Thursday, May 26, 2011

கவிதை நேரம்! ஸ்ரீரங்கம் மோகனரங்கன்!


நேற்றிரவு, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனிடமிருந்து, சேட்டில் ஒரு மொழி பெயர்ப்புக் கவிதை வந்தது. ஒரு குழுமத்தில் நடந்த அக்கப்போர் பிடிக்காமல், நேற்று முற்பகலில் தான் அந்தக் குழுமத்தை விட்டு வெளியேறி ஒதுங்கி இருந்தேன். இந்தக் கவிதையை முதலில் படித்த போது, எனக்குள்ளே நானே இரு பகுதியாகப் பிரிந்து, அந்த சிறு பறவையாகவும், அதை விரட்டுகிறவனாகவும், அப்புறம் அதை நினைத்துப் பார்ப்பவனாகவும், கடைசியில், "உன் திருவுள்ளப்படியே நடந்தேறட்டும் என்னுடைய ஆசைப்படி அல்ல" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய பிரார்த்தனையை செய்கிறவனாகவும் கொஞ்சம் அனுபவித்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது.

ஆனால், இதை எழுதிய ஆங்கிலக்கவிஞன் அப்படி நினைத்து எழுதவில்லை என்பது நிச்சயம்!

இந்தக் கவிதை மொழிபெயர்ப்புக்காக ஸ்ரீரங்கம் மோகனரங்கனுக்கும், இதை வெளியிட்டிருக்கும் தமிழ்வாசல் கூகிள்வலைக் குழுமத்திற்கும்  நன்றி!

Whittier என்ற கவிஞர் எழுதிய The Common Question என்ற கவிதையின் தமிழாக்கம்:

மாலையில் எங்கள் உணவறையில்

மங்கிய நிறத்தில் ஒரு பறவை
கூடியுண்டபின் கிளம்பியது
வட்டமிட்டொரு வாகினிலே
வளைந்த கூரலகைத்
தேய்த்துக்கொண்டே.  


சிறகுகளசைத்துச் செவ்வாலாட்டி
சிரத்தை ஒருபுறம் ஒருக்களித்தே
சில்லெனும் குரலில் பொறுமையற்றே
கேட்டது,

"சின்னப்பயலுக் கென்னவேண்டும்?

பதில்சொன்னேன், உதை! சிறு புள்ளே!
புதை உன் தலையை சிறகுக்கிடையே
துயில்வதி! போஎன சொன்னாலும் *
மறுபடி மறுபடி கேட்டது
முதலில் கேட்ட அதையேதான்.
புன்சிரிப்பில் நான் எனக்குரைத்தேன்:
மனிதரும் பறவையும் ஒன்றுதானோ!
அது சொன்னதைத்தானே
நாம் சொல்கின்றோம்.
செயலிலோ அல்லது சொற்களிலோ

சாட்டைப் பம்பரம் பறையுடன் சிறுவரும்
தாண்டுகயிறு பாவையுடன் சிறுமியரும்
நிலங்களும் வீடும் கொண்டே மனிதரும்
கேட்கும் ஏழமைக் கேள்வியும் அதுதானே!

போட்டுப் பிதுங்கி வெளியில்வந்தாலும்
பைக்குள் எதையோ திணிக்கின்றோம்;
வீசும்வலையும் நிரம்பிவிட்டாலும்
வராத மீனுக்கும் ஏங்குகிறோம்  



வானம் திறந்து கொட்டித் தந்தாலும்
வரையற்ற ஆசை விட்டுவிடாது
தான் என்ற ஆசைப் பூத யந்திரத்தில்
தளராமல் பிரார்த்தனை மாவரைக்கும்.



அருள்மிகும் கடவுள்
அனைத்தையும் கேட்டே
ஐயோ பாவம் என்றுரைப்பார்
நம் தேவைகள் அனைத்தும் அவர் அறிவார்;
கண்ணை மூடி நாம் கேட்பதையே 
தருவதும் மறுப்பதும் அவர் அருளே. 



எனவே நானும் சமயத்தில் நினைப்பதுண்டு;
நம் பிரார்த்தனை அனைத்தையும் ஒன்றாக்கி
கூட்டில் வீட்டில் குலவுமிடத்தில் கோயிலினில்
கேட்பது ஒன்றே,  


உன் சித்தம் போலே நடக்கட்டும்.”  


