் தனியாகவும் வருகிறதல்லவாஇதுவும் அந்த மேகத்தைப் போலவே கடந்தும் போகிறதல்லவாஅதைத் தான்உள்ளேயும் பார்த்துக் கொண்டிருந்தேன்."

ஞானியின் இந்த பதில் சிலபேருக்குப் புரிந்ததுபல பேருக்குப் புரியவில்லைமறுபடிமறுபடி கேள்வி கேட்டார்கள்ஞானி மூன்றே வார்த்தைகளில் சொன்னார்:

"இதுவும் கடந்து போகும்."

"நான் யார்என்று கேட்டுப் பார்இந்த உடலாமாறிக்கொண்டே இருக்கிறமனமாகண்போன போக்கிலே இழுத்துச் செல்கிற இந்திரியங்களாஎண்ணங்களாஎன்னுடையது என்று எண்ணுகிற எதுவுமே உண்மையிலேயே என்னுடையது தானா இப்படி அமைதியாக விசாரம் செய்துகொண்டுதன்னை அறிகிற வழியை உபதேசித்தார் பகவான் ஸ்ரீ ரமணர்.

ஸ்ரீ அரவிந்தர், இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்பிய போது, விஷ்ணு பாஸ்கர லீலே என்கிற யோகியைச் சந்திக்கிறார். லீலே, உன் மனத்தையே கவனித்துப் பார், எண்ணங்களும், ஆசைகளுமாக ஏராளமானவை உள்ளே ஓடிக் கொண்டிருப்பதைப் பார். இதில் எதுவெல்லாம் உன்னுடையது என்று அறிந்து, மற்றவற்றை வெளியே துரத்திவிடு என்றார். ஸ்ரீ அரவிந்தர், யோகி லீலே சொன்னபடியே செய்து வர, மூன்றே நாளில், எண்ணம், ஆசைகள் என்று எதுவுமே இல்லாமல் மனம் நிர்மலமாக, ஒருஸ்படிகத்தைப் போல இருப்பதைக் கண்டார். எத்தனையோ ஆண்டுகள் தவமிருந்தும், கை கூடாத இந்த நிலையை ஸ்ரீ அரவிந்தர் மூன்றே நாட்களில் சாதித்ததைப் பார்த்து வியந்தார் யோகி லீலே.

ஆனாலும், இது ஒரு ஆரம்பம் தான்.

விதையிலிருந்து இலைகிளை என விரிந்து மரமாகிமறுபடி ஒரு விதைக்குள் சுருங்கி மறுபடி முளைத்துஇந்தசிருஷ்டி மேலோட்டமாக ஒரே மாதிரி தெரிந்தாலும்பரிணாம வளர்ச்சி மென்மேலும் விரிந்து வளர்ந்து கொண்டே இருப்பதை இந்தக் கதையில் வரும் ஞானி மாதிரி அமைதியாகப் பார்க்கிற பொறுமை நம்மில் அனேகமாக எவருக்குமே இல்லைநாம் விரும்புவதெல்லாம்திடீர்த் திருப்பங்கள்சஸ்பென்ஸ் நிறைந்த அதிரடியான sensationalism தான்.

ஒரு கொலை என்கிற வன்முறைச் சம்பவத்தை 'சதக்' ' சதக்என்று பதினாறு தடவை 'சதக்போட்டு கத்தியால் குத்தினான்..சம்பவ இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார் என்கிற மாதிரியான தினத்தந்தி டைப் விஷயங்கள் பரிணாம வளர்ச்சியில் சன் டி.வீஜெயா டி.வீஇன்னும் பிற டி.வீக் காரர்கள் புண்ணியத்தில் மெகா சீரியல் ஆக வளர்ந்துஇருக்கிற கொஞ்ச நஞ்சம் common sense ஐயும் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில்,

நான் யார்நான் படைக்கப் பட்டது எதற்காக?

இந்தக் கேள்விகளை கேட்டுக் கொள்வதற்கே நம்மில் பலருக்குப் பல நூறுஆயிரம் பிறவிகள் வேண்டியிருக்கின்றனகேள்வியைக் கேட்பதிலும் சரியான பதிலை அறிந்துகொள்வதிலும் நுட்பம் நிறைய இருக்கிறது என்பதால்இந்த ஆட்டத்திற்கே நான் வரவில்லை சாமிஆளை விடு என்கிற மாதிரித் தான்நம்முடைய புலன்கள்சோம்பேறித்தனமானஅது அதற்கே பழக்கப் பட்டுப் போன தளைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கின்றன.

