சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியில் மகன் வாங்கி வந்திருந்த ஜெயமோகனின் இன்றைய காந்தி புத்தகத்தை ஒருவழியாகப் படித்து முடித்தாயிற்று.
காந்தியைப் பற்றி ஆரம்பநாட்களில் கொண்டிருந்த உயர்வான பிம்பம், எனது இடதுசாரி நாட்களில் தகர்க்கப் பட்டு, கேலிக்குரிய ஒருவராகவே ஆனதும், தொடர்ந்த அனுபவங்களில் சிந்தனை முதிர்ச்சியும் தெளிவும் ஏற்பட்ட பிறகு, தன்னைத் தானே தொடந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டே வந்த காந்தி என்ற மனிதன், மகாத்மாவாக, மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்ற நிலைக்கு உயர்ந்த விதத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
கல்கி ரா.கிருஷ்ண மூர்த்தி, காந்தியின் கதையை மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்ற தலைப்பிலேயே இரண்டு பாகங்களாக எழுதியதை அமுத நிலைய வெளியீடாகச் சிறு வயதில் படித்தது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாகவே இன்றைக்கு உணர முடிகிறது.
நா.பார்த்தசாரதி, 1970 களில், ஸ்தாபன காங்கிரசில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். காந்தீயக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவராக, அதே நேரத்தில் ஒரு சத்திய ஆவேசத்தோடு அவர் எழுதிய சில புதினங்கள், மாணவனாக இருந்த அந்த நாட்களில் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னதென்று விவரித்துச் சொல்லி விட முடியாததாக, இப்போதும் கூட இருக்கிறது.
ஜெயமோகன் தன்னுடைய இன்றைய காந்தி புத்தகத்தில் பலநூறு பக்கங்களில் நீட்டி முழக்கி முழுமையாகச் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை மிக எளிமையாக, நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய ஆத்மாவின் ராகங்கள் புதினத்தில் சொல்லியிருப்பதை, அதை மறுவாசிப்பு செய்த பிறகு பார்க்க முடிகிறது.
கதை 1968 ஆண்டு வாக்கில் நிகழ்வதாகத் தொடங்குகிறது.
அதிகாலை ஒன்றரை மணி. காந்திராமன் என்ற சுதந்திரப் போராட்டத் தியாகி மறைந்த செய்தியைப் பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்த டெலிபிரிண்டர் அடித்துத் தள்ளுகிறது. அவரால் வளர்ந்து ஆளான பத்திரிகையாளர் கண்ணீருடன் அதைப் பத்திரிகையில் வெளியிடுவதற்காக செய்தியாக எழுதுகிறார். கண்களில் நீர் மறைக்க, கடைசியாக அவரைச் சந்தித்தபோது, காந்திராமன் தேசத்தில் அந்த நேரத்தில் இருந்த நாட்டு நடப்பைப் பார்த்து விசனப்பட்டுச் சொன்னது நினைவுக்கு வருகிறது.
மனம் பதற - கை பதற செய்தியை எழுத உட்கார்ந்தேன். சொந்தத் தந்தையின் மரணத்தின் போதுகூட நான் இவ்வளவு வேதனைப்பட்டதில்லை. யாரால் இந்த நிலைக்கு வந்தேனோ அந்தப் பெருந்தன்மையாளரின் மரணச் செய்தியை எழுதும் போது நான் எத்தகைய உணர்வுகளை அடைந்திருப்பேன் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. போன மாதம் மதுரைக்குப் போயிருந்த போது ஓர் இரண்டு மணி நேரம் ஆசிரமம் இருந்த கிராமத்துக்குப் போய், அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.