--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்



 

Saturday, May 7, 2011

டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்..! தி.ஜானகிராமன் சிறுகதை



நான் தூங்குகிறேனா என்ன ' இல்லையே.....நான் விழித்துக் கொண்டு இருக்கிறேனே! பின்னே ஏன் இந்தச் சந்தேகம் ? ஒரு நாய் எப்படி இங்கிலீஷில் குரைக்கும் ?


நாய்க்கு மொழி ஏது? இருக்கிறது ஒரு மொழிதானே? குரைப்பு ஒன்று தானே மொழி!இல்லாவிட்டால் மீமீ என்று சன்னக் குரலில் குழையும் வாலையும் குழைக்கும். பின்னே ஏன் எனக்கு மட்டும் ஒரு நாய் இங்கிலீஷில் குரைப்பது போல் கேட்கிறது ' கனவா ' இல்லையே. அரைத் தூக்கம் கூட இல்லையே. நல்ல முரட்டு விழிப்பாகத்தானே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இங்கிலீஷில்தான் குரைக்கிறது. என்ன வார்த்தைகள் இவை...?


கூர்ந்து கேட்கிறார் அவர்.


 'வெளவ் வெளவ்...டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்...வெளவ் வெளவ்...டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்... வெளவ் வெளவ் .டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் ' இப்போது தெளிவாகக் கேட்கிறது...
 ஆமாம். ஒரு நாய்தான்!டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் என்றுதான் குரைக்கிறது! இது என்ன டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்!அப்படி என்றால்?


அவர் வாசல் விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்து வெளியே பார்த்தார்.


குரைக்கின்ற நாய் அவர் பக்கம் திரும்பிற்று.

 'கூப்பிட்டீர்களா? ' என்று கேட்கிறது.


'இல்லையே!'


'பின் ஏன் விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தீர்கள்? '


'நீதானே இங்கிலீஷில் குரைத்தாய் ? '


'இங்கிலீஷிலா குரைத்தேன்? '


'பின்னே, டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் என்ன தமிழா? இல்லே உருது என்ற எண்ணமோ ? '


'எனக்கு அதெல்லாம் தெரியாது. அந்த ஜகதுசாரும் உப்பிலியும் பேசிக் கொண்டிருந்தார்கள். கேட்டேன். சரி, நம்ம விஷயமாச்சே என்று அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டேன். அதையே சொல்லிக் குரைக்கிறேன். '


'இதுக்கு என்ன அர்த்தம்? '


'அதெல்லாம் இங்கே நடுவாசலில் நின்று பேச முடியாது. '


'உள்ளே வந்து சொல்லேன். '


'நான் உள்ளே வரலாமா? '


'ஏன் வரக்கூடாது? இங்கிலீஷில் குரைக்கிறாய்? '


'தெரு நாய் ஆச்சே நான்..’


'பரவாயில்லே. இங்கிலீஷில் குரைக்கிறபோது, உள்ளே வந்தால் என்ன? வா. வா...உட்காரு... '


'நான் உட்கார வேண்டாம். அதெல்லாம் அதோ சோபாவில் வெல்வெட் குஷனில் சுகமாகத் தூங்கி, என்னைக் கண்டதும் பயந்து, இறங்கிச் சமையல் உள்ளுக்குள் ஓடுகிறதே...அந்த மியாவ் மியாவுக்கே உங்கள் சொகுசு சோபாவெல்லாம் இருக்கட்டும். '


'சரி நீ குரைத்ததற்கு அர்த்தம் சொல்லு!'