அதனால் தான் மனமற்ற நிலை, அல்லது மனமிறந்த நிலை என்று சொல்லப் படுகிற நிலை ஒன்று இருப்பதையே நாம் அறிந்திருப்பதில்லை. அறிந்தால் அல்லவா, அதை எட்ட வேண்டும் என்கிற வேட்கையும், முயற்சியும் தொடங்கும்?

ஒளித்துஒளித்து வைத்துமறந்தே போன ஆன்மீக ரகசியங்களைகேட்கத்தயாராக இருந்த அனைவருக்கும் வாரி வாரி வழங்கினார் ஞான சிம்ஹமான சுவாமி விவேகானந்தர்.

அவருக்கும் முன்னாலே, "ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார்என்று ரகசியமெதுவும் இல்லைஇதோ பெற்றுக்கொள் என்று பெரும் கருணையோடு கேட்டவர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினார் பகவத் ஸ்ரீ ராமானுஜர்.

சேற்றில் சிக்குண்டு முதலைவாய்ப்பட்ட யானையின் கதையைச் சொல்லும் போதுமுதலைக்கும்யானைக்குமாய் நடந்த இழுபறிப் போராட்டம் ஆயிரம் வருடம் நடந்ததாகக் கதை சொல்லுவார்கள்யானை தன் பலத்தில் நம்பிக்கை வைத்துப் போராடிக் கொண்டிருந்த போதுஇறைவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.என் செயலாவதொன்றுமில்லை என்று உணர்ந்த பிறகுஅதே யானை "ஆதிமூலமேநாகணையாய்வந்து என் ஆரிடறை நீக்காய்" என்று முறையிட்ட போதுஇறைவன்அரை குலைய நிலை குலையயானையைக் காப்பாற்றுவதற்காக ஓடோடி வந்தானாம்கதையாகச் சொன்ன விஷயத்திலும்ஒரு ஆன்மீக ரகசியம் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.

நான் எனது என்கிற நிலையில் இருந்து உயர்ந்தால் ஒழியநம்மைப் பீடித்திருக்கிற நோவுகளில்தளைகளில் இருந்து விடுபட வழியே இல்லை.

நானேஎனதே என்றிருந்த இவனையும் ஒரு பொருளாக நயந்துஇவனுக்கும் பல வெளிச்சக் கீற்றுக்களைக் காட்டிஒளிபொருந்திய பாதை ஒன்றிருக்கிறதேஇன்னமும் ஏன் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறாய் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லாமல் சொன்ன நிகழ்வுகளும் நடந்தன.

அம்மாஉன்னை வணங்குகிறேன்.


அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழிநடத்த வரும்போது எனக்கு என்ன கவலை
?

2009 மார்ச் மாதம் அங்கே எழுதியதன் மீள்பதிவு. 

Saturday, December 7, 2019

அறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில் நம்பிக்கை ஒன்றே துணையாக!


ஃபிளெமிங், ஒரு ஏழை விவசாயி! ஸ்காட்லாந்து பகுதியில் டார்வேல் என்ற கிராமப் பகுதி, அன்றாட ஜீவனத்திற்கே மிகவும் கஷ்டம்! ஒரு நாள்  யாரோ, அபாயத்தில் சிக்கி உதவி கேட்டுக் கூச்சலிடுவது கேட்டது.

போய்ப் பார்த்தபோது, ஒரு இளைஞன், புதைசகதியில் இடுப்பளவு சிக்கி, வெளியே வர முடியாமல் பயத்தோடு கத்தித்  தவித்துக் கொண்டிருந்ததை  அந்த  விவசாயி பார்த்தார். புதை சகதியில் இருந்து அந்த இளைஞனை மெல்ல விடுவித்து, தேற்றினார். அந்த விவசாயி, சரியான நேரத்தில் உதவிக்கு வராமல் இருந்திருந்தால், அந்த இளைஞன் கத்தி கத்தியே, பயம் பாதி சகதிக்குள் முழுகுவது மீதி என்று கதை முடிந்திருக்கும்.

