Sunday, July 4, 2010

வரலாறும் முக்கியம் தான்! கொஞ்சம் வரலாற்றையும் பார்ப்போமா?


நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய நெஞ்சக் கனல், ஆத்மாவின் ராகங்கள் புதினங்களை மறுபடியும் இந்தப் பக்கங்களில் அறிமுகம் செய்வதற்காக மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தபோது நண்பர் அலை பேசியில் அழைத்தார். மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையில் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஏதாவது புத்தகங்கள் தேவையா என்றும் கேட்டார்.

திரு வி.திவாகர் எழுதிய புத்தகங்கள் கிடைக்கிறதா என்று பாருங்கள் என்று புத்தகத் தலைப்பு, பதிப்பகங்கள் பெயரைச் சொன்னேன். திருமலைத் திருடன் மட்டும் இருப்பதாகவும் வாங்கிவிடலாமா என்றும் கேள்வி வந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.

திரு வி.திவாகர் எழுதிய S M S எம்டன் 22-09-1914 வரலாற்றுப் புதினத்தைப் பற்றி ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். ஆசிரியர்  எழுதிய நான்கு புதினங்களுமே சரித்திரப் புதினங்கள் தான்! 

சரித்திரப் புதினங்களை எழுதுவதில் உள்ள பெரிய சிக்கலே, ஒரு சரித்திர நிகழ்வை எடுத்துக் கொண்டு அதனுடன் ஓட்டிப் போகிற மாதிரிக் கதைக் களத்தையும், பாத்திரங்களையும் உருவாக்க வேண்டும். கொஞ்சமல்ல, நிறையவே படிக்க வேண்டும், ஆதாரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அத்தனையையும் ஒரே இடத்தில் கொட்டி விடவும் முடியாது, தேவைப்படுகிற இடத்தில் பொருத்தமானவைகளை மட்டும் கதையோடு சேர்த்துப் பின்ன வேண்டும். கொஞ்சம் கூடுதல் உழைப்பு இல்லாவிடில், சரித்திரக் கதை எழுதுவதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!

இங்கே தமிழில் சரித்திரக் கதை படிப்பதில் கல்கி ரா.கிருஷ்ண மூர்த்தி ஒரு மிகப் பெரிய ஆர்வமுள்ள வாசகர்களை உருவாக்கினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கல்கியை வைத்து மட்டுமே சரித்திரக் கதைகளை எடை போடுகிறவர்களாகவுமே  அந்த நேரத்துத் தமிழ் வாசகர்கள் குறுகிப் போனார்கள் என்பதும் உண்மை. அதனால் தான், கல்கியை அடுத்து சரித்திரக் கதைகளை எழுதியவர்களுக்கு, கல்கிக்குக் கிடைத்தது போல வெளிச்சமோ வாசகப் பரப்போ கிடைக்கவில்லை என்பது என்னுடைய கருத்து.

கல்கியில் அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் புதினம் வாசகர்களுடைய பேராதரவைப் பெற்றது என்பது உண்மை. ஆனால் அந்தப் புதினத்தில் எந்த அளவு  சரித்திரம் இருந்தது என்பது கேள்விக்குரியதுதான். அகிலனுடைய படைப்பில் வேங்கையின் மைந்தன், வெற்றித் திருநகர், கயல்விழி என்று மூன்று சரித்திரப் புதினங்கள் வந்ததில் வெற்றித் திருநகரில் கொஞ்சம் கூடுதலாக சரித்திரம் இருந்தது, அதையடுத்துப் பாண்டியர்களுடைய வரலாற்றில் ஒரு பகுதியைக் கயல்விழி கொஞ்சம் சொன்னது என்பதை அளவுகோலாக வைத்துப் பார்த்தால், வேங்கையின் மைந்தன் புதினம்  பெரிய அளவில் சரித்திர நிகழ்வுகளை ஆதாரம் கொண்டு எழுதப்படவில்லை என்பதும் தெரியும்.