"நாங்களெல்லாம் அரும்பாடுபட்டுப் பாரத மாதாவின் முகத்தில் பன்னூறு ஆண்டுகளாக மறைந்திருந்த புன்னகையை மீண்டும் வரவழைத்தோம். இந்த இருபத்தோராண்டுகளில் அந்தப் புன்னகை மீண்டும் படிப்படியாக மறைந்து கொண்டு வருகிறது. ராஜூ! மறுபடியும் அவள் முகத்தில் புன்னகையைப் பார்க்காமல் நான் சாக விரும்பவில்லை. எனக்கு வயதாகி விட்டது. நீங்களெல்லாம் புகழ்ந்து எழுதும்படி தேசத்துக்கு எவ்வளவோ செய்தாச்சு. ஆனாலும் மறுபடி நான் கவலைப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் போராடிய காலத்தில் இந்த தேசத்தில் தேசம் விடுதலை பெற வேண்டுமென்ற ஒரே இயக்கமும், ஒரே தலைமையும் தாம் இருந்தன. இன்றோ ஒவ்வோரு மாநிலத்திலும் ஒன்பது வகை இயக்கம்; ஒன்பது வகைத் தலைமை எல்லாம் வந்துவிட்டன. ஆயிரம் காரணங்களுக்காகப் பதினாயிரம் கட்சிகள் போராடும் போது தேசம் என்கிற சக்தி எவ்வளவு பலவீனமாகி விடுகிறது பார்த்தாயா?"
"நீங்கள் இணையற்ற ஒரு சகாப்தத்தைப் பார்த்தீர்கள். இன்னொன்றையும் இப்போது பார்க்கிறீர்கள்..."
"கவலையோடு பார்க்கிறேன் என்று சொல்."
கடைசியாக நான் அவரைச் சந்தித்த நினைப்பை மறுபடி எண்ணியபோது இப்படிப் பெருமூச்சோடு அந்த எண்ணம் முடிகிறது.
நாயுடு செய்தியை வாங்கிக் கொண்டு போன பின் மானோ மிஷின் இயங்கும் சப்தம் வருகிறது. நைட் ரிப்போர்ட்டரின் குறட்டை ஒலியை அந்த மிஷின் இயங்கும் ஓசை உள்ளடக்கிக் கொண்டு விழுங்கி விடுகிறது. இன்று ஸிடி எடிஷன் முக்கால் மணி நேரம் தாமதமாக மிஷினில் ஏறும். டெலிவரி வான் வெளியே வந்து நிற்கிறது. ஹார்ன் தொடர்ந்து ஒலிக்க, அதையடுத்து டைம் கீப்பர் உள்ளே வந்து பார்சல் செக்ஷனில் இரைவது கேட்கிறது. நான் என்னுடைய லீவு லெட்டரை எழுதிக் கொண்டிருக்கிறேன். மதுரைக்குப் போக வேண்டும். மாபெரும் தேச பக்தரின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும். பத்திரிகை ஆசிரியன் என்ற முறையை விட இதில் என் சொந்தக் கடமை பெரிதாயிருந்தது.

மிகவும் நெருங்கிய ஆத்ம பந்து ஒருவரின் மரணத்துக்குப் போவதுபோல், நான் இதற்குப் போக வேண்டியவனாயிருந்தேன். பல வருடங்களாக என் வாழ்க்கைக்கு அவர் குருவாகவும், நண்பராகவும் இருந்திருக்கிறார். வக்கீலுக்குப் படித்துவிட்டு, ராஜகோபால் பி.ஏ., பி. எல்., என்று போர்டு மாட்டிக் கொண்டு கோர்ட்டுகளின் படிகளில் நான் ஏறி இறங்கிக் கொண்டிருக்காமல்,
"உனக்குப் பத்திரிகைத் துறைதான் பொருத்தமாயிருக்கும். அதன் மூலமாகத் தேசத்துக்கும், பொது வாழ்க்கைக்கும் நீ எவ்வளவோ நல்லது செய்யலாம்"
என்று எனக்கு அறிவுரை கூறி, என்னை இந்தத் துறைக்கு அனுப்பி வைத்தவரே காந்திராமன் தான். குடும்ப விஷயத்திலும் சரி, பொது விஷயங்களிலும் சரி, நேரிலோ கடித மூலமோ நான் அவரைக் கேட்காமல் எந்த முடிவும் செய்ததில்லை. எந்தக் காரியத்திலும் இறங்கியதில்லை.