மறுநாள், அந்த விவசாயியைத் தேடி, வண்ணச் சாரட் வண்டியில், ஒரு பெருந்தனக்காரர் வந்திறங்கினார். " என் பெயர் ரண்டால் ஃப் ! நேற்று நீங்கள் காப்பாற்றிய இளைஞன், என் மகன்!  அவனுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துப் போக வந்தேன், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்! என்னிடம் இருப்பதைத் தருகிறேன்." என்று தழுதழுத்தார்.

ஸ்காட்லாந்து மக்களே கொஞ்சம் பெருமிதமும், சுயகௌரவமும் பார்க்கிற  மக்கள். ஒரு உயிரைக் காப்பாற்றுவது மனிதனுடைய கடமை!  ஆபத்தில் இருப்பவன் எதிரியே ஆனாலும் காப்பாற்ற வேண்டும், அப்படியிருக்க செய்த உதவிக்குக் கைம்மாறு எதிர்பார்ப்பதா? அந்த விவசாயி, பணிவோடு பெருந்தனக்காரருடைய  உதவியை மறுத்தார். அந்த நேரம் ஒரு சின்னப்பையன்,   ஃபிளெமிங்குடைய மகன், அங்கே வந்தான்.  விவசாயி, அவனைத் தன்னுடைய மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார்.பிரபு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

"இதையாவது கேளுங்கள்! இவனை நான் அழைத்துப் போகிறேன், நன்றாகப் படிக்க வைக்கிறேன்!  உங்களுடைய நல்ல குணம் இவனிடம் இருக்குமானால், நீங்களே பார்த்துப் பெருமிதப்படுகிற மாபெரும் மனிதனாக இவன் வருவான்!" அதே மாதிரி, அந்தச் சிறுவன், லண்டனில் இருந்த பிரபுவோடு அனுப்பப் பட்டான். லண்டனில், செயின்ட் மேரி மருத்துவப் பள்ளியில் படித்துப் பெரிய மருத்துவராகவும், கண்டுபிடிப்பாளராகவும் உயர்ந்தான். பின்னால் சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் என்று உலகம் முழுக்க அறியப்பட்ட மருத்துவர். பெனிசிலின் தடுப்பு  மருந்தைக் கண்டுபிடித்தவர்.

ரண்டால் ஃப் பிரபுவின் மகன்,  முன்னால் ஸ்காட்லாந்து விவசாயியால் புதை சகதியில் இருந்து காப்பற்றப் பட்டவன், நிமோனியா காய்ச்சல் வந்து அவதிப்பட்ட போது, காப்பாற்றியது பெனிசிலின் தடுப்பு மருந்தால் தான்!

அப்படி, தகப்பன், மகன் இருவராலும் இரு வேறு தருணங்களில் காப்பாற்றப்பட்ட அந்த இளைஞனின் பெயர் வின்ஸ்டன் சர்ச்சில்! பின்னாட்களில் இங்கிலாந்துப் பிரதமராகவும் பதவி வகித்த, அதே வின்ஸ்டன் சர்ச்சில்!

சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கத் தீவீரமாகப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோதிலும், பெனிசிலின் கண்டுபிடிக்கப் பட்ட விதம்,  ஒரு தற்செயலான தருணத்தில் தான்! கிருமிகளால் ஏற்படும் நோய்கள், மரணத்திற்கு எதிராக மருந்தே இல்லை என்ற நிலையை மாற்றப் பிறந்த முதல் ஆண்டிபயாடிக் மருந்து  பெனிசிலின்! நடந்தது 1928 ஆம் ஆண்டு! அடுத்த ஆண்டில்,   ஃபிளெமிங் முழுமையான ஆராய்ச்சிக் குறிப்புக்களை வெளியிட்டார்,

ஒரு சிக்கலான தருணத்தில் தான் அதற்குத் தீர்வும் பிறந்தது!.