'சொல்கிறேன். ஆனால், நான் ஒன்று கேட்கிறேன். முன்னால் அதுக்குப் பதில் சொல்லுங்கள். அப்புறம் நான் சொல்லுகிறேன். '


'என்ன ? '


'நாயேன் உன்பாலன்றி எங்கே செல்வேன் ' என்று ஒரு பாட்டில் வருகிறதே, கேட்டிருக்கிறீர்களா? '


'கேட்ட ஞாபகம். '


'நாயேன் ஏழைபால் தயை செய்வாயே ' என்ற பாட்டில் வருகிறது. '


'ஆமாம் ஆமாம்...பாபநாசம் சிவன் பாட்டு என்று நினைக்கிறேன். '


'இருக்கலாம். பாடினவர் புத்திசாலிதான். பைரவி ராகத்தில் பாடி இருக்கிறார். பைரவி என்றால் எங்கள் நாய் இனத்தையும் குறிக்கும். '


'பொல்லாத நாயா இருக்கியே ' '


'நல்ல நாய் என்று சொல்லுங்கள்! நாயேன் உன் பாலன்றி எங்கே செல்வேன் என்று ஏதோ நாயாரைப் பற்றிக் கேட்கிறான் ஒரு மனுஷன். இதன் அர்த்தம் என்ன ? '


அவர் யோசித்துவிட்டு நாய்க்குப் பதில் சொல்கிறார்: 'நாய் நன்றி உள்ள பிராணி. எசமானை விட்டு எங்கும் போகாது. வேறு யாரிடமும் வாலைக் குழைத்துக் கொண்டு பல்லை இளிக்காது.'


'கரெக்ட்!.எங்கள் எசமானில்லாத ஒருவன் நூறு பிஸ்கட்டைக் காட்டினால் கூடப் பல்லை இளித்துக்கொண்டு ஓடமாட்டோம். கட்சி மாறமாட்டோம். அப்படி இருக்கும் போது நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்றெல்லாம் கட்சி மாறும் மனிதர்களை ஏன் திட்டுகிறார்கள்?எங்களைத் திட்டுகிறார்களா. அந்த மனுஷங்களைத் திட்டுகிறார்களா ?'


 '....................... '


 'பதில் சொல்லுங்கள்!'


 '..................... '


'என்ன யோசிக்கிறீர்கள் ? '


'எசமான் இருக்கிற நாய்தானே, இன்னொரு ஆள் நூறு பிஸ்கட்டைக் காட்டினால் கூடப் பல்லை இளித்துக்கொண்டு போகாது என்று சொன்னாய். எசமான் இல்லாத நாய்கள் எத்தனை இருக்கு ?


'என்னைப் போல இன்டிபென்டென்ட்டா, சுதந்திரமா, எசமானே இல்லாத நாய்களைச் சொல்கிறீர்களா ? '


'ஆமா. '


'நீங்கள் இந்தக் கேள்வி கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். எனக்கு இந்தத் தெரு, எசமான். இந்தத் தெருவில் உள்ள நீங்கள், இன்னும் மற்றவர்கள், அவர்களுடைய குடும்பம், குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து மொத்தமாக எசமான். அப்படிச் சொல்வதை இந்தத் தெரு என் சொத்து மாதிரி. நான் உங்களுக்குக் காவலாளி ' நான் இதை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன். இந்த ஊரிலேயே வேறு தெருவுக்கு அல்லது வார்டுக்கு தேர்தலுக்கு நிற்க மாட்டேன். நான் அந்த வேறு தெருவைச் சேர்ந்தவன் என்றெல்லாம் 'டூப் ' அடிக்கமாட்டேன். நாய்களும் அதை ஒப்புக்கொள்ளாது. இந்த நாய் இந்தத் தெரு, அந்த நாய் அந்தத் தெரு. அந்தத் தெரு நாய் இங்கே வந்தாலும் குதறித் தீர்த்து விடுவேன். வேற்று நாய் இங்கே வரவும் துணியாது. 


'இன்டிபென்டென்ட் என்று யாரும் இந்த நாய் வர்க்கத்தில் கிடையாது. ஒரே தெருவுக்குள் ஒரு நல்ல மனிதன் இருந்தால் பிரியமாக இருப்பேன். பொல்லாத மனிதன் இருந்தால் ஒதுங்கி நிற்பேன். இந்த அளவில் இன்டிபென்டென்ட் என்று சுமாராகச் சொல்லலாம். நல்ல ஆள்களிடம் பிரியம் காட்டுகிறவர்கள்தான் இன்டிபென்டென்ட், அதுதான் நிஜமான சுதந்திரம். '