சரித்திரக்கதைகளை எழுதுவதில் தனக்கென்று ஒரு தனிப்பாணியைக் கையாண்டவர், வெறும் சோழர்கள், பல்லவர்கள் என்று குறுகிப்போய் விடாமல், இந்த தேசத்தின் பல பகுதிகள், இனங்களையும் தொட்டு சுவைபட எழுதியவர் என்றால் அவர் சாண்டில்யன் ஒருவர் மட்டுமே. மலைவாசல் புதினத்தில் ஹூணர்களுடைய படையெடுப்பைப் பற்றி, குப்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைத் தொட்டு எழுதினாரென்றால், ராஜபுத்ரர்களுடைய வீரம் செறிந்த போராட்டத்தை, தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமல் அடித்துக் கொண்டு மொகலாயர்களுக்கு இரையாகிப்போன அவலத்தைப் பத்துப் பதினைந்து கதைகளில் சுவைபடச் சொல்லியிருக்கிறார். மராத்திய சிவாஜி, அதற்குப் பின்னால் வந்தவர்கள் என்று மகாராஷ்டிர மண்ணின் கதையைத் தொட்டும் எழுதியிருக்கிறார். யவன ராணி புகார்ச் சோழர்களையும், கடல் புறா  அநபாயன் என்ற குலோத்துங்க சோழனுடைய கதையோடு அவனது படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்ற பல்லவ வம்சத்தவனைத்  தொட்டும் எழுதியிருக்கிறார்.

கலிங்கத்துப் பரணியில் செயம் கொண்டார் எப்படி ஒரு வெறிபிடித்த கவிதையை அல்லது அன்று இருந்த வெறி பிடித்த  சமூக இயல்பைக் காட்டினார் என்பதோடு, சோழர்கள் தங்களுடைய கடல்வாணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான், கலிங்கத்தின் மீது படையெடுத்தார்கள், அதற்கு மொழி இன உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் கடல் புறா புதினத்தைப் படித்துவிட்டு, அதன் பின்னணியில் கொடுக்கப் பட்ட ஆதாரக் குறிப்புக்களையும் படித்தால் எளிதாக விளங்கும்!

விலை ராணி கதையில் சந்திர குப்த மௌரியன் காலத்தைத் தொட்டு எழுதியிருக்கிறார். மோகனச் சிலையில்  சேர, சோழர்கள் கதையைப் பின்னியிருக்கிறார். தஞ்சைச் சோழர்களின் முதல்வனான விஜயாலயன் கதையைத் தொட்டிருக்கிறார்.முத்தரையர்களையும் தொட்டுக் கதை நகருகிறது. பாண்டியர்களைப் பட்டி, அதுவும் பிற்காலப் பாண்டியர்களைப் பற்றி பல கதைகள் சாண்டில்யன் கைவண்ணத்தில் வந்தன. பல்லவர்களுடைய வரலாற்றைக் குறித்த பல கதைகளும்  எழுதியிருக்கிறார். என்னுடைய மதிப்பீட்டில், தமிழில் சரித்திரக் கதைகள் என்றால் அது சாண்டில்யன் தான் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

களப்பிரர்களைத் தொட்டு எழுதிய ஒரே கதாசிரியர்  நா.பார்த்தசாரதி தான்! நித்திலவல்லியில் களப்பிரர் காலத்தை எடுத்துக் கொண்டிருந்தாலும் களப்பிரர்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படி  எதுவுமே இல்லை. சைவம் தலை தூக்க ஆரம்பித்த காலத்தில், புத்த சமண சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த களப்பிரர் காலத்தை தமிழக வரலாற்றின் இருண்ட காலமாக இருட்டடிப்புச் செய்ததில் சைவம் தன்னை எப்படி ஒரு அரசியல் சார்ந்த மதமாகத் தமிழகத்தில் ஸ்தாபித்துக் கொண்டது என்பது கொஞ்சம் சுவாரசியமான வரலாற்றின் பழைய ஏடுகள்!

ஜெக சிற்பியன், விக்கிரமன், கோவி.மணிசேகரன், கௌசிகன், அரு.ராமநாதன், சுஜாதா என்று பலரும் சரித்திரக் களங்களை வைத்துக் கதை பின்னியிருக்கிறார்கள். ஆனால், கல்கிக்குக் கிடைத்த வரவேற்பில் ஒரு சிறு பகுதியைக் கூட அவர்களுடைய முயற்சி பெறவில்லை என்பதில் இரண்டு  விஷயங்கள் தெளிவாயின. ஒன்று, கல்கியைப் படித்த வாசகர்கள், அதே மாதிரி நடை, சோழர்களுடைய பெருமை இதை மட்டுமே விரும்பி வரவேற்றார்கள் என்பது! இரண்டாவது, வாசகர்களுடைய முன்னுரிமைகள் வேறு இடங்களுக்கு மாறிவிட்டன. ஒரு பல்லவனைப் பற்றியோ, கனோஜி ஆங்கரே பற்றியோ இல்லை! சினிமா நட்சத்திரங்களின் பூர்வோத்தரங்கள், கிளுகிளுப்பான கிசு கிசுக்கள் என்று மாறிப் போயின.