அதற்கும் பதினான்கு  ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சியாளனுடைய அத்தனை உபகரணங்களும், குறிப்புக்களும் தீயில் கருகிச் சாம்பலாயின. மறுநாள், அந்த அழிவைப் பார்த்து விட்டு, அந்த மனிதர் சொன்னார்,

"இந்த அழிவிலும் பெரிய வரம் இருக்கிறது. நம்முடைய எல்லா முட்டாள்தனங்களும் அழிக்கப் பட்டு விட்டன! ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, இனிமேல் நாம் புதிதாகத் தொடங்கலாம்!"
அதற்கடுத்த மூன்றாவது வாரம், அந்த கண்டு பிடிப்பாளர்,  தனது புதிய கண்டுபிடிப்பான  போனோக்ரா ஃப் (கிராமபோன்)-ஐ அறிமுகம் செய்தார்! அந்த விந்தை மனிதரின் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!


வெற்றி, சாதனை என்பதெல்லாம், பேரிடர், சோதனை, சிக்கல்கள்   என்பதில் இருந்து தான் பிறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

இளம் பருவ சர்ச்சில், இன்னும் சிறிது நேரம் கவனிக்கப் படாமல் இருந்தால், முழுகிப் போயிருக்க வேண்டியது தான்! பயம் ஆட்டிப் படைத்த நேரத்திலுமே கூட உதவி கோரிக் கூச்சல் எழுப்புவது ஒன்று தான் அந்த நேரத்தில் செய்ய முடிந்தது. அதைச் செய்தபோது, யாரோ ஒருவரது கவனத்தை ஈர்க்கவே வந்து காப்பாற்றுகிறார்.

அதே மாதிரி, பாக்டீரியாக்களால், நோயாளிகள் மரணமடைந்து கொண்டிருந்த நேரம், காரணம் என்ன என்பது புரிகிறது, ஆனால், மருந்து என்ன என்பது தெரியவில்லை! அதே சிந்தனையாக இருந்த  ஃபிளெமிங் கண்ணில், கிருமிகள்  இருந்த தகட்டில் தற்செயலாக, பூசனம் பிடித்த  ஒரு தகட்டில் இருந்த ஒரு விஷயம், கிருமிகளை அறவே காலி செய்து விட்டது படுகிறது. ஆக, இந்த நுண்ணுயிர்க் கொல்லியாக ஒன்று இருக்க முடியும், மருந்தாகப் பயன்பட முடியும் என்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்த சோதனைகளில் உறுதிப் படுகிறது.

விபத்து எதிர்பாராமல் நடப்பது! அது விளைவிக்கும் சேதமும் கூட அப்படித்தான்!

ஆனால் ஒரு மனிதர், தான் அது வரை மேற்கொண்ட ஆராய்ச்சியில் உருவாக்கிய விஷயங்கள், குறிப்புக்கள் எல்லாமே எதிர்பாராத தீ விபத்தில் மொத்தமாகப் பறி கொடுத்த தருணத்திலும் கூடக் கலங்கவில்லை.
எல்லா முட்டாள்தனங்களும் தடையமே இல்லாமல் ஒழிந்தன என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். இனிமேல் புதிதாகத் தொடங்கலாம் என்று சந்தோஷப் பட்டுக் கொள்கிறார்! அவர் சந்தோஷப் பட்டுக் கொண்ட மாதிரியே, நூற்றுக் கணக்கான கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து வருகின்றன.  


இதே மாதிரித் தான், மின்சாரத்தினால் எரியும் (ஒளிர்விடும்) பல்ப் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், தாமஸ் ஆல்வா எடிசன் தொடர்ச்சியாகத் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தார். தோல்வி மாதிரியே முயற்சியும் தொடர்ந்தது. வெவ்வேறு விதமான இழைகள், அதில் கடைசியாக ஜப்பானிய மூங்கிலில் இருந்து தயார் செய்யப்பட இழைகளும் அடங்கும்! கடைசியாக டங்க்ஸ்டன் உலோக இழை பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது. இன்றைக்கும் உலகம் முழுவதும் டங்க்ஸ்டன் இழை கொண்ட குண்டு பல்ப் புழக்கத்தில் இருக்கிறதுஇப்போது கூட, உங்களால் ஒரு சிறந்த பல்பை உருவாக்க முடியுமானால், உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது! ரீல் அல்ல! நிஜம் தான்!

சோதனை முடிவுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளை, எடிசன் எடுத்துக் கொண்ட விதமே அலாதி! " ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பத்தாயிரம் முறைகளில் இருந்து கற்றுக் கொண்டேன்!"