இப்படி மறைந்த ஒரு சகாப்தத்தைத் தொட்டுக் கதைக் களம் துவங்குகிறது. பத்திரிக்கை ஆசிரியர் ராஜு என்கிற ராஜகோபால், காந்திராமனுடைய சரிதையை எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டு அவரிடம் கேட்டபோது, ஒரு கதையின் நாயகனை விட சுவாரசியமாக வாழ்ந்திருக்கிறேன், ஆத்மாவினால் வாழ்ந்திருக்கிறேன் பார் அதுதான் முக்கியம்! அப்படி ஆன்மாவினால் வாழ்ந்த தலைமுறையின் கடைசிக் கொழுந்து நான், என்னுடைய காலத்திற்குப் பிறகு, என்னுடைய டயரிக் குறிப்புக்களை உனக்குத் தருகிறேன், அப்போது எழுது என்று சொல்லி விடுகிறார்.
இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்,
இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே
என்ற பாரதியின் ஆவேசத்தோடு, காந்தியின் சத்தியாக்கிரக வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற வாலிபன் ராஜா ராமனுக்கு இரண்டு துணைகள்! விடுதலை கிடைக்கிற வரை திருமணத்தை நினைப்பது இல்லை என்ற வைராக்கியத்துடன் இருப்பவனுக்கு, எடுத்துக் கொண்ட சபதத்தோடு அவனையே நினைந்து உருகும் ஒருத்தியின் தியாகமும் கட்டுப் படுத்துகிறது.
அந்த ஒருத்தியின் தியாகம், காதல் சாமானியப் பட்டதா என்ன! ஆத்மாவின் ராகங்களாகப் பிறக்கும் அந்த உறவு, விடுதலைப் போராட்ட வரலாறோடு சேர்ந்தே கதையாக விரிகிறது.தாசி குலத்தில் பிறந்தவள் அவள்! ஊர் உலகம் ஏளனமாகப் பார்க்கும் குலம் அவளுடையது. ஆனால், அப்படி ஏளனமாகப் பார்க்கப் பட்ட குலத்தில் பிறந்தவர்களுக்கும் கூட வேறெங்கும் காண முடியாத குண நிதியங்களைப் பார்க்க முடியும் தருணங்கள் கதையின் நாயகனான ராஜாராமனுக்கு வாய்க்கிறது.
திலகர் தேசிய வாசகசாலையின் செலவுகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிக்கும் செலவு, கஷ்டப்படும் தேசத் தொண்டர் குடும்பங்களுக்கு உதவி என்று எல்லாச் செலவுகளுக்கும் பொக்கிஷ தாரராக அமைந்தது போல் முகங்கோணாமல் கொடுத்தாள் மதுரம்.

ஜமீந்தார் இறந்த வருஷம் முழுவதும் கச்சேரிக்கோ, மேடையில் பாடவோ ஒப்புக் கொள்ளாமல் துக்கம் கொண்டாடினாள் அவள்.
தனபாக்கியம் வெளியே நடமாடுவதையே நிறுத்தியிருந்தாள். குடும்பத்தை விட விசுவாசமாக அவர்கள் நாகமங்கலத்தாரைப் பாவித்த அந்த உண்மை அன்பு ராஜாராமனைக் கவர்ந்தது. ஜமீந்தாருடைய மனைவி மக்கள் கூட அந்தத் துக்கத்தை இவ்வளவு சிரத்தையோடு அநுஷ்டித்திருப்பார்களா என்பது சந்தேகமாயிருந்தது. மனித சமூகம் நீண்ட நாளாக யாருக்கு உண்மை நன்றி செலுத்தவில்லையோ, அவர்களிடம் நிரம்பிக் கிடக்கும் சத்தியமான அன்பின் இறுக்கத்தைக் கண்டு ராஜாராமனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
மனிதர்கள் யாருடைய அன்பு பணத்துக்காக மட்டுமே கிடைக்குமென்று நினைக்கிறார்களோ அவர்களிடம் பணத்தைக் கொண்டு அளவிட முடியாத பிரியம் சுமந்து கிடப்பதை அவன் கண்டான்.
