ஊழலுக்கெதிராக இன்போசிஸ்!
கொஞ்சம் வினோதமான இந்தக் காமெடியை முன்னமேயே பதிவிட நினைத்திருந்தேன்!தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் செய்திகளைக் கவனித்துக் கொண்டிருந்ததில், அப்போது அவகாசமே இல்லாமல் போனது.அந்தத் தமாஷாவைப் பற்றிய செய்தி இங்கே!
"எங்களிடம் லஞ்சம் கேட்டார்கள் மறுத்துவிட்டோம்" என்று சென்ற பத்தாம் தேதி முழங்கிய இன்போசிஸ் மோகன்தாஸ் பை, முழங்கிய ஒரு வார காலத்துக்குள்ளாகவே, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தது ஐடி துறையை மட்டுமல்ல, அதற்கு சம்பந்தமே இல்லாத என்னைப்போலப் பதிவர்களையும் கூடக் கொஞ்சம் ஆச்சரியப்படுத்திய விஷயம்!
கார்பரேட் இந்தியா ஊழலை வளர்ப்பதில், காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லை என்பதை வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மெகா ஊழலும் அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் கூட, மோகன்தாஸ் பை போன்றவர்கள் தங்கள் நிறுவனம் ஊழலுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாக சொல்வதை நம்பமுடியவில்லை!
ஜெனெரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் ஜாக் வெல்ஷ் தலைமைப் பொறுப்பேற்ற தருணத்தில் தயவு தாட்சணியமில்லாமல் ஆட்குறைப்பு செய்ததுபோல (ந்யூட்ரான் ஜாக் என்று பெயரிடப்பட்டதில் ஜாக் வெல்ஷுக்கு மிகவும் வருத்தமிருந்தது) ஐடி துறையில் ஐ-ரேஸ் (iRace) என்ற முறையில் இன்போசிசில் பணியாற்றியவர்களைக் கடுமையாக வடிகட்டியதில் 4500 பேருக்கும் மேலாக வெளியேற்றக் காரணமாக இருந்தவர் பை என்ற கசப்பான விமரிசனத்தை ஒரு முன்னாள் இன்போசிஸ் ஊழியரிடமிருந்து அறிய முடிந்ததுபிசினெஸ் லைன் நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்தக் கட்டுரை கொஞ்சம் இந்தப்
கர்நாடக அரசியல் தெரிந்தவர்கள், ஊழல் என்பது கர்நாடகாவில் it is a way of life என்பதையும் அறிந்தே வைத்திருப்பதை இந்தக் கொங்கணி எப்படி மறந்துபோனார் என்பது எனக்கு ஆச்சரியம்! கொங்கணிகளை இந்தியாவின் நிதித்துறை ஜாம்பவான்கள் என்று அவர்களே சொல்லிக் கொள்வார்கள்! வங்கித்துறையில், கர்நாடகாவைத் தலைமையகமாகக் கொண்ட வங்கிகள் சிலவற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதில், ஊழல், மோசடி செய்வதில் அவர்களுடைய திறமை நன்றாகவே தெரியும்.ஊழலைப் பெருமையோடு வளர்க்கிற ஒரு அமைப்பில் இருந்துகொண்டு ஒருவர், ஊழலுக்கெதிராகப் போர்க்கொடி தூக்குகிறார் என்று சொன்னால், கொஞ்சம் கேலிச் சிரிப்புடன் தான் பார்க்க வேண்டியிருக்கும் இல்லையா!
மோகன்தாஸ் பை இன்போசிஸ் நிறுவனத்தின் சார்பில் கிளப்பிய போர்க் கொடி கூட அப்படித்தான்! ஒரு கேலிச் சிரிப்புடன் முடிந்து போனது! அதை மறந்துபோயிருந்த வேளையில், இந்த ராஜினாமா விவகாரம்!
ஒரு வழியாக இன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்சிக்யூடிவ் சேர்மனாக திரு கே வி காமத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.பிபிசி செய்தி, "நிறுவனத்தின் ஸ்தாபகரே தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவரது குடும்ப உறவினர்களின் கைகளுக்கே தலைமைப் பொறுப்பு மாறும் வழமையே இந்திய நிறுவனங்களில் இருந்துவருகின்ற நிலையில், வங்கித் துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவரான கே.வி காமத் இன்போஸிஸ் தலைவராக நியமிக்கப் படுகின்றமை பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது." என்று குறிப்பிட்டிருக்கிறது.
யார் வந்தாலும் ஜோராகக் கைதட்டுவது இந்தியாவில் சாதாரணமான ஒன்று தான் என்பது பிபிசி செய்தியாளருக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான்!
நிறுவனத்தை உருவாக்க என்னென்ன பாடுபட்டோம் என்று விமரிசனம் செய்பவர்களுக்கு பதிலாக நாராயணமூர்த்தி என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் வாசிக்க
யார் வந்தாலும் ஜோராகக் கைதட்டுவது இந்தியாவில் சாதாரணமான ஒன்று தான் என்பது பிபிசி செய்தியாளருக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான்!
நிறுவனத்தை உருவாக்க என்னென்ன பாடுபட்டோம் என்று விமரிசனம் செய்பவர்களுக்கு பதிலாக நாராயணமூர்த்தி என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் வாசிக்க
///யார் வந்தாலும் ஜோராகக் கைதட்டுவது இந்தியாவில் சாதாரணமான ஒன்று தான் என்பது பிபிசி செய்தியாளருக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான்!///
ReplyDeleteஎன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.