இங்கே துணுக்குகளாகப் பேசப்பட்டசம்பவங்கள் சொல்வது என்ன? தோல்வியே வெற்றிக்கு அடிப்படை! அடுத்த படிக்கட்டு!

அதான் எனக்குத் தெரியுமே என்று "அறிவாளி" திரைப்படத்தில் முத்துலட்சுமி திரும்பத் திரும்பச் சொல்லி, டணால் தங்கவேலுவை வெறுப்பேற்றுகிற காமெடியாக மட்டும் பார்த்துவிட்டுப் போய்விடுவதால் எதையும் தெரிந்துகொள்ள முடிவது இல்லை.

வாழ்க்கையில் எதிர் கொள்ளும் ஒவ்வொரு சம்பவத்தையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் மட்டுமே அதன் வெற்றியோ, தோல்வியோ தீர்மானிக்கப் படுகிறது.

இன்றைக்குப் பொருளாதார மந்தம், ஒரு பக்கம் வளர்ச்சி என்பது, மற்ற விஷயங்களை வெகு பள்ளத்தில் தள்ளிவிடுவதாக ஆக்கிக் கொண்டிருக்கும் ஒழுங்கு முறை எதுவுமில்லாத போக்கு, வேலைவாய்ப்புக்கள் சுருங்கிக் கொண்டே போவது, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இப்படி ஏராளமானவற்றை ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. பார்க்கும் விஷயங்கள், அத்தனையுமே மன நிறைவைத் தருவதாக இல்லை. பல விஷயங்கள் மன நிம்மதியைக் குலைப்பது போலத் தான் இருக்கின்றன.

அதனால் என்ன? நமக்குப் பிடித்தமான விளையாட்டில், ஆர்வத்தோடு பங்குபெறும் பொது, இப்படி எதிர்மறையான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோமா? அங்கே நம்முடைய  அடுத்த மூவ் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும், அதைச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனத்தை வைத்திருக்கிறோம் அல்லவா!

அதே மாதிரித் தான், எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையும், சோதனையும், தன்னுள் ஏராளமான வாய்ப்புக்களைச் சுமந்து கொண்டு தான் வருகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே, வருகிற வாய்ப்புக்களைத் தவறவிடக் கூடாது என்பதில் மட்டுமே நம்முடைய கவனம் இருக்கும்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால், மிகப் பெரிய அழிவை ஜப்பான் சந்தித்தது. அணுகுண்டு வீசப்பட்டது மட்டுமல்ல, அவர்களுடைய தேசீயப் பெருமிதமே பெரும் சரிவைச் சந்தித்தது. தன்னை விடப் பெரிய வஸ்தாத் எவனுமில்லை என்று இறுமாப்போடு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஒருவன், அவனுடைய  ஆணவத்தின் மீது, பெருமிதத்தின் மீது விழுகிற அடி மாதிரிக் கொடுமையான அனுபவம், பிரச்சினை வேறு ஒன்று இருக்க முடியுமா?

ஜப்பானிய மக்கள் துவண்டு விடவில்லை. தங்களுக்கு விழுந்த அடியை, வலியை ஏற்றுக் கொண்டார்கள். அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதி கொண்டார்கள்


அடித்துத் துவம்சம் செய்து விட்டு அப்புறம் தடவிக் கொடுப்பது போலப் பொருளாதார உதவிகளை, அமெரிக்கா செய்தது. உற்பத்தி செய்யப் படும் பொருட்களை வாங்கிக் கொள்ளக் கதவைத் திறந்தது.

ஆனால், ஆரம்ப காலங்களில் மேற்கத்திய மக்களுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பது, அவர்களுடைய ஆங்கில மொழி போலவே, ஜப்பானியர்களுக்குப் புரியவில்லை. தயாரித்து விற்பனை செய்த பொருட்கள் எல்லாம், தரக் குறைவாக, கேலிக்குரியவைகளாக இருந்தன.  