 'ரைட்!ஆனா நீ என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே ? '


'எது? '


'டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ். '


'நாசமாய்ப் போச்சு. அதைத்தான் இத்தனை நேரமும் சொல்லிக் கொண்டிருந்தேன். ஜகது எதையோ உப்பிலியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த உலகத்தில் தான் படைத்த ஜீவஜந்துக்கள் எல்லாவற்றுக்கும் ஆண்டவன் ஒரு நிலம்-- ஒருடெரிடெரி கொடுத்திருக்கிறாராம். அந்த நிலத்தில் வேறு யாரும் உரிமை பாராட்டக்கூடாது. 


அது அதுக்குத் தன் பிராந்தியத்துக்கு மேல் ஒரு ஆட்சி, ஒரு உரிமை உண்டு. அதுதான் டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் என்று, ஜகது உப்பிலியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். கட்சி மாறிகளைப் பார்த்து நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று கிண்டல் பண்ணுகிறான்களே, நெசம்மா நாய்களுக்கு இது தெரிஞ்சதுன்னா நம்மை எல்லாம் என்ன பண்ணுமோ, என்று ஜகது சொல்லிக் கொண்டிருந்தார். 


'கரெக்ட்! ' தெருவுக்கு ஒரு நாய் இருந்தால் போறுமே, ஆயிரம் பூட்டுக்குச் சமானம் என்று உப்பிலி மாமாகூட சொல்லிக் கொண்டிருந்தார். இதை  எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தேன். இந்த 'டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் ' என்கிற வார்த்தை கடகடவென்றும் படபடவென்றும் அதிகாரத்தை வெளிப்ப டுத்துகிற மிடுக்கு வார்த்தையா இருந்தது. அதைச் சொல்லிக் குரைக்கிறேன்’.


‘குரைக்கக் குரைக்க எனக்கே ஒரு தன்னம்பிக்கை, மிடுக்கு, பெருமிதம் எல்லாம் உடம்பில் மதமதக்கிறது. இனிமேல் உப்பிலி மாமா மாமாங்கத்துக்கு ஒரு தடவை வீட்டைப் பூட்டிக்கொண்டு போனால் கூட வாசல்பூட்டு, கொல்லைப் பூட்டு மட்டும் போட்டால் போது. நான் இருக்கிறேன். நீங்களும் கவலைப்படவேண்டாம். இந்தத் தெருவுக்கு நான் ராஜா. இது என் டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்'


நாய் கம்பீரமாகப் பார்த்தது!.


'நல்ல ஆளப்பா நீ!'


'ஆளப்பாவா? நாயப்பா!' என்று நாய் வெளியே போயிற்று.


'கதவைச் சாத்திக்கொள்ளுங்கள். வெளவ் வெளவ் வெளவ், டெர்ரி டோரியல் இம்ப்பரேட்டிவ் டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்.'


ஏதோ தெருவுக்கே பட்டா வாங்கிவிட்டது போல், நாய் வீறாப்பாகக் குரைக்கத் தொடங்கிற்று!

--------------------------------------------------------------------------------------------------------------
நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று இனிமல் எவராவது சொல்வீர்களா என்ன! :-))))


தி.ஜாவின் இந்த சிறுகதை, சிறுகதை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் கூட!



 

Sunday, May 1, 2011

........போயிக் காமத் வந்தார் டும் டும் டும்!


ஊழலுக்கெதிராக இன்போசிஸ்! 

கொஞ்சம் வினோதமான இந்தக் காமெடியை முன்னமேயே  பதிவிட நினைத்திருந்தேன்!தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் செய்திகளைக் கவனித்துக் கொண்டிருந்ததில், அப்போது அவகாசமே இல்லாமல் போனது.அந்தத் தமாஷாவைப் பற்றிய செய்தி இங்கே!
"எங்களிடம் லஞ்சம் கேட்டார்கள் மறுத்துவிட்டோம்" என்று சென்ற பத்தாம் தேதி  முழங்கிய இன்போசிஸ்  மோகன்தாஸ் பைமுழங்கிய ஒரு வார காலத்துக்குள்ளாகவே, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தது ஐடி துறையை மட்டுமல்ல, அதற்கு சம்பந்தமே இல்லாத என்னைப்போலப் பதிவர்களையும் கூடக்  கொஞ்சம் ஆச்சரியப்படுத்திய விஷயம்!