யாருடைய மனங்கள் நிதிவழி நேயம் நீட்டும் பொதுமனம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடி வைத்துப் பழி சுமத்தப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் மனமே ஒரு பெரிய அன்பு நிதியாக இருப்பதை அவன் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜமீந்தாருடைய பிறந்த நாளை நினைவு வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது முதல், அவர் இறந்த தேதியில் விரத நியமங்களோடு திதி கொடுப்பதுவரை தனபாக்கியமும், மதுரமும் காட்டிய அக்கறை அவனை மலைக்கச் செய்தது. அன்பைக் கலையாகவே, சங்கீதம் போல், நிருத்தியம் போல் போற்றி வளர்க்கும் நாகரிகம் இவர்கள் குலதனம் போலிருக்கிறது என்றே அவன் எண்ணினான். ஜமீந்தார் தனபாக்கியத்துக்கு ஊரறிய தாலி கட்டவில்லை. ஆனால், தனபாக்கியமோ அதைச் சிறுமையாக எண்ணியதாகவே தெரியவில்லை. இது மிக மிக விநோதமாயிருந்தது அவனுக்கு. அந்தக் குடும்பத்தின் மேல், குடும்பமாக உலகம் கருதாத வீட்டின் மேல் எல்லையற்ற பரிவு ஏற்பட்டது அவன் மனத்தில். அவர்களுடைய விளம்பரம் பெறாத பண்பாடு அவ்னைக் கருத்தூன்றிக் கவனிக்கச் செய்தது.
உயர்ந்த சாதிக் குடும்பங்களில் இருப்பதை விட சுத்தத்தில் அக்கறை, தேவதைகளைவிட அழகு, கந்தர்வர்களை விடக் கலையில் சிரத்தை, பிராமணர்களை விட விரதங்களில் பற்று, மேதைகளை விட அதிகமான குறிப்பறியும் நாகரிகம், படித்தவர்களைவிட இங்கிதம் இவை எல்லாம் ஒரு தாசியின் வீட்டில் இருப்பதைக் கண்டு அவன் சொல்ல முடியாத வியப்பில் மூழ்கினான். 'இது இவர்கள் குலதனம்' - என்று அவன் மனம் இடையறாது கூவியது.
'பரிசுத்தமான அன்புதான் இவளுடைய முதல் சங்கீதம். இவள் வாசிக்கும் சங்கீதமோ அதே அன்பின் இன்னொரு வெளியீடு' - என்று மதுரத்தைப் பற்றி அவன் எண்ணினான். அவள் பாடும் சங்கீதத்தில் மட்டுமல்ல, பேசும் சங்கீதத்திலும் அபஸ்வரமே வராமலிருப்பதை அவன் ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனித்தான். ஜமீந்தார் காலமான பின்போ மதுரம் படிப்படியாகத் தன்னிடமிருந்த பட்டுப் புடவைகளை உபயோகிப்பதையே விட்டுவிட்டாள். அவளிடம் மிக மிக எளிமையான கதர்ப் புடவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அவன் ஒரு நாள் அவளைக் கேட்டான்.
"என்ன மதுரம், பட்டுப்புடவை ஆசையை அறவே விட்டாச்சுப் போலிருக்கே!"
"எப்பவும் எனக்கு அந்த ஆசையே இல்லை? அப்பா பட்டுப் புடவையா வாங்கிக் குமிச்சார். அரண்மனைக்குப் பட்டுப்புடவை வாங்கினா ஞாபகமா இங்கேயும் சேர்த்து வாங்குவார். கட்டிக்காவிட்டால் அவர் மனசு புண்படுமேன்னு கட்டிண்டிருந்தேன். இனிமே அது கூட அவசியமில்லே..."
"ஏன்? இனிமே பட்டுப்புடவை கிடைக்காதோ?"
"சந்தேகமென்ன? உங்ககிட்டச் சொன்னா, நீங்க கதர்ப் புடவைதானே வாங்கிக் குடுப்பீங்க? நானும் நிறைய நூல் சிட்டம் போடுகிறேன். கதர்தானே சிட்டத்துக்குக் கிடைக்கும்?"
"உனக்கு வேணும்னாப் பட்டுப்புடவையே வாங்கிக்கலாமே?"
"அப்படியில்லை! தனியா எனக்குப் பிரியம்னு எதுவுமே கிடையாது. உங்களுக்கு எது பிரியமோ அதுதான் எனக்குப் பிரியம்..."