இப்படி ரசனைகள் மாறிப்போன ஒரு கால கட்டத்தில் எப்படி தைரியமாக சரித்திரக் கதைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார் என்று திரு வி. திவாகரைப் பற்றி எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம் எழுந்ததுண்டு. கல்கி, சாண்டில்யன் போன்றவர்களுடைய சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் மிகவும் கவனமாகக் கதையை, கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்துப்  பாத்திரங்களைப் படைத்திருக்கிறார் என்பதை எம்டன் கதை விமரிசனத்திலேயே சொல்லியிருக்கிறேன்.

திருமலைத் திருடன் புதினத்தின் முன்னுரையை முனைவர் சிற்பி பால சுப்பிரமணியன் அவர்கள் எழுதியிருக்கிறார். வரலாற்றுப் புதினங்களுக்கே உரியதாக மர்மங்களையும், முடிச்சுக்களையும் வால்டர் ஸ்காட் தன்னுடைய ஆங்கில வரலாற்றுக் கதைகளில் பயன்படுத்தியதாகச் சொல்லி இருக்கிறார். 

வால்டர் ஸ்காட் எழுதியவரலாற்றுப் புதினங்களில் வரலாறு கொஞ்சமும் கிடையாது என்பதை, கொஞ்சம் மேலோட்டமாகப் புரட்டிப் பார்க்கிற வாசகர் எவரும் கண்டுபிடித்து விட முடியும். ஆங்கிலேயர்களிடம் உள்ள பெரிய குறையே, அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறார்போல நீண்ட நெடிய வரலாறு என்பது இருந்ததே இல்லை. ராபின் ஹூட், கிங் ஆர்தர் என்று அவர்களுடைய வரலாறு எல்லாமே வெறும் புனைவுகள் தான்!

அதனால்தானோ என்னவோ, இந்திய வரலாற்றையும் "வரலாறு என்பது வெறும் புனைவுகளால் ஆனது" என்கிற மாதிரிச் சொல்லி வைத்து, இன்றைக்கு பல பதிவர்கள் அதையே கிளிப் பிள்ளைகள் மாதிரி சொல்லிக் கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது

அடுத்து வரும் பதிவுகளில் கொஞ்சம் சரித்திரப் புதினங்களைப்  பற்றிப் பேசுவோம்! தொடர்ச்சியாக வரும் என்று சொல்வதற்கில்லை, ஆனாலும் தமிழின் மிகச் சிறந்த சரித்திரக் கதைகளை, அதை எழுதிய கதாசிரியர்களைப் பற்றி, சமகாலத்து ஆங்கில, பிரெஞ்சு  சரித்திரக் கதைகளோடு சேர்த்தும் எழுத எண்ணமிருக்கிறது.

முயற்சிக்கிறேன்!

2004 இல் வெளிவந்த திருமலைத் திருடன், மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு சுவாரசியமான விவாதத்திற்கு இட்டுச் சென்றது. சைவ வைணவ மத விவாதமாக எப்படி மாறிப் போனது என்பதை இங்கே இந்த இழையில் படிக்கலாம். இது, விஷயத்தை 360 டிகிரியிலிருந்தும் பார்த்துப் புரிந்துகொள்வதற்காக மட்டும்.


5 comments:

  1. உங்க நண்பர்கள் ரொம்ப நல்லவர்கள்.என் தோழர்கள் வீட்டுக்கு வந்தா ஆட்டையை போட்டுட்டு போயிறாங்கெ. ரொம்ப பொறாமையா இருக்கு உங்கள பார்த்தா.எம்புட்டு பொய்தவம் படிக்கிறீங்க? பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  2. நான் அனுப்பிய பொய்தவமெல்லாம் கிடைத்ததா? சீக்கிரம் அதையும் படிச்சுட்டு பதிவு பண்ணுங்க சார்.