கார்பரேட் இந்தியா ஊழலை வளர்ப்பதில், காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லை என்பதை வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மெகா ஊழலும் அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் கூட, மோகன்தாஸ் பை போன்றவர்கள் தங்கள் நிறுவனம் ஊழலுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாக சொல்வதை நம்பமுடியவில்லை!

ஜெனெரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் ஜாக் வெல்ஷ் தலைமைப் பொறுப்பேற்ற தருணத்தில் தயவு தாட்சணியமில்லாமல் ஆட்குறைப்பு செய்ததுபோல (ந்யூட்ரான் ஜாக் என்று பெயரிடப்பட்டதில் ஜாக் வெல்ஷுக்கு மிகவும் வருத்தமிருந்தது)  ஐடி துறையில் ஐ-ரேஸ் (iRace) என்ற முறையில் இன்போசிசில் பணியாற்றியவர்களைக் கடுமையாக வடிகட்டியதில் 4500 பேருக்கும் மேலாக வெளியேற்றக் காரணமாக இருந்தவர் பை  என்ற கசப்பான விமரிசனத்தை ஒரு முன்னாள் இன்போசிஸ் ஊழியரிடமிருந்து அறிய முடிந்ததுபிசினெஸ் லைன் நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்தக் கட்டுரை கொஞ்சம் இந்தப்


கர்நாடக அரசியல் தெரிந்தவர்கள், ஊழல் என்பது கர்நாடகாவில் it is a way of life என்பதையும் அறிந்தே வைத்திருப்பதை இந்தக் கொங்கணி எப்படி மறந்துபோனார் என்பது எனக்கு ஆச்சரியம்! கொங்கணிகளை இந்தியாவின் நிதித்துறை ஜாம்பவான்கள் என்று அவர்களே சொல்லிக் கொள்வார்கள்! வங்கித்துறையில், கர்நாடகாவைத் தலைமையகமாகக் கொண்ட வங்கிகள் சிலவற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதில், ஊழல், மோசடி செய்வதில் அவர்களுடைய திறமை நன்றாகவே தெரியும்.ஊழலைப் பெருமையோடு வளர்க்கிற ஒரு அமைப்பில் இருந்துகொண்டு ஒருவர், ஊழலுக்கெதிராகப் போர்க்கொடி தூக்குகிறார் என்று சொன்னால், கொஞ்சம் கேலிச் சிரிப்புடன் தான் பார்க்க வேண்டியிருக்கும் இல்லையா!
மோகன்தாஸ் பை இன்போசிஸ் நிறுவனத்தின் சார்பில் கிளப்பிய போர்க் கொடி கூட அப்படித்தான்! ஒரு கேலிச் சிரிப்புடன் முடிந்து போனது! அதை மறந்துபோயிருந்த வேளையில், இந்த ராஜினாமா விவகாரம்!

 

ஒரு வழியாக இன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்சிக்யூடிவ் சேர்மனாக திரு கே வி காமத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.பிபிசி செய்தி, "நிறுவனத்தின் ஸ்தாபகரே தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவரது குடும்ப உறவினர்களின் கைகளுக்கே தலைமைப் பொறுப்பு மாறும் வழமையே இந்திய நிறுவனங்களில் இருந்துவருகின்ற நிலையில், வங்கித் துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவரான கே.வி காமத் இன்போஸிஸ் தலைவராக நியமிக்கப் படுகின்றமை பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது." என்று குறிப்பிட்டிருக்கிறது.

யார் வந்தாலும் ஜோராகக் கைதட்டுவது இந்தியாவில் சாதாரணமான ஒன்று தான் என்பது பிபிசி செய்தியாளருக்குத்  தெரியவில்லை, அவ்வளவுதான்!

நிறுவனத்தை உருவாக்க என்னென்ன பாடுபட்டோம் என்று விமரிசனம் செய்பவர்களுக்கு பதிலாக நாராயணமூர்த்தி என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் வாசிக்க 



 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)