மனத்தின் ஆழத்திலிருந்து பிறந்த அவளுடைய இந்தச் சொற்கள் ராஜாராமனைப் பெருமைப்பட வைத்தன. அவள் இசைக்க முடிந்த ராகங்களில் மிக உயர்ந்த ராகமாக இந்தச் சொற்கள் அவன் செவிகளில் ஒலித்தன. இந்த வார்த்தைகள் அவனைக் கிறங்கவே செய்தன. முரட்டுத்தனமும், இங்கிதமும், நளினமும், நாசூக்கும், நாகரிகமும் தெரியாத பல ஜமீந்தார்களும், செல்வக் குடும்பத்து இளைஞர்களும் அவற்றை முதல் முதலாக தாசிகளின் வீடுகளிலிருந்துதான் இப்படிப் பட்ட நளினவதிகளிடம் கற்றுக் கொள்கிறார்களோ என்று கூட அவன் அடிக்கடி நினைக்கத் தொடங்கியிருந்தான்.

'சங்கீதமும், கலைகளும் தான் மனிதனை நாகரிகமடையச் செய்கின்றன' என்று கூறுவது உண்டு. ஆனால், குரூரமான மனிதர்களாகிய பல செல்வந்தர்கள் கருணை, அன்பு, இங்கிதம் போன்ற கனிவான அம்சங்களையே கலையை ஆளும் அழகின் கிருஹங்களில் தான் படித்துத் தேறுகிறார்கள் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அவனுள் வலுத்தது. நாகமங்கலம் ஜமீந்தாரின் பட்டமகிஷி அவரைக் கணவனாகவும் கனவானாகவும் வேண்டுமானால் ஆக்கியிருக்கலாம்.
ஆனால், மதுரை ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் தனபாக்கியத்தின் நட்பு கிடைத்த பிறகே, அவர் மனிதராக நாகரிகம் அடைந்திருக்க முடியுமென்று அவனுக்குப் புதிதாக ஒரு கருத்துத் தோன்றியது. ஜப்பானிய கெய்ஷாக்களைப் பற்றி இப்படிக் கூறும் ஓர் ஆங்கிலப் புத்தகத்தை அவன் படித்திருந்தான். கெய்ஷாக்களைப் போலவே தமிழ்நாட்டுத் தேவதாசிகளிடம் அந்தப் பண்பு நிறைந்திருப்பது அவனுக்குப் புரிந்தது. 'மிருச்ச கடிக'த்தில் சாருதத்தனுக்குக் கிடைத்த சுகம் அன்பின் சுகமாகத்தான் இருக்க வேண்டும். வஸந்தசேனையின் நாகரிகம், கலை நாகரிகத்தின் மிக உயர்ந்த எல்லையாக அவனுக்குத் தோன்றியது.
இவர்கள் மிருகங்களை மனிதர்களாக்குகிறார்கள்! மனிதர்களைத் தெய்வங்களாக்குகிறார்கள்!" என்று எண்ணிய போது மிக மிக விநோதமாக வளர்ந்தது அந்தச் சிந்தனை. வேட்டையிலும், குடியிலும், மல்யுத்தத்திலும் போதையேறிக் கிடந்த நாகமங்கலம் ஜமீந்தாரைத் தனபாக்கியம் மனிதனாக்கிச் சங்கீத ரசிகராக மாற்றி விட்டாள்.

தனபாக்கியத்தின் மகளோ வெறும் மனிதனாகிய என்னைத் தன்னுடைய பக்தியால் தெய்வமாகவே ஆக்க முயல்கிறாள். என்னையே எண்ணி உருகி உருகித் 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று பாடுகிறாள். மனிதனைப் பக்தி செய்த உடம்பை இழப்பதன் மூலம் தெய்வத்தைப் பக்தி செய்யும் தத்துவத்துக்கு உலகத்தைப் பழக்கும் உபாசனா மார்க்கங்களில் ஒன்றாகவே தொடக்கத்தில் இந்தத் துறை தோன்றியதோ என்றெல்லாம் பலவிதமாகச் சிந்திக்கத் தொடங்கியபோது அவன் மனத்திலிருந்த பல பழைய மாற்சரியங்களை அந்தச் சிந்தனை போக்கி விட்டது.