    ReplyDelete
  3. வாருங்கள் மயில்ராவணன்!

    நீங்கள் அனுப்பி வைத்த புத்தகங்கள் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை.

    புத்தகங்கள் காணாமல் போவது, அல்லது கவனக் குறைவால் அக்கு அக்காகப் பிய்ந்து கரைந்து போவதெல்லாம் இங்கேயும் ஒரு தரமல்ல, நிறையத் தரம் நடந்திருக்கிறது. தி.ஜானகிராமன் புத்தகங்களை திரும்பத் திரும்ப வாங்க வேண்டி வந்தது. மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட மோகமுள் புத்தகம் 901 பக்கங்கள் வெறும் நாற்பது ரூபாய்க்கு வாங்கியது, அக்கக்காகப் பிய்ந்து போனது. மீனாட்சி புத்தக நிலையம், மதுரையில் வாங்கிய புத்தகங்கள், அதில் நிறைய ஜெயகாந்தன் கதைகள், இன்றைக்கு என்னிடம் ஒன்றுமே இல்லை.

    ஆசைப்பட்டு வாங்கிவிடுகிறோம். அதை முறையாகப் பராமரிக்கத் தெரிவதில்லை. ஒரு தரம் படித்து விட்டுத் தூக்கிப் போட்டு விடுகிறோம், அப்புறம் அதன் அருமை வேறேதினாலோ தெரிய வரும்போது தேடுகிறோம்,கிடைப்பதில்லை. இந்த அனுபவங்கள் எனக்கு நிறையவே உண்டு.

    பொறாமைஎல்லாம் படவேண்டாம்! அதையும் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே தான் சொல்ல முடிகிறது.

    ReplyDelete
  4. //அதனால்தானோ என்னவோ, இந்திய வரலாற்றையும் "வரலாறு என்பது வெறும் புனைவுகளால் ஆனது" என்கிற மாதிரிச் சொல்லி வைத்து..//

    மிக முக்கியமான விஷயத்தைத் தொட்டு விலகிச் சென்ற மாதிரியான உணர்வு இருந்தாலும், நீங்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் விஷயத்திற்கு இவ்வளவு தான் சொல்லமுடியும் என்கிற அளவில் இதுகுறித்துத் தனிப்பதிவே போடவேண்டும்.

    வரலாற்று நிகழ்ச்சிகளையும், கதாசிரியரின் கற்பனை ஓட்டத்தையும் தனித்தனியே காட்சிப்படுத்திப் பிரித்துப் பார்த்து ரசித்து மகிழக் கூடிய வாய்ப்பும், பேறும் அவற்றை படிக்கக்கூடிய வாசகர்களுக்கே கிடைக்கின்றது. வாசகனும் அந்த சரித்திர நிகழ்வுகள் பற்றி ஆழமாக அறிந்திருந்தால் அவற்றை ரசிக்கும் ரசனை இன்னும் கூடும்.
    செப்பேடுகள், கல்வெட்டுச் சான்றுகள், ஓலைச்சுவடிகள், சில புதைபொருள் ஆராய்ச்சிகள் -- இவை போன்றவை மட்டுமே மிகப் பழைமையான வரலாற்று நிகழ்ச்சிகளை கோர்வைபடுத்தி அறிந்து கொள்ளச் சான்றுகளாகத் திகழ்கின்றன.
    இந்த மாதிரியான ஆதாரச் சான்றுகளை மனத்தில் கொண்டு அவற்றிற்கு பங்கம் விளைவிக்காமல்
    அந்த நிகழ்ச்சிகளை நிலைக்களனாகக் கொண்டு,
    அதற்கு மேல் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்துகிற மாதிரி நிகழ்ச்சிகளை கற்பனையாய் பின்னி கதை சமைப்பது தான் வரலாற்றுப் புதினங்களாகவோ, கதைகளாகவோ இருக்க முடியும்.
    இந்த விஷயத்தில் கொஞ்சமும் சோடைபோகாமல்
    வரலாற்று நிகழ்ச்சிகளோடு இழைந்து கல்கி நிறையச் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
    மிகப் பழைமையான சரித்திர நிகழ்வுகளைக் கொண்டு கதை பின்னும் பொழுது தான் உண்மையான சிரமம் தெரிகிறது. பிற்கால-- குறிப்பாக போர்ச்சுகீசியர், பிரிட்டிஷார்,பிரஞ்சுக்காரர்கள் வருகைக்குப் பின்னான காலத்து நிகழ்ச்சிகள் அவ்வளவு பழைமையானதாகத் தெரிவதும் இல்லை; சமீபகால நிகழ்வுகளாகிப் போவதால் பல்லவ, பாண்டிய, சோழர் காலம் போல் சோபிக்காமல் சோகையாகத் தெரிகின்றன. கண்முன்னால் பிர்மாண்டமாய் தமிழகத்தில் எழுந்து நிற்கும் தமிழக மன்னர்கள் எழுப்பிய கோயில்கள் போன்ற நமக்குப் பழகிப்போன இடங்கள் அவர்கள் மேல் நம் அன்பைச் சொரியச் செய்து இன்னும் அவர்களுடனான நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.
    ஆகவே தான் கற்பனையாயினும் அவர்களைப் பற்றி எப்படிப்பட்ட புனைவுகளையும் நம்மால் மிகவும் நெருக்கமாக ரசிக்க முடிகிறது.