ஜப்பானிய மக்கள், அந்த ஏளனத்தையும் சகித்துக் கொண்டார்கள். சகித்துக் கொண்ட விதம், வேறு வழியில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாக இல்லை! தம்முடைய குறைகள் என்ன என்பதை, பதறாமல் சிந்தித்தார்கள். தயாரிப்பதில் ஏற்டும் குறைகள் என்ன என்பதை, தயாரிக்கப் படும் கட்டத்திலேயே கண்டுபிடித்து அங்கேயே சரி செய்தது மட்டுமல்ல, முன்னை விட இன்னும் அதிகம் பயனுள்ளதாக, ஒரு வளர் நிலை மாற்றத்தை, இயல்பான பண்பாடாகவே வளர்த்துக் கொண்டார்கள். ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே தரம் மிகுந்தது என்ற உத்தரவாதத்தை, மிகக் குறைந்த காலத்திலேயே சாதித்துக் காட்டினார்கள்.

இங்கே நாம் பார்க்க வேண்டிய முக்கியமான அம்சம், என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் நம்மைத் திகைக்க வைக்கிற, முடக்கிப் போட்டுவிடுகிற சூழ்நிலைகள் அவ்வப்போது வந்துகொண்டே தான் இருக்கும்! 2012  இல் உலகம் அழிந்து விடப் போகிறது  என்று ஒரு கற்பனை உலவிக் கொண்டிருக்கிறது அல்லவா, அதே மாதிரி! கொஞ்சம் நிதானித்துப் பார்த்தீர்களேயானால், இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரி அச்சம், பீதி ஏதோ வடிவத்தில் கிளப்பி விடப்பட்டுக் கடைசியில்  ஒன்றுமே இல்லாமல் போயிருப்பதைப் பார்க்க முடியும்! 


இத்தனைக்கும் ஆதார சுருதியாக இருப்பது நம்பிக்கை! நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கை! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது என்றோ எவனோ வேலையில்லாமல் எழுதி வைத்துப் போனதல்ல, கூடி வாழும்போது மட்டுமே மனிதர்களால் உன்னதமான தருணங்களை எட்டிப் பிடிக்க முடிகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவது தான்!

நானும் நீங்களும் வேறுபட்டுத் தனித்தனியாக நிற்பதற்கு தனித்தனியாக ஆயிரம் ஆயிரம் காரணங்களைச் சொல்ல முடிகிற போது, நாம் ஏன் ஒன்றாக இருக்கமுடியாது என்பதற்கு ஒரே ஒரு காரணத்தையாவது கண்டுபிடிக்க முடியாதா என்ன! வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டு, பகைமையை, வெறுப்பை வளர்த்துக் கொண்டு போவது மிருகங்களுக்கு வேண்டுமானால்  இயல்பானதாக இருக்கலாம்.

மனிதர்களுக்கு......!

"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "

அறியாமையும்
இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கைஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில்  ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச்சொல்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,

“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.

Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”


 -ஸ்ரீ அரவிந்த அன்னை 


****2009 டிசம்பர் கடைசிநாளன்று அந்தப் பக்கங்களில் எழுதியதன் மீள்பதிவு. 

Monday, November 18, 2019

கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதிலும் கிடைத்தது இன்று!

கவியரசர் கண்ணதாசனின் இந்தத் திரைப்படப் பாடல் வரிகள் நினைவில் இழையோடஇது தொடர்பாக முந்தி எழுதிய பதிவொன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.


கேள்வி என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்,

"இங்கேயேஇப்போதே கூட விடை கிடைத்து விடலாம்அது நாம் எவ்வளவு நம்பிக்கையோடும்ஆர்வத்தோடும் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமே."

இறைவனது அருள்நாம் அறியாமலேயேநம்மை ஒரு பேரருள் திட்டத்தின் படி நடத்திக் கொண்டே இருக்கிறதுநம்முடைய சம்மதம்அல்லது மறுப்பு எதுவானாலும் சரிசூத்திரதாரியாக இருந்து நம்மை வழிநடத்திச் செல்லும் நாயகன் ஒருவன்நமக்கு உள்ளேயும்வெளியேயும் இருந்து நடத்திக் கொண்டே இருக்கிறான்.

[I+pray+to+thee+guide+copy.jpg]

"எங்கேயடா இருக்கிறான் உன் ஹரி?" என்று உறுமுகிறான் இரணியன்.

"
எங்கே இல்லை ஹரிஅவன் தூணிலும் இருப்பான்துரும்பிலும் இருப்பான்இல்லைஇல்லை என்று நீங்கள் மறுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களேஅந்தச் சொல்லிலும் இருப்பான்என்கிறது குழந்தை பிரகலாதன்.