மிக நுணுக்கமாகச் செதுக்கப் பட்ட பாத்திரங்கள்! சுதந்திரப் போராட்டத்தின் பல கட்டங்களைத் தொட்டு, ராஜாராமனாக இருந்தவன் காந்திராமனாக மாறிய கதையாக விரிகிறது. முன்னுரையில் நா.பா சொல்வதைப் போல இந்தக் கதை இரண்டு சகாப்தங்களைத் தொட்டுச் செல்கிறது. உப்பு சத்தியாக் கிரகத்திலிருந்து தொடங்கி விடுதலை அடைந்த நாட்கள், அதற்குப் பின் என்று கதை வளர்கிறது.
காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி அரசியல் ஆரம்பித்த கதை, ராஜாஜி-சத்தியமூர்த்தி என்று ஆரம்பித்து, ராஜாஜி காங்கிரசில் இருந்து ஒதுங்கி, மறுபடி வந்து சேர்ந்து கொண்டு கோஷ்டி அரசியலாக ஆக்கிய கதையையும் போகிற போக்கில் இந்தப் புதினம் சொல்லிவிட்டுப் போகிறது.
நேற்றைய நாட்களைப் பற்றி அறிந்து கொள்ள, எப்படி காந்தி மகானுடைய ஆளுமையின் கீழ் லட்சக்கணக்கான இந்திய மக்கள் விடுதலைப் போராட்டத்தைத் தங்களுடைய தவமாகவும் ஏற்றுக் கொண்டார்கள், அவர்களை ஆட்கொண்ட மாந்தருக்குள் ஒரு தெய்வமாக காந்தி எப்படி இருந்தார் என்பதையும் கதை ஒரு கோடி காட்டுகிறது.

இணையத்தில் படிக்க இங்கே.
குறுந்தகடாக நா.பாவுடைய படைப்புக்களை பிடிஎப் வடிவில் பெறவும் இந்தத் தளத்தில் விவரங்கள் கிடைக்கும்.
குறுந்தகடாக நா.பாவுடைய படைப்புக்களை பிடிஎப் வடிவில் பெறவும் இந்தத் தளத்தில் விவரங்கள் கிடைக்கும்.
ஆத்மாவின் ராகங்கள்
நா.பார்த்தசாரதி
தமிழ்ப்புத்தகாலயம்-தாகம் வெளியீடு
விலை ரூ.80/-
அருமையான பதிவு
ReplyDeleteஉங்கள் வலைப்பூவின் தலைப்பின் கீழுள்ள கருப்பொருளில் ஒற்றுமை நீங்களும் நானும்..
ReplyDeleteவாருங்கள் திரு.அஹமத் இர்ஷாத்!
ReplyDeleteமனித மனம் மிக விசித்திரமானது! மிருகத்திற்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட மனித இனத்தை இந்தப் பக்கமோ அந்தப்பக்கமோ தள்ளக் கூடியதாக இருக்கும் போது, இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? தவிர இறைவன் ஒருவனே என்பது போல, அந்த இறைவனுக்குள்ளேயே நாம் அனைவரும் அல்லது நாம் அனைவரும் அவனது சரீரமாக இருக்கிறோம் என்னும்போது ஒற்றுமை தெரிவதில் வியப்பென்ன?
பதிவின் தீம்லைனை விடுங்கள்! நா.பாவின் புத்தகங்கள் ஏதாவது படித்திருக்கிறீர்களா? இந்தப்பக்கங்களில் பேசப்பட்டிருக்கும் புத்தகங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி ஒன்றும் பேசக் காணோமே?
திரு. காந்திராமன் ஐயா. கண்ணில் வந்து நிற்கிறார். ஆத்மாவின் ராகங்கள் வழியே.. எழுதியவரின் திறமையோ அல்லது திரு.காந்திராமன் ஐயாவின் ஊடுருவலோ என தெளிவு கொணர இயலவில்லை படிக்கையில் பல இடங்களில் கண் உதிர்த்த உப்பு துளிகள்.
ReplyDelete