    சாண்டில்யன் அவர்களைப் பற்றி எனது எழுத்தாளர் பகுதியில் எழுதும் பொழுது நிறைய சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    மிகச் சிறப்பாக ஒரு பதிவைத் தொடங்கி இந்தப் பகுதியில் பகிர்ந்து கொண்டமைக்க்கு மிக்க நன்றி, கிருஷ்ணமூர்த்தி சார்!

    ReplyDelete
  5. வணக்கம் ஜீவி சார்!

    முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன்! வரலாற்றைப் படிப்பது என்னைப் பொறுத்தவரை, அதில் இருந்து கற்றுக் கொள்வதற்காகவேயன்றி, பழம்பெருமை பேசித் திரிவதற்காக இல்லை. இந்த வகையில் கல்கியை விட சாண்டில்யன் ஒருவர் தான் அதிகம் சாதித்திருக்கிறார் என்பது என்னுடைய கருத்து. கல்கிக்கு இருந்த நிறுவன பலம் அவருடைய எழுத்துக்களை இன்னம் அதிகமாகப் பிரபலப் படுத்தியது என்பதும் உண்மை.

    இந்தச் சிறு அறிமுகத்தில் நான் கல்கியையோ, அல்லது வேறு எந்த எழுத்தாளரையும் விமரிசனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. யார் யார் எந்த அளவுக்கு, சரித்திரக் கதைகளை இங்கே எழுத முயன்றார்கள், வாசகர்கள் மத்தியில் அதற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது என்பதைக் கொஞ்சம் கோடிட்டுச் சொன்னதோடு சரி. இன்றைய வாகர்களுடைய ரசனை திசை மாறிப் போயிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ,அதே அளவுக்கு தமிழ் எழுத்தாளர்களும் கொஞ்சம் முயற்சி எடுத்து போதுமான விவரங்களோடு எழுத முயற்சிப்பதில்லை என்பதும் உண்மை. இந்த ஒரு விஷயத்தை, ஆர்தர் ஹெய்லி, ராபர்ட் லட்லம், ராபின் குக் போன்ற ஆங்கில எழுத்தாளர்களுடைய புத்தகங்களை விமரிசனத்துக்கு எடுத்துக் கொண்டு சொல்லியிருக்கிறேன்.

    இந்தப் பதிவில் கூட திரு வி.திவாகருடைய திருமலைத் திருடன் புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், இரண்டு வருடங்களுக்கு முன்பு மின்தமிழ் கூகிள் குழுமத்தில், இந்தப்புத்தகத்தைப் பற்றிய ஒரு விவாதம் எப்படி சைவ வைணவப் பிரச்சினையாக நடந்தது என்பதைச் சுட்டி கொடுத்துப் பார்க்கும்படி எழுதியிருக்கிறேன்.

    அதையும் கொஞ்சம் பாருங்கள்! ஒரு புத்தகம், வாசிப்பவர் மனதில் என்னென்ன விஷயங்களில் எதிரொலிக்கிறது, எப்படித்திசை திரும்பிவிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் விவாத இழை அது.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)