கதை சொல்லிகள்சுவாரசியத்திற்காக இப்படிச் சொல்கிறார்கள்பிரகலாதன்தூணில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டானேஎந்தத் தூண் என்று கூடச் சொல்லத் தெரியவில்லையேஅதனால் அங்கிருந்த எல்லாத் தூண்களிலும் எம்பெருமான் நிறைந்திருந்தானாம்அதில் ஒரு தூணை இரணியன் எட்டி உதைக்கதூண் பிளந்து அங்கே சிங்கப் பிரானாய் எழுந்து அவனை முடித்தான்அங்கே எம்பிரான் எல்லாத் தூண்களிலும் எழுந்தருளினான் என்றதுகதை கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமேஎல்லாத் தூண்களிலும்துரும்பிலும்அவனை இல்லைஇல்லைஎன்று மறுத்துச் சொன்ன நாத்திக வார்த்தைகளிலும் அவன் அப்போது மட்டுமல்லஎப்போதுமே இருக்கிறான்.

கதை சொல்லிஅதற்குள் ஒரு கருத்தையும் வைத்துச் சிந்திக்க வைக்கலாம் என்று தான் நம்முடைய முன்னவர்கள்நிறையச் சொல்லிப் போய் ருக்கிறார்கள்கதையை உல்டா அடிக்கக் கற்றுக் கொண்ட அளவுக்குஉள்ளே இருக்கும் கருத்தைத்தெரிந்து கொள்ள சோம்பல் கொள்ளும் ஒரு தலைமுறை பின்னால் உருவாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!!

கேள்வி பிறந்தது அன்றுநல்ல பதிலும் கிடைத்தது இன்று!

நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில்இருக்கிறீர்கள்சில சம்பவங்கள் நிகழ்கின்றனபெரும்பாலும் நீங்கள் ஆசைப்பட்டதற்கு நேர்மாறாகஅல்லது இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதற்கு மாறாகத் தான் நடக்கும்.அப்படி நடக்கும்போது நினைத்தபடி நடக்கவில்லையே என்று ரொம்ப ஃபீல் பண்ணி"இது மட்டும் இப்படி நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்இது மட்டும் அல்லது அது மட்டும் இப்படி இருந்திருந்தால்......." என்று வருத்தப் படுவோமாஇல்லையா?

நாட்கள்,வருடங்கள் ஓடும்நிகழ்வுகளில் மறைத்து வைத்திருந்ததுமலர்ந்து வெளிப்பட ஆரம்பிக்கும்அனுபவம் உங்களைக் கொஞ்சம் முன்னேறச் செய்திருக்கும்,  இன்னும் அதிகமான விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்புரிந்து கொள்வதென்பது எளிதாக இருக்கும்திரும்பிப் பார்க்கிற போதுகவனித்துப் பார்த்தீர்களேயானால்முதலில் ஆச்சரியமாக இருக்கும்அப்புறம் சிரிப்புக் கூட வரும்ஆரம்பத்தில்,எவையெல்லாம் மிக மோசமான அனுவவம் என்றும்சாதகமற்றதாகவும் தோன்றியதோஅவைகளே பின்னால் திரும்பிப் பார்க்கையில்உண்மையில் நீங்கள் முன்னேறுவதற்குத் தேவைப் பட்டதாகவும்சிறந்ததாகவும் தெரிய வரும்போது சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

"உண்மையிலேயேஇறைவனது கருணை எல்லையற்றது" என்பதையறிந்து நன்றிசொல்லவும் தயங்க மாட்டீர்கள்!

கண்ணை நம்பாதேஉன்னை ஏமாற்றும்!
அறிந்ததென நினைப்பதையும் நம்பாதேஅதுவும் ஏமாற்றும்!

இப்படி வாழ்க்கையில் பல முறை நடந்து அதைத் திரும்பிப்பார்க்கவும் செய்கிற தருணங்களில் தான்மனிதன் கண்மூடித்தனமாகவே இருந்த போதிலும்,  அறிவோடு செய்வது கூடக் கண்ணைக் கட்டுகிற மாதிரி இருக்கும் போதிலும் கூடஇறைவனது கருணை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

"ஒவ்வொரு உண்மையும்அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது"

எது எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமோஅது உலகத்தில் அந்தந்தச் சூழலுக்கேற்றபடி நடந்துகொண்டுதான் இருக்கிறதுஇதைத் தான்"ஒவ்வொரு உண்மையும்அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கி ருக்கிறதுஎன்று சொல்கிறோம்உண்மை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறதுஅதை நாம்கண்டு கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைத் தான் உண்மை வெளிப்படுவதற்கான நேரம் என்று சொல்கிறோம்.

ஏனென்றால்நம்முடைய பார்வை மிகக் குறுகியதாய் இருந்ததுநம்முடைய ஆசைகள்விருப்பு-வெறுப்புக்கள் பார்வையை மறைத்து விடும் போதுஉண்மையைஉள்ளது உள்ளபடிக்கே பகுத்து அறிய முடியாது.

ஆப்பிள் பழுத்துக் காலங்காலமாகக் கீழே உதிர்ந்து கொண்டு தான் இருந்தனஏன் அப்படி கீழேயே விழ வேண்டும்இந்தப் பக்கமாகவோஅந்தப் பக்கமாகவோஇல்லை மேல்நோக்கியோ போகவில்லை என்பதில் எவரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லைஐசக் நியூடன் வந்து அதைக் கவனித்துச் சொல்கிற வரை 

ஆப்பிள் கீழே விழுவதற்கு புவியீர்ப்பு விசை தான் காரணம் என்கிற உண்மை வெளிப்படவும்ஒரு கால நேரம் வரவேண்டியிருந்தது.

ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம் !

இப்படிக் கவனிக்கத் தொடங்கும்போதேவிவரிக்க ஒண்ணாத ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம்வெளியே தெரிகிற தோற்றங்களுக்குப் பின்னால்இறைவனது கருணையை அறிந்துகொள்ளத் தலைப்படும்போதுமுடிவு இல்லாததாய்எல்லா வல்லமையும் படைத்ததாய்எல்லாம் அறிந்ததாய்அனைத்தையும் திட்டமிட்டுஒழுங்குபடுத்திநம்மை வழி நடத்துவதாய் உணர்கிறோம்!

நாம் விரும்பினாலும் சரிவிரும்பாவிட்டாலும் சரிநமக்குத் தெரிந்து இருந்தாலும்இல்லையென்றாலும்ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கிஇறைவனது கருணை நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. இறை அருள் திறத்தையும்இறைவனோடு சேர்வதையும் அறியும் திறமே அதுஇறைவனை அடைவதென்பதே அது!

அதற்கடுத்த நிலையில்ஒவ்வொரு செயலிலும் அசைவிலும் இறைவனது கருணையை உணர்வதாய்அற்புதமான வலிமையுடன்அதே நேரம் முழுமையானதும்அமைதியானதுமான எதனாலும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூடிய ஒரு ஆனந்த மயமான வாழ்க்கையைத் தொடருகிறோம்.

எந்த அளவுக்கு முழுமையான ஏற்புத் திறனுடன்முழுமையான ஈடுபாட்டுடன் ஒருவர் இருக்கிறாரோஅந்த அளவுக்கு தெய்வீகச் செயலுக்கு எதிரான பூமியின் எதிர்ப்புத் தன்மை மறைந்து விடுகிறதுஇதுவே தெய்வ சித்தத்தோடு நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிகிற கூட்டு.

அப்படிப்பட்ட நிலையில்இறைவன் என்ன செய்யக் கருதியிருக்கிறான் என்பதை அறிய முடியும்அப்படிப்பட்ட விழிப்புணர்வில்அவனது சித்தத்தோடு இசைந்து செயல்படவும் முடியும்!

-ஸ்ரீ அரவிந்த அன்னையின் அமுத மொழிகள்அன்னை நூற்றாண்டு விழாத் திரட்டுதொகுதி பக்கம் 257-258 இலிருந்து -அடிப்படையாகக் கொண்டு எழுதியதுஆங்கில மூலத்தைப் படிக்க இங்கே



“The Divine does not want a partial and passing victory. His victory must be total and everlasting - that is why we have to endure and wait for the proper time to come. However, with faith and confidence, even the endurance becomes easy.”

The Mother 
  • White Roses, 6th Edition, 1999, page 141
ஸ்ரீ அரவிந்த அன்னையின் மகாசமாதி  தினத்தை ஒட்டி, இது ஒரு மீள்பதிவு 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)